8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

2. Al-Baqarah

The Cow · அல்-பகரா

Madani286 versesJuz 3

البقرة

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

2:281

وَٱتَّقُوا۟ يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِ ۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

இன்னும் ஒரு நாளைப்பயந்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் மீட்டப்படுவீர்கள். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்ததற்குரிய கூலியானதை பூரணமாகக் கொடுக்கப்படும். (அதில்) அவர்களோ அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

And be afraid of the Day when you shall be brought back to Allâh. Then every person shall be paid what he earned, and they shall not be dealt with unjustly.

2:282

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى فَٱكْتُبُوهُ ۚ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِٱلْعَدْلِ ۚ وَلَا يَأْبَ كَاتِبٌ أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُ ۚ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ وَلْيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْـًٔا ۚ فَإِن كَانَ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُۥ بِٱلْعَدْلِ ۚ وَٱسْتَشْهِدُوا۟ شَهِيدَيْنِ مِن رِّجَالِكُمْ ۖ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَٱمْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحْدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحْدَىٰهُمَا ٱلْأُخْرَىٰ ۚ وَلَا يَأْبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُوا۟ ۚ وَلَا تَسْـَٔمُوٓا۟ أَن تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦ ۚ ذَٰلِكُمْ أَقْسَطُ عِندَ ٱللَّهِ وَأَقْوَمُ لِلشَّهَـٰدَةِ وَأَدْنَىٰٓ أَلَّا تَرْتَابُوٓا۟ ۖ إِلَّآ أَن تَكُونَ تِجَـٰرَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا ۗ وَأَشْهِدُوٓا۟ إِذَا تَبَايَعْتُمْ ۚ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ ۚ وَإِن تَفْعَلُوا۟ فَإِنَّهُۥ فُسُوقٌۢ بِكُمْ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் ஒரு குறிப்பிடப்பட்ட தவணை வரை நீங்கள் ஒருவருக்கொருவர் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். மேலும், உங்களிடையே (அதை) எழுதுபவர் நீதத்தைக் கொண்டு எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் எழுதக் கோரினால்) எழுத்தாளர் அல்லாஹ் அவருக்குக் கற்றுக்கொடுத்தது போன்று (நீதமாக) அவர் எழுதுவதற்கு மறுக்கவேண்டாம். ஆகவே, அவர் எழுதிக் கொடுக்கவும் இன்னும், எவர்மீது ‘கடன்’ இருக்கிறதோ அவரே வாசகத்தைக் கூறவும் (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இரட்சகனாகிய அவ்லாஹ்வுக்கு அவர் பயந்து கொள்ளவும். மேலும், அதில் யாதொன்றையும் அவர் குறைத்து விட வேண்டாம். எனவே, எவர்மீது (கடன்) இருக்கின்றதோ அவர் அறிவற்றவராகவோ, அல்லது (நோய், முதுமை, சிறு பிராயம் போன்றதால்) பலவீனமானவராகவோ அல்லது தானே வாசகஞ் சொல்லச் சக்தியற்றவராகவோ இருந்தால், அவருடைய பாதுகாவலன் நீதமாக வாசகங்கூறவும். மேலும், நீங்கள் உங்களுடைய ஆண்களிலிருந்து (நீதிவான்களான) இரு சாட்சிகளை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். அவ்வாறு இருவரும் ஆண்களாகயில்லாதிருந்தால், சாட்சியாளர்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் சாட்சியாக்கப் படவேண்டும். இருபெண்கள் ஏனெனில், அவ்விருவரில் ஒருவர் மறந்து விடலாம், அப்போது அவ்விருவரில் ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவுபடுத்துவாள். மேலும், சாட்சிகள் (தாம் அறிந்ததைப் பற்றிக் கூற அழைக்கப்படும்போது) அறிந்ததைக் கூற மறுக்க வேண்டாம். இன்னும் (கடன்) சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அதன் தவணைவரையில் அதனை எழுதிக்கொள்வதில் சடைந்து விடாதீர்கள். இது அல்லாஹ்வினிடத்தில் மிக்க நீதியானதும் சாட்சியத்தை மிக்க உறுதிப்படுத்தக்கூடியதும் நீங்கள் சந்தேகிக்காமலிருப்பதற்கு மிக்க நெருக்கமானதுமாகும். நீங்கள் உங்களுக்கிடையில் உடனுக்குடன் செய்யும் ரொக்கமான வியாபாரமாக இருந்தாலே தவிர, அப்போது அதனை நீங்கள் எழுதிக்கொள்ளாமலிருப்பது உங்கள் மீது குற்றமல்ல. மேலும், ஒருவருக்கொருவர் (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்துகொண்டால் சாட்சி வைத்துக் கொள்ளுங்கள். மேலும், எழுதுகிறவனோ, சாட்சியோ (தமக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென) துன்புறுத்தப்படக்கூடாது. இன்னும், நீங்கள் அவ்வாறு செய்தால், நிச்சயமாக அது உங்களுக்குப் பாவமாகும். இன்னும், அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். மேலும், அல்லாஹ் (இதுபற்றியவற்றை) உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றான். இன்னும் அல்லாஹ்வோ ஒவ்வொரு பொருளைப்பற்றியும் நன்கறிகிறவன்.

O you who believe! When you contract a debt for a fixed period, write it down. Let a scribe write it down in justice between you. Let not the scribe refuse to write as Allâh has taught him, so let him write. Let him (the debtor) who incurs the liability dictate, and he must fear Allâh, his Lord, and diminish not anything of what he owes. But if the debtor is of poor understanding, or weak, or is unable to dictate for himself, then let his guardian dictate in justice. And get two witnesses out of your own men. And if there are not two men (available), then a man and two women, such as you agree for witnesses, so that if one of them (two women) errs, the other can remind her. And the witnesses should not refuse when they are called (for evidence). You should not become weary to write it (your contract), whether it be small or big, for its fixed term, that is more just with Allâh; more solid as evidence, and more convenient to prevent doubts among yourselves, save when it is a present trade which you carry out on the spot among yourselves, then there is no sin on you if you do not write it down. But take witnesses whenever you make a commercial contract. Let neither scribe nor witness suffer any harm, but if you do (such harm), it would be wickedness in you. So be afraid of Allâh; and Allâh teaches you. And Allâh is the All-Knower of each and everything.

2:283

۞ وَإِن كُنتُمْ عَلَىٰ سَفَرٍ وَلَمْ تَجِدُوا۟ كَاتِبًا فَرِهَـٰنٌ مَّقْبُوضَةٌ ۖ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ ٱلَّذِى ٱؤْتُمِنَ أَمَـٰنَتَهُۥ وَلْيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ ۗ وَلَا تَكْتُمُوا۟ ٱلشَّهَـٰدَةَ ۚ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٌ قَلْبُهُۥ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து (கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டிய நிலையேற்பட்டு அதனை எழுத) எழுத்தாளரையும் நீங்கள் பெறவில்லையென்றால், (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) கைப்பற்றப்படும் அடமானமாகும். உங்களில் சிலரைச் சிலர் நம்பி (அடமானம் வைப்பாரா)னாரானால், நம்பப்பட்டாரே அத்தகையவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக) நிறைவேற்றி விடவும். மேலும், தன்னுடைய இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். சாட்சியத்தை நீங்கள் மறைக்கவும்வேண்டாம் எவரேனும் அதனை மறைத்தால் நிச்சயமாக அவருடைய இதயம் பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. மேலும், (மனிதர்களே!) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிகிறவன்.

And if you are on a journey and cannot find a scribe, then let there be a pledge taken (mortgaging)1; then if one of you entrust the other, let the one who is entrusted discharge his trust (faithfully), and let him be afraid of Allâh, his Lord. And conceal not the evidence for he, who hides it, surely his heart is sinful. And Allâh is All-Knower of what you do.

  1. Narrated ‘Âishah رضي الله عنها: The Prophet صلى الله عليه وسلم bought some foodstuff on credit for a limited period and mortgaged his armour for it. (Sahih Al-Bukhâri, Vol. 3, Hadîth No.686)

2:284

لِّلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا۟ مَا فِىٓ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ ٱللَّهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

வானங்களிலுள்ளவையும், இன்னும், பூமியில் உள்ளவவையும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். இன்னும், உங்களுடைய மனங்களிலுள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அவற்றை நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அதைப் பற்றி அல்லாஹ் உங்களை (விசாரணை செய்து) கணக்குக் கேட்பான், ஆகவே, அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பளிப்பான். அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

To Allâh belongs all that is in the heavens and all that is on the earth, and whether you disclose what is in your ownselves or conceal it, Allâh will call you to account for it. Then He forgives whom He wills and punishes whom He wills. And Allâh is Able to do all things.

2:285

ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِۦ وَٱلْمُؤْمِنُونَ ۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَـٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِۦ ۚ وَقَالُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ

(நம்முடைய) தூதர், தம் இரட்சகனிடமிருந்து தமக்கு இறக்கிவைக்கப்பட்ட (வேதத்)தை விசுவாசிக்கின்றார். (அவ்வாறே மற்ற) விசுவாசிகளும் (விசுவாசிக்கின்றனர். இவர்கள்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசிக்கின்றனர். அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமைப்படுத்திவிட மாட்டோம் (என்றும்) மேலும், (இரட்சகனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம், இன்னும் (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்ப்படிந்தோம், எங்கள் இரட்சகனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம், உன்பக்கமே (எங்களுடைய) மீட்சி உள்ளது” என்றும் கூறுகின்றார்கள்.

The Messenger (Muhammad صلى الله عليه وسلم) believes in what has been sent down to him from his Lord, and (so do) the believers. Each one believes in Allâh, His Angels, His Books, and His Messengers. (They say), "We make no distinction between one another of His Messengers" - and they say, "We hear, and we obey. (We seek) Your Forgiveness, our Lord, and to You is the return (of all)."

2:286

لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ ۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ ۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் சிரமம்கொடுப்பதில்லை; அது சம்பாதித்துக் கொண்ட நன்மை அதற்கே (பயனளிக்கும், அவ்வாறே,) அது சம்பாதித்துக் கொண்ட தீமை அதற்கே கேடாக அமையும், எங்கள் இரட்சகனே (உன் கடமைகளில் எதையும்) நாங்கள் மறந்து விட்டாலும், அல்லது (அதை நிறைவேற்றுவதில்) நாங்கள் தவறிழைத்து விட்டாலும் நீ எங்களை(க்குற்றம்) பிடிக்காதிருப்பாயாக) எங்கள் இரட்சகனே! இன்னும் நீ எங்கள் மீது பளுவான சுமையை – அதை எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ சுமத்தியவாறு – சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! இன்னும் எதை(ச்சுமக்க) எங்களுக்கு சக்தி இல்லையோ அதை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்களை விட்டும் (எங்கள் பாவங்களை) அழித்தும் விடுவாயாக! எங்களை மன்னித்தும் விடுவாயாக! எங்களுக்கு அருளும் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், ஆகவே (உன்னை) நிராகரிக்கும் கூட்டத்தார் மீது (வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!

Allâh burdens not a person beyond his scope. He gets reward for that (good) which he has earned, and he is punished for that (evil) which he has earned. "Our Lord! Punish us not if we forget or fall into error, our Lord! Lay not on us a burden like that which You did lay on those before us (Jews and Christians); our Lord! Put not on us a burden greater than we have strength to bear. Pardon us and grant us Forgiveness. Have mercy on us. You are our Maulâ (Patron, Supporter and Protector, etc.) and give us victory over the disbelieving people.1"

  1. Narrated Abu Mas‘ûd Al-Badri رضي الله عنه Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "Whosoever recited the last two Verses of Sûrat Al-Baqarah at night, that will be sufficient for him." (Sahih Al-Bukhâri, Vol. 5, Hadîth No.345).

The Noble Qur'an — Al-Baqarah