إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
நிகழக்கூடிய (இறுதிநாளான)து நிகழ்ந்து விடுமானால்-
When the Event (i.e. the Day of Resurrection) befalls.
8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026
The Event · அல்-வாகிஆ
Makki96 versesJuz 27
الواقعة
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
நிகழக்கூடிய (இறுதிநாளான)து நிகழ்ந்து விடுமானால்-
When the Event (i.e. the Day of Resurrection) befalls.
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
அது நிகழ்வதைப் பொய்யாக்கக்கூடியது (எதுவும்) இல்லை.
And there can be no denial of its befalling.
خَافِضَةٌ رَّافِعَةٌ
அது (தீயோரைத்) தாழ்த்தி, (நல்லோரை) உயர்த்திவிடக் கூடியது.
Bringing low (some - those who will enter Hell) Exalting (others - those who will enter Paradise). [Tafsir Ibn Kathir]
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا
பூமி, மிக பலமான அசைவாக அசைக்கப்பட்டால்,
When the earth will be shaken with a terrible shake.
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا
இன்னும், மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டுவிட்டால்,
And the mountains will be powdered to dust,
فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا
அப்போது அவைகள் பரத்தப்பட்ட புழுதிகளாக ஆகிவிடும் (அந்நாளில்),
So that they will become floating dust particles.
وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَـٰثَةً
நீங்களும் மூன்று வகையினர்களாக ஆகி விடுவீர்கள்.
And you (all) will be in three groups.
فَأَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ
(முதலாம் வகையினர்) வலப்பக்கத்தார்-வலப்பக்கத்தாரின் தன்மை என்ன?
So those on the Right Hand (i.e. those who will be given their Records in their right hands) - how (fortunate) will be those on the Right Hand! (As a respect for them, because they will enter Paradise).
وَأَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ
(இரண்டாம் வகையினர்) இடப்பக்கத்தார்-இடப்பக்கத்தாரின் தன்மை என்ன?
And those on the Left Hand (i.e. those who will be given their Record in their left hands) - how (unfortunate) will be those on the Left Hand! (As a disgrace for them, because they will enter Hell).
وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ
(மூன்றாம் வகையினர் நம்பிக்கைக் கொள்வதில்) முந்திக் கொண்டவர்கள், (இவர்கள் சுவனத்தின்பால்) முந்திக் கொண்டவர்களாவர்.
And those foremost [(in Islâmic Faith of Monotheism and in performing righteous deeds) in the life of this world on the very first call for to embrace Islâm] will be foremost (in Paradise).
أُو۟لَـٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ
இவர்கள் தாம் (தங்கள் இரட்சகன் பக்கம் மிக்க) நெருக்கமாக்கப்பட்டவர்கள்.
These will be the nearest (to Allâh).
فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ
அருட்கொடைகளுள்ள சுவனபதிகளில் (இக்கூட்டத்தினர் இருப்பர்.)
In the Gardens of Delight (Paradise).
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ
(இவற்றில்) முன்னவர்களில் ஒரு பெருங்கூட்டத்தினரும்,
A multitude of those (foremost) will be from the first generations (who embraced Islâm).
وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ
பின்னுள்ளோரில் ஒரு சொற்பத் தொகையினரும்-
And a few of those (foremost) will be from the later generations.
عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
பொன்னிழைகளால் ஆக்கப்பட்ட உன்னதக் கட்டில்கள் மீது இருப்பார்கள்.
(They will be) on thrones woven with gold and precious stones.
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَـٰبِلِينَ
ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
Reclining thereon, face to face.
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ
என்றும் நிலையான (இளமையுடையோராக இருக்கும்) சிறுவர்கள், (பணிபுரிய) இவர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
Immortal boys will go around them (serving),
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
தெளிவான (உயர்மது) பானத்திலிருந்து (நிரப்பப்பட்டு)ள்ள கிண்ணங்களையும் கெண்டிகளையும், குவளைகளையும் (தூக்கிக்) கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்).
With cups, and jugs, and a glass of flowing wine,
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
அ(ம் மதுவை அருந்துவ)தனால் தலைவலிக்குள்ளாகமாட்டார்கள், மதி மயக்கத்திற்கும் உள்ளாக மாட்டார்கள்,
Wherefrom they will get neither any aching of the head, nor any intoxication.
وَفَـٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
இவர்கள் (பிரியப்பட்டு) தேர்ந்தெடுக்கின்றவற்றிலிருந்து கனி(வர்க்கங்)களோடும்.
And with fruit that they may choose.
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
அவர்கள் விரும்பக்கூடியவற்றிலிருந்து பட்சிகளின் மாமிசத்தோடும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவர்).
And with the flesh of fowls that they desire.
وَحُورٌ عِينٌ
(அங்கு இவர்களுக்கு) ‘ஹூருல்ஈன்’ (என்னும் கண்ணழகிகளான மனைவிகளும் இருப்பார்கள்.
And (there will be) Hûr (fair females) with wide, lovely eyes (as wives for "Al-Muttaqûn" - the pious - See V. 2:2),
كَأَمْثَـٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ
(வெண்மையில் சிப்பிக்குள்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் (அவர்கள்) இருப்பார்கள்.
Like unto preserved pearls.
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
(இவைகள் யாவும்) இவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) செயல்களுக்குக் கூலியாக(க் கிடைக்கும்.)
A reward for what they used to do.
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
அதில் அவர்கள் வீணானதையும், அவர்களைப் பாவத்தில் ஆக்கக்கூடியதையும் செவியுற மாட்டார்கள்.
No Laghw (dirty, false, evil vain talk) will they hear therein, nor any sinful speech (like backbiting).
إِلَّا قِيلًا سَلَـٰمًا سَلَـٰمًا
ஆயினும், “ஸலாமன், ஸலாமன்” (சாந்தி, சாந்தி) என்ற சொல்லையன்றி (மற்றெதையும் செவியுறமாட்டார்கள்).
But only the saying of: Salâm! Salâm! (greetings with peace)!1
See the footnote (A) of (V.29:64).
وَأَصْحَـٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَـٰبُ ٱلْيَمِينِ
மேலும், வலப்பக்கத்தார்-வலப் பக்கத்தாரின் நிலை என்ன? (அல்லாஹ் எதை அவர்களுக்குத் தயாராக்கி வைத்திருக்கிறான்?)
And those on the Right Hand - how (fortunate) will be those on the Right Hand?
فِى سِدْرٍ مَّخْضُودٍ
அவர்கள் முள்ளற்ற இலந்தை மரத்தி(ன் அடியி)லும்,
(They will be) among thornless lote-trees,
وَطَلْحٍ مَّنضُودٍ
(மேலிருந்து கீழ்வரையில்) குலைகள் தொங்கும் வாழை மரத்தி(ன் அடியி)லும்,
And among Talh (banana-trees) with fruits piled one above another,
وَظِلٍّ مَّمْدُودٍ
நீண்ட நிழலிலும் இருப்பார்கள்.
And in shade long-extended,
وَمَآءٍ مَّسْكُوبٍ
(அல்லாஹ்வினால்) ஓடவிடப்பட்ட நீரி(ன் அருகாமையி)லும் (இருப்பர்).
And by water flowing constantly,
وَفَـٰكِهَةٍ كَثِيرَةٍ
ஏராளமான கனிவர்க்கங்களுக்கு மத்தியிலும்-
And fruit in plenty,
لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
(அதன், கனிகள் கால வித்தியாசமின்றி எச்சமயத்திலும் கிடைத்துக் கொண்டிருக்குமே தவிர, அவை) அற்றுப்போகாதவை, அன்றியும், (புசிப்பதற்குத்) தடுக்கப்படாதவை.
Whose supply is not cut off (by change of season), nor are they out of reach,
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
(ஒன்றின் மேல் ஒன்றாக) உயரமாக்கப்பட்ட விரிப்புகளிலும் (அமர்ந்திருப்பார்கள்).
And on couches or thrones, raised high.
إِنَّآ أَنشَأْنَـٰهُنَّ إِنشَآءً
நிச்சயமாக நாம் (ஹூருல் ஈன்களான) அவர்களைப் பிரத்தியேகமாக (இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கின்றோம்.
Verily, We have created them (maidens) of special creation.
فَجَعَلْنَـٰهُنَّ أَبْكَارًا
அப்பால் கன்னியர்களாக அவர்களை ஆக்கியிருக்கிறோம்.
And made them virgins.
عُرُبًا أَتْرَابًا
(தம் கணவர்களையே) நேசிக்கக் கூடியவர்களாக, சமவயதுடைவர்களாக (அவர்களை ஆக்கியுள்ளோம்).
Loving (their husbands only), (and) of equal age.
لِّأَصْحَـٰبِ ٱلْيَمِينِ
(முன்னர் கூறப்பட்டது) வலப்பக்கத்தார்க்குரியதாகும்.
For those on the Right Hand.
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ
(இவர்களுடன்) முன்னோர்களில் ஒரு கூட்டத்தினரும்,
A multitude of those (on the Right Hand) will be from the first generation (who embraced Islâm).
وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ
பின்னோர்களில் ஒரு கூட்டத்தினரும் (வலப்பக்கத்தைச் சார்ந்தோரில்) இருப்பார்கள்.
And a multitude of those (on the Right Hand) will be from the later generations.