8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 77

/ 604
Page 77

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

4. An-Nisaسورة النساء

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

4:1

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَآءً ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِى تَسَآءَلُونَ بِهِۦ وَٱلْأَرْحَامَ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

மனிதர்களே! நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள், அவன் எத்தகையவனென்றால், உங்களை (யாவரையும்) ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான், இன்னும் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் பரவச்செய்தான், இன்னும், அல்லாஹ்வை-அவனை-க்கொண்டு (தமக்குரிய உரிமைகளை) நீங்கள் (ஒருவருக்கொருவர்) கேட்டுக்கொள்கிறீர்களே அத்தகையவனையும், மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களை (த்துண்டித்து விடுவதை)யும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

O mankind! Be dutiful to your Lord, Who created you from a single person (Adam), and from him (Adam) He created his wife [Hawwâ (Eve)], and from them both He created many men and women; and fear Allâh through Whom you demand (your mutual rights), and (do not cut the relations of) the wombs (kinship)1. Surely, Allâh is Ever an All-Watcher over you.

  1. See the footnote of (V.2:27).

4:2

وَءَاتُوا۟ ٱلْيَتَـٰمَىٰٓ أَمْوَٰلَهُمْ ۖ وَلَا تَتَبَدَّلُوا۟ ٱلْخَبِيثَ بِٱلطَّيِّبِ ۖ وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَهُمْ إِلَىٰٓ أَمْوَٰلِكُمْ ۚ إِنَّهُۥ كَانَ حُوبًا كَبِيرًا

மேலும், நீங்கள் அநாதைகளுக்கு அவர்களுடைய பொருட்களை (அவர்கள் பிராயமடைந்த பின், குறைவின்றி அவர்களுக்கு)க் கொடுத்து விடுங்கள், (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் விடாதீர்கள், அவர்களுடைய பொருட்களையும் உங்களுடைய பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டும் விடாதீர்கள், நிச்சயமாக அது பெரும்பாவமாக இருக்கிறது.

And give unto orphans their property and do not exchange (your) bad things for (their) good ones; and devour not their substance (by adding it) to your substance. Surely, this is a great sin.1

  1. . See the footnote of (V.3:130).

4:3

وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا۟ فِى ٱلْيَتَـٰمَىٰ فَٱنكِحُوا۟ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثْنَىٰ وَثُلَـٰثَ وَرُبَـٰعَ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا۟ فَوَٰحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُكُمْ ۚ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَلَّا تَعُولُوا۟

அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்கள் விஷயத்தில் நீதம் செய்யமுடியாது என நீங்கள் அஞ்சினால் (மற்றப்) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளுங்கள், அவர்களுக்கிடையில், நீங்கள் நீதமாக நடக்க முடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணை (திருமணம் செய்து கொள்ளுங்கள்) அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க்கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்). நீங்கள் அநீதி செய்யாமலிருப்பதற்கு, இதுவே சுலப(மான வழியா)கும்.

And if you fear that you shall not be able to deal justly with the orphan-girls then marry (other) women of your choice, two or three, or four; but if you fear that you shall not be able to deal justly (with them), then only one or (the slaves) that your right hands possess. That is nearer to prevent you from doing injustice.

4:4

وَءَاتُوا۟ ٱلنِّسَآءَ صَدُقَـٰتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيٓـًٔا مَّرِيٓـًٔا

நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (திருமணக்கொடைகளை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள், அதிலிருந்து ஒரு சிறிதை, அவர்கள், (தங்கள்) மனமார உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதனை நீங்கள் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்.

And give to the women (whom you marry) their Mahr (obligatory bridal-money given by the husband to his wife at the time of marriage) with a good heart; but if they, of their own good pleasure, remit any part of it to you, take it, and enjoy it without fear of any harm (as Allâh has made it lawful).

4:5

وَلَا تُؤْتُوا۟ ٱلسُّفَهَآءَ أَمْوَٰلَكُمُ ٱلَّتِى جَعَلَ ٱللَّهُ لَكُمْ قِيَـٰمًا وَٱرْزُقُوهُمْ فِيهَا وَٱكْسُوهُمْ وَقُولُوا۟ لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا

(அநாதைகளின் பொருளுக்குக் காரியஸ்தராக ஏற்பட்ட நீங்கள் அவர்களின்) வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமிருக்கும் (அவர்களுடைய) பொருட்களை, புத்திக் குறைவானவர்க(ளாக அவர்கள் இருந்தால், அவர்க)ளிடம் கொடுத்துவிட வேண்டாம், இன்னும் அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள், அவர்களுக்கு ஆடை(களை)யும் அணிவியுங்கள், அவர்களுக்கு நல்ல வார்த்தைகளையே கூறுங்கள்.

And give not unto the foolish your property which Allâh has made a means of support for you,1 but feed and clothe them therewith, and speak to them words of kindness and justice.

  1. Narrated Al-Mughîrah bin Shu‘bah رضي الله عنه : The Prophet صلى الله عليه وسلم said, "Allâh has forbidden for you: (1) To be undutiful to your mothers, (2) to bury your daughters alive, (3) not to pay the rights of the others (e.g. Zakât, charity) and (4) to… Show more

    Narrated Al-Mughîrah bin Shu‘bah رضي الله عنه : The Prophet صلى الله عليه وسلم said, "Allâh has forbidden for you: (1) To be undutiful to your mothers, (2) to bury your daughters alive, (3) not to pay the rights of the others (e.g. Zakât, charity) and (4) to beg of men (i.e. begging). And Allâh has hated for you: (1) Sinful and useless talk like backbiting or that you talk too much about others, (2) to ask too many questions, (in disputed religious matters) and (3) to waste the wealth (by extravagance with lack of wisdom and thinking). (Sahih Al-Bukhâri, Vol.3, Hadîth No.591).

4:6

وَٱبْتَلُوا۟ ٱلْيَتَـٰمَىٰ حَتَّىٰٓ إِذَا بَلَغُوا۟ ٱلنِّكَاحَ فَإِنْ ءَانَسْتُم مِّنْهُمْ رُشْدًا فَٱدْفَعُوٓا۟ إِلَيْهِمْ أَمْوَٰلَهُمْ ۖ وَلَا تَأْكُلُوهَآ إِسْرَافًا وَبِدَارًا أَن يَكْبَرُوا۟ ۚ وَمَن كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ ۖ وَمَن كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِٱلْمَعْرُوفِ ۚ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَٰلَهُمْ فَأَشْهِدُوا۟ عَلَيْهِمْ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبًا

இன்னும், அநாதை(ச் சிறுவர்)களை அவர்கள் திருமண வயதையடையும் வரை (தொழில் முதலியவற்றில் ஈடுபடுத்தி, பழக்கிக், கல்வியும் கற்பித்துச்) சோதித்து வாருங்கள், (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள், அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் பொருட்களையும் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்று (எண்ணி), அவர்களுடைய பொருட்களை அவசர அவசரமாகவும் அளவு கடந்தும் நீங்கள் தின்றுவிடாதீர்கள், இன்னும் (அநாதையின் பொருட்களையுடைய காரியஸ்தனாகிய) அவர் செல்வந்தனாக இருந்தால் (அதை நிர்வகிப்பதற்காக எதையும் தனக்காக எடுத்துக் கொள்ளாது!) தவிர்த்துக் கொள்ளவும், அவர் ஏழையாக இருந்தாலோ நியாயமான அளவு (அதிலிருந்து) அவரும் புசிக்கவும், மேலும், அவர்களுடைய பொருட்களை, நீங்கள் அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களுக்காகச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், கணக்கெடுப்பதில் அல்லாஹ் போதுமானவன், (ஆகவே, அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்).

And try orphans (as regards their intelligence) until they reach the age of marriage; if then you find sound judgement in them, release their property to them, but consume it not wastefully and hastily fearing that they should grow up, and whoever (amongst guardians) is rich, he should take no wages, but if he is poor, let him have for himself what is just and reasonable (according to his labour). And when you release their property to them, take witness in their presence; and Allâh is All-Sufficient in taking account.