أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ ۛ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا ٱللَّهُ ۚ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَرَدُّوٓا۟ أَيْدِيَهُمْ فِىٓ أَفْوَٰهِهِمْ وَقَالُوٓا۟ إِنَّا كَفَرْنَا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ وَإِنَّا لَفِى شَكٍّ مِّمَّا تَدْعُونَنَآ إِلَيْهِ مُرِيبٍ
உங்களுக்கு முன்னர் இருந்தவர்களில் நூஹ், ஆது, ஸமூது ஆகிய சமூகத்தாருடையவும், அவர்களுக்குப் பின்னர் உள்ளவர்களுடையவும் செய்தி(கள்) உங்களுக்கு வரவில்லையா? அவர்(களின் விபரங்)களை அல்லாஹ்வைத் தவிர (மற்றெவரும்) அறிய மாட்டார், (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்தார்கள், நேரான வழிக்கு வாருங்கள் என்று அழைத்த சமயத்தில் அவர்களுடைய கைகளை அவர்களின் வாய்களின் பக்கமே கொண்டு சென்று (தூதர்களின் கூற்றை மறுத்து அவர்களிடம்,) “நிச்சயமாக நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம், அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கின்றீர்களோ, அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்திலிருக்கிறோம்” என்றும் கூறினார்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Has not the news reached you, of those before you, the people of Nûh (Noah), and ‘Âd, and Thamûd? And those after them? None knows them but Allâh. To them came their Messengers with clear proofs, but they put their hands in their mouths (biting them from anger) and said: "Verily, we disbelieve in that with which you have been sent, and we are really in grave doubt as to that to which you invite us (i.e. Islâmic Monotheism)."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali