9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 571

/ 604
Page 571

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

71. Nuhسورة نوح

71:11

يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًا

“(அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்”

‘He will send rain to you in abundance,

71:12

وَيُمْدِدْكُم بِأَمْوَٰلٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّـٰتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَـٰرًا

“செல்வங்களையும், ஆண் மக்களையும் (கொடுப்பது) கொண்டு, உங்களுக்கு உதவி புரிவான், உங்களுக்காகத் தோட்டங்களையும் ஆக்குவான், உங்களுக்காக ஆறுகளையும் (அவற்றில்) ஆக்குவான்”

‘And give you increase in wealth and children, and bestow on you gardens and bestow on you rivers.’"

71:13

مَّا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا

“அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் அறிந்து (அவனைப்பயந்து) கொள்ளாமலிருக்க உங்களுக்கென்ன நேர்ந்தது?”

What is the matter with you, that [you fear not Allâh (His punishment), and] you hope not for reward (from Allâh or you believe not in His Oneness).

71:14

وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا

பல நிலைகளிலும் உங்களை அவன் நிச்சயமாகப் படைத்தான்.

While He has created you in (different) stages [i.e. first Nutfah, then ‘Alaqah and then Mudghah, see (V.23:13,14)].

71:15

أَلَمْ تَرَوْا۟ كَيْفَ خَلَقَ ٱللَّهُ سَبْعَ سَمَـٰوَٰتٍ طِبَاقًا

“ஏழு வானங்களை, அடுக்கடுக்காக அல்லாஹ் எவ்வாறு படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா,”

See you not how Allâh has created the seven heavens one above another?

71:16

وَجَعَلَ ٱلْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ ٱلشَّمْسَ سِرَاجًا

“இன்னும், அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான்.”

And has made the moon a light therein, and made the sun a lamp?

71:17

وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلْأَرْضِ نَبَاتًا

மேலும், “அல்லாஹ் உங்களை(ப்புற் பூண்டுகளைப்போல்) பூமியின் மண்ணிலிருந்து உற்பத்தி செய்வதாக உறபத்தி செய்தான்.”

And Allâh has brought you forth from the (dust of) earth? (Tafsir At-Tabarî)

71:18

ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا

“பின்னர் அதில் உங்களை (மரணிக்கச் செய்து) அவன் மீளவைப்பான், மேலும், (அதிலிருந்தே) உங்களை வெளிப்படுத்துவதாக அவன் வெளிப்படுத்துவான்.

Afterwards He will return you into it (the earth), and bring you forth (again on the Day of Resurrection)?

71:19

وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ بِسَاطًا

“அன்றியும் அல்லாஹ் உங்களுக்குப் பூமியை விரிப்பாக ஆக்கினான்”.

And Allâh has made for you the earth a wide expanse.

71:20

لِّتَسْلُكُوا۟ مِنْهَا سُبُلًا فِجَاجًا

“அதில் உள்ள விரிவான பாதைகளில் நீங்கள் செல்லும் பொருட்டு” (என்றெல்லாம் தன் சமூகத்தாரிடம் கூறினார்.)

That you may go about therein in broad roads.

71:21

قَالَ نُوحٌ رَّبِّ إِنَّهُمْ عَصَوْنِى وَٱتَّبَعُوا۟ مَن لَّمْ يَزِدْهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارًا

(பின்னும்) நூஹ் கூறினார், “என் இரட்சகனே! நிச்சயமாக அவர்கள் என(து கட்டளை)க்கு மாறு செய்து விட்டனர், அன்றியும், எவருக்கு அவருடைய செல்வமும், அவருடைய மக்களும் நஷ்டத்தைத்தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவரையே அவர்கள் பின்பற்றினர்”.

Nûh (Noah) said: "My Lord! They have disobeyed me, and followed one whose wealth and children give him no increase but loss.

71:22

وَمَكَرُوا۟ مَكْرًا كُبَّارًا

“மேலும், மிகப் பெரிய சூழ்ச்சியாக அவர்கள் சூழ்ச்சி செய்தனர்”.

"And they have plotted a mighty plot.

71:23

وَقَالُوا۟ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا

“மேலும், அவர்கள் (தம் சமூகத்தாரிடம்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள், வத்து ஸுவாஉ, எகூஸ், யஊக், நஸ்ர், (ஆகிய விக்கிரகங்)களையும் நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் கூறினார்கள்.

"And they have said: ‘You shall not leave your gods: nor shall you leave Wadd, nor Suwâ‘, nor Yaghûth, nor Ya‘ûq nor Nasr’ (these are the names of their idols).

71:24

وَقَدْ أَضَلُّوا۟ كَثِيرًا ۖ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا ضَلَـٰلًا

“நிச்சயமாக அவர்கள் அநேகரை வழி கெடுத்தும் விட்டனர், (ஆகவே, என் இரட்சகனே!) அநியாயக்காரர்களுக்கு வழிக்கேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!” (என்றும் பிரார்த்தித்தார்.)

"And indeed they have led many astray. And (O Allâh): ‘Grant no increase to the Zâlimûn (polytheists, wrong-doers, and disbelievers) save error.’"

71:25

مِّمَّا خَطِيٓـَٔـٰتِهِمْ أُغْرِقُوا۟ فَأُدْخِلُوا۟ نَارًا فَلَمْ يَجِدُوا۟ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارًا

ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக (பெரு வெள்ளத்தில்) அவர்கள் மூழ்கடிக்கப்பட்டு, (பின்னர்) நரகத்திலும் புகுத்தப்பட்டனர், அல்லாஹ்வைத் தவிர அவர்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.

Because of their sins they were drowned, then were made to enter the Fire. And they found none to help them instead of Allâh.

71:26

وَقَالَ نُوحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى ٱلْأَرْضِ مِنَ ٱلْكَـٰفِرِينَ دَيَّارًا

இன்னும், நூஹ் கூறினார், “என் இரட்சகனே! நிராகரிப்போரிலிருந்து பூமியில் வசிக்க ஒருவரையும் நீ விட்டு வைக்காதே!

And Nûh (Noah) said: "My Lord! Leave not one of the disbelievers on the earth!

71:27

إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا۟ عِبَادَكَ وَلَا يَلِدُوٓا۟ إِلَّا فَاجِرًا كَفَّارًا

“நிச்சயமாக நீ அவர்களை விட்டுவைத்தால் உன்னுடைய (மற்ற) அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள், நிராகரிக்கின்ற பாவியைத் தவிர (வேறு நல்லவர் எவரையும்) அவர்கள் பெற்றெடுக்கவுமாட்டார்கள்” (என்றும்)

"If You leave them, they will mislead Your slaves, and they will beget none but wicked disbelievers.

71:28

رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا تَبَارًۢا

“என் இரட்சகனே! எனக்கும், என்னுடைய பெற்றோருக்கும், விசுவாசம் கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும் விசுவாசங்கொண்ட ஆண்களுக்கும், விசுவாசங்கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையே தவிர (வேறு எதையும்) நீ அதிகப்படுத்தாதிருப்பாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்.)

"My Lord! Forgive me, and my parents, and him who enters my home as a believer, and all the believing men and women. And to the Zâlimûn (polytheists, wrong-doers, and disbelievers) grant You no increase but destruction!"