لِيَوْمٍ عَظِيمٍ
மகத்தான ஒரு நாளைக்காக-
On a Great Day?
9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
لِيَوْمٍ عَظِيمٍ
மகத்தான ஒரு நாளைக்காக-
On a Great Day?
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
(அந்நாளோ) அகிலத்தாரின் இரட்சகன் முன்னிலையில் மனிதர்கள் நிற்கும் நாள்.
The Day when (all) mankind will stand before the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists)?
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ
(தீயோர்கள் எண்ணுவது போல்) அல்ல! நிச்சயமாக (தீயோர்களான) பாவிகளின் (பதிவுப்) புத்தகம் ஸிஜ்ஜீனில் இருக்கிறது.
Nay! Truly, the Record (writing of the deeds) of the Fujjâr (disbelievers, polytheists, sinners, evil-doers and the wicked) is (preserved) in Sijjîn.
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ
(நபியே!) ஸிஜ்ஜீன் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
And what will make you know what Sijjîn is?
كِتَـٰبٌ مَّرْقُومٌ
(பாவிகளின் செயல்கள்) எழுதப்பட்ட புத்தகமாகும்.
A Register inscribed.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்யாக்குபவருக்கு அந்நாளில் கேடுதான்!
Woe, that Day, to those who deny.
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
அவர்கள் எத்தகையோரென்றால், கூலி கொடுக்கப்படும் நாளைப் பொய்யாக்குகின்றனர்.
Those who deny the Day of Recompense.
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
வரம்பு மீறிய பாவியான ஒவ்வொருவனையும் தவிர (மற்றெவனும்) அதனைப் பொய்யாக்கமாட்டான்.
And none can deny it except every transgressor beyond bounds, (in disbelief, oppression and disobedience to Allâh) the sinner!
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
அவனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், (இது) முன்னோர்களின் கட்டுக்கதைகள் என அவன் கூறுகின்றான்.
When Our Verses (of the Qur’ân) are recited to him he says: "Tales of the ancients!"
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
அவ்வாறன்று! பின்னர் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களின் இதயங்களின் மீது துருவாகப்படிந்து விட்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்).
Nay! But on their hearts is the Rân (covering of sins and evil deeds) which they used to earn.1
Narrated Abu Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "When a slave (a person) commits a sin (an evil deed) a black dot is dotted on his heart. Then if that person gives up that evil deed (sin), begs Allâh to forgive him, and repents, then his heart is cleared (from that heart covering dot); but if he repeats the evil deed (sin), then that covering is increased till his heart is completely covered with it. And that is Ar-Rân which Allâh mentioned (in the Qur’ân), "Nay! but on their hearts is the Rân (covering of sins and evil deeds) which they used to earn." (At-Tirmidhi, Vol.5, Hadith No.3334).
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
(காஃபிர்கள் தங்களுக்கு இரட்சகனிடம் நெருக்கமிருப்பதாகக் கூறிக் கொண்டிருந்தார்களே அது) அவ்வாறல்ல! (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய இரட்சகனை (ப் பார்ப்பதை) விட்டும் மறைக்கப்பட்டவர்களாவர்.
Nay! Surely they (evil-doers) will be veiled from seeing their Lord that Day.
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
பின்னர், நிச்சயமாக அவர்கள் நரகத்தில் நுழையக்கூடியவர்கள் (ஆவர்.)
Then, verily, they will indeed enter (and taste) the burning flame of Hell.
ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
பின்னர், (அவர்களிடம்)” எதை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அது இதுதான்” என்று கூறப்படும்.
Then, it will be said to them: "This is what you used to deny!"
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ
(நல்லோர், தீயோர் ஆகியோரின் முடிவு ஒன்றுபோல்) அல்ல! நிச்சயமாக நன்மை செய்தோரின் பதிவேடு ‘இல்லிய்யூன்’ என்ற இடத்தில் இருக்கும்.
Nay! Verily, the Record (writing of the deeds) of Al-Abrâr (the pious believers of Islamic Monotheism) is (preserved) in ‘Illiyyûn
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ
(நபியே!) ‘இல்லிய்யூன்’ என்றால் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
And what will make you know what ‘Illiyyûn is?
كِتَـٰبٌ مَّرْقُومٌ
(அது நல்லோர்களின் செயல்கள்) பதியப்பட்ட புத்தகம்.
A Register inscribed,
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ
(அல்லாஹ்விடம்) நெருக்கமான(வான)வர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
To which bear witness those nearest (to Allâh, i.e. the angels).
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
நிச்சயமாக நல்லோர்கள் நயீமில் (சுவனபதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையில்) இருப்பா்.
Verily, Al-Abrâr (the pious believers of Islamic Monotheism) will be in Delight (Paradise).
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
(உயர்ந்த) சாய்வு இருக்கைகளின் மீது (இருந்தவாறு சுவனத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
On thrones, looking (at all things).
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ
அவர்கள் முகங்களில் சுகபோகத்தின் செழிப்பை (நபியே) நீர் அறிந்து கொள்வீர்.
You will recognise in their faces the brightness of delight.
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
முத்திரையிடப்பட்ட கலப்பற்ற மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
They will be given to drink of pure sealed wine.
خِتَـٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَـٰفِسُونَ
அதன் முத்திரை கஸ்தூரியினால் ஆனதாகும், (ஆகவே) இன்னும் (நல்லறங்கள் செய்து) அதற்கு முந்திக் கொள்பவர்கள் முந்திக் கொள்ளட்டும்.
The last thereof (that wine) will be the smell of Musk, and for this let (all) those strive who want to strive (i.e. hasten earnestly to the obedience of Allah).
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ
இன்னும், அதன் கலவை (உயரத்திலிருந்து ஊற்றப்படும் சிறந்த நீரான) தஸ்னீம் (எனும் சுனை நீர்) ஆகும்.
It (that wine) will be mixed with Tasnîm:
عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ
(தஸ்னீம் எனும்) நீர் ஊற்றை (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்கள் அதனைப் பருகுவார்கள்.
A spring whereof drink those nearest to Allâh.
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ
நிச்சயமாக குற்றமிழைத்தவர்கள், (உலகில்) விசுவாசங்கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிப்பவர்களாக இருந்தனர்.
Verily, (during the worldly life) those who committed crimes used to laugh at those who believed.
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ
ஆவர்கள் பக்கமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண்சாடை காட்டிக் கொள்ளவும் செய்வார்கள்.
And, whenever they passed by them, used to wink one to another (in mockery).
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ
மேலும், தங்கள் குடும்பத்தார்பால் திரும்பிச் செல்வார்களாயின் (தாங்கள் செய்ததைப்பற்றி மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்புகின்றனர்.
And when they returned to their own people, they would return jesting;
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
(விசுவாசிகளாகிய) அவர்களை இவர்கள் பார்த்தால், “நிச்சயமாக இவர்கள் வழி தவறியவர்கள்” என்றும் கூறுகின்றனர்.
And when they saw them, they said: "Verily these have indeed gone astray!"
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ
மேலும், (விசுவாசிகளான) அவர்கள் மீது (காஃபிர்களான) இவர்கள் பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லை.
But they (disbelievers, sinners) had not been sent as watchers over them (the believers).