قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
“அகிலத்தாரின் இரட்சகனை நாங்கள் ஈமான்(விசுவாசம்) கொண்டுவிட்டோம்” என்று கூறினார்கள்.
They said: "We believe in the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists).
8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
“அகிலத்தாரின் இரட்சகனை நாங்கள் ஈமான்(விசுவாசம்) கொண்டுவிட்டோம்” என்று கூறினார்கள்.
They said: "We believe in the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists).
رَبِّ مُوسَىٰ وَهَـٰرُونَ
(அவனே) மூஸாவிற்கும், ஹாரூனுக்கும் இரட்சகன்” (என்று கூறினார்கள்.)
"The Lord of Mûsâ (Moses) and Hârûn (Aaron)."
قَالَ فِرْعَوْنُ ءَامَنتُم بِهِۦ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّ هَـٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوهُ فِى ٱلْمَدِينَةِ لِتُخْرِجُوا۟ مِنْهَآ أَهْلَهَا ۖ فَسَوْفَ تَعْلَمُونَ
(அதற்கு) ஃபிர் அவ்ன், “உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் (மூஸா, ஹாரூனுடைய இரட்சகனாகிய) அவனை விசுவாசங்கொண்டு விட்டீர்கள்? நிச்சயமாக இது ஒரு சதியாகும், இந்நகரத்தில் அதற்குரியவர்களை அதிலிருந்து நீங்கள் வெளியேற்றுவதற்காக இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள், ஆகவே, (இச்சதியின் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறினான்.
Fir‘aun (Pharaoh) said: "You have believed in him [Mûsâ (Moses)] before I give you permission. Surely, this is a plot which you have plotted in the city to drive out its people, but you shall come to know.
لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَـٰفٍ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
“நிச்சயமாக நான் உங்களுடைய கைகளையும் உங்களுடைய கால்களையும் மாறாக (ஒருபக்கத்துக் காலையும் மறுபக்கத்துக் கையையும்) துண்டித்து விடுவேன், அதன்பின் உங்கள் யாவரையும் கழுவேற்றுவேன்” என்று கூறினான்.
"Surely, I will cut off your hands and your feet from opposite sides, then I will crucify you all."
قَالُوٓا۟ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
அ(தற்க)வர்கள் (அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனின்பால் திரும்பிச் செல்லக் கூடியவர்கள், (அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.
They said: "Verily, we are returning to our Lord.
وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِـَٔايَـٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ۚ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
எங்கள் இரட்சகனின் அத்தாட்சிகளை-அவை எங்களிடம் வந்தபோது நாங்கள் ஈமான் கொண்டுவிட்டோம் என்பதற்கல்லாது நீ எங்களைத் தண்டிக்கவில்லை (என்று கூறிவிட்டு,) எங்கள் இரட்சகனே! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! இன்னும் (உனக்கு) முற்றிலும் கீழ்ப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) நீ எங்க(ள் உயிர்)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
"And you take vengeance on us only because we believed in the Ayât (proofs, evidence, lessons, signs, etc.) of our Lord when they reached us! Our Lord! pour out on us patience, and cause us to die as Muslims."
وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُۥ لِيُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَآءَهُمْ وَنَسْتَحْىِۦ نِسَآءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَـٰهِرُونَ
இன்னும், ஃபிர் அவ்னுடைய சமூகப்பிரதானிகள் (ஃபிர் அவ்னிடம்), “மூஸாவையும் அவருடைய சமூகத்தாரையும் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும், உம் தெய்வங்களையும் (புறக்கணித்து) விட்டுவிடுவதற்காகவும் நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள், அ(தற்க)வன், “(அன்று) அவர்களுடைய ஆண்மக்களை வெட்டிக் கொன்று விடுவோம், அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவும் விடுவோம், இன்னும் நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள்” என்று கூறினான்.
The chiefs of Fir‘aun’s (Pharaoh) people said: "Will you leave Mûsâ (Moses) and his people to spread mischief in the land, and to abandon you and your gods?" He said: "We will kill their sons, and let live their women, and we have indeed irresistible power over them."
قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱسْتَعِينُوا۟ بِٱللَّهِ وَٱصْبِرُوٓا۟ ۖ إِنَّ ٱلْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَٱلْعَـٰقِبَةُ لِلْمُتَّقِينَ
(அதற்கு) மூஸா தன் சமூகத்தாரிடம், “நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், இன்னும், பொறுமையாகவுமிருங்கள், சகித்திருங்கள், நிச்சயமாக இந்தப் பூமி அல்லாஹ்வுக்கே உரியது, இதனை அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு (உரிமைப்படுத்தி) அனந்தரமாக்கி விடுவான், (நல்ல) முடிவு (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்களுக்கே” என்று கூறினார்.
Mûsâ (Moses) said to his people: "Seek help in Allâh and be patient. Verily, the earth is Allâh’s. He gives it as a heritage to whom He wills of His slaves; and the (blessed) end is for the Muttaqûn (the pious - see V.2:2)."
قَالُوٓا۟ أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِنۢ بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى ٱلْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ
(அதற்கு மூஸாவுடைய சமூகத்தார் அவரிடம்,) “நீர் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம், நீர் வந்ததன் பின்னரும் துன்புறுத்தப்பட்டே வருகின்றோம்.,) என்று அவர்கள் கூறினார்கள், (அதற்கு மூஸா,) உங்களுடைய இரட்சகன் உங்களுடைய விரோதிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும், அப்பால் நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதைக் கவனிப்பான் என்று கூறினார்.
They said: "We (Children of Israel) had suffered troubles before you came to us, and since you have come to us." He said: "It may be that your Lord will destroy your enemy and make you successors on the earth, so that He may see how you act?"
وَلَقَدْ أَخَذْنَآ ءَالَ فِرْعَوْنَ بِٱلسِّنِينَ وَنَقْصٍ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
மேலும், ஃபிர் அவ்னைச் சார்ந்தவர்களை-அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக பஞ்சங்களைக் கொண்டும், காய்கனிப் பொருள்களில் குறைவைக் கொண்டும் திட்டமாக நாம் பிடித்தோம்.
And indeed We punished the people of Fir‘aun (Pharaoh) with years of drought and shortness of fruits (crops), that they might remember (take heed).