9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 529

/ 604
Page 529

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

54. Al-Qamarسورة القمر

54:7

خُشَّعًا أَبْصَـٰرُهُمْ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُّنتَشِرٌ

அவர்களின் பார்வைகள் கீழ் நோக்கிய நிலையில் பரவிக்கிடக்கும் வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளிலிருந்து வெளியேறுவர்.

They will come forth, with humbled eyes from (their) graves as if they were locusts spread abroad,

54:8

مُّهْطِعِينَ إِلَى ٱلدَّاعِ ۖ يَقُولُ ٱلْكَـٰفِرُونَ هَـٰذَا يَوْمٌ عَسِرٌ

அழைப்பவர் பால் விரைந்தவர்களாக, (வெளியேறுவர்) “இது மிகக் கஷ்டமான நாள்” என்று நிராகரித்துக்கொண்டிருப்போர் (அச்சமயம்) கூறுவார்கள்.

Hastening towards the caller. The disbelievers will say: "This is a hard Day."

54:9

۞ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا۟ عَبْدَنَا وَقَالُوا۟ مَجْنُونٌ وَٱزْدُجِرَ

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய சமூகத்தார் (அந்நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள், ஆகவே, அவர்கள் நம்முடைய அடியாரைப் பொய்யாக்கிப் பைத்தியக்காரரென்றும் அவர்கள் கூறினர். இன்னும், (அவர்களால் தன் தூதை எத்தி வைக்கமுடியாதவாறு) அவர் விரட்டப்பட்டார்.

The people of Nûh (Noah) denied (their Messenger) before them. They rejected Our slave, and said: "A madman!" and he was insolently rebuked and threatened.

54:10

فَدَعَا رَبَّهُۥٓ أَنِّى مَغْلُوبٌ فَٱنتَصِرْ

ஆகவே, அவர் நிச்சயமாக நான் (இவர்களால்) மிகைக்கப்பட்டு விட்டவன். ஆகவே நீ எனக்கு உதவி செய்(து அவர்களுக்கு தண்டனை வழங்கு)வாயாக! என தம் இரட்சகனிடம் அவர் பிரார்த்தனை செய்தார்.

Then he invoked his Lord (saying): "I have been overcome, so help (me)!"

54:11

فَفَتَحْنَآ أَبْوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ

ஆதலால், கடுமையாகக் கொட்டும் நீரைக் கொண்டு வானத்தின் வாயில்களை நாம் திறந்து விட்டோம்.

So We opened the gates of the heaven with water pouring forth.

54:12

وَفَجَّرْنَا ٱلْأَرْضَ عُيُونًا فَٱلْتَقَى ٱلْمَآءُ عَلَىٰٓ أَمْرٍ قَدْ قُدِرَ

அன்றியும், பூமியை ஊற்றுக் கண்களாக(ப் பீறிட்டு)ப் பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, (ஆதியில்) நிர்ணயிக்கப்பட்ட காரியத்தின் மீது (வானம், பூமி ஆகியவற்றின்) நீரும் இணைந்தது.

And We caused springs to gush forth from the earth. So the waters (of the heaven and the earth) met for a matter predestined.

54:13

وَحَمَلْنَـٰهُ عَلَىٰ ذَاتِ أَلْوَٰحٍ وَدُسُرٍ

நாம் அவரை(யும், அவருடனிருந்தவர்களையும்) பலகைகளும், ஆணிகளும் உடைய (மரக்கலத்)தின் மீது ஏற்றி(க்காப்பாற்றி)னோம்.

And We carried him on a (ship) made of planks and nails,

54:14

تَجْرِى بِأَعْيُنِنَا جَزَآءً لِّمَن كَانَ كُفِرَ

அது நம் கண்களுக்கு முன்பாகவே (பெரு வெள்ளத்தில் மிதந்து) சென்றது, (இவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு (நூஹ் நபிக்குக் கொடுக்கப்படும் நற்) கூலியாக (இவ்வாறு அவர்களை நாம் தண்டித்தோம்).

Floating under Our Eyes: a reward for him who had been rejected!

54:15

وَلَقَد تَّرَكْنَـٰهَآ ءَايَةً فَهَلْ مِن مُّدَّكِرٍ

மேலும், நிச்சயமாக நாம் இதனை (பின்னுள்ளவர்களுக்கு) ஓர் அத்தாட்சியாக விட்டுவைத்தோம், (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?

And indeed, We have left this as a sign. Then is there any that will remember (or receive admonition)?

54:16

فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

என்னுடைய வேதனையும், (என்னுடைய) எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன? (என்பதை கவனிப்பார்களா?)

Then how (terrible) was My Torment and My Warnings?

54:17

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

திட்டமாக நாம் குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?

And We have indeed made the Qur’ân easy to understand and remember; then is there any one who will remember (or receive admonition)?

54:18

كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

ஆது (சமூகத்தாரும் நம் தூதரைப்) பொய்யாக்கிக்கொண்டிருந்தனர், பின்னர் (அவர்களுக்கு என் கட்டளையின்படி ஏற்பட்ட) என்னுடைய வேதனையும், (என்னுடைய எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன (என்பதைக் கவனிப்பார்களா)?

‘Âd (people) belied (their Prophet, Hûd); then how (terrible) was My Torment and My Warnings?

54:19

إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِى يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ

நிச்சயமாக நாம் அவர்கள் மீது, (என்றும்) நிலையான துர்ப்பாக்கியமுடைய ஒரு நாளில், மிகக்கடும் சப்தமு(ம் குளிரும் உ)டைய காற்றை அனுப்பி வைத்தோம்.

Verily, We sent against them a furious wind of harsh voice on a day of evil omen and continuous calamity.

54:20

تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُّنقَعِرٍ

அதுமனிதர்களை-நிச்சயமாக அவர்கள் (பூமிக்குள்ளிருந்து வேரோடு) பிடுங்கக்கபட்ட பேரீச்ச மரங்களின் அடிவேர்களைப் போல (ஆகும் நிலையில்) பிடுங்கி (எறிந்து) விட்டது.

Plucking out men as if they were uprooted stems of date-palms.

54:21

فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

என்னுடைய வேதனையும், எச்சரிக்கையும் எவ்வாறிருந்தன (என்பதை கவனிப்பார்களா)?

Then, how (terrible) was My Torment and My Warnings?

54:22

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

திட்டமாக, நாம் குர் ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?

And We have indeed made the Qur’ân easy to understand and remember; then is there any that will remember (or receive admonition)?

54:23

كَذَّبَتْ ثَمُودُ بِٱلنُّذُرِ

(இவ்வாறே) ஸமூது (கூட்டத்தாரு)ம் எச்சரிக்கையாளர்களைப் பொய்யாக்கினர்.

Thamûd (people also) belied the warnings.

54:24

فَقَالُوٓا۟ أَبَشَرًا مِّنَّا وَٰحِدًا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذًا لَّفِى ضَلَـٰلٍ وَسُعُرٍ

பின்னர், “நம்மிலுள்ள ஒரு மனிதரை- அவரையா நாம் பின் பற்றுவோம்? (அவ்வாறு பின்பற்றினால்) நிச்சயமாக, நாம் அப்பொழுது வழிகேட்டிலும், சிரமத்திலும் ஆகிவிடுவோம்” என்று கூறினார்கள்.

And they said: "A man, alone among us - shall we follow him? Truly then we should be in error and distress (or madness)!"

54:25

أَءُلْقِىَ ٱلذِّكْرُ عَلَيْهِ مِنۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ

“நமக்கிடையே இவர் மீதுதானா (திக்ரு எனும்) வேதம் இறக்கப்பட்டது? அன்று! அவர் இறுமாப்புக் கொண்ட பெரும் பொய்யர்” (என்று கூறினார்கள்).

"Is it that the Reminder is sent to him [Prophet Sâlih عليه السلام] alone from among us? Nay, he is an insolent liar!"

54:26

سَيَعْلَمُونَ غَدًا مَّنِ ٱلْكَذَّابُ ٱلْأَشِرُ

“இறுமாப்புக் கொண்டவரான பெரும் பொய்யர் யார்” என்பதை, நிச்சயமாக நாளைய தினம் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

Tomorrow they will come to know who is the liar, the insolent one!

54:27

إِنَّا مُرْسِلُوا۟ ٱلنَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَٱرْتَقِبْهُمْ وَٱصْطَبِرْ

(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக “ஒரு பெண் ஒட்டகத்தை நிச்சயமாக நாம் அனுப்பிவைப்போராக உள்ளோம், ஆகவே (ஸாலிஹ் நபியே!) நீர் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு, பொறுமையுடனும் இருப்பீராக!

Verily, We are sending the she-camel as a test for them. So watch them [O Sâlih عليه السلام], and be patient!