9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 340

/ 604
Page 340

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

22. Al-Hajjسورة الحج

22:65

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِى ٱلْأَرْضِ وَٱلْفُلْكَ تَجْرِى فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ وَيُمْسِكُ ٱلسَّمَآءَ أَن تَقَعَ عَلَى ٱلْأَرْضِ إِلَّا بِإِذْنِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ளவற்றையும், அவனுடைய கட்டளையைக் கொண்டு கடலில் செல்லும் கப்பலையும், உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான், வானத்தை – அது தன்னுடைய அனுமதியின்றி, பூமியின் மீது விழுந்து விடாதவாறும் அவன் அதனை தடுத்துக் கொண்டிருக்கிறான், நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன்.

See you not that Allâh has subjected to you (mankind) all that is on the earth, and the ships that sail through the sea by His Command? He withholds the heaven from falling on the earth except by His Leave. Verily, Allâh is, for mankind, Full of Kindness, Most Merciful.

22:66

وَهُوَ ٱلَّذِىٓ أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَكَفُورٌ

இன்னும், அவன் எத்தகையவனென்றால், உங்களுக்கு அவன் உயிரளித்தான், பின்னர் உங்களை அவன் மரணிக்கச்செய்வான், பின்னர் உங்களை அவன் உயிர்ப்பிப்பான், (எனினும்) நிச்சயமாக மனிதன் மிக நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

It is He, Who gave you life, and then will cause you to die, and will again give you life (on the Day of Resurrection). Verily man is indeed an ingrate.

22:67

لِّكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا هُمْ نَاسِكُوهُ ۖ فَلَا يُنَـٰزِعُنَّكَ فِى ٱلْأَمْرِ ۚ وَٱدْعُ إِلَىٰ رَبِّكَ ۖ إِنَّكَ لَعَلَىٰ هُدًى مُّسْتَقِيمٍ

(நபியே!) ஒவ்வொரு சமூகத்தினருக்கும் வழிபாட்டுமுறையை நாம் ஆக்கினோம், அவர்கள் அதனை (முறையாக)ச் செய்கிறவர்களாக இருக்கின்றனர், ஆகவே, அவர்கள் திட்டமாக இக்காரியத்தில் உம்முடன் பிணங்கிக் கொள்ள வேண்டாம், இன்னும், நீர் அவர்களை உம்முடைய இரட்சகன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் தான் நேர்வழியில் இருக்கின்றீர்.

For every nation We have ordained religious ceremonies [e.g. slaughtering of the cattle during the three days of stay at Mîna (Makkah) during the Hajj (pilgrimage)] which they must follow; so let them (the pagans) not dispute with you on the matter (i.e. to eat of the cattle which you slaughter, and not to eat of the cattle which Allâh kills by its natural death), but invite them to your Lord. Verily you (O Muhammad صلى الله عليه وسلم) indeed are on the (true) straight guidance (i.e. the true religion of Islâmic Monotheism).

22:68

وَإِن جَـٰدَلُوكَ فَقُلِ ٱللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ

(நபியே! பின்னும்) அவர்கள் உம்முடன் தர்க்கம் செய்தாலோ, “நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் மிக அறிந்தவன்” என்று (அவர்களுக்கு) நீர் கூறுவீராக!

And if they argue with you (as regards the slaughtering of the sacrifices), say "Allâh knows best of what you do.

22:69

ٱللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ

நீங்கள் எதில் (என்னுடன்) கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறீர்களோ அதில் அல்லாஹ் மறுமை நாளில் உங்களிடையே தீர்ப்பளிப்பான் (என்றும் கூறுவீராக!)

"Allâh will judge between you on the Day of Resurrection about that wherein you used to differ."

22:70

أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۗ إِنَّ ذَٰلِكَ فِى كِتَـٰبٍ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ

(நபியே!) வானத்திலும், பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இது (லவ்ஹூல் மஹ்ஃபூல் என்னும்) புத்தகத்தில் இருக்கின்றது, நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதேயாகும்.

Know you not that Allâh knows all that is in the heaven and on the earth? Verily, it is (all) in the Book (Al-Lauh-al-Mahfûz). Verily that is easy for Allâh.

22:71

وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَـٰنًا وَمَا لَيْسَ لَهُم بِهِۦ عِلْمٌ ۗ وَمَا لِلظَّـٰلِمِينَ مِن نَّصِيرٍ

(நபியே!) இன்னும் அவர்கள் அல்லாஹ்வையன்றி – அதற்கு அவன் எந்தச் சான்றையும் இறக்கி வைக்காததையும், இன்னும், எதுபற்றிய அறிவு அவர்களுக்கில்லையோ அதையும் வணங்குகின்றனர், (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் எவருமில்லை.

And they worship besides Allâh others for which He has sent down no authority, and of which they have no knowledge; and for the Zâlimûn (wrong-doers, polytheists and disbelievers in the Oneness of Allâh) there is no helper.

22:72

وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَـٰتُنَا بَيِّنَـٰتٍ تَعْرِفُ فِى وُجُوهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلْمُنكَرَ ۖ يَكَادُونَ يَسْطُونَ بِٱلَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ ءَايَـٰتِنَا ۗ قُلْ أَفَأُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَٰلِكُمُ ۗ ٱلنَّارُ وَعَدَهَا ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ

இன்னும் தெளிவானவைகளான நம்முடைய வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், (அவற்றை) நிராகரிப்பவர்களுடைய முகங்களில் (கோபத்தினால் ஏற்பட்ட) வெறுப்பை நீர் அறிவீர்; நம்முடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்போரை அவர்கள் தாக்குவதற்கு நெருங்குவர், (ஆகவே,) இவர்களிடம் நீர் கூறுவீராக! “நான் உங்களுக்கு இதனைவிடக் கெட்டதை அறிவிக்கட்டுமா? (அது நரக) நெருப்புத்தான், அதனையே (உங்களைப் போன்ற) நிராகரிப்போருக்கு அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான், (அது) சேருமிடத்திலும் மிகக்கெட்டது.”

And when Our Clear Verses are recited to them, you will notice a denial on the faces of the disbelievers! They are nearly ready to attack with violence those who recite Our Verses to them. Say: "Shall I tell you of something worse than that? The Fire (of Hell) which Allâh has promised to those who disbelieved, and worst indeed is that destination!"