إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ
நிச்சயமாக இது மிக கண்ணியமிக்க குர் ஆனாகும்.
That (this) is indeed an honourable recitation (the Noble Qur’ân).
9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ
நிச்சயமாக இது மிக கண்ணியமிக்க குர் ஆனாகும்.
That (this) is indeed an honourable recitation (the Noble Qur’ân).
فِى كِتَـٰبٍ مَّكْنُونٍ
இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் (எழுதப்பட்டுள்ளது).
In a Book well-guarded (with Allâh in the heaven i.e. Al-Lauh Al-Mahfûz ).
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ
பரிசுத்தமானவர்களைத் தவிர, (மற்றெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்.
Which (that Book with Allâh) none can touch but the purified (i.e. the angels).
تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ
அகிலத்தாரின் இரட்சகனால் (இது) இறக்கப்பட்டது.
A Revelation (this Qur’ân) from the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists).
أَفَبِهَـٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
ஆகவே, இச்செய்தியை நீங்கள் அலட்சியம் செய்பவர்களாக இருக்கின்றீர்களா?
Is it such a talk (this Qur’ân) that you (disbelievers) deny?
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
(அல்லாஹ் அளித்துள்ளவற்றுக்கு) உங்கள் நன்றியை நிச்சயமாக நீங்கள் பொய்ப்படுத்துவதையே (பிரதியாக) ஆக்குகின்றீர்களா.
And instead (of thanking Allâh) for the provision He gives you, you deny (Him by disbelief)!
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
(உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்-) அது தொண்டைக் குழியை அடைந்து விடுமானால்-
Then why do you not (intervene) when (the soul of a dying person) reaches the throat?
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
அந்நேரத்தில் நீங்கள் (சகராத்- மரணவேதனையில் சிக்கித்தவிப்பதை) பார்க்கிறீர்கள்.
And you at the moment are looking on,
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَـٰكِن لَّا تُبْصِرُونَ
நாமோ உங்களைவிட அவருக்கு மிகச் சமீபாக இருக்கின்றோம், எனினும் நீங்கள் பார்ப்பதில்லை.
But We (i.e. Our angels who take the soul) are nearer to him than you, but you see not, (Tafsir At-Tabarî)
فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
ஆகவே நீங்கள் (யாருடைய) அதிகாரத்திற்கு(ம்) கட்டுப்படாதவர்களாக இருந்தால்-
Then why do you not - if you are exempt from the reckoning and recompense (punishment) -
تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், அ(வருடைய உயிரான)தை நீங்கள் அவரின் பால் மீளவைத்திருக்கலாமே?
Bring back the soul (to its body), if you are truthful?
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ
ஆகவே, (அல்லாஹ்வுக்கு) நெருக்கமாக்கப் பட்டவர்களில் உள்ளவராக அவர் இருந்தால்-
Then, if he (the dying person) be of the Muqarrabûn (those brought near to Allâh),
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
அப்போது அவருக்கு சுகமும், நல்லுணவும், அருட்கொடையுடைய சுவனமும் உண்டு.
(There is for him) rest and provision, and a Garden of Delights (Paradise).
وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ
அன்றியும், அவர் வலப்புறத்தாரில் உள்ளவராக இருந்தால்-
And if he (the dying person) be of those on the Right Hand,
فَسَلَـٰمٌ لَّكَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ
(அவரிடம்,) ”வலப்புறத்தாரிலிருந்து உமக்குச் சாந்தி உண்டாவதாக!” (என்று கூறப்படும்).
Then there is safety and peace (from the Punishment of Allâh) for those on the right Hand.
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
அன்றியும் அவர் வழி கெட்டோரான (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகின்றவர்களில் உள்ளவராக இருந்தால்-
But if he (the dying person) be of the denying (of the Resurrection), the erring (away from the Right Path of Islâmic Monotheism),
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
கொதித்து அதன் உச்சத்தை அடைந்துவிட்ட நீரிலிருந்தே (அவருக்கு) விருந்துண்டு-
Then for him is an entertainment with boiling water.
وَتَصْلِيَةُ جَحِيمٍ
இன்னும், நரகத்தில் நுழைவித்தலும் உண்டு.
And burning in Hell-fire.
إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ
நிச்சயமாக இது (மிக்க) உறுதியான உண்மையாகும்.
Verily, this! This is an absolute Truth with certainty.
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
ஆகவே (நபியே!) மகத்தான உமதிரட்சகனின் பெயரை(க்கூறி) துதி செய்வீராக.
So glorify with praises the Name of your Lord, the Most Great.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
سَبَّحَ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அல்லாஹ்வை(ப் புகழ்ந்து) துதி செய்கின்றன. அவனே (யாவற்றையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
Whatsoever is in the heavens and the earth glorifies Allâh - and He is the All-Mighty, All-Wise.
لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يُحْىِۦ وَيُمِيتُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, அவன் உயிர்ப்பிக்கின்றான், அவனே மரணிக்குமாறும் செய்கின்றான், மேலும், அவன், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
His is the kingdom of the heavens and the earth. It is He Who gives life and causes death: and He is Able to do all things.
هُوَ ٱلْأَوَّلُ وَٱلْـَٔاخِرُ وَٱلظَّـٰهِرُ وَٱلْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
அவனே முதலாமவனும், கடைசியானவனும், (அவனுக்கு முன்னும், பின்னும் ஒன்றுமில்லை!) அவனே (சகலவற்றிற்கும்) மேலானவனும், அந்தரங்கமானவனும் (ஆவான்), மேலும், அவன் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிகிறவன்.
He is the First (nothing is before Him) and the Last (nothing is after Him), the Most High (nothing is above Him) and the Most Near (nothing is nearer than Him). And He is the All-Knower of every thing.