8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 162

/ 604
Page 162

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

7. Al-A'rafسورة الأعراف

7:88

۞ قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لَنُخْرِجَنَّكَ يَـٰشُعَيْبُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَكَ مِن قَرْيَتِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۚ قَالَ أَوَلَوْ كُنَّا كَـٰرِهِينَ

அவருடைய சமூகத்தினரில் கர்வங் கொண்டிருந்தார்களே அந்தப்பிரதானிகள், “ஷுஐபே! நிச்சயமாக நாம் உம்மையும் உம்முடன் விசுவாசித்தோரையும் நம்முடைய ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம், அல்லது நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அ(தற்க)வர் (அவர்களிடம்) உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுப்பவர்களாக இருந்தபோதிலுமா? என்று கேட்டார்.

The chiefs of those who were arrogant among his people said: "We shall certainly drive you out, O Shu‘aib, and those who have believed with you from our town, or else you (all) shall return to our religion." He said: "Even though we hate it!?"

7:89

قَدِ ٱفْتَرَيْنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنْ عُدْنَا فِى مِلَّتِكُم بَعْدَ إِذْ نَجَّىٰنَا ٱللَّهُ مِنْهَا ۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَا ۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَىْءٍ عِلْمًا ۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا ٱفْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِٱلْحَقِّ وَأَنتَ خَيْرُ ٱلْفَـٰتِحِينَ

(அன்றி) “உங்கள் மார்க்கத்திற்கு – அதிலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்டதன் பின்னர்-நாங்கள் திரும்பினால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நாங்கள் பொய்யைப் புனைந்து கூறியவர்களாகி விடுவோம், எங்கள் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதன்பால் மீளுவதற்கு எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை, எங்கள் இரட்சகன் தன் அறிவால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான், அல்லாஹ்வின் மீதே நாங்கள் (எங்களுடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துள்ளோம்” (என்று கூறி) “எங்கள் இரட்சகனே! எங்களுக்கும் எங்கள் சமூகத்தாருக்குமிடையில் நீ நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே தீர்ப்பளிப்போரில் மிக்க மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்.)

"We should have invented a lie against Allâh if we returned to your religion, after Allâh has rescued us from it. And it is not for us to return to it unless Allâh, our Lord, should will. Our Lord comprehends all things in His Knowledge. In Allâh (Alone) we put our trust. Our Lord! Judge between us and our people in truth, for You are the Best of those who give judgment."

7:90

وَقَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ لَئِنِ ٱتَّبَعْتُمْ شُعَيْبًا إِنَّكُمْ إِذًا لَّخَـٰسِرُونَ

அவருடைய சமூகத்தாரில் நிராகரித்து விட்டார்களே! அத்தகைய பிரதானிகள் (மற்றவர்களிடம்) “நீங்கள் ஷுஜபைப் பின்பற்றினால், அப்போது நிச்சயமாக நீங்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள்” என்று கூறினார்கள்.

The chiefs of those who disbelieved among his people said (to their people): "If you follow Shu‘aib, be sure then you will be the losers!"

7:91

فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَـٰثِمِينَ

ஆகவே, அவர்களை (மிக்க கொடூரமான பூகம்பம் பிடித்துக் கொண்டது, அவர்கள் தஙகள் வீடுகளில் குப்புற வீழ்ந்து (இறந்து) கிடந்தவர்களாக காலைப்பொழுதை அடைந்தனர்.

So the earthquake seized them and they lay (dead), prostrate in their homes.

7:92

ٱلَّذِينَ كَذَّبُوا۟ شُعَيْبًا كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَا ۚ ٱلَّذِينَ كَذَّبُوا۟ شُعَيْبًا كَانُوا۟ هُمُ ٱلْخَـٰسِرِينَ

ஷுஜபைப் பொய்யாக்கினார்களே அத்தகையவர்கள் அவற்றில் (தங்கள் வீடுகளில்) ஒருகாலத்திலுமே வசித்திராதவர்களைப் போலாகி (யாதோர் அடையாளமுமின்றி அழிந்து) விட்டனர், ஷுஜபைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர் - அவர்களே (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

Those who belied Shu‘aib, became as if they had never dwelt there (in their homes). Those who belied Shu‘aib, they were the losers.

7:93

فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَـٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَـٰلَـٰتِ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ ۖ فَكَيْفَ ءَاسَىٰ عَلَىٰ قَوْمٍ كَـٰفِرِينَ

(அது சமயம் ஷுஐபாகிய (அவர் அவர்களைவிட்டும் திரும்பி, “என்னுடைய சமூகத்தாரே! “நிச்சயமாக நான் என் இரட்சகனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து) எத்தி வைத்து விட்டேன், இன்னும் உங்களுக்கு நல்லுபதேசமும் செய்துவிட்டேன், ஆகவே, (அதனை) நிராகரித்துவிட்ட சமூகத்தாரின்மீது நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று கூறினார்.

Then he (Shu‘aib) turned from them and said: "O my people! I have indeed conveyed my Lord’s Messages unto you and I have given you good advice. Then how can I sorrow for the disbelieving people’s (destruction)."

7:94

وَمَآ أَرْسَلْنَا فِى قَرْيَةٍ مِّن نَّبِىٍّ إِلَّآ أَخَذْنَآ أَهْلَهَا بِٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ

மேலும், எந்த ஊரிலும் அவ்வூர்வாசிகளை அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையாலும், பிணியாலும் நாம் அவர்களை பிடித்தே தவிர எந்த நபியையம் நாம் அனுப்பவில்லை.

And We sent no Prophet unto any town (and they denied him), but We seized its people with suffering from extreme poverty (or loss in wealth) and loss of health (and calamities), so that they might humiliate themselves (and repent to Allâh).

7:95

ثُمَّ بَدَّلْنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلْحَسَنَةَ حَتَّىٰ عَفَوا۟ وَّقَالُوا۟ قَدْ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذْنَـٰهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ

பின்னர் நாம் (வறுமை பிணி போன்ற) தீயதின் இடத்தில் நல்லதை மாற்றிக்கொடுத்தோம், முடிவாக (பல்கிப்பெருகி) அதிகமானவர்களாகிவிட்ட அவர்கள், நம்முடைய மூதாதையர்களுக்குமே இத்தகைய சுக துக்கம் ஏற்பட்டிருக்கின்றது” என்று (தாங்கள் அனுபவித்து வரும்) இவை யாவும் காலத்தின் ஏற்றத்தாழ்வினால் ஏற்பட்டதே என அலட்சியமாகக் கூறினார்கள், ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில் (வேதனையைக் கொண்டு) திடீரென அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.

Then We changed the evil for the good, until they increased in number and in wealth, and said: "Our fathers were touched with evil (loss of health and calamities) and with good (prosperity)." So We seized them all of a sudden while they were unaware.