மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
ٱلْمُلْكُ يَوْمَئِذٍ لِّلَّهِ يَحْكُمُ بَيْنَهُمْ ۚ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ
அந்நாளில், (சர்வ அதிகாரமும் கொண்ட) ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, அவனே அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான், ஆகவே, விசுவாசங்கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களே அத்தகையோர் அருட்கொடைகள் உடைய சுவனபதிகளில் இருப்பார்கள்.
The sovereignty on that Day will be that of Allâh (the One Who has no partners). He will judge between them. So those who believed (in the Oneness of Allâh - Islâmic Monotheism) and did righteous good deeds will be in Gardens of delight (Paradise).
وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا فَأُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ
இன்னும், நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களே அத்தகையோர்- அவர்களுக்கே இழிவுதரும் வேதனையுண்டு.
And those who disbelieved and belied Our Verses (of this Qur’ân), for them will be a humiliating torment (in Hell).
وَٱلَّذِينَ هَاجَرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ثُمَّ قُتِلُوٓا۟ أَوْ مَاتُوا۟ لَيَرْزُقَنَّهُمُ ٱللَّهُ رِزْقًا حَسَنًا ۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
மேலும், அல்லாஹ்வுடைய பாதையில் (ஹிஜ்ரத்துச் செய்து) புறப்பட்டு, பின்னர் (யுத்தத்தில்) கொல்லப்பட்டோ, அல்லது இறந்தோ விடுகின்றனரே) அத்தகையோர் - அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ், மிக்க அழகான (முறையில்) உணவளிக்கிறான், இன்னும், நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் உணவளிப்பவர்களிலெல்லாம் மிக்க மேலானவன்.
Those who emigrated in the Cause of Allâh and after that were killed or died, surely, Allâh will provide a good provision for them. And verily, it is Allâh Who indeed is the Best of those who make provision.
لَيُدْخِلَنَّهُم مُّدْخَلًا يَرْضَوْنَهُۥ ۗ وَإِنَّ ٱللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌ
(ஆகவே) நிச்சயமாக, எதனை அவர்கள் பொருந்திக் கொள்கிறார்களோ அப்பிரவேசிக்குமிடத்தில் அவன் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் யாவையும் நன்கறிகிறவன், மிகுந்த சகிப்புத் தன்மையுடையவன்.
Truly, He will make them enter an entrance with which they shall be well-pleased, and verily, Allâh indeed is All-Knowing, Most Forbearing.
۞ ذَٰلِكَ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِىَ عَلَيْهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُ ۗ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ
(அத்தகைய அருட்கொடைகள் அனைத்தும் கொண்ட) அது (அவர்களுக்கே உரியதாகும்.) மேலும், எவர் தான் எதனால் துன்புறுத்தப்பட்டாரோ அது போன்றே (துன்புறுத்தியவரை) தண்டித்துவிட்டு, அதன் பின்னர் அவர் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
That is so. And whoever has retaliated with the like of that which he was made to suffer, and then has again been wronged, Allâh will surely help him. Verily Allâh indeed is Oft-Pardoning, Oft-Forgiving.
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌ
அ(வ்வாறு உதவி செய்த)து நிச்சயமாக அல்லாஹ், இரவைப் பகலில் புகுத்துகிறான், பகலை இரவில் புகுத்துகிறான் எனும் (அவனது வல்லமையின்) காரணத்தினாலாகும், இன்னும் (அனைத்தையும்) நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
That is because Allâh merges the night into the day, and He merges the day into the night. And verily, Allâh is All-Hearer, All-Seer.
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلْبَـٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ
(இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைவிக்கும் மாபெரிய ஆற்றலாகிய) அது, (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் -அவன் தான் உண்மையானவன், மற்றும் நிச்சயமாக அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கின்றார்களோ அதுவே பொய்யானதாகும், இன்னும், நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன் என்பதினாலுமாகும்.
That is because Allâh - He is the Truth (the only True God of all that exists, Who has no partners or rivals with Him), and what they (the polytheists) invoke besides Him, it is Bâtil (falsehood). And verily, Allâh - He is the Most High, the Most Great.
أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَتُصْبِحُ ٱلْأَرْضُ مُخْضَرَّةً ۗ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٌ
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து நீரை (மழையை) இறக்குகிறான், (அதனால்) பூமி பசுமையாகிவிடுகிறது என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? “நிச்சயமாக அல்லாஹ் நுட்பமாக அறிகிறவன், (யாவையும்) நண்குணர்பவன்.
See you not that Allâh sends down water (rain) from the sky, and then the earth becomes green? Verily, Allâh is the Most Kind and Courteous, Well-Acquainted with all things.
لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவையாகும், மேலும், நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் (பிறரின்) தேவையற்றவன், புகழுக்குரியவன்.
To Him belongs all that is in the heavens and all that is on the earth. And verily, Allâh - He is Rich (Free of all needs), Worthy of all praise.