8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

70. Al-Ma'arij

The Ways of Ascent · அல்-மஆரிஜ்

Makki44 versesJuz 29

المعارج

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

70:1

سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ

(நபியே!) நிகழக் கூடிய வேதனைபற்றிக் கேட்கக் கூடியவன் (எப்பொழுது வருமென பரிகசிக்கும் நோக்குடன்) கேட்கின்றான்.

A questioner asked concerning a torment about to befall

70:2

لِّلْكَـٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ

நிராகரிப்போருக்கு–(அது நிகழும் சமயத்தில்) அதனைத் தடுத்துவிடக்கூடியவர் எவருமில்லை.

Upon the disbelievers, which none can avert,

70:3

مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ

உயர் வழிகளுடைய அல்லாஹ்விடமிருந்து (அது சம்பவிக்கும்)

From Allâh, the Lord of the ways of ascent.

70:4

تَعْرُجُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ

மலக்குகளும் ஜிப்ரீலும் (அல்லாஹ்வாகிய) அவன் பக்கம் ஒரு நாளில் உயர்ந்து செல்வார்கள், அதன் அளவு ஐம்பதினாயிரம் வருடங்களாகும்.

The angels and the Rûh [Jibrîl (Gabriel)] ascend to Him in a Day the measure whereof is fifty thousand years.

70:5

فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا

(நபியே!) நீர் அழகான பொறுமையாகப் பொறுத்திருப்பீராக!

So be patient (O Muhammad صلى الله عليه وسلم), with a good patience.

70:6

إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا

(நிச்சயமாக அவர்கள் (நிகழக்கூடிய) அதனை வெகுதூரமாகக் காண்கின்றனர்.

Verily, they see it (the torment) afar off.

70:7

وَنَرَىٰهُ قَرِيبًا

நாமோ, அதனை மிகச் சமீபமானதாகக் காண்கின்றோம்.

But We see it (quite) near.

70:8

يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ

வானம், பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகும் நாளில்-

The Day that the sky will be like the boiling filth of oil, (or molten copper or silver or lead).

70:9

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ

இன்னும், மலைகள் சாயம் ஏற்றப்பட்ட பஞ்சைப் போன்று ஆகும் (நாளில் அது நிகழும்).

And the mountains will be like flakes of wool.

70:10

وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا

அன்றியும் ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப்பற்றி விசாரித்து)க்கேட்கமாட்டான்.

And no friend will ask a friend (about his condition),

70:11

يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ

அவர்கள் (தங்களின் நண்பர்களுக்குக்) காண்பிக்கப்படுவர், (எனினும் ஒருவர் மற்றவரைப்பற்றி கேட்டுக் கொள்ளமாட்டார்; ஒருவரை ஒருவர் அறியாதவர் போன்று வெருண்டோடுவா்.) அந்நாளுடைய வேதனையிலிருந்து (தன்னைக் காப்பாற்றிக்கொள்ள) குற்றவாளி தன்னுடைய மக்களை ஈடாகக்கொடுக்க விரும்புவான்.

Though they shall be made to see one another [(i.e. on the Day of Resurrection), there will be none but see his father, children and relatives, but he will neither speak to them nor will ask them for any help]. The Mujrim, (criminal, sinner, disbeliever) would desire to ransom himself from the punishment of that Day by his children,

70:12

وَصَـٰحِبَتِهِۦ وَأَخِيهِ

தன் மனைவியையும், தன் சகோதரனையும்,

And his wife and his brother,

70:13

وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ

தன்னை அரவணைத்து வந்த தன் உறவினர்களையும்-

And his kindred who sheltered him,

70:14

وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ

இன்னும், பூமியிலுள்ள அனைவரையும் (ஈடாகக் கொடுத்துப்) பின்னர் அது அவனைக் காப்பாற்றிக் கொள்ளும் (என்று விரும்புவான்).

And all that are in the earth, so that it might save him.1

  1. See the footnote (B) of (V.51:60).

70:15

كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ

(ஆனால் அது நடைபெறுவது) அல்ல, (ஏனெனில்) நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நரகத்தின்) நெருப்பாகும்.

By no means! Verily, it will be the Fire of Hell,

70:16

نَزَّاعَةً لِّلشَّوَىٰ

அது தலையின் தோலை (எரித்து) கழற்றி விடக்கூடியதாகும்.

Taking away (burning completely) the head skin!

70:17

تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ

புறமுதுகிட்டுச் சென்று புறக்கணித்தோரையும் அது அழைக்கும்.

Calling1 (all) such as turn their backs and turn away their faces (from Faith) [picking and swallowing them up from that great gathering of mankind on the Day of Resurrection just as a bird picks up a food-grain from the earth with its beak and swallows it up] (Tafsir Al-Qurtubî)

  1. (i.e. the Hell will call out): "[O Kafir (O disbeliever in Allâh, His angels, His Books, His Messengers, Day of Resurrection and in Al-Qadar (Divine Preordainments), O Mushrik (O polytheist, disbeliever in the Oneness of Allâh).

70:18

وَجَمَعَ فَأَوْعَىٰٓ

(பொருளைச்) சேமித்து (அதனைச் செலவு செய்யாது) பாதுகாத்து வந்தோரையும் (தன்னிடம் அழைக்கும்)

And collect (wealth) and hide it (from spending it in the Cause of Allâh).

70:19

۞ إِنَّ ٱلْإِنسَـٰنَ خُلِقَ هَلُوعًا

நிச்சயமாக மனிதன் (பேராசை கொண்ட) மிக்க பதட்டக்காரனாக படைக்கப்பட்டுள்ளான்.

Verily, man (disbeliever) was created very impatient;

70:20

إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا

(ஏனென்றால்) அவனை ஒரு தீமை தொட்டுவிட்டால் (திடுக்கிட்டுப்) பதறுகிறவனாக-

Irritable (discontented) when evil touches him;

70:21

وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا

இன்னும், அவனை யாதொரு நன்மை தொட்டுவிட்டால் அதனை (பிறருக்கு வழங்காது) தடுத்துக் கொள்கிறவனாக (இருக்கிறான்).

And niggardly when good touches him.

70:22

إِلَّا ٱلْمُصَلِّينَ

தொழுகையாளிகளைத் தவிர,

Except those who are devoted to Salât (prayers).1

  1. See the footnote of (V.9:91).

70:23

ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ

அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தங்கள் (ஐவேளைத்) தொழுகையின மீது நிரந்தரமானவர்கள். (தவறாது தொழுபவர்கள்)

Those who remain constant in their Salât (prayers);

70:24

وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட பங்குண்டு-

And those in whose wealth there is a recognised right

70:25

لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ

(யாசித்துக்) கேட்பவருக்கும், (வெட்கித்துக்) கேட்காதவருக்கும் (உண்டு).

For the beggar who asks, and for the unlucky who has lost his property and wealth, (and his means of living has been straitened).

70:26

وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், கூலி கொடுக்கும் (மறுமை) நாளை உண்மைப்படுத்துகின்றனர்.

And those who believe in the Day of Recompense.

70:27

وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ

இன்னும், அவர்கள் எத்தகையேரென்றால், தங்கள் இரட்சகனின் வேதனையை அவர்கள் பயந்தோராவர்.

And those who fear the torment of their Lord.

70:28

إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ

(ஏனென்றால்,) நிச்சயமாக தங்களிரட்சகனின் வேதனை அச்சப்படாது இருக்கக்கூடியதன்று (என்பதை அவர்கள் நன்கறிவார்கள்)

Verily, the torment of their Lord is that before which none can feel secure. -

70:29

وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَـٰفِظُونَ

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தங்கள் வெட்கத்தலங்கைளப் பாதுகாக்கக் கூடியவர்கள்.

And those who guard their chastity (i.e. private parts from illegal sexual acts).1

  1. Narrated Sahl bin Sa‘d رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "Whoever can guarantee (the chastity of) what is between his two jaw-bones and what is between his two legs (i.e. his mouth, tongue and his private parts),* I guarantee Paradise… Show more

    Narrated Sahl bin Sa‘d رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "Whoever can guarantee (the chastity of) what is between his two jaw-bones and what is between his two legs (i.e. his mouth, tongue and his private parts),* I guarantee Paradise for him." (Sahih Al-Bukhari, Vol. 8, Hadith No.481).

    * i.e., whoever protects his tongue from illegal talk like telling lies, or backbiting, etc., and his mouth from eating and drinking of forbidden illegal things, etc., and his private parts from illegal sexual acts.

70:30

إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

தங்கள் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் தவிர அப்போது நிச்சயமாக அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களல்லர்.

Except from their wives or the (women slaves) whom their right hands possess - for (then) they are not blameworthy.

70:31

فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ

ஆகவே, எவராவது இதற்கப்பால் (தவறான வழியில் அனுபவிக்கத்) தேடினால் அத்தகையோர்-அவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவர்.

But whosoever seeks beyond that, then it is those who are trespassers.1

  1. Narrated Anas رضي الله عنه: I will narrate to you a Hadith I heard from Allâh’s Messenger صلى الله عليه وسلم and none other than I will tell of it. I heard Allâh’s Messenger صلى الله عليه وسلم saying, "From among the portents of the Hour are the following:… Show more

    Narrated Anas رضي الله عنه: I will narrate to you a Hadith I heard from Allâh’s Messenger صلى الله عليه وسلم and none other than I will tell of it. I heard Allâh’s Messenger صلى الله عليه وسلم saying, "From among the portents of the Hour are the following: Religious knowledge will be taken away; General ignorance (in religious matters) will increase; illegal sexual intercourse will prevail; Drinking of alcoholic drinks will be very common; Men will decrease in number, and women will increase in number, so much so that fifty women will be looked after by one man." (Sahih Al-Bukhari, Vol.7, Hadith No.158).

70:32

وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்களின் அமானிதங்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதியையும் பேணிக் கொள்கின்றவர்கள்.

And those who keep their trusts and covenants.

70:33

وَٱلَّذِينَ هُم بِشَهَـٰدَٰتِهِمْ قَآئِمُونَ

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள்.

And those who stand firm in their testimonies.

70:34

وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையின்மீது (அதை முழுமையாக நிறைவேற்றுவதற்குரிய முறைகளைப் பேணிப்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

And those who guard their Salât (prayers) well.1

  1. See (V.2:238) and its footnote.

70:35

أُو۟لَـٰٓئِكَ فِى جَنَّـٰتٍ مُّكْرَمُونَ

(மேற்கூறப்பட்ட தகுதிகளுடைய) அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப் படுவார்கள்.

Such shall dwell in the Gardens (i.e. Paradise), honoured.

70:36

فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ

(நபியே!) நிராகரிப்போருக்கு என்ன நேர்ந்தது? (அவர்கள்) உம்மைச் சுற்றி ஓடி வருகின்றனர்!.

So what is the matter with those who disbelieve that they hasten to listen from you [O Muhammad صلى الله عليه وسلم), in order to belie you and to mock at you, and at Allâh’s Book (this Qur’ân)].

70:37

عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ

வலப்புறமிருந்தும், இடப்புறமிருந்தும் கூட்டங்கூட்டமாக (ஓடி வருகின்றனர்.)

(Sitting) in groups on the right and on the left (of you, O Muhammad صلى الله عليه وسلم)?

70:38

أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ

அவர்களில் ஒவ்வொரு மனிதனும் அருட்கொடையுடைய சுவனத்தில் பிரவேசிக்கப்படுவதை ஆசிக்கின்றானா?

Does every man of them hope to enter the Paradise of Delight?

70:39

كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَـٰهُم مِّمَّا يَعْلَمُونَ

அது ஒருபோதுமில்லை! நிச்சயமாக நாம், அவர்கள் அறிந்திருப்பதிலிருந்தே அவர்களைப் படைத்திருக்கின்றோம்.

No, that is not like that! Verily, We have created them out of that which they know!

70:40

فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَـٰرِقِ وَٱلْمَغَـٰرِبِ إِنَّا لَقَـٰدِرُونَ

கிழக்குத் திசைகள், இன்னும், மேற்குத் திசைகளின் இரட்சகன் மீது நான் சத்தியம் செய்கிறேன்; நிச்சயமாக நாம் (நம் இஷ்டப்படிச் செய்ய) ஆற்றலுடையோர், (அதாவது:)

So I swear by the Lord of all the [three hundred and sixty-five (365)] points of sunrise and sunset in the east and the west that surely We are Able

Next part: Verses 41–44 →

The Noble Qur'an — Al-Ma'arij