8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 168

/ 604
Page 168

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

7. Al-A'rafسورة الأعراف

7:144

قَالَ يَـٰمُوسَىٰٓ إِنِّى ٱصْطَفَيْتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَـٰلَـٰتِى وَبِكَلَـٰمِى فَخُذْ مَآ ءَاتَيْتُكَ وَكُن مِّنَ ٱلشَّـٰكِرِينَ

(அதற்கு) “மூஸாவே! என்னுடைய தூதுகளைக் கொண்டும், என்னுடைய பேச்சைக் கொண்டும் (எல்லா) மனிதர்களைவிட, நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன், ஆகவே, நான் உமக்கு கொடுப்பதைப் (பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்வீராக!) நன்றி செலுத்துபவர்களிலும் நீர் ஆகிவிடுவீராக” என்று கூறினார்.

(Allâh) said: "O Mûsâ (Moses) I have chosen you above men by My Messages, and by My speaking (to you). So hold that which I have given you and be of the grateful."

7:145

وَكَتَبْنَا لَهُۥ فِى ٱلْأَلْوَاحِ مِن كُلِّ شَىْءٍ مَّوْعِظَةً وَتَفْصِيلًا لِّكُلِّ شَىْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا۟ بِأَحْسَنِهَا ۚ سَأُو۟رِيكُمْ دَارَ ٱلْفَـٰسِقِينَ

மேலும், (நாம் அவருக்குக் கொடுத்த) பலவகைகளில் ஒவ்வொரு விஷயத்திலிருந்து நல்லுபதேசத்தையும், ஒவ்வொரு விஷயத்திற்குரிய விளக்கத்தையும் அவருக்காக நாம் எழுதி இருந்தோம், (ஆகவே), ”நீர் இதனைப் பலமாகப் (பற்றிப்) பிடித்துக் கொண்டு அதிலிருக்கும் நல்லவைகளை எடுத்து செயல்பட்டு)க் கொள்ளுமாறு உம்முடைய சமூகத்தாரை நீர் கட்டளையும் இடுவீராக! (உமக்கு மாறு செய்யும்) பாவிகளின் வீட்டை (தங்குமிடத்தை) நான் உங்களுக்குக் காண்பிப்பேன்” என்றும் (கூறினான்.)

And We wrote for him on the Tablets the lesson to be drawn from all things and the explanation for all things (and said): Hold unto these with firmness, and enjoin your people to take the better therein. I shall show you the home of Al-Fâsiqûn (the rebellious, disobedient to Allâh).

7:146

سَأَصْرِفُ عَنْ ءَايَـٰتِىَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍ لَّا يُؤْمِنُوا۟ بِهَا وَإِن يَرَوْا۟ سَبِيلَ ٱلرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِن يَرَوْا۟ سَبِيلَ ٱلْغَىِّ يَتَّخِذُوهُ سَبِيلًا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَكَانُوا۟ عَنْهَا غَـٰفِلِينَ

நியாயமின்றி, பூமியில் கர்வங்கொண்டிருப்போரை, என்னுடைய அத்தாட்சிகளை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பி வைத்து விடுவேன், அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் கண்டபோதிலும் அவைகளை நம்பிக்கை கொள்ளவுமாட்டார்கள், (அவ்வாறே) நேர் வழியை அவர்கள் கண்டாலும் அதனை அவர்கள் (நேரான) வழியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள், ஆனால், தவறான வழியை அவர்கள் கண்டாலோ, அதனையே (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக் கொள்வார்கள், அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினர் என்பதாலும், அவைகளை விட்டும் அவர்கள் மறந்தவர்களாகவும் இருந்தார்கள் என்ற காரணத்தினாலுமாகும்.

I shall turn away from My Ayât (verses of the Qur’ân) those who behave arrogantly on the earth, without a right, and (even) if they see all the Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.), they will not believe in them. And if they see the way of righteousness (monotheism, piety, and good deeds), they will not adopt it as the Way, but if they see the way of error (polytheism, crimes and evil deeds), they will adopt that way, that is because they have rejected Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) and were heedless (to learn a lesson) from them.

7:147

وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَلِقَآءِ ٱلْـَٔاخِرَةِ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ

நம்முடைய வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்யாக்குகின்றார்களே அத்தகையோர்-அவர்களுடைய (நற்) காரியங்கள் யாவும் அழிந்து விட்டன, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா?

Those who deny Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) and the Meeting in the Hereafter (Day of Resurrection,), vain are their deeds. Are they requited with anything except what they used to do?

7:148

وَٱتَّخَذَ قَوْمُ مُوسَىٰ مِنۢ بَعْدِهِۦ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهُۥ خُوَارٌ ۚ أَلَمْ يَرَوْا۟ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا ۘ ٱتَّخَذُوهُ وَكَانُوا۟ ظَـٰلِمِينَ

மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின்னர், தங்கள் ஆபரணங்களிலிருந்து ஒரு காளைக் கன்றை (அதன்)-உடலை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள், அதற்கு, (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது, நிச்சயமாக அது அவர்களுடன் பேசவுமாட்டாது, அவர்களுக்கு யாதொரு வழியைக் காட்டவுமாட்டாது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (எனினும்) அவர்கள் அதனையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள், அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயக்காரர்களாகவும் ஆகிவிட்டனர்.

And the people of Mûsâ (Moses) made in his absence, out of their ornaments, the image of a calf (for worship). It had a sound (as if it was mooing). Did they not see that it could neither speak to them nor guide them to the way? They took it (for worship) and they were Zâlimûn (wrong-doers).

7:149

وَلَمَّا سُقِطَ فِىٓ أَيْدِيهِمْ وَرَأَوْا۟ أَنَّهُمْ قَدْ ضَلُّوا۟ قَالُوا۟ لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَـٰسِرِينَ

மேலும், அவர்கள் (செய்து விட்டது பற்றி) மிகவும் கைசேதப்பட்டு திட்டமாகத் தாங்களே வழிதவறி விட்டார்கள் என்பதையும் அவர்கள் கண்டபொழுது, “எங்கள் இரட்சகன் எங்களுக்கு அருள் புரிந்து எங்களை மன்னிக்காவிடில் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.

And when they regretted and saw that they had gone astray, they (repented and) said: "If our Lord have not mercy upon us and forgive us, we shall certainly be of the losers."