மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰٓ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَـٰتٍ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ وَلَـٰكِن كَذَّبُوا۟ فَأَخَذْنَـٰهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
மேலும், அவ்வூர்களை உடையவர்கள் விசுவாசங்கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் நடந்திருந்தால், அவர்களுக்கு வானத்திலும், பூமியிலும் உள்ள பாக்கியங்(களின் வாசல்)களை நாம் திறந்து விட்டிருப்போம், எனினும், அவர்கள் (நபிமார்களை விசுவாசிக்காது) பொய்யாக்கினார்கள், ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட (பாவத்)தின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
And if the people of the towns had believed and had the Taqwâ (piety), certainly, We should have opened for them blessings from the heaven and the earth, but they belied (the Messengers). So We took them (with punishment) for what they used to earn (polytheism and crimes).
أَفَأَمِنَ أَهْلُ ٱلْقُرَىٰٓ أَن يَأْتِيَهُم بَأْسُنَا بَيَـٰتًا وَهُمْ نَآئِمُونَ
(நபியே! நிராகரித்த) அவ்வூர்களை உடையவர்கள் (தங்கள் வீடுகளில்) இரவில் அவர்கள் நித்திரை செய்து கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றி அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
Did the people of the towns then feel secure against the coming of Our punishment by night while they were asleep?
أَوَأَمِنَ أَهْلُ ٱلْقُرَىٰٓ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ
அல்லது (நிராகரித்த) அவ்வூர்களை உடையவர்கள் (கவலையற்று) முற்பகலில் விளையாடிக் கொண்டு பாராமுகமாக அவர்கள் காரியங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நம்முடைய வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றி அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
Or, did the people of the towns then feel secure against the coming of Our punishment in the forenoon while they were playing?
أَفَأَمِنُوا۟ مَكْرَ ٱللَّهِ ۚ فَلَا يَأْمَنُ مَكْرَ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْخَـٰسِرُونَ
அல்லாஹ்வின் சூழ்ச்சியை அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? முற்றிலும் நஷ்டமடையக் கூடிய சமூகத்தாரைத் தவிர (எவரும்) அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்றிருக்க மாட்டார்கள்.
Did they then feel secure against the Plan of Allâh? None feels secure from the Plan of Allâh except the people who are the losers.
أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِ أَهْلِهَآ أَن لَّوْ نَشَآءُ أَصَبْنَـٰهُم بِذُنُوبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ
பூமியை – அதை உடையவர்களுக்குப் பின்னர்-வாரிசாக அடைந்தோருக்கு-நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணமாக இவர்களையும், (அவ்வாறே) பிடித்திருப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு விளங்கவில்லையா? மேலும் நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விடுகிறோம், ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியேற்க மாட்டார்கள்.
Is it not clear to those who inherit the earth in succession from its (previous) possessors, that had We willed, We would have punished them for their sins. And We seal up their hearts so that they hear not?
تِلْكَ ٱلْقُرَىٰ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآئِهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ مِن قَبْلُ ۚ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلْكَـٰفِرِينَ
(நபியே!) அந்த ஊர்கள் - அவற்றின் (வரலாற்றுச்) செய்திகளை நாம் உமக்கு (விவரித்துக்) கூறுகின்றோம், (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு (அல்லாஹ்வினால்) அனுப்பப்பட்ட தூதர்கள், அவர்களிடம் திட்டமாகத் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்தனர், (ஆயினும்,) அவர்களோ முன்னர் பொய்யாக்கிய காரணத்தினால் விசுவாசங் கொள்பவர்களாக இருக்கவில்லை, இவ்வாறே நிராகரிப்போரின் இதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.
Those were the towns whose story We relate unto you (O Muhammad صلى الله عليه وسلم). And there came indeed to them their Messengers with clear proofs, but they were not such as to believe in that which they had rejected before. Thus Allâh does seal up the hearts of the disbelievers (from every kind of religious guidance).
وَمَا وَجَدْنَا لِأَكْثَرِهِم مِّنْ عَهْدٍ ۖ وَإِن وَجَدْنَآ أَكْثَرَهُمْ لَفَـٰسِقِينَ
அவர்களில் பெரும்பாலோருக்கு எந்த வாக்குறுதியையும் (நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை, அன்றியும், நிச்சயமாக நாம் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
And most of them We found not true to their covenant, but most of them We found indeed Fâsiqûn (rebellious, disobedient to Allâh).
ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ بِـَٔايَـٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَظَلَمُوا۟ بِهَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ
(நபிமார்களாகிய நூஹ், ஹூத், ஸாலீஹ், ஷுஜப்) அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர் அவ்னிடமும், அவனுடைய பிராதானிகளிடமும் நாம் அனுப்பி வைத்தோம், (ஆயினும்,) அவர்கள் அவற்றை நிராகரித்து அநியாயம் செய்து) விட்டனர், ஆகவே, (இத்தகைய) குழப்பக்காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக!
Then after them We sent Mûsâ (Moses) with Our Signs to Fir‘aun (Pharaoh) and his chiefs, but they wrongfully rejected them. So see how was the end of the Mufsidûn (mischief-makers, corrupters).
وَقَالَ مُوسَىٰ يَـٰفِرْعَوْنُ إِنِّى رَسُولٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ
மேலும், மூஸா (ஃபிர் அவ்னிடம்) “ஃபிர் அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதன்” என்று கூறினார்.
And Mûsâ (Moses) said: "O Fir‘aun (Pharaoh)! Verily, I am a Messenger from the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists).