9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 530

/ 604
Page 530

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

54. Al-Qamarسورة القمر

54:28

وَنَبِّئْهُمْ أَنَّ ٱلْمَآءَ قِسْمَةٌۢ بَيْنَهُمْ ۖ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ

நிச்சயமாக, (கிணற்றின்) “தண்ணீர் அவர்களுக்கும் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, ஒவ்வோரு தண்ணீர் முறை பாகமும் (முறைப்படி அவரவர் நாளில் குடிப்பதற்கு) என்றும், அவர்களுக்கு அறிவித்து விடுவீராக!” (என்றும் நாம் கூறினோம்).

And inform them that the water is to be shared between (her and) them, each one’s right to drink being established (by turns).

54:29

فَنَادَوْا۟ صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ

எனினும், அவர்கள் (ஒட்டகத்தை அறுத்து விட) தங்களுடைய தோழனை அழைத்தனர், அவன் (வாளை எடுத்து, தன் கையால் ஒட்டகத்தைப்) பிடித்தான், (அதன் கால் நரம்புகளைத் தறித்து) பின்னர் அறுத்து விட்டான்.

But they called their comrade and he took (a sword) and killed (her).

54:30

فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

ஆகவே, என்னுடைய வேதனையும் (என்னுடைய) எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன?

Then, how (terrible) was My Torment and My Warnings?

54:31

إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَٰحِدَةً فَكَانُوا۟ كَهَشِيمِ ٱلْمُحْتَظِرِ

நிச்சயமாக நாம் அவர்கள் மீது, ஒரே ஒரு (பேரிடிச்) சப்தத்தை அனுப்பி வைத்தோம், அதனால் வேலி கட்டுபவரின் பிடுங்கி எறியப்பட்ட குப்பை கூளங்களைப் போல் அவர்கள் ஆகிவிட்டார்கள்.

Verily, We sent against them a single Saihah (torment - awful cry), and they became like the stubble of a fold-builder.

54:32

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

திட்டமாக நாம் குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கியும் இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் எவரும் உண்டா?

And indeed, We have made the Qur’ân easy to understand and remember; then is there any that will remember (or receive admonition)?

54:33

كَذَّبَتْ قَوْمُ لُوطٍۭ بِٱلنُّذُرِ

(நம்முடைய) எச்சரிக்கையாளர்களை லூத்துடைய சமூகத்தார் பொய்யாக்கினார்கள்.

The people of Lût (Lot) belied the warnings.

54:34

إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٍ ۖ نَّجَّيْنَـٰهُم بِسَحَرٍ

அவர்கள் மீது, நாம் கல்மாரியை அனுப்பிவைத்தோம். (அல்லாஹ்வின் தூதராகிய) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, அதிகாலை நேரத்தில் நாம் அவர்களைக் காப்பாற்றினோம்.

Verily, We sent against them a violent storm of stones (which destroyed them all), except the family of Lût (Lot), them We saved in the last hour of the night,

54:35

نِّعْمَةً مِّنْ عِندِنَا ۚ كَذَٰلِكَ نَجْزِى مَن شَكَرَ

நம்மிடமிருந்துள்ள அருட்கொடையாக (இவ்வாறு செய்தோம்), இவ்வாறே நன்றி செலுத்துவோருக்கு நாம் கூலி கொடுப்போம்.

As a Favour from Us. Thus do We reward him who gives thanks (by obeying Us).

54:36

وَلَقَدْ أَنذَرَهُم بَطْشَتَنَا فَتَمَارَوْا۟ بِٱلنُّذُرِ

நம் (வேதனையின்) பிடியைப்பற்றி நிச்சயமாக (லூத் நபியாகிய) அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார், எனினும், அவ்வெச்சரிக்கையைப் பற்றி அவர்கள் சந்தேகித்தார்கள்.

And he [Lût (Lot)] indeed had warned them of Our Seizure (punishment), but they did doubt the warnings!

54:37

وَلَقَدْ رَٰوَدُوهُ عَن ضَيْفِهِۦ فَطَمَسْنَآ أَعْيُنَهُمْ فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ

அன்றியும், திட்டமாக அவருடைய விருந்தினரை(க் கெட்ட காரியத்திற்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு) அவரிடம் தேடினார்கள். ஆகவே அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டோம், ஆகவே, என்னுடைய வேதனையையும், (என்னுடைய) எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்).

And they indeed sought to shame his guest (by asking to commit sodomy with them). So We blinded their eyes, (saying) "Then taste you My Torment and My Warnings."

54:38

وَلَقَدْ صَبَّحَهُم بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ

ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களுக்கு நிச்சயமாக ஏற்பட்டுவிட்டது.

And verily, an abiding torment seized them early in the morning.

54:39

فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ

எனவே, “என்னுடைய வேதனையையும், (என்னுடைய) எச்சரிக்கையையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறினோம்).

"Then taste you My Torment and My Warnings."

54:40

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

திட்டமாக நாம், குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், (ஆகவே, இதனை கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?

And indeed, We have made the Qur’ân easy to understand and remember; then is there any that will remember (or receive admonition)?

54:41

وَلَقَدْ جَآءَ ءَالَ فِرْعَوْنَ ٱلنُّذُرُ

மேலும், நிச்சயமாக ஃபிர் அவ்னுடைய கூட்டத்தரரிடம் (பல) எச்சரிக்கையாளர்கள் வந்தனர்.

And indeed, warnings came to the people of Fir‘aun (Pharaoh) [through Mûsâ (Moses) and Hârûn (Aaron)].

54:42

كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كُلِّهَا فَأَخَذْنَـٰهُمْ أَخْذَ عَزِيزٍ مُّقْتَدِرٍ

ஆனால், நம்முடைய அத்தாட்சிகளை- அவை அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கினார்கள், ஆகவே, சக்தி வாய்ந்த மிகைப்பவனின் பிடியாக நாம் அவர்களைப் பிடித்துக்கொண்டோம் (அவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை).

(They) belied all Our Signs, so We seized them with a Seizure of the All-Mighty, All-Capable (Omnipotent).

54:43

أَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ أُو۟لَـٰٓئِكُمْ أَمْ لَكُم بَرَآءَةٌ فِى ٱلزُّبُرِ

(மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரித்துக்கொண்டிருப்போர் (முன்சென்றுபோன) அவர்களைவிட மிகச் சிறந்தவர்களா? அல்லது, (வேதனையிலிருந்து) உங்களுக்கு விலக்கு (பற்றி ஏதும்) வேதங்களில் இருக்கிறதா?

Are your disbelievers (O Quraish!) better than these [nations of Nûh (Noah), Lût (Lot), Sâlih, and the people of Fir‘aun (Pharaoh) who were destroyed)? Or have you an immunity (against Our Torment) in the Divine Scriptures?

54:44

أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُّنتَصِرٌ

அல்லது (நபியே!) “நாங்கள் வெற்றி பெரும் (பெருங்) கூட்டத்தினர் என்று இவர்கள் கூறுகின்றனரா?

Or say they: "We are a great multitude, victorious?"

54:45

سَيُهْزَمُ ٱلْجَمْعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ

(இக்)கூட்டத்தினர் தோற்கடிக்கப்படுவார்கள், புறமுதுகிட்டும் ஓடுவார்கள்.

Their multitude will be put to flight, and they will show their backs.

54:46

بَلِ ٱلسَّاعَةُ مَوْعِدُهُمْ وَٱلسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ

அதுவுமின்றி, மறுமைநாள் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும், மறுமை நாள் இவர்களுக்கு மிகப் பயங்கரமானது, மிக்க கசப்பானதுமாகும்.

Nay, but the Hour is their appointed time (for their full recompense), and the Hour will be more grievous and more bitter.

54:47

إِنَّ ٱلْمُجْرِمِينَ فِى ضَلَـٰلٍ وَسُعُرٍ

நிச்சயமாகக் குற்றவாளிகள் வழிகேட்டிலும், பைத்தியத்திலும் இருக்கின்றனர்.

Verily the Mujrimûn (polytheists, disbelievers, sinners, criminals) are in error (in this world) and will burn (in the Hell-fire in the Hereafter).

54:48

يَوْمَ يُسْحَبُونَ فِى ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا۟ مَسَّ سَقَرَ

இவர்கள் நரகத்திற்கு முகங்களின் மீது இழுத்து செல்லப்படும் நாளில், இவர்களிடம், (நீங்கள்) “நரக நெருப்பின் தீண்டுதலைச் சுவைத்துப்பாருங்கள்” (என்று கூறப்படும்).

The Day they will be dragged on their faces into the Fire (it will be said to them): "Taste you the touch of Hell!"1

  1. See (V.25:34) and the footnote of (V.17:97).

54:49

إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَـٰهُ بِقَدَرٍ

நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும், (நிர்ணயிக்கப்பட்ட) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.

Verily, We have created all things with Qadar (Divine Preordainments of all things before their creation as written in the Book of Decrees Al-Lauh Al-Mahfûz).