9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 570

/ 604
Page 570

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

70. Al-Ma'arijسورة المعارج

70:41

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

அவர்களைவிட, மிகச் சிறந்தவர்களை (அவர்களுக்குப் பகரமாக) மாற்றி விடுவதின் மீது (ஆற்றலுடையோராவோம்! இதில்) நாம் தோற்கடிக்கப்படுவோர் அல்லர்.

To replace them by (others) better than them; and We are not to be outrun.

70:42

فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ

(ஆகவே, நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை வீண் காரியங்களில் மூழ்கியும் விளையாடிக் கொண்டுமிருக்கவும் அவர்களை நீர் விட்டு விடுவீராக!

So leave them to plunge in vain talk1 and play about, until they meet their Day which they are promised -

  1. See the footnote of (V.4:5).

70:43

يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ

(இணைவைப்போர்) நடப்பட்டவைக(ளான சிலைக)ளின் பால் விரைந்து செல்பவர்களைப்போன்று மண்ணறைகளிலிருந்து விரைந்தவர்களாக அவர்கள் வெளியேறி வரும்நாள்,

The Day when they will come out of the graves quickly as racing to a goal,

70:44

خَـٰشِعَةً أَبْصَـٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ

அவர்களுடைய பார்வை கீழ்நோக்கியவையாக (இருக்கும் நிலையில்) இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும், (நபியே!) அது அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அத்தகைய நாளாகும்.

With their eyes lowered in fear and humility, ignominy covering them (all over)! That is the Day which they were promised!

71. Nuhسورة نوح

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

71:1

إِنَّآ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ

நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தவரின்பால் “துன்புறுத்தும் வேதனை அவர்களுக்கு வரும் முன், உம்முடைய சமூகத்தினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்று (தூதராக) நாம் அனுப்பி வைத்தோம்.

Verily, We sent Nûh (Noah) to his people (saying): "Warn your people before there comes to them a painful torment."

71:2

قَالَ يَـٰقَوْمِ إِنِّى لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ

“என்னுடைய சமூகத்தினரே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்று (அவர்களிடம்) கூறினார்.

He said: "O my people! Verily, I am a plain warner to you,

71:3

أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ

“அல்லாஹ்வை (அவன் ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள், இன்னும், அவனை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், எனக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள்”.

"That you should worship Allâh (Alone), fear (be dutiful to) Him, and obey me,

71:4

يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى ۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُ ۖ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ

“(அவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு அவன் மன்னிப்பான், இன்னும், குறிப்பிடப்பட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழவிட்டு)ப் பிற்ப்படுத்தி வைப்பான், நிச்சயமாக அல்லாஹ்வுடைய தவணை-அது வந்துவிடுமானால் அது பிற்படுத்தப்படமாட்டாது, (இதனை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).

"He (Allâh) will forgive you of your sins and respite you to an appointed term. Verily, the term of Allâh when it comes, cannot be delayed, if you but knew."

71:5

قَالَ رَبِّ إِنِّى دَعَوْتُ قَوْمِى لَيْلًا وَنَهَارًا

(அவர் நீண்ட காலம் ஏகத்துவப்பிரச்சாரம் செய்தும் அவரைப் புறக்கணித்து விடவே,) “என் இரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சமூகத்தாரை (உன் வழியில்) இரவிலும், பகலிலும் அழைத்தேன்” என்று கூறினார்.

He said: "O my Lord! Verily, I have called to my people night and day (i.e. secretly and openly to accept the doctrine of Islâmic Monotheism),1

  1. See the footnote of (V.2:143).

71:6

فَلَمْ يَزِدْهُمْ دُعَآءِىٓ إِلَّا فِرَارًا

“அப்போது என்னுடைய அழைப்பு, அவர்களுக்கு வெருண்டோடுவதையே அன்றி, (வேறொன்றையும்) அதிகப்படுத்தவில்லை

"But all my calling added nothing but to (their) flight (from the truth).

71:7

وَإِنِّى كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوٓا۟ أَصَـٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِمْ وَٱسْتَغْشَوْا۟ ثِيَابَهُمْ وَأَصَرُّوا۟ وَٱسْتَكْبَرُوا۟ ٱسْتِكْبَارًا

மேலும், நிச்சயமாக நான்-“அவர்களுக்கு நீ மன்னிப்பளிப்பதற்காக (உன்பால்) நான் அவர்களை அழைத்த பொழுதெல்லாம் (அதைக்கேட்காதிருக்க) தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களை விட்டுக்கொண்டார்கள், (என்னைப் பார்க்காதிருக்க) தங்கள் ஆடைகளைக் கொண்டு தங்(களின் முகங்க)ளை மூடிக்கொண்டுமிருந்தனர், மேலும், (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தனர், பெரும் அகந்தையாகவும் அகந்தை கொண்டனர்.

And verily, every time I called unto them that You might forgive them, they thrust their fingers into their ears, covered themselves up with their garments, and persisted (in their refusal), and magnified themselves in pride.

71:8

ثُمَّ إِنِّى دَعَوْتُهُمْ جِهَارًا

“பின்னும், நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமாக அழைத்தேன்”

"Then verily, I called to them openly (aloud).

71:9

ثُمَّ إِنِّىٓ أَعْلَنتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا

“பின்னும் நிச்சயமாக நான் அவர்களுக்கு (அழைப்பை) பகிரங்கப்படுத்தினேன், அவர்களுக்கு (எனது பிரச்சாரத்தை) மறைமுகமாக மறைத்தும் செய்தேன்.

"Then verily, I proclaimed to them in public, and I have appealed to them in private.

71:10

فَقُلْتُ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ إِنَّهُۥ كَانَ غَفَّارًا

ஆகவே, (முந்திய உங்கள் பாவங்களுக்காக) “உங்கள் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடுங்கள், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்” என்றும் கூறினேன்.

"I said (to them): ‘Ask forgiveness from your Lord, verily, He is Oft-Forgiving;