8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 78

/ 604
Page 78

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

4. An-Nisaسورة النساء

4:7

لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ ۚ نَصِيبًا مَّفْرُوضًا

(இறந்துபோன) பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்றவை(களான பொருட்)களிலிருந்து ஆண்களுக்குப் பாகமுண்டு, (அவ்வாறே) பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்றவை(களான பொருட்)களிலிருந்து பெண்களுக்குப் பாகமுண்டு, (அவர்கள் விட்டுச்சென்ற சொத்து) குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருப்பினும் சரியே., (இது அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.

There is a share for men and a share for women from what is left by parents and those nearest related, whether the property be small or large - a legal share.

4:8

وَإِذَا حَضَرَ ٱلْقِسْمَةَ أُو۟لُوا۟ ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينُ فَٱرْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا۟ لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا

மேலும், (பாகப்)பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (சொத்துக்கு உரிமையற்ற) உறவினரோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தையையும் கொண்டு ஆறுதல் கூறுங்கள்.

And when the relatives and the orphans and Al-Masâkîn (the poor) are present at the time of division, give them out of the property, and speak to them words of kindness and justice.

4:9

وَلْيَخْشَ ٱلَّذِينَ لَوْ تَرَكُوا۟ مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَـٰفًا خَافُوا۟ عَلَيْهِمْ فَلْيَتَّقُوا۟ ٱللَّهَ وَلْيَقُولُوا۟ قَوْلًا سَدِيدًا

தங்களுக்குப்பின், (தங்கள் காரியத்தை நிர்வகிக்கச்) சக்தியற்ற சந்ததிகளைவிட்டுச் சென்றால் அவர்களை(க் குறித்து) பயப்படுகிறார்களே அத்தகையோர்-(அனாதைகள், சிறுவர்கள் சொத்துப் பங்கீடு விஷயத்தில்) பயந்து கொள்ளவும், ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி (அவர்களுக்கு) நேர்மையான வார்த்தையே கூறவும்.

And let those (executors and guardians) have the same fear in their minds as they would have for their own, if they had left weak offspring behind. So let them fear Allâh and speak right words.

4:10

إِنَّ ٱلَّذِينَ يَأْكُلُونَ أَمْوَٰلَ ٱلْيَتَـٰمَىٰ ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِى بُطُونِهِمْ نَارًا ۖ وَسَيَصْلَوْنَ سَعِيرًا

நிச்சயமாக அநாதைகளின் பொருட்களை அநியாயமாக தின்கின்றார்களே அத்தகையோர்-அவர்கள் தங்கள் வயிறுகளில் (நிரப்பித்) தின்னுவதெல்லாம் நெருப்பையேதான், இன்னும், அவர்கள் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பினுள் நுழைவார்கள்.

Verily, those who unjustly eat up the property of orphans, they eat up only fire into their bellies, and they will be burnt in the blazing Fire!

4:11

يُوصِيكُمُ ٱللَّهُ فِىٓ أَوْلَـٰدِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ ۚ فَإِن كُنَّ نِسَآءً فَوْقَ ٱثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۖ وَإِن كَانَتْ وَٰحِدَةً فَلَهَا ٱلنِّصْفُ ۚ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَٰحِدٍ مِّنْهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٌ ۚ فَإِن لَّمْ يَكُن لَّهُۥ وَلَدٌ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُ ۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخْوَةٌ فَلِأُمِّهِ ٱلسُّدُسُ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍ يُوصِى بِهَآ أَوْ دَيْنٍ ۗ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا ۚ فَرِيضَةً مِّنَ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

உங்கள் மக்கள் விஷயத்தில், (சொத்துப்பங்கீட்டில், ஓர்) ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான், ஆகவே, அவர்கள் (ஆணின்றி) இருவருக்கும் அதிகமாக பெண்களாக இருந்தால், அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு பாகம் (அப்பெண்களாகிய) அவர்களுக்குண்டு. மேலும் ஒருத்தியாக அவள் இருந்தால், அவளுக்கு பாதி உண்டு, இன்னும் (உங்களில் இறந்த) அவருக்குப் பிள்ளை இருந்தால், அவருடைய தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற) (சொத்)தில் ஆறிலொன்று உண்டு, (இறந்த அவருக்குப் பிள்ளை இல்லாமலிருந்தால், பெற்றோர் (மட்டும்) அவருக்கு அனந்தரக்காரர்களானால் அப்பொழுது அவருடைய தாய்க்கு மூன்றிலொன்று உண்டு, மற்ற இருபாகமும் தகப்பனுக்குரியதாகும், (இறந்த) அவருக்குப் (பல)சகோதரர்கள் இருந்தால், அப்பொழுது எதனை அவர் (மரண) சாசனம் செய்தாரோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு அல்லது கடனுக்கு (அதை கொடுக்கப்பட்டதற்கு)ப் பின்னர் அவரின் தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு, உங்கள் தந்தைகளோ இன்னும் உங்கள் ஆண்மக்களோ இவர்களில் உங்களுக்குப் பயனளிப்பதில் மிக நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், (ஆகவே, இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கபபட்டுள்ள கட்டளையாகும், நிச்சயமாக அல்லாஹ் மிக்க அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.

Allâh commands you as regards your children’s (inheritance): to the male, a portion equal to that of two females; if (there are) only daughters, two or more, their share is two-thirds of the inheritance; if only one, her share is a half. For parents, a sixth share of inheritance to each if the deceased left children; if no children, and the parents are the (only) heirs, the mother has a third; if the deceased left brothers (or sisters), the mother has a sixth. (The distribution in all cases is) after the payment of legacies he may have bequeathed or debts. You know not which of them, whether your parents or your children, are nearest to you in benefit; (these fixed shares) are ordained by Allâh. And Allâh is Ever All-Knower, All-Wise.