9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 584

/ 604
Page 584

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

79. An-Nazi'atسورة النازعات

79:17

ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ

நீர் ஃபிர் அவ்னின் பால் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.

Go to Fir‘aun (Pharaoh); verily he has transgressed all bounds (in crimes, sins, polytheism, disbelief).

79:18

فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ

ஆகவே, நீ பரிசுத்தமடைய (ஈமான் கொள்ள) உனக்கு (விருப்பம்) உண்டா? என்று நீர் கேட்பீராக!

And say to him: "Would you purify yourself (from the sin of disbelief by becoming a believer)?"

79:19

وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ

இன்னும், உன் இரட்சகன் பக்கம் (செல்லும்) வழியினை நான் உனக்கு காட்டுகிறேன்; (அதன்) பின்னர் அவனுக்கு நீ பயந்து கொள்வாய் (என்று கூறுவீராக!)

"And that I guide you to your Lord, so you should fear Him?"

79:20

فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ

பின்னர், மிகப்பெரும் அத்தாட்சியை அவனுக்கு அவர் காண்பித்தார்.

Then [Mûsâ (Moses)] showed him the great sign (miracles).

79:21

فَكَذَّبَ وَعَصَىٰ

அப்போது அவன், (மூஸாவையும், அவர் கொண்டு வந்ததையும்) பொய்யாக்கினான்; மேலும் (அவரின் இரட்சகனுக்கு) மாறு செய்தான்.

But [Fir‘aun (Pharaoh)] belied and disobeyed.

79:22

ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ

பின்னர் அவன் பின்வாங்கி (அவருக்கு எதிராகக் குழப்பம் செய்ய) முயற்சித்தான்.

Then he turned his back, striving (against Allâh).

79:23

فَحَشَرَ فَنَادَىٰ

ஆகவே, அவன் (தன் கூட்டத்தாரை) ஒன்று திரட்டினான், பின்னர் அழைத்தான்.

Then he gathered (his people) and cried aloud,

79:24

فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ

அப்போது, “நான் தான் உங்களுடைய மிக மேலான இரட்சகன்” என்று (அவர்களிடம்) கூறினான்.

Saying: "I am your lord, most high."

79:25

فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ

ஆதலால், அவனை மறுமை மற்றும் இம்மையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்துக் கொண்டான்.

So Allâh, seized him with punishment for his last1 and first2 transgression. [Tafsir At-Tabari]

  1. Last i.e. his saying: "I am your lord, most high" (See Verse 79:24)

  2. First i.e. his saying, "O chiefs! I know not that you have a god other than I" (See Verse 28:38)

79:26

إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ

நிச்சயமாக இதில் (அல்லாஹ்வைப்) பயந்து கொள்கிறவருக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.

Verily, in this is an instructive admonition for whosoever fears Allâh.

79:27

ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا

படைப்பால் நீங்கள் மிகக் கடினமா(னவர்களா)? அல்லது வானமா? அதனை அவன் படைத்தான்.

Are you more difficult to create or is the heaven that He constructed?

79:28

رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا

அதன் முகட்டை அவன் உயா்த்தினான்; பின்னர் அதைச் சமப்படுத்தினான்.

He raised its height, and has perfected it.

79:29

وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا

அவனே அதன் இரவை இருளாக்கி, (சூரியனைக்கொண்டு பிரகாசிக்கும்) அதன் பகலையும் வெளியாக்கினான்.

Its night He covers with darkness and its forenoon He brings out (with light)

79:30

وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ

மேலும், பூமியை-அதன்பின் அவன்-அதை (ஒழுங்குபடுத்தி) விரித்தான்.

And after that He spread the earth,

79:31

أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا

அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் (மீதுள்ள பிராணிகளுக்கு) மேய்ச்சல் பொருளையும் அவன் வெளியாக்கினான்.

And brought forth therefrom its water and its pasture.

79:32

وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا

மலைகளையும்-அவற்றை அவன் (பூமிக்கு முளைகளாக) உறுதிப்படுத்தினான்-

And the mountains He has fixed firmly,

79:33

مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ

உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (அவற்றை இவ்வாறு செய்தான்)

(To be) a provision and benefit for you and your cattle.

79:34

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ

எனவே, (இரண்டாவது முறையாக குழல் ஊதப்படுவதான) மாபெரும் அமளி வந்துவிட்டால்-

But when there comes the greatest catastrophe (i.e. the Day of Recompense) -

79:35

يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ

அந்நாளில் மனிதன் (உலகில்) தான் முயன்றவற்றை நினைவுபடுத்திக் கொள்வான்.

The Day when man shall remember what he strove for.

79:36

وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ

இன்னும், காண்போருக்கு நரகம் (கண் எதிரில்) வெளிப்படுத்தப்படும்.

And Hell-fire shall be made apparent in full view for (every) one who sees.

79:37

فَأَمَّا مَن طَغَىٰ

எனவே, எவர் வரம்பு மீறி விட்டாரோ,

Then for him who transgressed all bounds, (in disbelief, oppression and evil deeds of disobedience to Allâh).

79:38

وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

மேலும், இவ்வுலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ-

And preferred the life of this world (by following his evil desires and lusts),

79:39

فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ

நிச்சயமாக நரகம், அதுவே! (அவர்) ஒதுங்குமிடமாகும்.

Verily, his abode will be Hell-fire;

79:40

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ

மேலும், எவர் தன் இரட்சகனின் (சன்னிதியை அவன்) முன் நிற்பதைப் பயந்து, மனோ இச்சையைவிட்டு (தன்) ஆத்மாவைத் தடுத்துக் கொண்டாரோ அவர்-

But as for him who feared standing before his Lord, and restrained himself from impure evil desires and lusts.

79:41

فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ

அப்போது நிச்சயமாக சுவனம்- அதுவே! (அவர்) ஒதுங்குமிடமாகும்.

Verily, Paradise will be his abode.

79:42

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا

(நபியே!) மறுமையைப் பற்றி – அது எப்பொழுது (வெளிப்பட்டு) நிலைபெறும் என உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.

They ask you (O Muhammad صلى الله عليه وسلم) about the Hour - when will be its appointed time?

79:43

فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ

அதைப்பற்றிக் கூறுவதற்கு நீர் எதில் இருக்கிறீர்? (அது பற்றிய பதில் உமக்குத் தெரியாது, அல்லாஹ் மட்டுமே அறிவான்).

You have no knowledge to say anything about it.

79:44

إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ

அதன் முடி(வு பற்றிய அறி)வு உமதிரட்சகனிடமே இருக்கின்றது.

To your Lord belongs (the knowledge of) the term thereof?

79:45

إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا

நிச்சயமாக நீர் அதைப் பயப்படக்கூடியவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்தான்.

You (O Muhammad صلى الله عليه وسلم) are only a warner for those who fear it,

79:46

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا

அதனை அவர்கள் (கண்ணால்) காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர தங்கியிருக்காதது போன்று (அவர்களுக்குத் தோன்றும்).

The Day they see it, (it will be) as if they had not tarried (in this world) except an afternoon or a morning.

80. 'Abasaسورة عبس