9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 256

/ 604
Page 256

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

14. Ibrahimسورة ابراهيم

14:6

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنجَىٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ

மூஸா தன் சமூகத்தாரிடம்,“ அல்லாஹ் உங்கள் மீது – அவன் உங்களை ஃபிர் அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றியபொழுது – புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள், அவர்கள் உங்களை கொடிய வேதனை செய்து கொண்டிருந்தார்கள், மேலும், உங்கள் ஆண் மக்களை அறுத்(துக் கொலை செய்)தும் பெண் மக்களை (உயிருடன் வாழ)விட்டும் விட்டார்கள், இதில் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்குப் பெரும்சோதனை ஏற்பட்டிருந்தது” என்றும் கூறியதை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக!

And (remember) when Mûsâ (Moses) said to his people: "Call to mind Allâh’s Favour to you, when He delivered you from Fir‘aun’s (Pharaoh) people who were afflicting you with horrible torment, and were slaughtering your sons and letting your women alive; and in it was a tremendous trial from your Lord."

14:7

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِى لَشَدِيدٌ

அன்றியும் உங்கள் இரட்சகன் (இதற்காக) நீங்கள் (எனக்கு)நன்றி செலுத்தினால் (என் அருளை) நிச்சயமாக உங்களுக்கு அதிகப்படுத்துவேன், இன்னும், நீங்கள் மாறு செய்தீர்களானால், நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடினமானது” என்று அறிவித்ததையும் (நபியே!) நீர் நினைவு கூர்வீராக!

And (remember) when your Lord proclaimed: "If you give thanks (by accepting Faith and worshipping none but Allâh), I will give you more (of My Blessings); but if you are thankless (i.e. disbelievers), verily My punishment is indeed severe."

14:8

وَقَالَ مُوسَىٰٓ إِن تَكْفُرُوٓا۟ أَنتُمْ وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا فَإِنَّ ٱللَّهَ لَغَنِىٌّ حَمِيدٌ

இன்னும், மூஸா (தன் சமூகத்தாரிடம்) “நீங்களும் பூமியிலுள்ள (மனிதர்கள்) அனைவரும் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், புகழப்படுபவன்” என்றும் கூறினார்.

And Mûsâ (Moses) said: "If you disbelieve, you and all on earth together, then verily Allâh is Rich (Free of all needs), Owner of all Praise."

14:9

أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ ۛ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا ٱللَّهُ ۚ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَرَدُّوٓا۟ أَيْدِيَهُمْ فِىٓ أَفْوَٰهِهِمْ وَقَالُوٓا۟ إِنَّا كَفَرْنَا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ وَإِنَّا لَفِى شَكٍّ مِّمَّا تَدْعُونَنَآ إِلَيْهِ مُرِيبٍ

உங்களுக்கு முன்னர் இருந்தவர்களில் நூஹ், ஆது, ஸமூது ஆகிய சமூகத்தாருடையவும், அவர்களுக்குப் பின்னர் உள்ளவர்களுடையவும் செய்தி(கள்) உங்களுக்கு வரவில்லையா? அவர்(களின் விபரங்)களை அல்லாஹ்வைத் தவிர (மற்றெவரும்) அறிய மாட்டார், (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்தார்கள், நேரான வழிக்கு வாருங்கள் என்று அழைத்த சமயத்தில் அவர்களுடைய கைகளை அவர்களின் வாய்களின் பக்கமே கொண்டு சென்று (தூதர்களின் கூற்றை மறுத்து அவர்களிடம்,) “நிச்சயமாக நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம், அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கின்றீர்களோ, அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்திலிருக்கிறோம்” என்றும் கூறினார்கள்.

Has not the news reached you, of those before you, the people of Nûh (Noah), and ‘Âd, and Thamûd? And those after them? None knows them but Allâh. To them came their Messengers with clear proofs, but they put their hands in their mouths (biting them from anger) and said: "Verily, we disbelieve in that with which you have been sent, and we are really in grave doubt as to that to which you invite us (i.e. Islâmic Monotheism)."

14:10

۞ قَالَتْ رُسُلُهُمْ أَفِى ٱللَّهِ شَكٌّ فَاطِرِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يَدْعُوكُمْ لِيَغْفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرَكُمْ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى ۚ قَالُوٓا۟ إِنْ أَنتُمْ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا فَأْتُونَا بِسُلْطَـٰنٍ مُّبِينٍ

அதற்கு, அவர்களுடைய தூதர்கள் (அவர்களிடம்), “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்? உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு மன்னிப்பதற்காக உங்களை அவன் அழைக்கிறான். ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (வாழ்ந்திருக்க) பிற்படுத்தியும் வைப்பான்” என்று கூறினார்கள், அ(தற்க)வர்கள், “நீங்கள் நம்மைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை, எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டு எங்களைத் தடை செய்ய நீங்கள் நாடுகிறீர்கள், அவ்வாறாயின் (அதற்குரிய) தெளிவான சான்றை எங்களுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்

Their Messengers said: "What! Can there be a doubt about Allâh, the Creator of the heavens and the earth? He calls you (to Monotheism and to be obedient to Allâh) that He may forgive you of your sins and give you respite for a term appointed." They said: "You are no more than human beings like us! You wish to turn us away from what our fathers used to worship. Then bring us a clear authority (i.e. a clear proof of what you say)."