9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 167

/ 604
Page 167

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

7. Al-A'rafسورة الأعراف

7:138

وَجَـٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتَوْا۟ عَلَىٰ قَوْمٍ يَعْكُفُونَ عَلَىٰٓ أَصْنَامٍ لَّهُمْ ۚ قَالُوا۟ يَـٰمُوسَى ٱجْعَل لَّنَآ إِلَـٰهًا كَمَا لَهُمْ ءَالِهَةٌ ۚ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ

மேலும், நாம் இஸ்ராயீலின் மக்களைக் கடலைக் கடந்து செல்ல வைத்தோம், (அப்போது) தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் வந்தடைந்தனர், (அப்போது, மூஸாவிடம்,) மூஸாவே! அவர்களுக்கு தெய்வங்கள் இருப்பதைப்போல் எங்களுக்கும் ஒரு தெய்வத்தை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வைப்பீராக!” என்று கூறினார்கள், அதற்கு (மூஸாவாகிய) அவர், நிச்சயமாக நீங்கள் அறியாதவர்களான ஓர் கூட்டத்தினராவீர்கள் என்று கூறினார்.

And We brought the Children of Israel (with safety) across the sea, and they came upon a people devoted to some of their idols (in worship). They said: "O Mûsâ (Moses)! Make for us an ilâh1 (a god) as they have âlihah (gods)." He said: "Verily, you are a people who know not (the Majesty and Greatness of Allâh and what is obligatory upon you, i.e. to worship none but Allâh Alone, the One and the Only God of all that exists)."

  1. Ilâh: Who has all the right to be worshipped.

7:139

إِنَّ هَـٰٓؤُلَآءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِيهِ وَبَـٰطِلٌ مَّا كَانُوا۟ يَعْمَلُونَ

“நிச்சயமாக (விக்கிரக ஆராதனை செய்யும்) இவர்கள் எதில் இருந்து கொண்டிருக்கிறார்களோ அது அழிந்துவிடக் கூடியதும், அவர்கள் எதை செய்து கொண்டிருக்கிறார்களோ அது முற்றிலும் வீணானதேயாகும்” என்று கூறினார்.

[Mûsâ (Moses) added:] "Verily, these people will be destroyed for that which they are engaged in (idols-worship). And all that they are doing is in vain."

7:140

قَالَ أَغَيْرَ ٱللَّهِ أَبْغِيكُمْ إِلَـٰهًا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى ٱلْعَـٰلَمِينَ

(தவிர,)” அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இரட்சகனாகத் தேடுவேன்? அவனோ உங்களை அகிலத்தாரை விட மேன்மையாக்கி வைத்துள்ளான்” என்றும் அவர் கூறினார்.

He said: "Shall I seek for you an Ilâh (a god) other than Allâh, while He has given you superiority over the ‘Âlamîn (mankind and jinn of your time)."

7:141

وَإِذْ أَنجَيْنَـٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۖ يُقَتِّلُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ

மேலும், (இஸ்ராயீலின் மக்களே!) பிர் அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றியதை (நீங்கள் நினைத்துப் பாருங்கள்.) அவர்கள் உங்களை கொடிய வேதனையால் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள், அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, உங்கள் பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விட்டும் வந்தார்கள், இதில் உங்களுக்கு உங்கள் இரட்சகனால் மகத்தானதொரு சோதனையும் (ஏற்பட்டு) இருந்தது.

And (remember) when We rescued you from Fir‘aun’s (Pharaoh) people, who were afflicting you with the worst torment, killing your sons and letting your women live. And in that was a great trial from your Lord.

7:142

۞ وَوَٰعَدْنَا مُوسَىٰ ثَلَـٰثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَـٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَـٰتُ رَبِّهِۦٓ أَرْبَعِينَ لَيْلَةً ۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَـٰرُونَ ٱخْلُفْنِى فِى قَوْمِى وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ ٱلْمُفْسِدِينَ

இன்னும், மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம், மேலும், அதை பத்து இரவுகளைக் கொண்டு நாம் பூர்த்தியாக்கியும் வைத்தோம், ஆகவே, அவருடைய இரட்சகனின் தவணை நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று, அது சமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனிடம் “நீர் என்னுடைய சமூகத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, அவர்களைச் சீர் திருத்தமும் செய்வீராக! அன்றியும் குழப்பக்காரர்களுடைய வழியை நீர் பின்பற்றாதிருப்பீராக! என்று கூறினார்.

And We appointed for Mûsâ (Moses) thirty nights and added (to the period) ten (more), and he completed the term, appointed by his Lord, of forty nights. And Mûsâ (Moses) said to his brother Hârûn (Aaron): "Replace me among my people, act in the Right Way (by ordering the people to obey Allâh and to worship Him Alone) and follow not the way of the Mufsidûn (mischief-makers)."

7:143

وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَـٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِىٓ أَنظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَن تَرَىٰنِى وَلَـٰكِنِ ٱنظُرْ إِلَى ٱلْجَبَلِ فَإِنِ ٱسْتَقَرَّ مَكَانَهُۥ فَسَوْفَ تَرَىٰنِى ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلْجَبَلِ جَعَلَهُۥ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًا ۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبْحَـٰنَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلْمُؤْمِنِينَ

மேலும், நாம் குறிப்பிட்ட நேரத்தில் (குறிப்பிட்ட இடத்திற்கு) மூஸா வந்து அவருடைய இரட்சகனும் அவருடன் பேசியபொழுது, “என் இரட்சகனே! நீ (உன்னை) எனக்குக் காண்பிப்பாயாக! உன்பால் நான் பார்ப்பேன்” என்று கூறினார், (அதற்கு, அல்லாஹ், மூஸாவே!) நீர் என்னை ஒருபோதும் பார்க்க முடியாது, எனினும், இம்மலையை நீர் பார்ப்பீராக! அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னை காண்பீர், என்று கூறினான், ஆகவே, அவருடைய இரட்சகன் அம்மலைமீது வெளிப்பட்டபோது அவ்வாறு வெளிப்பட்ட நிலையான)து, அ(ம்மலையான)தை தூளாக்கிவிட்டது, இன்னும் மூஸா (திடுக்கிட்டு) மூர்ச்சையாக விழுந்து விட்டார், பின்னர் அவர் தெளிவு பெற்றபோது (அல்லாஹ்விடம்) “நீ மிகப் பரிசுத்தமானவன், நான் உன்னிடம் பாவமீட்சி கோருகின்றேன், இன்னும், (உன்னை) விசுவாசிப்போரில் நான் முதன்மையானவன்” என்று கூறினார்,

And when Mûsâ (Moses) came at the time and place appointed by Us, and his Lord (Allah) spoke to him; he said: "O my Lord! Show me (Yourself), that I may look upon You." Allâh said: "You cannot see Me, but look upon the mountain; if it stands still in its place then you shall see Me." So when his Lord appeared to the mountain1, He made it collapse to dust, and Mûsâ (Moses) fell down unconscious. Then when he recovered his senses he said: "Glory be to You, I turn to You in repentance and I am the first of the believers."

  1. The appearance of Allâh جل جلاله to the mountain was very little of Him. It was approximately equal to the tip of one’s little finger as explained by the Prophet صلى الله عليه وسلم when he recited this Verse. (This hadîth is quoted by Tirmidhi).