அதனை நீங்கள் காணும் அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள், கர்ப்பமுடைய ஒவ்வொருத்தியும் தன் சுமையை வைத்துவிடுவாள், மேலும் மனிதர்களை (பீதியின் கடுமையால்) மதி மயக்கம் கொண்டவர்களாக இருக்க நீர் காண்பீர், அவர்கள் (மதுவினால்) மதி மயங்கியவர்களும் அல்லர், எனினும் அல்லாஹ்வுடைய வேதனை மிகக் கடினமானதாகும்.
The Day you shall see it, every nursing mother will forget her nursling, and every pregnant one will drop her load, and you shall see mankind as in a drunken state, yet they will not be drunken, but severe will be the Torment of Allâh.
மேலும், அறிவின்றி அல்லாஹ்வுடைய விஷயத்தில் தர்க்கம் செய்கின்றவரும், மனமுரண்டான ஒவ்வொரு ஷைத்தானைப் பின்பற்றுகிறவரும் மனிதர்களில் (சிலர்) இருக்கின்றனர்.
And among mankind is he who disputes concerning Allâh, without knowledge, and follows every rebellious (disobedient to Allâh) Shaitân (devil) (devoid of every kind of good).
நிச்சயமாக எவன் (ஷைத்தானாகிய) அவனை நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, நிச்சயமாக காரியம் அவன், இவனை (ஷைத்தானாகிய) அவன் வழிகெடுத்து, நரக வேதனையின் பக்கமே செலுத்திவிடுவான் என்று (ஷைத்தானாகிய) அவன்மீது விதியாக்கப்பட்டுவிட்டது.
For him (the devil) it is decreed that whosoever follows him, he will mislead him, and will drive him to the torment of the Fire. [Tafsir At-Tabarî]
மனிதர்களே! (இறந்தபின் உங்களுக்கு உயிர்கொடுத்து) எழுப்புவதைப்பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், (அதுபற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக உங்களை (ஆரம்பமாக) மண்ணிலிருந்தும், பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும், பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும், பின்னர் (நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்பட்ட, (அல்லது நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்படாத தசைக்கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்; (என்று நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவு செய்வதற்காகவே (இவ்வாறு விளக்குகிறோம்.) மேலும், நாம் நாடியவைகளைக் கர்ப்பப்பைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் (நிலைப்படுத்தி) தங்கிவிடும்படிச் செய்கிறோம், பின்னர் உங்களைக் குழந்தையாக நாம் வெளிப்படுத்துகிறோம், பின்பு உங்கள் வாலிபத்தை நீங்கள் அடைவதற்காக (தக்க வளர்ச்சியைத் தருகிறோம்.) இன்னும் உங்களில் (சிலர் பருவ வயதை அடையுமுன்பே) இறந்து விடுகிறவரும் இருக்கின்றனர், (அல்லது ஜீவித்திருந்து) யாவையும் அறிந்தபின்னர், ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரையில் (உயிர் வாழ) விட்டு வைக்கப்படுபவரும் உங்களில் இருக்கின்றனர், மேலும், பூமியை வரண்டதாகப் பார்க்கிறீர், அப்பொழுது, அதன் மீது நாம் மழையை இறக்கிவைப்போமானால், அது பசுமையாகி, இன்னும் வளர்ந்து, அழகான ஒவ்வொரு வகையிலிருந்தும் (உயர்ந்த புற்பூண்டுகளை) முளைப்பிக்கின்றது.
O mankind! If you are in doubt about the Resurrection, then verily We have created you (i.e. Adam) from dust, then from a Nutfah (mixed drops of male and female sexual discharge i.e. the offspring of Adam), then from a clot (a piece of thick coagulated blood) then from a little lump of flesh - some formed and some unformed (as in the case of miscarriage) - that We may make (it) clear to you (i.e. to show you Our Power and Ability to do what We will). And We cause whom We will to remain in the wombs for an appointed term, then We bring you out as infants,1 then (give you growth) that you may reach your age of full strength. And among you there is he who dies (young), and among you there is he who is brought back to the miserable old age, so that he knows nothing after having known. And you see the earth barren, but when We send down water (rain) on it, it is stirred (to life), and it swells and puts forth every lovely kind (of growth).
Narrated ‘Abdullâh رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم, the true and truly inspired said: "(As regards your creation), every one of you is collected in the womb of his mother for the first forty days, and then he becomes a clot for another…Show more
Narrated ‘Abdullâh رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم, the true and truly inspired said: "(As regards your creation), every one of you is collected in the womb of his mother for the first forty days, and then he becomes a clot for another forty days, and then a piece of flesh for another forty days. Then Allâh sends an angel to write four words: He writes his deeds, time of his death, means of his livelihood, and whether he will be wretched or blessed (in the Hereafter). Then the soul is breathed into his body. So a man may do deeds characteristic of the people of the (Hell) Fire, so much so that there is only the distance of a cubit between him and it, and then what has been written (by the angel) surpasses; and so he starts doing deeds characteristic of the people of Paradise and enters Paradise. Similarly, a person may do deeds characteristic of the people of Paradise, so much so that there is only the distance of a cubit between him and it, and then what has been written (by the angel) surpasses, and he starts doing deeds of the people of the (Hell) Fire and enters the (Hell) Fire." (Sahih Al Bukhari, Vol.4, Hadith No.549).
இன்னும், நிச்சயமாக மறுமை நாள் வரக்கூடியதாகும், அதில் சந்தேகமில்லை; இன்னும், சமாதிகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (அந்நாளில் உயிர் கொடுத்து) எழுப்புவான் (என்பதினாலுமாகும்.)
And surely, the Hour is coming, there is no doubt about it; and certainly, Allâh will resurrect those who are in the graves.
அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (ஜனங்களைத் திருப்பி) வழி கெடுப்பதற்காக (கர்வங்கொண்டு) தன் கழுத்தைத் திருப்பியவனாக (உண்மையைப் புறக்கணிக்கின்றான்.,) அவனுக்கு இம்மையில் இழிவு இருக்கிறது, மறுமை நாளிலோ, எரிக்கும் (நெருப்பின்) வேதனையை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்வோம்.
Bending his neck in pride1 (far astray from the Path of Allâh), and leading (others) too (far) astray from the Path of Allâh. For him there is disgrace in this worldly life, and on the Day of Resurrection We shall make him taste the torment of burning (Fire).
Narrated ‘Abdullah bin Mas‘ûd رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "Whosoever has pride in his heart equal to the weight of an atom (or a small ant) shall not enter Paradise." A person (amongst the audience) said, "Verily, a person loves…Show more
Narrated ‘Abdullah bin Mas‘ûd رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "Whosoever has pride in his heart equal to the weight of an atom (or a small ant) shall not enter Paradise." A person (amongst the audience) said, "Verily, a person loves that his dress should be beautiful, and his shoes should be beautiful." The Prophet صلى الله عليه وسلم remarked, "Verily, Allâh is the Most Beautiful and He loves beauty. (الكبر: بطر الحق وغمط الناس) Pride is to completely disregard the truth, and to scorn (to look down upon) the people." (Sahih Muslim, Book of Faith, Vol.1, Hadîth No.164).
“இது, உன்னுடைய இரு கரங்களும் முற்படுத்தி வைத்த (பாவங்களின்) காரணத்தாலும் நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களுக்கு எவ்வகையிலும் ஒரு சிறிதும் அநியாயம் செய்கிறவனல்லன் என்பதினாலுமாகும்” (என அந்நாளில் அவனுக்குக் கூறப்படும்)
That is because of what your hands have sent forth, and verily, Allâh is not unjust to (His) slaves.
இன்னும், மனிதர்களில் (உறுதியின்றி, சந்தேகத்தின்) விளிம்பின் மீதிருந்து (கொண்டு) அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான், எனவே, அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைகிறான், அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படுமாயின் அவன் தன் முகத்தின் மீது (ஈமானை விட்டும் இறை நிராகரிப்பின்பால்) புரண்டுவிடுகிறான், (இத்தகையவன்) இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டான், இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
And among mankind is he who worships Allâh as it were, upon the edge (i.e. in doubt): if good befalls him, he is content therewith; but if a trial befalls him, he turns back on his face (i.e. reverts to disbelief after embracing Islâm). He loses both this world and the Hereafter. That is the evident loss.
எவனுடைய தீங்கு அவனுடைய பயனைவிட மிகச் சமீபமாக இருக்கிறதோ, அவனையே இவன் அழைக்கிறான், திடமாக (அவன் அழைக்கும்) பாதுகாவலன் மிகக் கெட்டவன், (அவனின்) நண்பனும் திடமாக மிகக் கெட்டவன்.
He calls unto him whose harm is nearer than his profit: certainly, an evil Maulâ (patron) and certainly an evil friend!
நிச்சயமாக அல்லாஹ், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றவர்களைச் சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்வான்.
Truly, Allâh will admit those who believe (in Islâmic Monotheism) and do righteous good deeds (according to the Qur’ân and the Sunnah) to Gardens underneath which rivers flow (in Paradise). Verily, Allâh does what He wills.
தூதராகிய அவருக்கு எவன் இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் உதவி செய்யவே மாட்டான் என்று (தன்னுடைய காழ்ப்புணர்ச்சியின் காரணமாக) எண்ணுகின்றானோ அவன், ஒரு கயிற்றை வானத்தின் பால் (அதன் அளவிற்கு) நீட்டவும், பின்னர் (நபிக்கு கிடைத்துவரும் உதவியை தடுக்க முடிந்தால்) அவன் துண்டித்துவிடவும், இப்பொழுது அவனுடைய சூழ்ச்சி அவன் கோபம் கொண்டதைத் திண்ணமாகப் போக்கி விட்டதா என்று (கவனித்துப்) பார்க்கவும்.
Whoever thinks that Allâh will not help him (Muhammad صلى الله عليه وسلم) in this world and in the Hereafter, let him stretch out a rope to the ceiling and let him strangle himself. Then let him see whether his plan will remove that whereat he rages!
இன்னும், இவ்வாறே தெளிவான வசனங்காளாகவே (குர் ஆனாகிய) இதனை நாம் இறக்கி வைத்தோம், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களையே (இதன் மூலம்) நேர்வழியில் செலுத்துகின்றான்.
Thus have We sent it (this Qur’ân) down (to Muhammad صلى الله عليه وسلم) as clear signs, evidence and proofs, and surely, Allâh guides whom He wills.
நிச்சயமாக விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாக இருந்தார்களே அவர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்குபவர்களான) மஜூஸிகளும், இணைவைத்துக் கொண்டிருந்தோரும் - (ஆகிய இவர்களில் நேர்வழியில் இருந்தவர்கள் யார் என்பதை) இவர்களுக்கிடையில், நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கிறான். (அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல)
Verily, those who believe (in Allâh and in His Messenger Muhammad صلى الله عليه وسلم), and those who are Jews, and the Sabians, and the Christians, and the Majûs, and those who worship others besides Allâh, truly, Allâh will judge between them on the Day of Resurrection. Verily! Allâh is over all things a Witness.1
See (V.2:62) and its footnotes for the explanation of this Verse.
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கு வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், (பூமியின் மீது) ஊர்ந்து திரியும் பிராணிகளும், மனிதர்களில் அதிகமானோரும் சிரம்பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும், பெரும்பாலோர் அவர்கள் மீது வேதனை விதியாகிவிட்டது, மேலும், அல்லாஹ் யாரை இழிவு படுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவர் எவருமில்லை, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான்.
See you not that whoever is in the heavens and whoever is on the earth, and the sun, and the moon, and the stars, and the mountains, and the trees, and Ad-Dawâbb [moving (living) creatures, beasts], and many of mankind prostrate themselves to Allah. But there are many (men) on whom the punishment is justified. And whomsoever Allâh disgraces, none can honour him. Verily, Allâh does what He wills.
(விசுவாசிகளும், நிராகரிக்கும் காஃபிர்களும் ஆகிய) இவ்விரு வழக்காளிகள் தங்கள் இரட்சகனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர், ஆகவே, நிராகரிக்கின்றார்களே அவர்கள்-நெருப்பு ஆடைகள் அவர்களுக்கு வெட்டி வைக்கப்பட்டு (தயார் படுத்தப்பட்டு) இருக்கின்றன, (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களின் தலைகளின் மீது ஊற்றப்படும்.
These two opponents (believers and disbelievers) dispute with each other about their Lord: then as for those who disbelieved, garments of fire will be cut out for them, boiling water will be poured down over their heads.
துக்கத்தால், (நரகமாகிய) அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும்போதெல்லாம், அதிலேயே திருப்பப் படுவார்கள், இன்னும், “எரிக்கும் (நெருப்பு) வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்” (எனவும் கூறப்படும்.)
Every time they seek to get away therefrom, from anguish, they will be driven back therein, and (it will be) said to them: "Taste the torment of burning!"
விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அவர்களை, நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளில் நுழைவிப்பான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், (பின்னும்) அவற்றில் தங்கத்தினாலான கடகங்களும், முத்து (ஆபரணமு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவர், அதில் அவர்களுடைய உடைகளும் பட்டாகும்.
Truly, Allâh will admit those who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism) and do righteous good deeds, to Gardens underneath which rivers flow (in Paradise), wherein they will be adorned with bracelets of gold and pearls and their garments therein will be of silk.
இன்னும் (கலிமா தைய்யியா எனும்) பரிசுத்தமான கூற்றின் பால் அவர்கள் வழிகாட்டப்பட்டிருந்தனர்; இன்னும் புகழுக்குரியவனின் பாதையின்பாலும் அவர்கள் (இம்மையில்) செலுத்தப்பட்டிருந்தனர்.
And they are guided (in this world) unto goodly speech (i.e. Lâ ilâha illallâh, Alhamdu lillâh, recitation of the Qur’ân, etc.) and they are guided to the Path of Him (i.e. Allâh’s religion of Islâmic Monotheism), Who is Worthy of all praises.
நிச்சயமாக நிராகரித்து, அல்லாஹ்வின் பாதையை (அதில் விசுவாசிகள் செல்வதை) விட்டும், (மற்றும் மஸ்ஜிதுல் ஹராம்) அதில் வசிப்போராயினும், (அதற்கு தூரமாக) வெளியில் வசிப்போராயினும், மனிதர்களில் யாவருக்குமே சமமாக அதை நாம் ஆக்கியிருக்கிறோமே, அத்தகைய புனிதமான பள்ளியை (அதனுள் செல்வதை)விட்டும் தடுக்கிறார்களே, அத்தகையோர் (நஷ்டவாளிகளாவர்.) இன்னும் அதில் (பாவம் செய்தலெனும்) அநியாயத்தைக் கொண்டு யார் (அசத்தியத்தின்பால்) சாய்வதை நாடுகிறாரோ அவருக்கு நோவினைதரும் வேதனையிலிருந்து நாம் சுவைக்கச் செய்வோம்.
Verily, those who disbelieved and hinder (men) from the Path of Allâh, and from Al-Masjid-al-Harâm (at Makkah) which We have made (open) to (all) men, the dweller in it and the visitor from the country are equal there [as regards its sanctity and pilgrimage (Hajj and ‘Umrah)] - and whoever inclines to evil actions therein or to do wrong (i.e. practise polytheism and leave Islâmic Monotheism), him We shall cause to taste from a painful torment.
(நபியே!) இப்றாஹீமுக்கு (நமது) வீட்டின் இடத்தை நிர்ணயித்து, “நீர் எனக்கு எவரையும் இணையாக்காதீர், என்னுடைய வீட்டை சுற்றி வருவோருக்கும், அதில் (தொழுகைகளை நிறைவேற்ற) நிற்போருக்கும், அதில் குனிந்து சிரம்பணிந்து தொழு)வோருக்கும் அதனைப் பரிசுத்தப்படுத்தி வைப்பீராக!” என்று நாம் கூறியதை (நீர் நினைவு கூர்வீராக!)
And (remember) when We showed Ibrâhîm (Abraham) the site of the (Sacred) House (the Ka‘bah at Makkah) (saying): "Associate not anything (in worship) with Me, [Lâ ilâha illallâh (none has the right to be worshipped but Allâh) - Islâmic Monotheism], and sanctify My House for those who circumambulate it, and those who stand up (for prayer), and those who bow (submit themselves with humility and obedience to Allâh), and make prostration (in prayer);"
“ஹஜ்ஜுக்காக (அதைச் செய்ய வருமாறு) நீர் மனிதர்களை அழைப்பீராக!” (அவ்வழைப்பை ஏற்று) அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள், இன்னும், இளைத்த (களைப்புற்ற) ஒட்டகங்களின் மீது (சவாரி செய்தவர்களாகவும் வருவார்கள்.) அவை தூரமான ஒவ்வொரு வழியிலிருந்தும் (அவர்களைக்கொண்டு) வரும்.
And proclaim to mankind the Hajj (pilgrimage). They will come to you on foot and on every lean camel, they will come from every deep and distant (wide) mountain highway (to perform Hajj ).1
.
a) Narrated Abu Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "Whoever performs Hajj to this House (Ka‘bah ) and does not approach his wife for sexual relations nor commits sins (while performing Hajj), he will come out as sinless as a newly-born child (just delivered by his mother)." (Sahih Al-Bukhari, Vol.3, Hadith No.45).
தங்களுக்குரிய (இம்மை மறுமையின்) பலன்களை அவர்கள் அடைவதற்காகவும், அல்லாஹ்வின் பெயரை – அவன் அவர்களுக்குக் கொடுத்த (குர்பானிப் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) நாற்கால் பிராணிகள் மீது குறிப்பிடப்பட்ட நாட்களில் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) ஆகவே, அ(றுக்கப்பட்ட)வைகளிலிருந்து, நீங்களும் புசியுங்கள், கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக் கொடுங்கள்.
That they may witness things that are of benefit to them (i.e. reward of Hajj in the Hereafter, and also some worldly gain from trade), and mention the Name of Allâh on appointed days (i.e. 10th, 11th, 12th, and 13th day of Dhul-Hijjah), over the beast of cattle that He has provided for them (for sacrifice), [at the time of their slaughtering by saying: (Bismillah, Wallâhu-Akbar, Allâhumma Minka wa Ilaik).] Then eat thereof and feed therewith the poor having a hard time.
பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தறித்து, குளித்து இஹ்ராமை களைவதன் மூலம்) தங்கள் அழுக்குகளை அவர்கள் நீக்கிக் கொள்ளவும், தம் நேர்ச்சைகளையும் அவர்கள் நிறைவேற்றவும், (ஹஜ்ஜின் அடிப்படைக் கடமையான தவாபை நிறைவேற்ற) பூர்வீக ஆலயமான (கஃபா எனும்) வீட்டையும் அவர்கள் தவாஃப் செய்யவும்,
Then let them complete their prescribed duties (Manâsik of Hajj) and perform their vows, and circumambulate the Ancient House (the Ka‘bah at Makkah).1
இதுவே (ஹஜ்ஜுடைய கிரியைகள் பற்றிய முறையாகும்), மேலும், அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்டவைகளை எவர் மேன்மைப்படுத்துகிறாரோ, அது அவருடைய இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும், மேலும், (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைப் பிராணிகளிலிருந்து உங்களுக்கு (விலக்கபபட்டவையென) ஓதிக்காட்டப்பட்டதைத் தவிர, மற்றவை உங்களுக்கு (உண்ண) அனுமதிக்கப்பட்டுள்ளன, ஆகவே, விக்ரக (வணக்க)ங்களிலுள்ள அசுத்தத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், பொய்க்கூற்றையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
That (Manâsik- prescribed duties of Hajj is the obligation that mankind owes to Allâh), and whoever honours the sacred things of Allâh, then that is better for him with his Lord. The cattle are lawful to you, except those (that will be) mentioned to you (as exceptions). So shun the abomination (worshipping) of idol, and shun lying speech (false statements)1 -
அல்லாஹ்வுக்காக (அசத்தியத்தை விட்டும் சத்தியத்தின்பால்) சாய்ந்தவர்களாக, அவனுக்கு எதனையும் இணை வைக்காதவர்களாக, (வழிப்பட்டுவிடுங்கள்.) இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப்போன்றோ இருக்கின்றான்.
Hunafâ’ Lillâh (i.e. worshiping none but Allâh), not associating partners (in worship) unto Him; and whoever assigns partners to Allâh, it is as if he had fallen from the sky, and the birds had snatched him, or the wind had thrown him to a far off place.
அதுவே (அவனுடைய கதியாகும்.) இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அப்போது நிச்சயமாக, அது இதயங்களிலுள்ள பயபக்தியில் (ஏற்பட்டது) ஆகும்.
Thus it is [what has been mentioned in the above said Verses (27, 28, 29, 30, 31) is an obligation that mankind owes to Allâh] and whosoever honours the Symbols of Allâh, then it is truly from the piety of the hearts.
(குர்பானிப் பிராணிகளான, ஆடு, மாடு, ஒட்டகங்கள் ஆகியவைகளான) அவைகளில் (அவற்றின் பாலை அருந்துதல், சவாரி செயதல், அவற்றின் உரோமங்களை பயன்படுத்திக் கொள்ளுதல் போன்ற) பலன்கள் குறிப்பிட்ட நேரம் வரை உங்களுக்குண்டு, பின்னர், அவைகளுக்குரிய இடம் பூர்வீக வீட்டின்பாலாகும்.
In them (cattle offered for sacrifice) are benefits for you for an appointed term, and afterwards they are brought for sacrifice unto the ancient House (the Haram - sacred territory of Makkah).
(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைப் பிராணிகளிலிருந்து அவன் அவர்களுக்கு கொடுத்திருக்கின்றவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை அவர்கள் கூறுவதற்காக ஒவ்வொரு சமூகத்தாருக்கும் குர்பானி செய்வதை நாம் ஏற்படுத்தியிருந்தோம், ஆகவே உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் (ஒரே) ஒரு நாயன்தான், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்து நடங்கள், மேலும், உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக!
And for every nation We have appointed religious ceremonies, that they may mention the Name of Allâh over the beast of cattle that He has given them for food. And your Ilâh (God) is One Ilâh (God - Allâh), so you must submit to Him Alone (in Islâm). And (O Muhammad صلى الله عليه وسلم) give glad tidings to the Mukhbitûn (those who obey Allâh with humility and are humble from among the true believers of Islâmic Monotheism),
அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்(வுடைய பெயர்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் (அச்சத்தால் பயந்து) நடுங்கிவிடும், (துன்பங்களிலிருந்து) அவர்களுக்கு ஏற்பட்டதின் மீது பொறுமையாளர்களாகவும், தொழுகையை நிறைவேற்றுபவர்களாகவும் இருப்பர், அவர்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து (தர்மமாகச்) செலவும் செய்வார்கள்.
Whose hearts are filled with fear when Allâh is mentioned and As-Sabirûn [who patiently bear whatever may befall them (of calamities)]; and who perform As-Salât (Iqâmat-as-Salât), and who spend (in Allâh’s Cause) out of what We have provided them.
(அல்லாஹ்வின் பெயரால் ஹரமின்பால் கொண்டு செல்லப்படும் கொழுத்த) ஒட்டகங்களை – அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வுடைய அடையளங்களில் உள்ளவையாக நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் பெரும் நன்மை இருக்கிறது; ஆகவே (அதன் இடது முன் காலை மடக்கிக் கட்டி மீதமுள்ள மூன்று மூன்று கால்களில் அது நிற்குமாறு) நிறுத்தி வைத்து, அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்து) விடுங்கள்; அது விலாப்புறமாக கீழே விழுந்துவிட்டால், அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (தேவையுடையோராய் இருந்தும் பிறரிடம்) கேட்காதவர்களுக்கும், அதை யாசித்துக் கேட்டவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்.
And the Budn (cows, oxen, or camels driven to be offered as sacrifices by the pilgrims at the sanctuary of Makkah) We have made them for you as among the Symbols of Allâh, wherein you have much good. So mention the Name of Allâh over them when they are drawn up in lines (for sacrifice). Then, when they are down on their sides (after slaughter), eat thereof, and feed the poor who does not ask (men), and the beggar who asks (men). Thus have We made them subject to you that you may be grateful.
(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட,) அவற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்துவிடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும், உங்களை அவன் நேர்வழியில் செலுத்தியதற்காக (தக்பீர் கூறி) அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக, இவ்வாறு அவைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான், மேலும், (நபியே!) நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
It is neither their meat nor their blood that reaches Allâh, but it is piety from you that reaches Him. Thus have We made them subject to you that you may magnify Allâh for His Guidance to you. And give glad tidings (O Muhammad صلى الله عليه وسلم) to the Muhsinûn 1 (doers of good).
Al-Muhsinûn: The good-doers who perform good deeds totally for Allâh’s sake only without any show-off or to gain praise or fame, etc., and do them in accordance with the Sunnah (legal ways) of Allâh’s Messenger Muhammad صلى الله عليه وسلم.
(நிராகரிப்போரால்) போர் தொடுக்கப்பட்டோர்க்கு அவர்கள் அநீதமிழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற காரணத்ததால் (போர்த்தொடுத்தோரை எதிர்த்து) யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுவிட்டது, நிச்சயமாக அல்லாஹ்வோ, இவர்களுக்கு உதவி செய்ய மிக்க ஆற்றலுடையவன்.
Permission to fight (against disbelievers) is given to those (believers) who are fought against, because they have been wronged; and surely, Allâh is Able to give them (believers) victory -
அவர்கள் எத்தகையோரென்றால் நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து (விரோதிகளால்) வெளியேற்றப்பட்டார்கள், “எங்களுடைய இரட்சகன் அல்லாஹ் ஒருவன்)தான்” என்று கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் வாக்காக இருக்கவில்லை.) மேலும், மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, (மற்ற) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால், (பாதிரிகளின்,) மடங்களும், கிறிஸ்தவர்களின் வணக்கஸ்தலங்களும், யூதர்களின் வணக்கஸ்தலங்களும் மஸ்ஜிதுகளும்- இவற்றில் அல்லாஹ்வுடைய பெயர் அதிகமாக கூறப்படுபவை (யாவும்) இடிக்கப்பட்டுப் போயிருக்கும், அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான், நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், யாவரையும் மிகைத்தவன்.
Those who have been expelled from their homes unjustly only because they said: "Our Lord is Allâh." For had it not been that Allâh checks one set of people by means of another, monasteries, churches, synagogues, and mosques, wherein the Name of Allâh is mentioned much would surely have been pulled down. Verily, Allâh will help those who help His (Cause). Truly, Allâh is All-Strong, All-Mighty.