9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 257

/ 604
Page 257

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

14. Ibrahimسورة ابراهيم

14:11

قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِن نَّحْنُ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأْتِيَكُم بِسُلْطَـٰنٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

(அதற்கு) அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம், “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறில்லை; எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது பேரருள் புரிகின்றான்; மேலும், அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டல்லாது எந்தச் சான்றையும் உங்களுக்கு நாங்கள் கொண்டு வருவது எங்களுக்கு (சாத்தியம்) இல்லை, (சகல காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து முழுமையாக) விசுவாசிகள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்” என்று கூறினார்கள்.

Their Messengers said to them: "We are no more than human beings like you, but Allâh bestows His Grace to whom He wills of His slaves. It is not ours to bring you an authority (proof) except by the Permission of Allâh. And in Allâh (Alone) let the believers put their trust.

14:12

وَمَا لَنَآ أَلَّا نَتَوَكَّلَ عَلَى ٱللَّهِ وَقَدْ هَدَىٰنَا سُبُلَنَا ۚ وَلَنَصْبِرَنَّ عَلَىٰ مَآ ءَاذَيْتُمُونَا ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُتَوَكِّلُونَ

“இன்னும், நாங்கள் அல்லாஹ்வின் மீது (முழுமையாக) நம்பிக்கை வைக்கதிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? திட்டமாக அவன் எங்களுடைய வழிகளை எங்களுக்கு காண்பித்துள்ளான், மேலும் (நிராகரிப்போரே!) நீங்கள் எங்களுக்கிழைக்கும் துன்பங்களை நிச்சயமாக நாங்கள் பொருத்துக் கொண்டு (உறுதியாக) இருப்போம், இன்னும், (சகல காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறவர்கள் (யாவரும்) அல்லாஹ்வின் மீதே (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)

"And why should we not put our trust in Allâh while He indeed has guided us our ways? And we shall certainly bear with patience all the hurt you may cause us, and in Allâh (Alone) let those who trust, put their trust."

14:13

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُم مِّنْ أَرْضِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۖ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ ٱلظَّـٰلِمِينَ

நிராகரித்துக் கொண்டிருந்தோர், தங்களின்(பால் அனுப்பப்பட்ட அத்) தூதர்களிடம் நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடுவோம், அல்லது நிச்சயமாக எங்கள் மார்க்கத்தில் நீங்கள் திரும்பிவிடவேண்டும் என்று கூறினார்கள், அப்போது அநியாயக்காரர்களை நிச்சயமாக நாம் அழித்துவிடுவோம், என அவர்கள்பால் அவர்களின் இரட்சகன் (வஹீ) அறிவித்தான்.

And those who disbelieved, said to their Messengers: "Surely, we shall drive you out of our land, or you shall return to our religion." So their Lord revealed to them: "Truly, We shall destroy the Zâlimûn (polytheists, disbelievers and wrong-doers).

14:14

وَلَنُسْكِنَنَّكُمُ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِهِمْ ۚ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِى وَخَافَ وَعِيدِ

இன்னும், “அவர்களுக்குப் பின்னர் உங்களை (இந்த) பூமியில் நிச்சயமாக நாம் குடியேற்றுவோம்” (என்றும் வஹீ மூலம் அறிவித்து) “இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தவருக்கும் என் (அச்சமூட்டலைப் பயந்தவர்களுக்குமாகும் (என்றும் இரட்சகன் அறிவித்தான்.)

"And indeed, We shall make you dwell in the land after them. This is for him who fears standing before Me (on the Day of Resurrection or fears My punishment) and also fears My threat."

14:15

وَٱسْتَفْتَحُوا۟ وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍ

இன்னும், அ(த்தூது)வர்கள் (அல்லாஹ்வின்) உதவியைக் கோரினார்கள், பிடிவாதக்கார வம்பன் ஒவ்வொருவனும் நஷ்டமடைந்துவிட்டான்.

And they (the Messengers) sought victory and help [from their Lord (Allâh)]; and every obstinate, arrogant dictator (who refuses to believe in the Oneness of Allâh) was brought to a complete loss and destruction.

14:16

مِّن وَرَآئِهِۦ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّآءٍ صَدِيدٍ

அவனுக்கு முன்பாக நரகம்(தான்) இருக்கிறது, மேலும், சீழ் நீரிலிருந்து அவன் புகட்டப்படுவான்.

In front of him (every obstinate, arrogant dictator) is Hell, and he will be made to drink boiling, festering water.

14:17

يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأْتِيهِ ٱلْمَوْتُ مِن كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٌ

அதனை அவன் (சங்கடத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவான், எனினும், அதை அவன் எளிதாக விழுங்க நெருங்க மாட்டான், ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணம் அவனுக்கு வந்துகொண்டுமிருக்கும், அவன் மரணிப்பவனுமல்லன், மேலும், அதற்கப்பால் கடினமான வேதனையுமுண்டு.

He will sip it unwillingly, and he will find a great difficulty to swallow it down his throat1; and death will come to him from every side, yet he will not die and in front of him, will be a great torment.

  1. Narrated Abu Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "The width between the two shoulders of a Kâfir (disbeliever) will be equal to the distance covered by a fast rider in three days." (Sahih Al-Bukhari, Vol.8, Hadith No.559A)

14:18

مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ أَعْمَـٰلُهُمْ كَرَمَادٍ ٱشْتَدَّتْ بِهِ ٱلرِّيحُ فِى يَوْمٍ عَاصِفٍ ۖ لَّا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا۟ عَلَىٰ شَىْءٍ ۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَـٰلُ ٱلْبَعِيدُ

தங்கள் இரட்சகனை நிராகரிக்கின்றார்களே, அத்தகையவர்களுக்கு உதாரணம், அவர்களுடைய செயல்கள் சாம்பலைப் போலிருக்கிறது! கடும் புயல் வீசும் நாளில் காற்று கடினமாக அதனை அடித்துக்கொண்டு போய்விட்டது, இது போன்றே தாங்கள் சம்பாதித்தவற்றிலிருந்து எதன் மீதும் (எப்பயனையும், அடைய) அவர்கள் சக்தி பெற மாட்டார்கள், இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.

The parable of those who disbelieved in their Lord is that their works are as ashes, on which the wind blows furiously on a stormy day; they shall not be able to get aught of what they have earned. That is the straying, far away (from the Right Path).