أُو۟لَـٰٓئِكَ مَأْوَىٰهُمْ جَهَنَّمُ وَلَا يَجِدُونَ عَنْهَا مَحِيصًا
இத்தகையோர் - அவர்கள் தங்குமிடம் நரகந்தான், அவர்கள் அதை விட்டும் தப்பி ஓடும் இடத்தையும் காண மாட்டார்கள்.
The dwelling of such (people) is Hell, and they will find no way of escape from it.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ سَنُدْخِلُهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّا ۚ وَمَنْ أَصْدَقُ مِنَ ٱللَّهِ قِيلًا
மேலும், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையோர் - அவர்களை நாம் (மறுமையில்) சுவனபதிகளில், பிரவேசிக்கச் செய்வோம், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அதில் நிரந்தரமாக என்றென்றும் (தங்கி) இருப்பவர்கள், அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே, மேலும், அல்லாஹ்வைவிட சொல்லால் மிக்க உண்மையானவர் யார்?
But those who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism) and do deeds of righteousness, We shall admit them to the Gardens under which rivers flow (i.e. in Paradise) to dwell therein forever. Allâh’s Promise is the Truth; and whose words can be truer than those of Allâh? (Of course, none).
لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَآ أَمَانِىِّ أَهْلِ ٱلْكِتَـٰبِ ۗ مَن يَعْمَلْ سُوٓءًا يُجْزَ بِهِۦ وَلَا يَجِدْ لَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا
(விசுவாசிகளே மறுமையில்) உங்கள் வீண் ஆசைப் படியோ வேதத்தையுடையோர் வீண் ஆசைப்படியோ (சுவனம் பிரவேசிப்பதென்பது) இல்லை, எவர் தீமை செய்கின்றாரோ அவர் அதற்குரிய தண்டனையைக் கொடுக்கப்படுவார், அவர் அல்லாஹ்வையன்றித் தனக்குப்பாதுகாவலனையோ அல்லது உதவி புரிவோரையோ (அங்கு)காணமாட்டார்.
It will not be in accordance with your desires (Muslims), nor those of the people of the Scripture (Jews and Christians), whosoever works evil, will have the recompense thereof, and he will not find any protector or helper besides Allâh.
وَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّـٰلِحَـٰتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُو۟لَـٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا
இன்னும், ஆணாயினும் அல்லது பெண்ணாயினும், எவர் உண்மையாகவே விசுவாசங்கொண்டவராக இருக்க நற்கருமங்களைச் செய்வாராயின் - அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பார்கள், அவர்கள் அற்ப அளவு அநீதியும் செய்யப்படமாட்டார்கள்.
And whoever does righteous good deeds, male or female, and is a (true) believer [in the Oneness of Allâh (Muslim)], such will enter Paradise and not the least injustice, even to the size of a speck on the back of a date-stone, will be done to them.
وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَٱتَّبَعَ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًا ۗ وَٱتَّخَذَ ٱللَّهُ إِبْرَٰهِيمَ خَلِيلًا
எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்துவிட்டு, அவர் நன்மை செய்தவராக இருக்க (அசத்தியத்திலிருந்து நீங்கி)சத்தியத்தைச் சார்ந்த இப்ராஹீமுடைய மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? மேலும் அல்லாஹ் இப்றாஹீமைத் (தன்னுடைய) உற்ற தோழராக எடுத்துக் கொண்டான்.
And who can be better in religion than one who submits his face (himself) to Allâh (i.e. follows Allâh’s religion of Islâmic Monotheism); and he is a Muhsin (a good-doer - See V.2:112). And follows the religion of Ibrâhîm1(Abraham) Hanîfa (Islâmic Monotheism - to worship none but Allâh Alone). And Allâh did take Ibrâhîm (Abraham) as a Khalîl (an intimate friend)!
See the footnote of (V.2:135), the narration of Zaid bin ‘Amr bin Nufail.
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ مُّحِيطًا
வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் சூழ்(ந்தறிப)வனாக இருக்கின்றான்.
And to Allâh belongs all that is in the heavens and all that is in the earth. And Allâh is Ever Encompassing all things.
وَيَسْتَفْتُونَكَ فِى ٱلنِّسَآءِ ۖ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَىٰ عَلَيْكُمْ فِى ٱلْكِتَـٰبِ فِى يَتَـٰمَى ٱلنِّسَآءِ ٱلَّـٰتِى لَا تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلْوِلْدَٰنِ وَأَن تَقُومُوا۟ لِلْيَتَـٰمَىٰ بِٱلْقِسْطِ ۚ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمًا
(நபியே!) உம்மிடம் அவர்கள் பெண்கள் பற்றிய மார்க்கத்தீர்ப்பைக் கேட்கின்றார்கள், அவர்கள் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்புக் கூறுவான் என்று நீர் கூறுவீராக! மேலும், (இதற்கு முன்னர் பெண்களைப்பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுவது எந்தப் பெண்களுக்கு அவர்களை நீங்கள் திருமணம் முடிக்க ஆசித்தவர்களாக இருக்க அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்கமாட்டீர்களோ அத்தகைய அனாதைப் பெண்களைப் பற்றியதும், சிறார்களில் பலவீனமாக்கப்பட்டவர்கள் பற்றியதும், இன்னும் அனாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்துவது பற்றியதுமாகும், இன்னும், (அவர்களுக்கு) நீங்கள் நன்மையில் எதைச் செய்கின்றீர்களோ அதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
They ask your legal instruction concerning women, say: Allâh instructs you about them, and about what is recited unto you in the Book concerning the orphan girls whom you give not the prescribed portions (as regards Mahr and inheritance) and yet whom you desire to marry, and (concerning) the children who are weak and oppressed, and that you stand firm for justice to orphans. And whatever good you do, Allâh is Ever All-Aware of it.
وَإِنِ ٱمْرَأَةٌ خَافَتْ مِنۢ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ۚ وَٱلصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ ٱلْأَنفُسُ ٱلشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
இன்னும் ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தாளானால், அவர்களிவரும் தங்களிருவருக்கிடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அவ்விருவர் மீதும் குற்றமில்லை, சமாதானமே மிக மேலானது, (பொதுவாக) மனங்கள் உலோபித்தனத்திற்கு உட்பட்டு விடுகின்றன, இன்னும் நீங்கள் (ஒவ்வொருவரும் மற்றவருக்கு) உபகாரியாயிருந்து (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்ந்து கொண்டவனாக இருக்கின்றான்.
And if a woman fears cruelty or desertion on her husband’s part, there is no sin on them both if they make terms of peace between themselves; and making peace is better. And human inner-selves are swayed by greed. But if you do good and keep away from evil, verily, Allâh is Ever Well-Acquainted with what you do.
وَلَن تَسْتَطِيعُوٓا۟ أَن تَعْدِلُوا۟ بَيْنَ ٱلنِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ ۖ فَلَا تَمِيلُوا۟ كُلَّ ٱلْمَيْلِ فَتَذَرُوهَا كَٱلْمُعَلَّقَةِ ۚ وَإِن تُصْلِحُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
இன்னும், நீங்கள் (உங்கள்) மனைவியருக்கிடையில் எவ்வளவு விரும்பிய போதிலும் நீதமாக நடக்க நீங்கள் சக்திபெறவே மாட்டீர்கள், ஆனால், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (மற்ற) அவளை (அந்தரத்தில்) தொங்கவிடப் பட்டவளைப்போல் விட்டுவிடாதீர்கள், இன்னும் நீங்கள் சமாதானமாக நடந்துகொண்டு (அல்லாஹ்வையும்) பயந்து கொண்டால் அப்போது நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்களை) மிக்க மன்னிப்பவனாக மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
You will never be able to do perfect justice between wives even if it is your ardent desire, so do not incline too much to one of them (by giving her more of your time and provision) so as to leave the other hanging (i.e. neither divorced nor married). And if you do justice, and do all that is right and fear Allâh by keeping away from all that is wrong, then Allâh is Ever Oft-Forgiving, Most Merciful.
وَإِن يَتَفَرَّقَا يُغْنِ ٱللَّهُ كُلًّا مِّن سَعَتِهِۦ ۚ وَكَانَ ٱللَّهُ وَٰسِعًا حَكِيمًا
மேலும் (சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டால் அல்லாஹ், தன் தாராளத்தினால் (அவர்களில்) ஒவ்வொருவரையும் முற்றிலும் தேவையற்றவராக ஆக்கி விடுவான், (கொடையளிப்பதில்) அல்லாஹ் மிக விசாலமானவானக தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
But if they separate (by divorce), Allâh will provide abundance for everyone of them from His Bounty. And Allâh is Ever All-Sufficient for His creatures’ need, All-Wise.
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَلَقَدْ وَصَّيْنَا ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ ٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ غَنِيًّا حَمِيدًا
மேலும், வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், இன்னும் உங்களுக்கும் அல்லாஹ்வையே பயந்து கொள்ளுங்கள் என்று நிச்சயமாக நாம் (நல்) உபதேசம் செய்தோம், நீங்கள் அவனை நிராகரித்து விட்டால் நிச்சயமாக, வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, அல்லாஹ் எவருடைய தேவையும் அற்றவனாக (யாவரின்) புகழுக்குரியவனாக இருக்கின்றான்.
And to Allâh belongs all that is in the heavens and all that is in the earth. And verily, We have recommended to the people of the Scripture before you, and to you (O Muslims) that you (all) fear Allâh, and keep your duty to Him. But if you disbelieve, then unto Allâh belongs all that is in the heavens and all that is in the earth, and Allâh is Ever Rich (Free of all wants), Worthy of all praise.
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا
வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, (உங்களின் எல்லாக்காரியங்களையும்) பொறுப்பேற்றுக் கொள்வதில் அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
And to Allâh belongs all that is in the heavens and all that is in the earth. And Allâh is Ever All-Sufficient as Disposer of affairs.
إِن يَشَأْ يُذْهِبْكُمْ أَيُّهَا ٱلنَّاسُ وَيَأْتِ بِـَٔاخَرِينَ ۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ ذَٰلِكَ قَدِيرًا
மனிதர்களே! அவன் நாடினால் உங்களை அழித்து (உங்கள் இடத்தில்) மற்றவர்களை கொண்டு வருவான், இன்னும் அல்லாஹ் இவ்வாறு செய்ய பேராற்றலுடையோனாகவே இருக்கின்றான்.
If He wills, He can take you away, O people, and bring others. And Allâh is Ever All-Potent over that.
مَّن كَانَ يُرِيدُ ثَوَابَ ٱلدُّنْيَا فَعِندَ ٱللَّهِ ثَوَابُ ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًۢا بَصِيرًا
விசுவாசங்கொண்டோரே! எவர், இம்மையின் பலனை (மட்டும் அடைய) நாடுபவராக இருப்பின் (அவர் அறிந்து கொள்ளட்டும்) அல்லாஹ்விடத்திலோ, இம்மை இன்னும் மறுமையின் பலன் இருக்கின்றது, மேலும் அல்லாஹ் செவியேற்கிறவனாக, பார்க்கிறவனாக இருக்கின்றான்.
Whoever desires a reward in this life of the world, then with Allâh (Alone and none else) is the reward of this worldly life and of the Hereafter. And Allâh is Ever All-Hearer, All-Seer.
۞ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ بِٱلْقِسْطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰٓ أَنفُسِكُمْ أَوِ ٱلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَٱللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا۟ ٱلْهَوَىٰٓ أَن تَعْدِلُوا۟ ۚ وَإِن تَلْوُۥٓا۟ أَوْ تُعْرِضُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
விசுவாசங்கொண்டோரே! (நீங்கள் சாட்சி கூறினால், அது உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்த போதிலும், நீதியை நிலைநிறுத்தியவர்களாக அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள், (சாட்சி கூறப்படும்) அவர் பணக்காரராக இருந்தாலும் சரி, அல்லது ஏழையாக இருந்தாலும் சரி (உண்மையையே கூறுங்கள்.) அல்லாஹ் அவ்விருவருக்கும் (அவர்களைக் காப்பாற்றுவதற்கு) மிக உரியவன், இன்னும், நீங்கள் நியாயம் வழங்குவதில் (உங்கள் மனோ) இச்சையைப் பின்பற்றாதீர்கள், நீங்கள் (சாட்சியத்தை) மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறாது) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாக இருக்கின்றான்.
O you who believe! Stand out firmly for justice, as witnesses to Allâh, even though it be against yourselves, or your parents, or your kin, be he rich or poor, Allâh is a Better Protector to both (than you). So follow not the lusts (of your hearts), lest you avoid justice; and if you distort your witness or refuse to give it, verily, Allâh is Ever Well-Acquainted with what you do.1
Narrated Anas رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم was asked about the great sins. He said, They are:
a) To join others in worship with Allâh.
b) To be undutiful to one’s parents.
c) To kill a person (which Allâh has forbidden to be killed i.e. to commit the crime of murdering).
d) And to give a false witness.
(Sahih Al-Bukhâri, Vol.3, Hadîth No.821).
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ ءَامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلْكِتَـٰبِ ٱلَّذِى نَزَّلَ عَلَىٰ رَسُولِهِۦ وَٱلْكِتَـٰبِ ٱلَّذِىٓ أَنزَلَ مِن قَبْلُ ۚ وَمَن يَكْفُرْ بِٱللَّهِ وَمَلَـٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ فَقَدْ ضَلَّ ضَلَـٰلًۢا بَعِيدًا
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது இறக்கிவைத்த இவ்வேதத்தையும் (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதங்களையும் விசுவாசியுங்கள், இன்னும் எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நிராகரிக்கின்றாரோ, நிச்சயமாக அவர் மிக தூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டார்.
O you who believe! Believe in Allâh, and His Messenger (Muhammad صلى الله عليه وسلم), and the Book (the Qur’ân) which He has sent down to His Messenger, and the Scripture which He sent down to those before (him); and whosoever disbelieves in Allâh, His Angels, His Books, His Messengers, and the Last Day, then indeed he has strayed far away.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ ثُمَّ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ ثُمَّ ٱزْدَادُوا۟ كُفْرًا لَّمْ يَكُنِ ٱللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًۢا
நிச்சயமாக விசுவாசங்கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் அவர்கள் விசுவாசங்கொண்டு, பின்னரும், நிராகரித்து, பின்னரும் நிராகரிப்பை அதிகப்படுத்திக் கொண்டனரே அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை; இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டுபவனாகவும், இல்லை.
Verily, those who believe, then disbelieve, then believe (again), and (again) disbelieve, and go on increasing in disbelief; Allâh will not forgive them, nor guide them on the (Right) Way.
بَشِّرِ ٱلْمُنَـٰفِقِينَ بِأَنَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا
(நபியே! வேஷதாரிகளாகிய) முனாஃபிக்குகளுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனை உண்டென்று நீர் அவர்களுக்கு நன்மாராயங் கூறுவீராக.
Give to the hypocrites the tidings that there is for them a painful torment.1
See "Hypocrisy" - Appendix 2.
ٱلَّذِينَ يَتَّخِذُونَ ٱلْكَـٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۚ أَيَبْتَغُونَ عِندَهُمُ ٱلْعِزَّةَ فَإِنَّ ٱلْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا
அத்தகையோர் விசுவாசிகளைத் தவிர்த்து நிராகரிப்போரையே (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்கிறார்கள், இவர்கள், அவர்களிடத்தில் கண்ணியத்தை அடையத் தேடுகிறார்களா? (அது அவர்களுக்கில்லை, ஏனெனில்) நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
Those who take disbelievers for Auliyâ’ (protectors or helpers or friends) instead of believers, do they seek honour, power and glory with them? Verily, then to Allâh belongs all honour, power and glory.
وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى ٱلْكِتَـٰبِ أَنْ إِذَا سَمِعْتُمْ ءَايَـٰتِ ٱللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا۟ مَعَهُمْ حَتَّىٰ يَخُوضُوا۟ فِى حَدِيثٍ غَيْرِهِۦٓ ۚ إِنَّكُمْ إِذًا مِّثْلُهُمْ ۗ إِنَّ ٱللَّهَ جَامِعُ ٱلْمُنَـٰفِقِينَ وَٱلْكَـٰفِرِينَ فِى جَهَنَّمَ جَمِيعًا
மேலும், அல்லாஹ்வுடைய வசனங்களை – அவற்றை நிராகரிக்கப்படுவதையோ-அல்லது பரிகசிக்கப்படுவதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம் என நிச்சயமாக அல்லாஹ்வாகிய அவன் (இவ்)வேதத்தில் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கிறான், (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்), நிச்சயமாக அல்லாஹ் (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் இன்னும் நிராகரிப்போர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடக்கூடியவன்.
And it has already been revealed to you in the Book (this Qur’ân) that when you hear the Verses of Allâh being denied and mocked at, then sit not with them, until they engage in a talk other than that; (but if you stayed with them) certainly in that case you would be like them. Surely, Allâh will collect the hypocrites and disbelievers all together in Hell.
ٱلَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمْ فَإِن كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ ٱللَّهِ قَالُوٓا۟ أَلَمْ نَكُن مَّعَكُمْ وَإِن كَانَ لِلْكَـٰفِرِينَ نَصِيبٌ قَالُوٓا۟ أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُم مِّنَ ٱلْمُؤْمِنِينَ ۚ فَٱللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ وَلَن يَجْعَلَ ٱللَّهُ لِلْكَـٰفِرِينَ عَلَى ٱلْمُؤْمِنِينَ سَبِيلًا
(வேஷதாரிகளாகிய) இத்தகையோர் - உங்களைப்பற்றி எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர், அல்லாஹ்வின் உதவியினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர், நிராகரிப்போருக்கு பங்கேதும் கிடைத்துவிட்டால் “நாங்கள் உங்களை வெற்றி கொள்ளக் கூடிய நிலையிலிருந்தும், விசுவாசங் கொண்ட அவர்களிடமிருந்து நாங்கள் உங்களைத் தடுக்கவில்லையா?” என்று கூறுகின்றனர், ஆகவே, உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமைநாளில் தீர்ப்பளிப்பான், இன்னும், விசுவாசிகளுக்கு எதிராக அந்நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் யாதொரு வழியையும் ஆக்கவே மாட்டான்.
Those (hypocrites) who wait and watch about you; if you gain a victory from Allâh, they say: "Were we not with you?" But if the disbelievers gain a success, they say (to them): "Did we not gain mastery over you and did we not protect you from the believers?" Allâh will judge between you (all) on the Day of Resurrection. And never will Allâh grant to the disbelievers a way (to triumph) over the believers.
إِنَّ ٱلْمُنَـٰفِقِينَ يُخَـٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَـٰدِعُهُمْ وَإِذَا قَامُوٓا۟ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُوا۟ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذْكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلًا
நிச்சயமாக (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் அல்லாஹ்வை வஞ்சிக்க கருதுகின்றனர், இன்னும், அவனோ அவர்களை வஞ்சிக்க்ககூடியவனாக இருக்கின்றான், இன்னும், அவர்கள் தொழுகைக்காகத் தயாரானால் சோம்பேறிகளாகவே நிற்கிறார்கள், மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள், இன்னும், அவர்கள் வெகு சொற்பமாகத் தவிர அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
Verily, the hypocrites seek to deceive Allâh, but it is He Who deceives them.1 And when they stand up for As-Salât (the prayer), they stand with laziness and to be seen of men, and they do not remember Allâh but little.
See (V.57:12-15).
مُّذَبْذَبِينَ بَيْنَ ذَٰلِكَ لَآ إِلَىٰ هَـٰٓؤُلَآءِ وَلَآ إِلَىٰ هَـٰٓؤُلَآءِ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلًا
அ(ந்த முனாஃபிக்குகள் இறை நிராகரிப்பு, விசுவாசம் ஆகிய)வற்றிற்கு மத்தியில் தத்தளித்தவர்களாக இருக்கின்றனர். (இவர்கள் மூமின்களாகிய) அவர்களுடனுமில்லை; (காஃபிர்களாகிய) இவர்களுடனுமில்லை. இன்னும் அல்லாஹ் எவரை வழிதவறவிட்டுவிடுகிறானோ அவருக்கு(நபியே!) நீர் யாதொரு வழியைக் காணவேமாட்டீர்
(They are) swaying between this and that, belonging neither to these nor to those; and he whom Allâh sends astray, you will not find for him a way (to the truth - Islâm).
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلْكَـٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۚ أَتُرِيدُونَ أَن تَجْعَلُوا۟ لِلَّهِ عَلَيْكُمْ سُلْطَـٰنًا مُّبِينًا
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விசுவாசிகளையல்லாமல், நிராகரிப்போரை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், (இதன் மூலம் உங்களுக்கெதிராக அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான சான்றை ஏற்படுத்திவிட நீங்கள் நாடுகின்றீர்களா?
O you who believe! Take not for Auliyâ’ (protectors or helpers or friends) disbelievers instead of believers. Do you wish to offer Allâh a manifest proof against yourselves?
إِنَّ ٱلْمُنَـٰفِقِينَ فِى ٱلدَّرْكِ ٱلْأَسْفَلِ مِنَ ٱلنَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًا
நிச்சயமாக (இவ்வேஷதாரிகளாகிய) முனாஃபிக்குகள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தில் இருப்பார்கள், இன்னும் (அங்கு) அவர்களுக்கு உதவியாளரை நீர் காணவே மாட்டீர்.
Verily, the hypocrites will be in the lowest depth (grade) of the Fire; no helper will you find for them.1
:
a) Narrated ‘Abdullâh bin ‘Amr رضي الله عنهما: The Prophet صلى الله عليه وسلم said: "Whoever has the following four (characteristics) will be a pure hypocrite and whoever has one of the following four characteristics will have one characteristic of… Show more
:
a) Narrated ‘Abdullâh bin ‘Amr رضي الله عنهما: The Prophet صلى الله عليه وسلم said: "Whoever has the following four (characteristics) will be a pure hypocrite and whoever has one of the following four characteristics will have one characteristic of hypocrisy unless and until he gives it up:
Whenever he is entrusted, he betrays (proves dishonest).
2. Whenever he speaks, he tells a lie.
3. Whenever he makes a covenant, he proves treacherous.
4. Whenever he quarrels, he behaves in a very imprudent, evil and insulting manner." (Sahih Al-Bukhâri, Vol.1, Hadîth No.33).
b) See the footnote of (V.9:54).
c) Narrated Abu Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "The worst people before Allâh on the Day of Resurrection will be the double-faced people who appear to some people with one face and to other people with another face." (Sahih Al-Bukhâri, Vol.8, Hadith No.84).
إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَٱعْتَصَمُوا۟ بِٱللَّهِ وَأَخْلَصُوا۟ دِينَهُمْ لِلَّهِ فَأُو۟لَـٰٓئِكَ مَعَ ٱلْمُؤْمِنِينَ ۖ وَسَوْفَ يُؤْتِ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا
(ஆனால் அவர்களில்) தங்கள் பாவத்திற்காகப் பச்சாதாபப்பட்டு (அதிலிருந்து விலகி தங்கள் செயல்களை) சீர்திருந்தி அல்லாஹ்வை (அவனுடைய வேதத்தை) உறுதியாகப் பிடித்துக்கொண்டு தங்கள் மார்க்கத்தை (-வணக்கத்தை) அல்லாஹ்வுக்காகக் கலப்பற்றதாக்கிக் கொள்கின்றார்களே அத்தகையோர் தவிர, அவர்கள் விசுவாசிகளுடன் (மறுமையில்) இருப்பார்கள், இத்தகைய விசுவாசிகளுக்கு அல்லாஹ் மகத்தான (நற்)கூலியை வழங்குவான்.
Except those who repent (from hypocrisy), do righteous good deeds, hold fast to Allâh, and purify their religion for Allâh (by worshipping none but Allâh, and do good for Allâh’s sake only, not to show off), then they will be with the believers. And Allâh will grant the believers a great reward.
مَّا يَفْعَلُ ٱللَّهُ بِعَذَابِكُمْ إِن شَكَرْتُمْ وَءَامَنتُمْ ۚ وَكَانَ ٱللَّهُ شَاكِرًا عَلِيمًا
நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டும் (அவனை) விசுவாசம் கொண்டுமிருப்பின் உங்களை வேதனை செய்து அவன் என்ன செய்யப்போகிறான்? இன்னும் அல்லாஹ்வோ நன்றி பாராட்டுகிறவனாக, யாவையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Why should Allâh punish you if you have thanked (Him) and have believed in Him. And Allâh is Ever All-Appreciative (of good), All-Knowing.
۞ لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلْجَهْرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ ۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا
அநீதமிழைக்கப்பட்டவரைத் தவிர வார்த்தையில் தீயதை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான், அல்லாஹ் (யாவையும்) செவியேற்கிறவனாக நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Allâh does not like that the evil should be uttered in public except by him who has been wronged. And Allâh is Ever All-Hearer, All-Knower.
إِن تُبْدُوا۟ خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا۟ عَن سُوٓءٍ فَإِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا قَدِيرًا
செய்யும் நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது ஒருவர் உங்களுக்குச் செய்த யாதொரு தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ், (குற்றங்களை) மிக்க மன்னிப்போனாக, (தண்டிக்கப்) பேராற்றலுடையோனாக இருக்கின்றான்.
Whether you (mankind) disclose (by good words of thanks) a good deed (done to you in the form of a favour by someone), or conceal it, or pardon an evil, ... verily, Allâh is Ever Oft-Pardoning, All-Powerful.
إِنَّ ٱلَّذِينَ يَكْفُرُونَ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُوا۟ بَيْنَ ٱللَّهِ وَرُسُلِهِۦ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا۟ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا
நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பாகுபாடு செய்வதை நாடி, “தூதர்களில் சிலரை நாம் விசுவாசிப்போம், இன்னும் சிலரை நாம் நிராகரிப்போம் எனவும் கூறி, (நிராகரிப்பு, விசுவாசம் ஆகிய) இவற்றிற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்தவும் நாடுகின்றார்களே அத்தகையோர்,
Verily, those who disbelieve in Allâh and His Messengers and wish to make distinction between Allâh and His Messengers (by believing in Allâh and disbelieving in His Messengers) saying, "We believe in some but reject others," and wish to adopt a way in between.
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَـٰفِرُونَ حَقًّا ۚ وَأَعْتَدْنَا لِلْكَـٰفِرِينَ عَذَابًا مُّهِينًا
அவர்கள்தான் உண்மையாகவே நிராகரிப்போராவர், இன்னும், நிராகரிப்போருக்கு, நாம் இழிவுதரும் வேதனையையே தயார் படுத்தியும் வைத்திருக்கின்றோம்.
They are in truth disbelievers. And We have prepared for the disbelievers a humiliating torment.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَلَمْ يُفَرِّقُوا۟ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ أُو۟لَـٰٓئِكَ سَوْفَ يُؤْتِيهِمْ أُجُورَهُمْ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا
மேலும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் விசுவாசித்து அவர்களில் எவருக்கிடையிலும் பிரிவினை செய்யவில்லையோ அத்தகையோர் - அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலிகளை விரைவில் அல்லாஹ் (மறுமையில்) கொடுப்பான், இன்னும் அல்லாஹ் மிக்க (பிழை) பொறுப்போனாக மிகக் கிருபையுடையோனாக இருக்கின்றான்.
And those who believe in Allâh and His Messengers and make no distinction between any of them (Messengers), We shall give them their rewards; and Allâh is Ever Oft-Forgiving, Most Merciful.
يَسْـَٔلُكَ أَهْلُ ٱلْكِتَـٰبِ أَن تُنَزِّلَ عَلَيْهِمْ كِتَـٰبًا مِّنَ ٱلسَّمَآءِ ۚ فَقَدْ سَأَلُوا۟ مُوسَىٰٓ أَكْبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓا۟ أَرِنَا ٱللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ ٱلصَّـٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ ثُمَّ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَـٰتُ فَعَفَوْنَا عَن ذَٰلِكَ ۚ وَءَاتَيْنَا مُوسَىٰ سُلْطَـٰنًا مُّبِينًا
(நபியே!) வேதத்தையுடையவர்கள், (தாங்கள் விரும்புகின்ற பிரகாரம்) வானத்திலிருந்து தங்கள் மீது ஒரு வேதத்தை நீர் இறக்கிவைக்குமாறு உம்மிடம் கேட்கின்றனர், நிச்சயமாக இதைவிடப் பெரிய தொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டார்கள், ஆகவே, அல்லாஹ்வை எங்களுக்குப் பகிரங்கமாகக் காண்பிப்பீராக” என்று கூறினார்கள், பின்னர் அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை பெரும் சப்தம் (நெருப்பு வடிவில்) தாக்கியது., பின்னர் அவர்களிடம் அத்தாட்சிகள் வந்ததன் பின்னும் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர், அப்பொழுது(ம்) அதனை நாம் மன்னித்தோம், இன்னும் மூஸாவுக்குத் தெளிவான சான்றையும் கொடுத்தோம்.
The people of the Scripture (Jews) ask you to cause a book to descend upon them from heaven. Indeed they asked Mûsâ (Moses) for even greater than that, when they said: "Show us Allâh in public," but they were struck with thunderclap and lightning for their wickedness. Then they worshipped the calf even after clear proofs, evidence, and signs had come to them. (Even) so We forgave them. And We gave Mûsâ (Moses) a clear proof of authority.
وَرَفَعْنَا فَوْقَهُمُ ٱلطُّورَ بِمِيثَـٰقِهِمْ وَقُلْنَا لَهُمُ ٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًا وَقُلْنَا لَهُمْ لَا تَعْدُوا۟ فِى ٱلسَّبْتِ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَـٰقًا غَلِيظًا
மேலும், அவர்களிடம் உடன்படிக்கை வாங்குவதற்காக தூர்(ஸினாய் மலையை) அவர்களின் மீது உயர்த்தினோம், அன்றியும் “அந்நகரத்தின் (வாயிலில் தலைகுனிந்தவர்களாக பிரவேசியுங்கள்” என்று நாம் அவர்களுக்குக் கூறினோம், மேலும் (மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் நாம் அவர்களுக்குக் கூறினோம், (இன்னும் இவற்றிற்காக) உறுதியான வாக்குறுதியையும் நாம் அவர்களிடம் வாங்கினோம்., (எனினும்) அவர்கள் வாக்குறுதியை மீறி விட்டனர்.
And for their covenant, We raised over them the Mount and (on the other occasion) We said: "Enter the gate prostrating (or bowing) with humility;" and We commanded them: "Transgress not (by doing worldly works) on the Sabbath (Saturday)." And We took from them a firm covenant1.
Narrated Abu Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "It was said to Banî Israel, ‘Enter the gate (of the town) bowing with humility (prostrating yourselves) and say: ‘Repentance’, but they changed the word and entered the town… Show more
Narrated Abu Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "It was said to Banî Israel, ‘Enter the gate (of the town) bowing with humility (prostrating yourselves) and say: ‘Repentance’, but they changed the word and entered the town crawling on their buttocks and said: ‘A wheat grain in the hair’*." (Sahih Al-Bukhâri, Vol.4, Hadîth No. 615).
*They said so just to ridicule Allâh’s Order as they were disobedient to Him. So Allâh punished them severely by sending on them punishment, most probably in the form of (an epidemic of) plague (See Tafsir At-Tabari ).
فَبِمَا نَقْضِهِم مِّيثَـٰقَهُمْ وَكُفْرِهِم بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَقَتْلِهِمُ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَقَوْلِهِمْ قُلُوبُنَا غُلْفٌۢ ۚ بَلْ طَبَعَ ٱللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا
ஆகவே, அவர்கள் தங்கள் உடன்படிக்கையை முறித்ததன் காரணமாகவும் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும் நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும் இன்னும் ‘எங்களுடைய இதயங்கள் திரையிடப் பட்டுவிட்டன” என்று அவர்கள் கூறியதாலும் (அல்லாஹ் அவர்களை சபித்து விட்டான், அதுமட்டும்) அல்ல, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான், ஆதலால் (அவர்கள்) குறைவாகவேயன்றி விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
Because of their breaking the covenant, and of their rejecting the Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) of Allâh, and of their killing the Prophets unjustly, and of their saying: "Our hearts are wrapped (with coverings, i.e. we do not understand what the Messengers say)" - nay, Allâh has set a seal upon their hearts because of their disbelief, so they believe not but a little.
وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَىٰ مَرْيَمَ بُهْتَـٰنًا عَظِيمًا
இன்னும், அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூரை அவர்கள் கூறியதாலும் (அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான்.)
And because of their (Jews) disbelief and uttering against Maryam (Mary السلام عليهما) a grave false charge (that she has committed illegal sexual intercourse);
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا ٱلْمَسِيحَ عِيسَى ٱبْنَ مَرْيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَـٰكِن شُبِّهَ لَهُمْ ۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ لَفِى شَكٍّ مِّنْهُ ۚ مَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّ ۚ وَمَا قَتَلُوهُ يَقِينًۢا
இன்னும், “அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம்” என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான்), அவரை அவர்கள் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும், அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவனை ஒப்பாக்கிக் காண்பிக்கப்பட்டது, இன்னும் நிச்சயமாக இவ்விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர், வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது, மேலும், உறுதியாக அவர்கள் அவரை கொலை செய்யவே இல்லை.
And because of their saying (in boast), "We killed Messiah ‘Îsâ (Jesus), son of Maryam (Mary), the Messenger of Allâh," - but they killed him not, nor crucified him, but it appeared so to them [the resemblance of ‘Îsâ (Jesus) was put over another man (and they killed that man)], and those who differ therein are full of doubts. They have no (certain) knowledge, they follow nothing but conjecture. For surely; they killed him not [i.e. ‘Îsâ (Jesus), son of Maryam (Mary) عليهما السلام]:
بَل رَّفَعَهُ ٱللَّهُ إِلَيْهِ ۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًا
மாறாக, அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான், இன்னும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
But Allâh raised him [‘Îsâ (Jesus)] up (with his body and soul) unto Himself (and he عليه السلام is in the heavens). And Allâh is Ever All-Powerful, All-Wise.
وَإِن مِّنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِۦ قَبْلَ مَوْتِهِۦ ۖ وَيَوْمَ ٱلْقِيَـٰمَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا
வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை, இன்னும், மறுமைநாளில் அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளராக இருப்பார்.
And there is none of the people of the Scripture (Jews and Christians) but must believe in him [‘Îsâ (Jesus), son of Maryam (Mary), as only a Messenger of Allâh and a human being]1 before his [‘Îsâ (Jesus) عليه السلام) or a Jew’s or a Christian’s] death2 (at the time of the appearance of the angel of death). And on the Day of Resurrection, he [‘Îsâ (Jesus)] will be a witness against them.
See the footnote of (V.3:55).
- "Before his death," has two interpretations: before Jesus’ death after his descent from the heavens, or a Jew’s or a Christian’s death, at the time of the appearance of the Angel of Death when he will realize that ‘Îsâ (Jesus) was only a Messenger of Allâh, and had no share in Divinity.
فَبِظُلْمٍ مِّنَ ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَـٰتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرًا
ஆகவே, யூதர்களாக இருந்த அவர்களின் அநியாயத்தின் காரணமாகவும், இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (அதில் செல்லவிடாது) தடுத்துக் கொண்டதன் காரணமாகவும் அவர்களுக்கு (முன்னர்) அனுமதிக்கப் பட்டவைகளில் நல்லவைகளை நாம் அவர்களுக்குத் தடுத்து (ஹராமாக்கி) விட்டோம்.
For the wrong-doing of the Jews, We made unlawful for them certain good foods which had been lawful for them - and for their hindering many from Allâh’s Way;