மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَيَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ وَلَن يُخْلِفَ ٱللَّهُ وَعْدَهُۥ ۚ وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ
மேலும், (நபியே!) அவர்கள் வேதனையை (அது எங்கே எனக்கேட்டு) உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர், அல்லாஹ் தன் வாக்கிற்கு ஒருபோதும் மாற்றம் செய்யமாட்டான், மேலும் நிச்சயமாக, உம் இரட்சகனிடத்தில் ஒரு நாளாகிறது, நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்.
And they ask you to hasten on the torment! And Allâh fails not His Promise. And verily, a day with your Lord is as a thousand years of what you reckon.
وَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَمْلَيْتُ لَهَا وَهِىَ ظَالِمَةٌ ثُمَّ أَخَذْتُهَا وَإِلَىَّ ٱلْمَصِيرُ
எத்தனையோ ஊர்(வாசி)கள் - அவை அநியாயம் செய்து கொண்டிருந்த நிலையில் நான் அவற்றுக்கு அவகாசம் அளித்திருந்தேன், “(ஆனால் அவர்கள் அக்கிரமமே செய்து வந்தார்கள்.) பின்னர், நான் அவற்றைப் பிடித்துக் கொண்டேன், (அவர்கள் இறந்த பின்னரும்) என்பாலே மீண்டும் வரவேண்டியதிருக்கின்றது.
And many a township did I give respite while it was given to wrong-doing. Then (in the end) I seized it (with punishment). And to Me is the (final) return (of all).
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَآ أَنَا۠ لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ
(நபியே!) நீர் கூறும். மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவன்தான்.
Say (O Muhammad صلى الله عليه وسلم): "O mankind! I am (sent) to you only as a plain warner."
فَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
ஆகவே விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர்-அவர்களுக்கு மன்னிப்பு, மற்றும் கண்ணியமான உணவும் உண்டு.
So those who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism) and do righteous good deeds, for them is forgiveness and Rizqun Karîm (generous provision, i.e. Paradise).
وَٱلَّذِينَ سَعَوْا۟ فِىٓ ءَايَـٰتِنَا مُعَـٰجِزِينَ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَحِيمِ
இன்னும், நம்முடைய வசனங்களில் (நம்மை) இயலாமலாக்குவதற்காக முயற்சிக்கின்றார்களே அத்தகையோர் - அவர்கள் நரகவாசிகள்!
But those who strive against Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.), to frustrate them, they will be dwellers of the Hell-fire.
وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ وَلَا نَبِىٍّ إِلَّآ إِذَا تَمَنَّىٰٓ أَلْقَى ٱلشَّيْطَـٰنُ فِىٓ أُمْنِيَّتِهِۦ فَيَنسَخُ ٱللَّهُ مَا يُلْقِى ٱلشَّيْطَـٰنُ ثُمَّ يُحْكِمُ ٱللَّهُ ءَايَـٰتِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
(நபியே) உமக்கு முன் எந்தத் தூதரையும், எந்த நபியையும் அவர் ஒதினால், அவருடைய ஓதுதலில் ஷைத்தான் (நோயிருப்பவர்களின் நெஞ்சங்களில்) குழப்பத்தைப் போட்டே அல்லாமல் நாம் (அவர்களை) அனுப்பவில்லை, (அவர்களுடைய மனதில்) ஷைத்தான் போட்டதை அல்லாஹ் நீக்கிவிட்டு அதன் பின்னர், தன்னுடைய வசனங்களை (அறிவுடையோர்களுடைய இதயங்களில்) உறுதிப்படுத்திவிடுகிறான், இன்னும் அல்லாஹ் யாவையும் நன்கறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Never did We send a Messenger or a Prophet before you but when he did recite the revelation or narrated or spoke, Shaitân (Satan) threw (some falsehood) in it. But Allâh abolishes that which Shaitân (Satan) throws in. Then Allâh establishes His Revelations. And Allâh is All-Knower, All-Wise:
لِّيَجْعَلَ مَا يُلْقِى ٱلشَّيْطَـٰنُ فِتْنَةً لِّلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْقَاسِيَةِ قُلُوبُهُمْ ۗ وَإِنَّ ٱلظَّـٰلِمِينَ لَفِى شِقَاقٍۭ بَعِيدٍ
(இவ்வாறு) ஷைத்தான் போட்ட (குழப்பத்)தை எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் (கல்லைப்போல்) கடினமாயிருக்கின்றனவோ அவர்களுக்கும் சோதனையாக ஆக்குவதற்காகவே (அல்லாஹ் அவ்வாறு செய்தான்.) நிச்சயமாக, அநியாயக்காரர்கள் வெகு தூரமான பிளவில்தான் இருக்கின்றனர்.
That He (Allâh) may make what is thrown in by Shaitân (Satan) a trial for those in whose hearts is a disease (of hypocrisy and disbelief) and whose hearts are hardened. And certainly, the Zalimûn (polytheists and wrong-doers) are in an opposition far-off (from the truth against Allâh’s Messenger and the believers).
وَلِيَعْلَمَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَيُؤْمِنُوا۟ بِهِۦ فَتُخْبِتَ لَهُۥ قُلُوبُهُمْ ۗ وَإِنَّ ٱللَّهَ لَهَادِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
மேலும், அறிவு கொடுக்கப்பட்டிருந்தார்களே அத்தகையவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம் இரட்சகனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை அவர்கள் விசுவாசிப்பதற்காகவும், இன்னும் (இதனால்) அவர்களின் இதயங்கள் அவனுக்குப் பணிவதற்காகவும் (அவ்வாறு செய்தான்.) மேலும், விசுவாசங்கொண்டோரை நிச்சயமாக அவர்களை, அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவான்
And that those who have been given knowledge may know that it (this Qur’ân) is the truth from your Lord, so that they may believe therein, and their hearts may submit to it with humility. And verily, Allâh is the Guide of those who believe, to the Straight Path.
وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى مِرْيَةٍ مِّنْهُ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةً أَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيمٍ
நிராகரிப்போர், தங்களிடம் மறுமைநாள் திடீரென வரும்வரை, அல்லது மலட்டுநாளின் வேதனை அவர்களிடம் வரும் வரையில், இ(வ்வேதத்)தைப் பற்றி சந்தேகத்திலேயே இருந்து கொண்டிருப்பர்.(18)
And those who disbelieved will not cease to be in doubt about it (this Qur’ân) until the Hour comes suddenly upon them, or there comes to them the torment of the Day after which there will be no night (i.e. the Day of Resurrection).