மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ ۚ قَدْ جِئْتُكُم بِبَيِّنَةٍ مِّن رَّبِّكُمْ فَأَرْسِلْ مَعِىَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(அன்றி “நான் அல்லாஹ்வின்மீது உண்மையையன்றி (வேறு எதையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும், உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை திட்டமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன், ஆதலால், நீ (அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் மக்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்.)
"Proper it is for me that I say nothing concerning Allâh but the truth. Indeed I have come unto you from your Lord with a clear proof. So let the Children of Israel depart along with me."
قَالَ إِن كُنتَ جِئْتَ بِـَٔايَةٍ فَأْتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
அ(தற்க)வன், “நீர் ஏதேனும் அத்தாட்சியைக் கொண்டு வந்திருந்தால், (அதுபற்றி) நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதனை நீர் கொண்டுவாரும்” என்று கூறினான்.
[Fir‘aun (Pharaoh)] said: "If you have come with a sign, show it forth, if you are one of those who tell the truth."
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِينٌ
அப்போது அவர் தன் கைத்தடியை போட்டார், அதே சமயம் அது தெளிவான பெரிய(தொரு) பாம்பாகிவிட்டது.
Then [Mûsâ (Moses)] threw his stick and behold! it was a serpent, manifest!
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّـٰظِرِينَ
அன்றியும் அவர் தன்னுடைய கையை(ச் சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார், அதே சமயம் அது பார்ப்போருக்கு வெண்மையானதாக(வும் பிரகாசமானதாகவும்) இருந்தது.
And he drew out his hand, and behold! it was white (with radiance) for the beholders.
قَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَـٰذَا لَسَـٰحِرٌ عَلِيمٌ
(இதனைக்கண்ட) ஃபிர் அவ்னுடைய சமூகத்தாரைச்சேர்ந்த பிரதானிகள் “நிச்சயமாக இவர் மிக அறிந்த சூனியக்காரர்” என்று கூறினார்கள்.,
The chiefs of the people of Fir‘aun (Pharaoh) said: "This is indeed a well-versed sorcerer;
يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُمْ ۖ فَمَاذَا تَأْمُرُونَ
“அவர் உங்களை உங்களுடைய பூமியிலிருந்து (நாட்டிலிருந்து) வெளியேற்றிவிட நாடுகிறார், ஆகவே, இதைப்பற்றி நீங்கள் எதைக் கட்டளையிடுகிறீர்கள்” (என்று ஃபிர் அவன் கேட்டான்.)
"He wants to get you out of your land, so what do you advise?"
قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَأَرْسِلْ فِى ٱلْمَدَآئِنِ حَـٰشِرِينَ
அ(தற்கவர்கள், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு, பல பட்டணங்களுக்கு (சூனியக்காரர்களைத்) திரட்டிக் கொண்டு வருபவர்களை அனுப்பி வை” என்று கூறினார்கள்.
They said: "Put him and his brother off (for a time), and send callers to the cities to collect -
يَأْتُوكَ بِكُلِّ سَـٰحِرٍ عَلِيمٍ
“அவர்கள், நன்கறிந்த ஒவ்வொரு சூனியக்காரரையும் உம்மிடம் (அழைத்துக்) கொண்டு வருவார்கள்”(என்றும் கூறினார்கள்).
"That they bring up to you all well-versed sorcerers."
وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوٓا۟ إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَـٰلِبِينَ
(அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர் அவ்னிடம் வந்து” நாங்கள் (மூஸாவை) வென்றவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டா?” என்று கேட்டனர்.
And so the sorcerers came to Fir‘aun (Pharaoh). They said: "Indeed there will be a (good) reward for us if we are the victors."
قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ ٱلْمُقَرَّبِينَ
அதற்கவன், “ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு) மேலும், நிச்சயமாக நீங்கள் (எம் சபையில் எமக்கு மிக்க) நெருக்கமாக்கப்பட்டவர்களிலுமிருப்பீர்கள் என்று கூறினான்.
He said: "Yes, and moreover you will (in that case) be of the nearest (to me)."
قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحْنُ ٱلْمُلْقِينَ
(பின்னர் அச்சூனியக்காரர்கள்) “மூஸாவே (முதலில்) நீர் போடுகிறீரா? அல்லது (முதலில்) போடுபவர்களாக நாங்கள் இருக்கட்டுமா?” என்று கேட்டனர்.
They said: "O Mûsâ (Moses)! Either you throw (first), or shall we have the (first) throw?"
قَالَ أَلْقُوا۟ ۖ فَلَمَّآ أَلْقَوْا۟ سَحَرُوٓا۟ أَعْيُنَ ٱلنَّاسِ وَٱسْتَرْهَبُوهُمْ وَجَآءُو بِسِحْرٍ عَظِيمٍ
(அதற்கு) மூஸா “நீங்கள் (முதலில்) போடுங்கள்” என்று கூறினார்; அவ்வாறு அவர்கள் (தங்களது கைத்தடிகளை) போட்டபோது அதனால் மனிதர்களுடைய கண்களை(க் கட்டி) சூனியம் செய்தனர், அவர்களைத் திடுக்கிடும்படியும் செய்துவிட்டனர், இன்னும் மகத்தான சூனியத்தை அவர்கள் கொண்டு வந்து விட்டனர்.
He [Mûsâ (Moses)] said: "Throw you (first)." So when they threw, they bewitched the eyes of the people, and struck terror into them, and they displayed a great magic.
۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
(அது சமயம்) நாம், “மூஸாவுக்கு நீர் உம்முடைய கைத்தடியை போடும்)” என்றும் வஹீ அறிவித்தோம், (அவ்வாறு அவர் போடவே,) உடனே அது (பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்தவற்றை விழுங்கிவிட்டது.
And We revealed to Mûsâ (Moses) (saying): "Throw your stick," and behold! It swallowed up straight away all the falsehoods which they showed.
فَوَقَعَ ٱلْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
ஆகவே, உண்மை வெளிப்பட்டு விட்டது, அவர்கள் செய்து கொண்டிருந்தவை (யாவும்) வீணாகியும் விட்டது.
Thus truth was confirmed, and all that they did was made of no effect.
فَغُلِبُوا۟ هُنَالِكَ وَٱنقَلَبُوا۟ صَـٰغِرِينَ
ஆகவே, (கர்வங்கொண்டிருந்த) அவர்கள் அங்கேயே வெற்றி கொள்ளப்பட்டனர், அவர்கள் சிறுமையடைந்தவர்களாகவும் திரும்பினார்கள்.,
So they were defeated there and returned disgraced.
وَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَـٰجِدِينَ
அன்றியும், அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (க்கீழே) வீழ்த்தப்பட்டனர்.
And the sorcerers fell down prostrate.