8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

4. An-Nisa

The Women · அன்-நிஸா

Madani176 versesJuz 5

النساء

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

4:81

وَيَقُولُونَ طَاعَةٌ فَإِذَا بَرَزُوا۟ مِنْ عِندِكَ بَيَّتَ طَآئِفَةٌ مِّنْهُمْ غَيْرَ ٱلَّذِى تَقُولُ ۖ وَٱللَّهُ يَكْتُبُ مَا يُبَيِّتُونَ ۖ فَأَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا

(நபியே! “உம்மிடமிருக்கும்போது உமக்கு முற்றிலும்) கீழ்ப்படிதலாகும்” என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர், பிறகு, அவர்கள் உம்மிடத்திலிருந்து வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு கூட்டத்தினர் (உம்மிடம்) தாம் கூறியதற்கு மாறாக இரவெல்லாம் (சதி) ஆலோசனை செய்து கொண்டே இருக்கின்றனர், அவர்கள் இரவெல்லாம் (சதி) ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ்பதிவு செய்து கொள்கின்றான், ஆதலால் நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (சகல காரியங்களையும் ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக! உம்மைப் பாதுகாப்பதற்கு) பொறுப்பேற்பவனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்.

They say: "We are obedient," but when they leave you (Muhammad صلى الله عليه وسلم), a section of them spend all night in planning other than what you say. But Allâh records their nightly (plots). So turn aside from them (do not punish them), and put your trust in Allâh. And Allâh is Ever All-Sufficient as a Disposer of affairs.

4:82

أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلْقُرْءَانَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ ٱللَّهِ لَوَجَدُوا۟ فِيهِ ٱخْتِلَـٰفًا كَثِيرًا

இந்தக்குர்ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இது இருந்தால் இதில் அநேக முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

Do they not then consider the Qur’ân carefully? Had it been from other than Allâh, they would surely have found therein many a contradiction.

4:83

وَإِذَا جَآءَهُمْ أَمْرٌ مِّنَ ٱلْأَمْنِ أَوِ ٱلْخَوْفِ أَذَاعُوا۟ بِهِۦ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُو۟لِى ٱلْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسْتَنۢبِطُونَهُۥ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ لَٱتَّبَعْتُمُ ٱلشَّيْطَـٰنَ إِلَّا قَلِيلًا

மேலும், (யுத்த) அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால் (உடனே, அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர், (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள், மேலும் (விசுவாசிகளே!) அல்லாஹ்வுடைய பேரருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், (உங்களில்) குறைவானவர்களைத் தவிர நீங்கள் யாவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.

When there comes to them some matter touching (public) safety or fear, they make it known (among the people); if only they had referred it to the Messenger or to those charged with authority among them, the proper investigators would have understood it from them (directly). Had it not been for the Grace and Mercy of Allâh upon you, you would have followed Shaitân (Satan), save a few of you.

4:84

فَقَـٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفْسَكَ ۚ وَحَرِّضِ ٱلْمُؤْمِنِينَ ۖ عَسَى ٱللَّهُ أَن يَكُفَّ بَأْسَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ وَٱللَّهُ أَشَدُّ بَأْسًا وَأَشَدُّ تَنكِيلًا

எனவே, (நபியே!) நீர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வீராக! நீர் உம்மைத் தவிர (வேறெவரும்) கட்டாயப்படுத்தப்படுவதற்கில்லை, இன்னும் விசுவாசிகளை (போர் செய்ய)த் தூண்டுவீராக! நிராகரிப்போரின் யுத்தத்தை உங்களை விட்டும் அல்லாஹ் தடுத்து விடக்கூடும், (ஏனென்றால்) அல்லாஹ் யுத்தம் செய்வதில் மிக வல்லவன், தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன்.

Then fight (O Muhammad صلى الله عليه وسلم) in the Cause of Allâh, you are not tasked (held responsible) except for yourself, and incite the believers (to fight along with you), it may be that Allâh will restrain the evil might of the disbelievers. And Allâh is Stronger in Might and Stronger in punishing.

4:85

مَّن يَشْفَعْ شَفَـٰعَةً حَسَنَةً يَكُن لَّهُۥ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَـٰعَةً سَيِّئَةً يَكُن لَّهُۥ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ مُّقِيتًا

எவரேனும் (யாதொரு) நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதில் அவருக்கும் ஒரு பங்கு இருக்கும், (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு எவரேனும் பரிந்துரை செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு இருக்கும், மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.

Whosoever intercedes for a good cause will have the reward thereof, and whosoever intercedes for an evil cause will have a share in its burden. And Allâh is Ever All-Able to do (and also an All-Witness to) everything.

4:86

وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا۟ بِأَحْسَنَ مِنْهَآ أَوْ رُدُّوهَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَسِيبًا

(எவராலும்) உங்களுக்கு முகமன் (“ஸலாம்”) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள், அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப்பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான்.

When you are greeted with a greeting, greet in return with what is better than it, or (at least) return it equally. Certainly, Allâh is Ever a Careful Account Taker of all things.1

  1. How the Salâm (greeting) began. Narrated Abu Hurairah رضي الله عنه : The Prophet صلى الله عليه وسلم said, "Allâh created Adam in His Image,* sixty cubits (about 30 metres) in height. When He created him, He said (to him), "Go and greet that group of angels… Show more

    How the Salâm (greeting) began.

    Narrated Abu Hurairah رضي الله عنه : The Prophet صلى الله عليه وسلم said, "Allâh created Adam in His Image,* sixty cubits (about 30 metres) in height. When He created him, He said (to him), "Go and greet that group of angels sitting there, and listen what they will say in reply to you, for that will be your greeting and the greeting of your offspring." Adam (went and) said, "As-Salâmu ‘Alaikum (peace be upon you)." They replied, "As-Salâmu ‘Alaikum wa Rahmatullah (Peace and Allâh’s Mercy be on you)." So they increased ‘wa Rahmatullah ’ " The Prophet صلى الله عليه وسلم added, "So, whoever will enter Paradise, will be of the shape and picture of Adam. Since then the creation of Adam’s (offspring) (i.e. stature of human beings) is being diminished continuously up to the present time." (Sahih Al-Bukhâri, Vol.8, Hadîth No.246).

    *"His Image" means that Adam has been bestowed with life, knowledge, power of hearing, seeing, understanding, but the features of Adam are different from those of Allâh, only the names are the same, e.g., Allâh has life and knowledge and power of understanding, and Adam also has them, but there is no comparison between the Creator and the created thing. As Allâh says in the Qur’ân: "There is nothing like Him, and He is the All-Hearer, the All-Seer." (V.42:11), Allâh does not eat or sleep, while Adam used to eat and sleep [for details See Fath Al-Bâri, Vol.6, Page 108,9 and Vol.13, Page 238,9].

4:87

ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ لَا رَيْبَ فِيهِ ۗ وَمَنْ أَصْدَقُ مِنَ ٱللَّهِ حَدِيثًا

அல்லாஹ் – அவனைத் தவிர (வேறு) வணங்கப்படுபவன் இல்லை. அவன் நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான், இதில் சந்தேகமேயில்லை, இன்னும், வார்த்தையால் (அதை அறிவிப்பதில்) அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?

Allâh! Lâ ilâha illa Huwa (none has the right to be worshipped but He). Surely, He will gather you together on the Day of Resurrection about which there is no doubt. And who is truer in statement than Allâh?

4:88

۞ فَمَا لَكُمْ فِى ٱلْمُنَـٰفِقِينَ فِئَتَيْنِ وَٱللَّهُ أَرْكَسَهُم بِمَا كَسَبُوٓا۟ ۚ أَتُرِيدُونَ أَن تَهْدُوا۟ مَنْ أَضَلَّ ٱللَّهُ ۖ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلًا

(விசுவாசிகளே! வேஷதாரிகளான) முனாஃபிக்குகளைப்பற்றி நீங்கள் இருவகை (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினர்களாக இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த (தீ)வினையின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை கீழாக்கி விட்டான், எவரை அல்லாஹ் தவறான பாதையில் செல்ல விட்டு விட்டானோ அவரை, நீங்கள் நேரான வழியில் செலுத்த நாடுகின்றீர்களா? எவரை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டானோ அவருக்கு யாதொரு வழியையும் நீர் காணவே மாட்டீர்!

Then what is the matter with you that you are divided into two parties about the hypocrites? Allâh has cast them back (to disbelief) because of what they have earned. Do you want to guide him whom Allâh has made to go astray? And he whom Allâh has made to go astray, you will never find for him any way (of guidance).

4:89

وَدُّوا۟ لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا۟ فَتَكُونُونَ سَوَآءً ۖ فَلَا تَتَّخِذُوا۟ مِنْهُمْ أَوْلِيَآءَ حَتَّىٰ يُهَاجِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا۟ فَخُذُوهُمْ وَٱقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ ۖ وَلَا تَتَّخِذُوا۟ مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا

(விசுவாசிகளே!) அவர்கள் நிராகரிப்போராகிவிட்டதைப் போல் நீங்கள் நிராகரிப்போராகி பின்னர் நீங்கள் (அவர்களுக்குச்) சமமாகிவிடுவதை அவர்கள் நாடுகிறார்கள், ஆகவே, அவர்கள் (தங்கள்) இல்லங்களைவிட்டு அல்லாஹ்வுடைய பாதையில் (ஹிஜ்ரத்துச்செய்து) புறப்படும் வரையில், நீங்கள் அவர்களிலிருந்து எவர்களையும் நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம், (ஹிஜ்ரத்துச்செய்து புறப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்து விட்டால், அவர்களை (க்கைதியாக)ப் பிடித்துக் கொள்ளுங்கள், (எதிர்த்துப் போரிடும்) அவர்களைக் கண்டவிடமெல்லாம் கொன்று விடுங்கள், தவிரவும், அவர்களிலிருந்து (யாரையும்) நண்பராகவும், உதவியாளராகவும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

They wish that you reject Faith, as they have rejected (Faith), and thus that you all become equal (like one another). So take not Auliyâ’ (protectors or friends) from them, till they emigrate in the Way of Allâh (to Muhammad صلى الله عليه وسلم). But if they turn back (from Islâm), take (hold of) them and kill them wherever you find them, and take neither Auliyâ’ (protectors or friends) nor helpers from them.

4:90

إِلَّا ٱلَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَـٰقٌ أَوْ جَآءُوكُمْ حَصِرَتْ صُدُورُهُمْ أَن يُقَـٰتِلُوكُمْ أَوْ يُقَـٰتِلُوا۟ قَوْمَهُمْ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقَـٰتَلُوكُمْ ۚ فَإِنِ ٱعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَـٰتِلُوكُمْ وَأَلْقَوْا۟ إِلَيْكُمُ ٱلسَّلَمَ فَمَا جَعَلَ ٱللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا

எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை இருக்கிறதோ அந்த சமூகத்தவர் பால் சென்று சேர்ந்து விட்டவர்களையும், அல்லது உங்களை எதிர்த்து யுத்தம் புரியவோ, தங்கள் இனத்தாரை) எதிர்த்து யுத்தம் புரியவோ, அவர்களின் மனங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில் உங்களிடம் வந்து சேர்ந்தவர்களையும் தவிர – (இத்தகையோரைக் கொல்லாதீர்கள், சிறையும் பிடிக்காதீர்கள்! ஏனென்றால்) மேலும், அல்லாஹ் நாடியிருந்தால். அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான், அப்போது உங்களை எதிர்த்து அவர்கள் போர் செய்திருப்பார்கள், ஆகவே, அவர்கள் உங்களை விட்டு விலகி இருந்து உங்களிடம் யுத்தம் புரியாமல், உங்களிடம் சமாதானத்தைக் கோரினால் (அதனை அங்கீகரித்துக் கொள்ளுங்கள்., (ஏனெனில்) அவர்களுக்கெதிராக (யுத்தம் புரிய) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு வழியையும் ஆக்கவில்லை.

Except those who join a group, between you and whom there is a treaty (of peace), or those who approach you with their breasts restraining from fighting you as well as fighting their own people. Had Allâh willed, indeed He would have given them power over you, and they would have fought you. So if they withdraw from you, and fight not against you, and offer you peace, then Allâh has opened no way for you against them.

4:91

سَتَجِدُونَ ءَاخَرِينَ يُرِيدُونَ أَن يَأْمَنُوكُمْ وَيَأْمَنُوا۟ قَوْمَهُمْ كُلَّ مَا رُدُّوٓا۟ إِلَى ٱلْفِتْنَةِ أُرْكِسُوا۟ فِيهَا ۚ فَإِن لَّمْ يَعْتَزِلُوكُمْ وَيُلْقُوٓا۟ إِلَيْكُمُ ٱلسَّلَمَ وَيَكُفُّوٓا۟ أَيْدِيَهُمْ فَخُذُوهُمْ وَٱقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ ۚ وَأُو۟لَـٰٓئِكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطَـٰنًا مُّبِينًا

(விசுவாசிகளே!) வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள், அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்வதுடன், (உங்களுடைய விரோதிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் அபயம் பெற்றுக்கொள்ளவும் நாடுகிறார்கள், குழப்பம் செய்வதின் பக்கம் அவர்கள் திருப்பப்படும் போதெல்லாம், அதில் (கண் மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள்! ஆகவே, அவர்கள் உங்கள் விரோதத்திலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், அவர்களை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள், (பிடித்த அவர்களைச் சிறையாக்குங்கள், எதிர்த்துப் போரிடும்) அவர்களைக் கண்டவிடமெல்லாம் அவர்களைக் கொன்றுவிடுங்கள், இன்னும் அத்தகையோர் - அவர்களுக்கு எதிராக (யுத்தம் புரிய) உங்களுக்குத் தெளிவான அதிகாரத்தை நாம் ஆக்கிவிட்டோம்.

You will find others that wish to have security from you and security from their people. Every time they are sent back to temptation, they yield thereto. If they withdraw not from you, nor offer you peace, nor restrain their hands, take (hold of) them and kill them wherever you find them. In their case, We have provided you with a clear warrant against them.

4:92

وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَن يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَـًٔا ۚ وَمَن قَتَلَ مُؤْمِنًا خَطَـًٔا فَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَدِيَةٌ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهْلِهِۦٓ إِلَّآ أَن يَصَّدَّقُوا۟ ۚ فَإِن كَانَ مِن قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۖ وَإِن كَانَ مِن قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَـٰقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهْلِهِۦ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ ٱللَّهِ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا

மேலும், தவறுதலாக அன்றி ஒரு விசுவாசிக்கு மற்றொரு விசுவாசியைக் கொலை செய்வது, ஆகுமானதல்ல; இன்னும் (உங்களில்) எவர் யாதொரு விசுவாசியைத் தவறுதலாகக் கொலை செய்து விட்டால், (அதற்கு நஷ்ட ஈடாக) விசுவாசியாகிய ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; இன்னும் அவர் குடும்பத்தார்பால் ஒப்படைக்கப்படும் நஷ்ட ஈடுமாகும். அ(க்குடும்பத்த)வர்கள் (மன்னித்து அதை) தர்மமாக விட்டுவிட்டாலன்றி, ஆகவே (இறந்த) அவர், உங்களுக்கு விரோதமுள்ள சமூகத்தாரில் உள்ளவராக இருந்து, விசுவாசியாகவும் அவர் இருந்தால் அப்போது, விசுவாசியாகிய ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும். இன்னும் உங்களுக்கும், எவர்களுக்கும் மத்தியில் உடன்படிக்கை இருக்கிறதோ அந்த சமூகத்தாரில் உள்ளவராக அவர் இருந்தால், அவருடைய குடும்பத்தார்பால் ஒப்படைக்கப்படும் நஷ்டஈடும், விசுவாசியான ஓர் அடிமையை விடுதலை செய்தலுமாகும், (இவ்வாறு செய்யும் வசதியை) யார் பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் பாவ மீட்சி பெறுவதற்காக (மன்னிக்கக் கோரி) இரண்டு மாதம் தொடராக நோன்பு நோற்க வேண்டும். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாக; தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.

It is not for a believer to kill a believer except (that it be) by mistake; and whosoever kills a believer by mistake, (it is ordained that) he must set free a believing slave and a compensation (blood-money, i.e. Diya) be given to the deceased’s family unless they remit it. If the deceased belonged to a people at war with you and he was a believer, the freeing of a believing slave (is prescribed); and if he belonged to a people with whom you have a treaty of mutual alliance, compensation (blood-money - Diya) must be paid to his family, and a believing slave must be freed. And whoso finds this (the penance of freeing a slave) beyond his means, he must fast for two consecutive months in order to seek repentance from Allâh. And Allâh is Ever All-Knowing, All-Wise.

4:93

وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خَـٰلِدًا فِيهَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَابًا عَظِيمًا

மேலும், எவர், விசுவாசியை, வேண்டுமென்றே கொலை செய்தால், அவருக்குரிய கூலி நரகமாகும், அதில் அவர் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர், இன்னும் அல்லாஹ் அவர் மீது கோபங்கொண்டு அவரைச் சபித்தும் விடுவான், மகத்தான வேதனையையும் அவன் அவருக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான்.

And whoever kills a believer intentionally, his recompense is Hell to abide therein; and the Wrath and the Curse of Allâh are upon him, and a great punishment is prepared for him.1

  1. :

    A) Narrated Ibn ‘Umar رضي الله عنهما : Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "A faithful believer remains at liberty regarding his religion unless he kills somebody unlawfully." (Sahih Al-Bukhâri, Vol.9, Hadith No.2)

    B) See the footnotes of (V.5:27, 32, 45 & 50).

4:94

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا ضَرَبْتُمْ فِى سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُوا۟ وَلَا تَقُولُوا۟ لِمَنْ أَلْقَىٰٓ إِلَيْكُمُ ٱلسَّلَـٰمَ لَسْتَ مُؤْمِنًا تَبْتَغُونَ عَرَضَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٌ ۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبْلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (வழியில் எதிர்ப்படுவோர் யார் என்பதைத்) தெளிவு படுத்திக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஸலாம் கூறியவரை இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் தேடியவர்களாக, “நீ விசுவாசியல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள், அல்லாஹ்விடத்தில் ஏராளமான போர்ப்பரிசுகள் இருக்கின்றன, இதற்கு முன்னர், நீங்களும் இவ்வாறே (பயந்து கொண்டு) இருந்தீர்கள், அப்போது அல்லாஹ் உங்கள் மீது பேருபகாரம் செய்தான், ஆகவே, (உங்கள் முன் இருப்பவர்கள், விசுவாசிகளா அல்லவா என்பதைத்) தெளிவு படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்பவனாக இருக்கின்றான்.

O you who believe! When you go (to fight) in the Cause of Allâh, verify (the truth), and say not to anyone who greets you (by embracing Islâm): "You are not a believer"; seeking the perishable goods of the worldly life. There are much more profits and booties with Allâh. Even as he is now, so were you yourselves before till Allâh conferred on you His Favours (i.e. guided you to Islâm), therefore, be cautious in discrimination. Allâh is Ever Well-Aware of what you do.

4:95

لَّا يَسْتَوِى ٱلْقَـٰعِدُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ غَيْرُ أُو۟لِى ٱلضَّرَرِ وَٱلْمُجَـٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَـٰهِدِينَ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى ٱلْقَـٰعِدِينَ دَرَجَةً ۚ وَكُلًّا وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَـٰهِدِينَ عَلَى ٱلْقَـٰعِدِينَ أَجْرًا عَظِيمًا

விசுவாசிகளில், தங்கடம் உடையவர்களைத் தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச் சென்று) தங்களுடைய செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்குச் சமமாக மாட்டார்கள், (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் (வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களைவிட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கின்றான், இன்னும் (இவ்விரு பிரிவினரும் விசுவாசிகளாகவே இருப்பதனால்) இவர்கள் யாவருக்கும், நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான், இன்னும், அறப்போர் செய்வோரை (அதில் கலந்து கொள்ளாது) உட்கார்ந்திருப்போரைவிட மகத்தான நற்கூலியால் அல்லாஹ் சிறப்பாக்கியிருக்கிறான்.

Not equal are those of the believers who sit (at home), except those who are disabled (by injury or are blind or lame), and those who strive hard and fight in the Cause of Allâh with their wealth and their lives. Allâh has preferred in grades those who strive hard and fight with their wealth and their lives above those who sit (at home). Unto each, Allâh has promised good (Paradise), but Allâh has preferred those who strive hard and fight, above those who sit (at home) by a huge reward.

4:96

دَرَجَـٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَرَحْمَةً ۚ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

(அல்லாஹ்) தன்னிடமிருந்து பதவிகளையும், மன்னிப்பையும் அருளையும் (அவர்களுக்கு அளிக்கிறான்.) இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக (இத்தகையோர் மீது) மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.

Degrees of (higher) grades from Him, and Forgiveness and Mercy. And Allâh is Ever Oft-Forgiving, Most Merciful.

4:97

إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلْمَلَـٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ قَالُوا۟ فِيمَ كُنتُمْ ۖ قَالُوا۟ كُنَّا مُسْتَضْعَفِينَ فِى ٱلْأَرْضِ ۚ قَالُوٓا۟ أَلَمْ تَكُنْ أَرْضُ ٱللَّهِ وَٰسِعَةً فَتُهَاجِرُوا۟ فِيهَا ۚ فَأُو۟لَـٰٓئِكَ مَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَسَآءَتْ مَصِيرًا

தமக்குத்தாமே அநீதமிழைத்துக் கொண்டவர்களாக இருக்க அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் பொழுது (அவர்களிடம்) “நீங்கள் எதில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “இப்பூமியில் நாங்கள் பலவீனமாக்கப்பட்டவர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறுவார்கள், (அதற்கு மலக்குகள்) “அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதாக இல்லையா? நீங்கள் (இருந்த) இவ்விடத்தைவிட்டு ஹிஜ்ரத்துச் செய்து புறப்பட்டிருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள், இத்தகையோர், அவர்கள் தங்குமிடம் நரகந்தான், செல்லுமிடத்தால் அது மிக்க கெட்டது.

Verily! As for those whom the angels take (in death) while they are wronging themselves (as they stayed among the disbelievers even though emigration was obligatory for them), they (angels) say (to them): "In what (condition) were you?" They reply: "We were weak and oppressed on the earth." They (angels) say: "Was not the earth of Allâh spacious enough for you to emigrate therein?" Such men will find their abode in Hell - What an evil destination!1

  1. See the footnote of the (V.3:149).

4:98

إِلَّا ٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلْوِلْدَٰنِ لَا يَسْتَطِيعُونَ حِيلَةً وَلَا يَهْتَدُونَ سَبِيلًا

(ஆனால்) ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்களிலும் பலவீனமாக்கப்பட்டவர்களைத் தவிர, (இவர்கள்) யாதொரு உபாயம் செய்துகொள்ள சக்திபெற மாட்டார்கள், (அதை விட்டு வெளியேற) எந்த வழியையும் அறியமாட்டார்கள்.

Except the weak ones among men, women and children who cannot devise a plan, nor are they able to direct their way.

4:99

فَأُو۟لَـٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعْفُوَ عَنْهُمْ ۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورًا

ஆகவே, அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் மன்னித்துவிடக் கூடும், இன்னும், அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக, (பிழைகளை) மிகப் பொறுப்பவனாக இருக்கிறான்.

These are they whom Allâh is likely to forgive them, and Allâh is Ever Oft-Pardoning, Oft-Forgiving.

4:100

۞ وَمَن يُهَاجِرْ فِى سَبِيلِ ٱللَّهِ يَجِدْ فِى ٱلْأَرْضِ مُرَٰغَمًا كَثِيرًا وَسَعَةً ۚ وَمَن يَخْرُجْ مِنۢ بَيْتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ يُدْرِكْهُ ٱلْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُۥ عَلَى ٱللَّهِ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

மேலும் (இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் எவர் ஹிஜ்ரத்துச் செய்து) வெளியேறிவிடுகின்றாரோ அவர் பூமியில் வசதியான அநேக புகலிடங்களையும், (பொருளாதார) வசதியையும் அடைவர், இன்னும், எவர் அல்லாஹ்வின்பாலும், அவனுடைய தூதரின்பாலும், ஹிஜ்ரத்துச் செய்தவராக தன் இல்லத்திலிருந்து புறப்பட்டுப்பின்னர் (வழியிலேயே) அவரை மரணம் வந்தடைந்து விட்டால் அப்போது அவருடைய (நற்)கூலி திட்டமாக அல்லாஹ்வின் மீது கடமையாக ஆகிவிடுகின்றது, மேலும், (இத்தகையோருக்கு) அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.

He who emigrates (from his home) in the Cause of Allâh, will find on earth many dwelling places and plenty to live by. And whosoever leaves his home as an emigrant unto Allâh and His Messenger, and death overtakes him, his reward is then surely incumbent upon Allâh. And Allâh is Ever Oft-Forgiving, Most Merciful.

4:101

وَإِذَا ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا۟ مِنَ ٱلصَّلَوٰةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ ۚ إِنَّ ٱلْكَـٰفِرِينَ كَانُوا۟ لَكُمْ عَدُوًّا مُّبِينًا

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் பூமியில் பிரயாணம் செய்தால் நிராகரிப்போர் உங்களைத் துன்புறுத்துவர் எனப் பயந்தால் நீங்கள் (கஸர் தொழுவது, அதாவது உங்கள்) தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது, (ஏனென்றால்) நிச்சயமாக நிராகரிப்போர் உங்களுக்குப் பகிரங்கமான விரோதிகளாகவே இருக்கின்றனர்.

And when you (Muslims) travel in the land, there is no sin on you if you shorten As-Salât (the prayer) if you fear that the disbelievers may put you in trial (attack you etc.), verily, the disbelievers are ever unto you open enemies.

4:102

وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلْتَقُمْ طَآئِفَةٌ مِّنْهُم مَّعَكَ وَلْيَأْخُذُوٓا۟ أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا۟ فَلْيَكُونُوا۟ مِن وَرَآئِكُمْ وَلْتَأْتِ طَآئِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا۟ فَلْيُصَلُّوا۟ مَعَكَ وَلْيَأْخُذُوا۟ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ ۗ وَدَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةً وَٰحِدَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰٓ أَن تَضَعُوٓا۟ أَسْلِحَتَكُمْ ۖ وَخُذُوا۟ حِذْرَكُمْ ۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْكَـٰفِرِينَ عَذَابًا مُّهِينًا

(நபியே! யுத்த முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு நீர் தொழவைக்க (இமாமாக முன்) நின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (தொழ) நிற்கட்டும், மேலும் தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும், உம்முடன் இவர்கள் ஸஜ்தா செய்து முடித்துவிட்டால் அவர்கள் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும் (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உம்முடன் (சேர்ந்து) தொழவும், அவர்கள் தம் எச்சரிக்கையையும் தம் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளவும், (ஏனென்றால்,) நீங்கள் உங்கள் பொருட்களிலிருந்தும் உங்கள் ஆயுதங்களிலிருந்தும் கவனக்குறைவாக இருந்துவிட்டால், உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து தாக்க வேண்டுமென்று அந்நிராகரிப்போர் விரும்புகின்றனர், இந்நிலைமையில் மழையின் காரணமாக உங்களுக்கு சங்கடமிருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தாலோ, உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை, இன்னும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாராக்கி வைத்திருக்கின்றான்.

When you (O Messenger Muhammad صلى الله عليه وسلم) are among them, and lead them in As-Salât (the prayer), let one party of them stand up [in Salât (prayer)] with you taking their arms with them; when they finish their prostrations, let them take their positions in the rear and let the other party come up which have not yet prayed, and let them pray with you taking all the precautions and bearing arms. Those who disbelieve wish, if you were negligent of your arms and your baggage, to attack you in a single rush, but there is no sin on you if you put away your arms because of the inconvenience of rain or because you are ill, but take every precaution for yourselves. Verily, Allâh has prepared a humiliating torment for the disbelievers.1

  1. See the footnote of (V.2:239).

4:103

فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَـٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ ۚ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ ۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَـٰبًا مَّوْقُوتًا

(விசுவாசங் கொண்டோரே! இவ்வாறு) நீங்கள் தொழுகையை முடித்துக்கொண்டால், பின்னர் நின்ற நிலையிலும் இருப்பிலும், உங்களுடைய விலாப்புறங்களின் மீது படுத்திருக்கும் நிலையிலும், அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள், (விரோதிகளின் எதிர்ப்பிலிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால், அப்பொழுது (முறைப்படி) தொழுங்கள், ஏனென்றால், நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

When you have finished As-Salât (the congregational prayer), remember Allâh standing, sitting down, and (lying down) on your sides, but when you are free from danger, perform As-Salât (Iqamat-as-Salât). Verily, As-Salât (the prayer) is enjoined on the believers at fixed hours.

4:104

وَلَا تَهِنُوا۟ فِى ٱبْتِغَآءِ ٱلْقَوْمِ ۖ إِن تَكُونُوا۟ تَأْلَمُونَ فَإِنَّهُمْ يَأْلَمُونَ كَمَا تَأْلَمُونَ ۖ وَتَرْجُونَ مِنَ ٱللَّهِ مَا لَا يَرْجُونَ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا

மேலும் (பகைவரின்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள், நீங்கள் (போரில் காயமடைந்து) துன்பமடைந்திருப்பீர்களானால், நீங்கள் துன்பம் அடைந்தது போன்று நிச்சயமாக அவர்களும் துன்பம் அடைவர், மேலும், அவர்கள் ஆதரவு வைக்காததை (நற்கூலியை) அல்லாஹ்விடமிருந்து நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள், மேலும், அல்லாஹ் நன்கறிகிறவனாக தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.

And don’t be weak in the pursuit of the enemy; if you are suffering (hardships) then surely, they (too) are suffering (hardships) as you are suffering, but you have a hope from Allâh (for the reward, i.e. Paradise) that for which they hope not; and Allâh is Ever All-Knowing, All-Wise.

4:105

إِنَّآ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُ ۚ وَلَا تَكُن لِّلْخَآئِنِينَ خَصِيمًا

அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக, நிச்சயமாக (நபியே!) முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை, நாமே உம்மீது இறக்கி வைத்திருக்கின்றோம், மேலும் சதிகாரர்களுக்கு(ச் சார்பாக) வாதாடுபவராக நீர் ஆகிவிட வேண்டாம்.

Surely, We have sent down to you (O Muhammad صلى الله عليه وسلم) the Book (this Qur’ân) in truth that you might judge between men by that which Allâh has shown you (i.e. has taught you through Divine Revelation), so be not a pleader for the treacherous.

4:106

وَٱسْتَغْفِرِ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

இன்னும் நீர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.

And seek the Forgiveness of Allâh,1 certainly, Allâh is Ever Oft-Forgiving, Most Merciful.

  1. The Prophet’s صلى الله عليه وسلم seeking of Allâh’s Forgiveness by daytime and at night.

    Narrated Abu Hurairah رضي الله عنه: I heard Allâh’s Messenger صلى الله عليه وسلم saying: "By Allâh! I seek Allâh’s Forgiveness and turn to Him in repentance for more than seventy times a day." (Sahih Al-Bukhâri’, Vol.8, Hadîth No.319).

4:107

وَلَا تُجَـٰدِلْ عَنِ ٱلَّذِينَ يَخْتَانُونَ أَنفُسَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمًا

(நபியே! பிறருக்குத் தீங்கிழைத்து) தமக்குத்தாமே மோசடி செய்து கொண்டுள்ளார்களே அத்தகையவர்களுக்காக, நீர் வாதாட வேண்டாம், (ஏனென்றால்,) கொடிய பாவியான மிக மோசக்காரனாக இருக்கிறவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

And argue not on behalf of those who deceive themselves. Verily, Allâh does not like anyone who is a betrayer, sinner.

4:108

يَسْتَخْفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَىٰ مِنَ ٱلْقَوْلِ ۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا

இவர்கள் (தங்கள் மோசடிகளை) மனிதர்களிடமிருந்து மறைக்கின்றார்கள், அவர்கள் (அதனை) அல்லாஹ்விடமிருந்து மறைத்துவிடவே முடியாது, (ஏனெனில்) அவன் பேச்சால் பொருந்திக்கொள்ளாததைக் கொண்டு இவர்கள் இரவெல்லாம் (சதிசெய்ய) ஆலோசனை செய்யும்போது அவன் அவர்களுடன்தான் இருக்கின்றான், மேலும், அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை (தன் அறிவால்) சூழ்ந்து கொண்டவனாக இருக்கின்றான்.

They may hide (their crimes) from men, but they cannot hide (them) from Allâh; for He is with them (by His Knowledge), when they plot by night in words that He does not approve. And Allâh ever encompasses what they do.

4:109

هَـٰٓأَنتُمْ هَـٰٓؤُلَآءِ جَـٰدَلْتُمْ عَنْهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فَمَن يُجَـٰدِلُ ٱللَّهَ عَنْهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ أَم مَّن يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا

அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் தானே அவர்கள், அவர்களுக்காக உலகவாழ்வில் நீங்கள் வாதாடுகிறீர்கள், கியாமத்து நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுபவர் யார்? அல்லது எவர் இவர்களுக்கு பொறுப்பேற்பவராக இருப்பார்?

Lo! You are those who have argued for them in the life of this world, but who will argue for them on the Day of Resurrection against Allâh, or who will then be their defender?

4:110

وَمَن يَعْمَلْ سُوٓءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُۥ ثُمَّ يَسْتَغْفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورًا رَّحِيمًا

மேலும், எவர் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தனக்குத் தானே அநீதமிழைத்துவிட்டு பின்னர் (பச்சாதாபப்பட்டு) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக அவர் காண்பார்.

And whoever does evil or wrongs himself but afterwards seeks Allâh’s Forgiveness, he will find Allâh Oft-Forgiving, Most Merciful.

4:111

وَمَن يَكْسِبْ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُۥ عَلَىٰ نَفْسِهِۦ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا

இன்னும், எவர் பாவத்தைச் சம்பாதிக்கின்றாரோ, அவர் அதனைச் சம்பாதிப்பதெல்லாம் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே (தான்), இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.

And whoever earns sin, he earns it only against himself. And Allâh is Ever All-Knowing, All-Wise.

4:112

وَمَن يَكْسِبْ خَطِيٓـَٔةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِۦ بَرِيٓـًٔا فَقَدِ ٱحْتَمَلَ بُهْتَـٰنًا وَإِثْمًا مُّبِينًا

அன்றியும் எவர், யாதொரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்து பின்னர் நிரபராதியான (மற்றொரு)வர்மீது அதனைச் சுமத்தினால் அப்போது நிச்சயமாக அவர் அவதூரையும், பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொண்டவராவார்.

And whoever earns a fault or a sin and then throws it on to someone innocent, he has indeed burdened himself with falsehood and a manifest sin.

4:113

وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُۥ لَهَمَّت طَّآئِفَةٌ مِّنْهُمْ أَن يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمْ ۖ وَمَا يَضُرُّونَكَ مِن شَىْءٍ ۚ وَأَنزَلَ ٱللَّهُ عَلَيْكَ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ ۚ وَكَانَ فَضْلُ ٱللَّهِ عَلَيْكَ عَظِيمًا

இன்னும், (நபியே!) உம்மீது அல்லாஹ்வின் பேரருளும், அவனது கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தினர் உம்மை வழி தவறச் செய்ய முயன்றிருப்பர், இன்னும், அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்க முடியாது, அவர்கள் உமக்கு யாதொரு தீங்கிழைத்துவிடவும் முடியாது, மேலும், அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான், இன்னும், நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான், மேலும், உம்மீது அல்லாஹ்வுடைய பேரருள் மகத்தானதாகவே இருக்கின்றது.

Had not the Grace of Allâh and His Mercy been upon you (O Muhammad صلى الله عليه وسلم), a party of them would certainly have made a decision to mislead you, but (in fact) they mislead none except their own selves, and no harm can they do to you in the least. Allâh has sent down to you the Book (The Qur’ân), and Al-Hikmah (Islâmic laws, knowledge of legal and illegal things i.e. the Prophet’s Sunnah - legal ways), and taught you that which you knew not. And Ever Great is the Grace of Allâh unto you (O Muhammad صلى الله عليه وسلم).

4:114

۞ لَّا خَيْرَ فِى كَثِيرٍ مِّن نَّجْوَىٰهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَـٰحٍۭ بَيْنَ ٱلنَّاسِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

தர்மத்தைப்பற்றி, அல்லது நன்மையானவற்றைப்பற்றி, அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப்பற்றி ஏவியவரைத் தவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை, மேலும், அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அதைச் செய்தால் நாம் அவர்களுக்கு மகத்தான (நற்)கூலியைத் தருவோம்.

There is no good in most of their secret talks save (in) him who orders Sadaqah (charity in Allâh’s Cause), or Ma‘rûf (Islâmic Monotheism and all the good and righteous deeds which Allâh has ordained), or conciliation between mankind; and he who does this, seeking the good Pleasure of Allâh, We shall give him a great reward.

4:115

وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ ٱلْمُؤْمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِۦ جَهَنَّمَ ۖ وَسَآءَتْ مَصِيرًا

இன்னும், நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர், (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து விசுவாசிகளின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம், (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்திவிடுவோம், அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது.

And whoever contradicts and opposes the Messenger (Muhammad صلى الله عليه وسلم) after the right path has been shown clearly to him, and follows other than the believers’ way, We shall keep him in the path he has chosen, and burn him in Hell - what an evil destination!1

  1. See the footnote of (V.3:85).

4:116

إِنَّ ٱللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَـٰلًۢا بَعِيدًا

நிச்சயமாக, அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான், மேலும் இதல்லாத (குற்றத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான், இன்னும் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ, அவர் திட்டமாக வெகு தூரமான வழிகேடாக வழி கெட்டுவிட்டார்.

Verily! Allâh forgives not (the sin of) setting up partners (in worship) with Him, but He forgives whom He wills sins other than that, and whoever sets up partners in worship with Allâh, has indeed strayed far away.

4:117

إِن يَدْعُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ إِنَـٰثًا وَإِن يَدْعُونَ إِلَّا شَيْطَـٰنًا مَّرِيدًا

அவனைத்தவிர்த்து, அவர்கள் பெண் (தெய்வங்)களைத் தவிர (வணக்கத்தில்) (வேறெதனையும்) அழைக்கவில்லை, மூர்க்கத்தனம் கொண்டவனான ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவுமில்லை.

They (all those who worship others than Allâh) invoke nothing but female deities besides Him (Allâh), and they invoke nothing but Shaitân (Satan), a persistent rebel!

4:118

لَّعَنَهُ ٱللَّهُ ۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَّفْرُوضًا

(தீய வழி நடத்தும் ஷைத்தானாகிய) அவனை அல்லாஹ் சபித்தான், அ(தற்க)வன், “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்” என்று கூறினான்.

Allâh cursed him. And he [Shaitân (Satan)] said: "I will take an appointed portion of your slaves.

4:119

وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَـَٔامُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلْأَنْعَـٰمِ وَلَـَٔامُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ ٱللَّهِ ۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيْطَـٰنَ وَلِيًّا مِّن دُونِ ٱللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا

“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன், அவர்களுக்கு வீணாண ஆசைகளையும் உண்டாக்குவேன், நிச்சயமாக அவர்களுக்கு நான் கட்டளையும் இடுவேன், அப்போது (அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்து விடப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளின் காதுகளை அவர்கள் அறுத்து விடுவர், இன்னும், அவர்களை நிச்சயமாக நான் ஏவுவேன், அப்போது அல்லாஹ்வின் சிருஷ்டி(களுடைய கோலங்)களை நிச்சயமாக அவர்கள் மாற்றிவிடுவர், (என்றும் ஷைத்தான் கூறினான்.) மேலும் எவர் அல்லாஹ்வையன்றி, (இத்தகைய) ஷைத்தானை (தனக்குப்) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கின்றாரோ, நிச்சயமாக அவர் தெளிவான நஷ்டத்தையே அடைந்துவிடுவார்.

Verily, I will mislead them, and surely, I will arouse in them false desires; and certainly, I will order them to slit the ears of cattle, and indeed I will order them to change the nature created by Allâh." And whoever takes Shaitân (Satan) as a Walî (protector or helper) instead of Allâh, has surely suffered a manifest loss.1

  1. See the footnote of (V.59:7).

4:120

يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ ۖ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَـٰنُ إِلَّا غُرُورًا

(ஷைத்தானாகிய) அவன் அவர்களுக்கு வாக்களிக்கின்றான், அவர்களுக்கு வீணாண ஆசைகளையும் ஊட்டுகின்றான், மேலும், ஏமாற்றத்தைத் தவிர (வேறு எதையும்) ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.

He [Shaitân (Satan)] makes promises to them, and arouses in them false desires; and Shaitân’s (Satân) promises are nothing but deceptions.

Next part: Verses 121–160 →

The Noble Qur'an — An-Nisa