8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 169

/ 604
Page 169

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

7. Al-A'rafسورة الأعراف

7:150

وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوْمِهِۦ غَضْبَـٰنَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِى مِنۢ بَعْدِىٓ ۖ أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ ۖ وَأَلْقَى ٱلْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيْهِ ۚ قَالَ ٱبْنَ أُمَّ إِنَّ ٱلْقَوْمَ ٱسْتَضْعَفُونِى وَكَادُوا۟ يَقْتُلُونَنِى فَلَا تُشْمِتْ بِىَ ٱلْأَعْدَآءَ وَلَا تَجْعَلْنِى مَعَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

மேலும், (இதனை அறிந்த மூஸா கோபங்கொண்டவராக – பெரும் வருத்தம் நிறைந்தவராக தன் சமூகத்தாரிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களிடம்) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த (இச்செயலான)து மிகக் கெட்டது, உங்கள் இரட்சகனின் கட்டளை (வேதனை) வருவதை நீங்கள் அவசரப்படுகின்றீர்களா?” என்று கூறி (அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதப்பட்ட) பலகைகளைப் போட்டுவிட்டு, தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார், அ(தற்க)வர், “என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி விட்டனர், என்னைக் கொலை செய்து விடவும் முற்பட்டனர், என்னுடைய விரோதிகள் என்னைப் பார்த்து சிரிக்குமாறு நீர் செய்துவிடாதீர், இந்த அக்கிரமக்கார சமூகத்தாருடன் என்னை ஆக்கியும் விடாதீர்” என்று கூறினார்.

And when Mûsâ (Moses) returned to his people, angry and grieved, he said: "What an evil thing is that which you have done (i.e. worshipping the calf) during my absence. Did you hasten and go ahead as regards the matter of your Lord (you left His worship)?" And he threw down the Tablets and seized his brother by (the hair of) his head and dragged him towards him. Hârûn (Aaron) said: "O son of my mother! Indeed the people judged me weak and were about to kill me, so make not the enemies rejoice over me, nor put me amongst the people who are Zâlimûn (wrong-doers)."

7:151

قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَلِأَخِى وَأَدْخِلْنَا فِى رَحْمَتِكَ ۖ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ

“என் இரட்சகனே! என்னையும், என் சகோதரரையும் நீ மன்னித்தருள்வாயாக! உன்னுடைய கிருபையில் எங்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக! நீ கிருபை செய்வோரிலெல்லாம் மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.

Mûsâ (Moses) said: "O my Lord! Forgive me and my brother, and admit us into Your Mercy, for you are the Most Merciful of those who show mercy."

7:152

إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّن رَّبِّهِمْ وَذِلَّةٌ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُفْتَرِينَ

“நிச்சயமாக காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக்கொண்டார்களே அத்தகையோர்-அவர்களுடைய இரட்சகனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் அவர்களை வந்தடையும், பொய்க் கற்பனை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்” (என்று அல்லாஹ் கூறினான்.)

Certainly, those who took the calf (for worship), wrath from their Lord and humiliation will come upon them in the life of this world. Thus do We recompense those who invent lies.

7:153

وَٱلَّذِينَ عَمِلُوا۟ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُوا۟ مِنۢ بَعْدِهَا وَءَامَنُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ

மேலும், தீய செயல்கள் செய்துவிட்டு, (மனம் வருந்தி) அதன் பின் பச்சாதாபப்பட்டு, (அதிலிருந்து விலகி, உண்மையாகவே) விசுவாசமும் கொண்டு விட்டார்களே, அத்தகையோர் - (அவர்களுடைய பாவத்தை நிச்சயமாக உமதிரட்சகன் அதற்குப்பின் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபை செய்பவன்.

But those who committed evil deeds and then repented afterwards and believed, verily, your Lord after (all) that is indeed Oft-Forgiving, Most Merciful.

7:154

وَلَمَّا سَكَتَ عَن مُّوسَى ٱلْغَضَبُ أَخَذَ ٱلْأَلْوَاحَ ۖ وَفِى نُسْخَتِهَا هُدًى وَرَحْمَةٌ لِّلَّذِينَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُونَ

மேலும், மூஸாவுடைய கோபம் தணிந்தபோது, அவர் (அந்தப்)பலகைகளை எடுத்துக் கொண்டார், அவற்றில் வரையப்பட்டிருந்ததில் தங்களுடைய இரட்சகனை பயப்படுகின்றார்களே அத்தகையோருக்கு நேர் வழியும் (அவனின் பேரருளும் இருந்தன.)

And when the anger of Mûsâ (Moses) was calmed down, he took up the Tablets; and in their inscription was guidance and mercy for those who fear their Lord.

7:155

وَٱخْتَارَ مُوسَىٰ قَوْمَهُۥ سَبْعِينَ رَجُلًا لِّمِيقَـٰتِنَا ۖ فَلَمَّآ أَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ أَهْلَكْتَهُم مِّن قَبْلُ وَإِيَّـٰىَ ۖ أَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآ ۖ إِنْ هِىَ إِلَّا فِتْنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهْدِى مَن تَشَآءُ ۖ أَنتَ وَلِيُّنَا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا ۖ وَأَنتَ خَيْرُ ٱلْغَـٰفِرِينَ

மேலும், மூஸா நாம் குறித்த நேரத்திற்காக தம் சமூகத்தாரில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார், அவர்களைப் பூகம்பம் பிடித்தபொழுது (என் இரட்சகனே! நீ நாடியிருந்தால், இதற்கு முன்னதாகவே இவர்களையும், என்னையும் நீ அழித்திருக்கலாமே) எங்களிலுள்ள அறிவீனர்கள் சிலர் செய்ததற்காக, எங்களை நீ அழித்து விடுகிறாயா?” இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை, இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவறச் செய்கிறாய், நீ நாடியவர்களை நேர் வழியிலும் செலுத்துகிறாய், நீயே எங்களுடைய பாதுகாவலன், ஆகவே நீ எங்களை மன்னித்தருள்வாயாக! மேலும், எங்களுக்கு நீ அருள் புரிவாயாக, நீயே மன்னிப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று அவர் (பிரார்த்தித்துக்) கூறினார்.

And Mûsâ (Moses) chose out of his people seventy (of the best) men for Our appointed time and place of meeting, and when they were seized with a violent earthquake, he said: "O my Lord, if it had been Your Will, You could have destroyed them and me before; would You destroy us for the deeds of the foolish ones among us? It is only Your Trial by which You lead astray whom You will, and keep guided whom You will. You are our Walî (Protector), so forgive us and have Mercy on us: for You are the Best of those who forgive.