8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

74. Al-Muddaththir

The One Enveloped · அல்-முத்தஸ்ஸிர்

Makki56 versesJuz 29

المدثر

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

74:1

يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ

(போர்வை) போர்த்திக் கொண்டிருப்பவரே!

O you (Muhammad صلى الله عليه وسلم) enveloped in garments!

74:2

قُمْ فَأَنذِرْ

நீர் எழுந்திருப்பீராக! பிறகு (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!

Arise and warn!

74:3

وَرَبَّكَ فَكَبِّرْ

மேலும், உமதிரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக!.

And magnify your Lord (Allâh)!

74:4

وَثِيَابَكَ فَطَهِّرْ

மேலும், உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வீராக!

And purify your garments!

74:5

وَٱلرُّجْزَ فَٱهْجُرْ

இன்னும், அசுத்தத்தை வெறுத்துவிடுவீராக!

And keep away from Ar-Rujz (the idols)!

74:6

وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ

(நீர் கொடுத்ததைவிட) அதிகமானதைப் பெறக்கருதி (மற்றவருக்கு) உபகாரம் செய்யாதீர்!

And give not a thing in order to have more (or consider not your deeds of obedience to Allâh as a favour to Him).

74:7

وَلِرَبِّكَ فَٱصْبِرْ

இன்னும், உமதிரட்சகனுக்காக(க் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு) நீர் பொறுமையுடன் இருப்பீராக!

And be patient for the sake of your Lord (i.e. perform your duty to Allâh)!

74:8

فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ

குழல் (ஸூர்) ஊதப்பட்டுவிட்டால்-

Then, when the Trumpet is sounded (i.e. the second blowing of the horn).

74:9

فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ

அந்நாளில் அ(வ்வாறு ஊதப்படுவதான)து கடினமான நாளாக இருக்கும்.

Truly, that Day will be a Hard Day -

74:10

عَلَى ٱلْكَـٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ

(அந்நாள்) நிராகரிப்போருக்கு எளிதானதன்று.

Far from easy for the disbelievers.

74:11

ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا

என்னையும், தனித்த நிலையில் நான் படைத்தவனையும் விட்டுவிடுவீராக!

Leave Me Alone (to deal) with whom I created lonely (without any wealth or children etc, i.e. Al-Walîd bin Al-Mughîrah Al-Makhzûmî)!

74:12

وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا

நான் அவனுக்கு ஏராளமான செல்வத்தையும் ஆக்கியிருந்தேன்.

And then granted him resources in abundance.

74:13

وَبَنِينَ شُهُودًا

அவனுடன் இருக்கக்கூடிய ஆண்மக்களையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).

And children to be by his side.

74:14

وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا

அவனுக்கு (வாழ்வதற்கு வேண்டிய) தயாரிப்புகளை (ஏற்கெனவே) அவனுக்காக நான் தயார் செய்து வைத்தேன்.

And made life smooth and comfortable for him.

74:15

ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ

பின்னும், நான் (அவனுக்கு) அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகின்றான்.

After all that he desires that I should give more;

74:16

كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِـَٔايَـٰتِنَا عَنِيدًا

(ஒருபோதும் அது நடந்தேறக்கூடியது) அல்ல! நிச்சயமாக அவன் நம்முடைய வசனங்களுக்கு முரண்பட்டவனாக இருக்கின்றான்.

Nay! Verily, he has been opposing Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations).

74:17

سَأُرْهِقُهُۥ صَعُودًا

(அதிசீக்கிரத்தில்) அவனை (வேதனையின்) ஒரு கடினமான சிகரத்தில் நான் ஏற்றிவிடுவேன்.

I shall oblige him to (climb a slippery mountain in the Hell-fire called As-Sa‘ûd, or) face a severe torment!

74:18

إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

நிச்சயமாக அவன் (இந்தக்குர் ஆனுக்கு எதிராக) சிந்தித்தான், இன்னும், (குர் ஆனைப்பற்றித் தன் மனதில் கற்பனையாக ஒரு கூற்றை) ஏற்படுத்திக் கொண்டான்.

Verily, he thought and plotted.

74:19

فَقُتِلَ كَيْفَ قَدَّرَ

ஆகவே, அவன் சபிக்கப்பட்டான்; எவ்வாறு அவன் (ஒரு கூற்றை) தன் மனதில்) ஏற்படுத்திக் கொண்டான்.

So let him be cursed: how he plotted!

74:20

ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ

பின்னரும் அவன் சபிக்கப்பட்டான்! எவ்வாறு அவன் (ஒரு கூற்றை தன் மனதில்) ஏற்படுத்திக் கொண்டான்?

And once more let him be cursed: how he plotted!

74:21

ثُمَّ نَظَرَ

பின்னர் அவன் (நம் வசனங்களை சிந்தித்து) நோக்கினான்.

Then he thought.

74:22

ثُمَّ عَبَسَ وَبَسَرَ

பின்னர், கடுகடுத்தான்; முகமும் சுளித்தான்.

Then he frowned and he looked in a bad tempered way;

74:23

ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ

பின்னர் திரும்பிச் சென்றான்; இன்னும், அகந்தை கொண்டான்.

Then he turned back, and was proud.

74:24

فَقَالَ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ

அப்பால் முன்னுள்ளோரிடமிருந்து கற்பிக்கப்பட்டு) “வழிவழியாக வந்த சூனியமேயன்றி இது (வேறு) இல்லை” எனக்கூறினான்.

Then he said: "This is nothing but magic from that of old,

74:25

إِنْ هَـٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ

“இது மனிதரின் கூற்றே தவிர வேறில்லை” (என்றும் கூறினான்.)

"This is nothing but the word of a human being!"

74:26

سَأُصْلِيهِ سَقَرَ

நான் அவனை “ஸகர்” எனும் நரகத்தில் புகச் செய்வேன்.

I will cast him into Hell-fire.1

  1. See the footnote of (V.17:97).

74:27

وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ

இன்னும் “ஸகர்” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

And what will make you know (exactly) what Hell-fire is?

74:28

لَا تُبْقِى وَلَا تَذَرُ

அது (நரகவாசிகளில் எவரையும்) மிச்சம் வைக்காது; (எவரையும்) விட்டும் விடாது.

It spares not (any sinner), nor does it leave (anything unburnt)!

74:29

لَوَّاحَةٌ لِّلْبَشَرِ

மனிதர்களை (சுட்டுக்கரித்து அவர்களின் மேனியை) மாற்றிவிடக் கூடியது.

Burning and blackening the skins!

74:30

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

(காவலர்களாக மலக்குகளில்) அதன்மீது பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.

Over it are nineteen (angels as guardians and keepers of Hell).

74:31

وَمَا جَعَلْنَآ أَصْحَـٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰٓئِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَـٰنًا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَـٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ

மேலும், நரகத்தின் காவலர்களை மலக்குகளாகவே தவிர நாம் ஆக்கவில்லை; இன்னும், அவர்களுடைய எண்ணிக்கையை நிராகரிப்போருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை; வேதம் கொடுக்கப்பட்டோர் (இதனை) உறுதி கொள்வதற்காகவும், விசுவாசங்கொண்டோர் (தம்) விசுவாசத்தை அதிகமாக்கிக் கொள்வதற்காகவும், இன்னும், வேதம் கொடுக்கப்பட்டோரும், விசுவாசிகளும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்காமலிருப்பதற்காகவும், (நாம் அவ்வாறு ஆக்கினோம்). இன்னும், எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றனதோ அவர்களும், நிராகரித்துக் கொண்டிருப்போரும் “இதனைக் கொண்டு, உதாரணமாக அல்லாஹ் எதை (அறிவிக்க) நாடினான்?” என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு ஆக்கினோம் நபியே!) இவ்வாறே அல்லாஹ், தான் நாடியவர்களை வழிகெடச் செய்கிறான்; தான் நாடியவர்களை நேர் வழியிலும் செலுத்துகின்றான்; இன்னும், உமதிரட்சகனின் படைகளை அவனைத் தவிர (மற்றெவரும்) அறியமாட்டார்; அது மனிதர்களுக்கு உபதேசமேயன்றி வேறில்லை.

And We have set none but angels as guardians of the Fire. And We have fixed their number (19) only as a trial for the disbelievers, in order that the people of the Scripture (Jews and Christians) may arrive at a certainty [that this Qur’ân is the truth as it agrees with their Books regarding the number (19) which is written in the Taurât (Torah) and the Injeel (Gospel)] and that the believers may increase in Faith (as this Qur’ân is the truth), and that no doubt may be left for the people of the Scripture and the believers, and that those in whose hearts is a disease (of hypocrisy) and the disbelievers may say: "What Allâh intends by this (curious) example ?" Thus Allâh leads astray whom He wills and guides whom He wills. And none can know the hosts of your Lord but He. And this (Hell) is nothing else than a (warning) reminder to mankind.

74:32

كَلَّا وَٱلْقَمَرِ

(நரகக்காவலர்கள் விஷயமாக நிராகரிப்போர் கூறுவது போன்று) அல்ல! சந்திரனின் மீதும் சத்தியமாக!

Nay! And by the moon

74:33

وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ

இரவின் மீதும் சத்தியமாக-அது பின் செல்லும்போது!

And by the night when it withdraws.

74:34

وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ

அதிகாலையின் மீதும் சத்தியமாக-அது வெளிச்சமாகும்போது!

And by the dawn when it brightens.

74:35

إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ

நிச்சயமாக (நரகமாகிய) அது மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.

Verily, it (Hell, or their denial of Prophet Muhammad صلى الله عليه وسلم, or the Day of Resurrection) is but one of the greatest (signs).

74:36

نَذِيرًا لِّلْبَشَرِ

அது மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்ற நிலையில் (மிகப் பெரியதாகும்.)

A warning to mankind -

74:37

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ

உங்களில் எவர் (நன்மைக்காக) முந்திச் செல்வதற்கோ – அல்லது (நன்மையை விட்டும்) பின்தங்கிவிடுவதற்கோ விரும்புகின்றாரோ அவருக்கு (அது அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்கிறது.

To any of you that chooses to go forward (by working righteous deeds), or to remain behind (by committing sins).

74:38

كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ

ஓவ்வோர் ஆத்மாவும், தான் சம்பாதித்தவற்றுக்குப் பிணையாக்கப் பட்டதாகும்.

Every person is a pledge for what he has earned,

74:39

إِلَّآ أَصْحَـٰبَ ٱلْيَمِينِ

ஆயினும் (வலக்கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்பட்ட) வலது சாரியினர் தவிர-

Except those on the Right, (i.e. the pious true believers of Islâmic Monotheism).

74:40

فِى جَنَّـٰتٍ يَتَسَآءَلُونَ

(அவர்கள்) சுவனங்களில் (இருப்பர்) அப்போது தங்களுக்குள் (விசாரித்துக்) கேட்பார்கள்.

In Gardens (Paradise) they will ask one another,

Next part: Verses 41–56 →

The Noble Qur'an — Al-Muddaththir