மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
أَمْ تَأْمُرُهُمْ أَحْلَـٰمُهُم بِهَـٰذَآ ۚ أَمْ هُمْ قَوْمٌ طَاغُونَ
“அல்லது (நபியே! உம்மை பற்றி கவிஞர், பைத்தியக்காரர், குறிகாரர் என்றெல்லாம் கூறுமாறு) அவர்களுடைய அறிவுகள்தான் இவ்வாறு அவர்களை ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்புமீறிய கூட்டத்தினரா?”
Do their minds command them this [i.e. to tell a lie against you (Muhammad صلى الله عليه وسلم)] or are they people transgressing all bounds?
أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُۥ ۚ بَل لَّا يُؤْمِنُونَ
அல்லது, “அவர் அதனைக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றனரா? இல்லை! அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
Or do they say: "He (Muhammad صلى الله عليه وسلم) has forged it (this Qur’ân)?" Nay! They believe not!
فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍ مِّثْلِهِۦٓ إِن كَانُوا۟ صَـٰدِقِينَ
எனவே, (நபியே! இவ்வாறு கூறுவதில்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதைப்போன்ற செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
Let them then produce a recital like unto it (the Qur’ân) if they are truthful.
أَمْ خُلِقُوا۟ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ ٱلْخَـٰلِقُونَ
அல்லது, அவர்கள் எப்பொருளுமின்றி (தாமகாவே) படைக்கப்பட்டு விட்டனரா? அல்லது அவர்கள்தான் படைக்கின்றவர்களா?
Were they created by nothing? Or were they themselves the creators?
أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۚ بَل لَّا يُوقِنُونَ
அல்லது, வானங்களையும், பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல! (இவைகளையெல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான்! அவனை) இவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள்.
Or did they create the heavens and the earth? Nay, but they have no firm Belief.
أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَبِّكَ أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ
அல்லது, அவர்களிடம் உமதிரட்சகனின் களஞ்சியங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்களே (அவற்றை) ஆதிக்கம் செலுத்துபவர்களா?
Or are with them the treasures of your Lord? Or are they the tyrants with the authority to do as they like?
أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ ۖ فَلْيَأْتِ مُسْتَمِعُهُم بِسُلْطَـٰنٍ مُّبِينٍ
அல்லது, இவர்களுக்கு (வானத்தில் ஏறிச்செல்ல) ஏணி இருந்து, அதில் (ஏறி அங்கு பேசப்படுபவற்றைச்) செவிமடுக்கிறார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் தெளிவான ஒரு சான்றைக் கொண்டு வரட்டும்.
Or have they a stairway (to heaven), by means of which they listen (to the talks of the angels)? Then let their listener produce some manifest proof.
أَمْ لَهُ ٱلْبَنَـٰتُ وَلَكُمُ ٱلْبَنُونَ
அல்லது, (உங்கள் கற்பனைகளில் உள்ளவாறு அல்லாஹ்வாகிய) அவனுக்குப் பெண் மக்களும், உங்களுக்கு (மட்டும்) ஆண் மக்களுமா?
Or has He (Allâh) only daughters and you have sons?
أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ
அல்லது, அவர்களிடம் நீர் ஏதேனும் கூலி கேட்கிறீரா? எனவே அவர்கள் கடனால் பளுவாக்கப்பட்டவர்களா?
Or is it that you (O Muhammad صلى الله عليه وسلم) ask a wage from them (for your preaching of Islâmic Monotheism) so that they are burdened with a load of debt?
أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
அல்லது, அவர்களிடம் (அல்லாஹ்வைப் போல்) மறைவானது (அது பற்றிய அறிவு) இருக்கிறதா? எனவே அவர்கள் (அதனை) எழுதுகிறார்களா?
Or that the Ghaib (Unseen) is with them, and they write it down?
أَمْ يُرِيدُونَ كَيْدًا ۖ فَٱلَّذِينَ كَفَرُوا۟ هُمُ ٱلْمَكِيدُونَ
அல்லது ஏதேனுமொரு சூழ்ச்சி செய்ய அவர்கள் நாடுகிறார்களா? அவ்வாறாயின், நிராகரித்தார்களே அவர்கள்தாம் சூழ்ச்சிக்குள்ளாக்கப்படுபவர்கள்.
Or do they intend a plot (against you O Muhammad صلى الله عليه وسلم)? But those who disbelieve (in the Oneness of Allâh - Islâmic Monotheism) are themselves plotted against!
أَمْ لَهُمْ إِلَـٰهٌ غَيْرُ ٱللَّهِ ۚ سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ
அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாத (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இருக்கின்றானா? அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
Or have they an ilâh (a god) other than Allâh? Glorified be Allâh from all that they ascribe as partners (to Him)1
a) See the footnote (B) of (V.3:130).
b) See the footnote of (V.2:278)
وَإِن يَرَوْا۟ كِسْفًا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطًا يَقُولُوا۟ سَحَابٌ مَّرْكُومٌ
மேலும், வானத்திலிருந்து (இடிந்து) துண்டுகள் விழுவதை அவர்கள் (கண்ணால்) காண்பார்களானால், (அது வானமல்ல,) அது அடர்த்தியான மேகம்தான்” என்று கூறுவார்கள்.
And if they were to see a piece of the heaven falling down, they would say: "Clouds gathered in heaps!"
فَذَرْهُمْ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى فِيهِ يُصْعَقُونَ
ஆகவே, (நபியே!) எதில் அவர்கள் அழிக்கப்படுவார்களோ, அத்தகைய அவர்களுடைய நாளை அவர்கள் சந்திக்கும் வரையில் நீர் அவர்களை விட்டுவிடுவீராக!
So leave them alone till they meet their Day, in which they will sink into a fainting (with horror).
يَوْمَ لَا يُغْنِى عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ
அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயனளிக்காது, (எவராலும்) அவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
The Day when their plotting shall not avail them at all nor will they be helped (i.e. they will receive their torment in Hell).
وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ عَذَابًا دُونَ ذَٰلِكَ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
அன்றியும், நிச்சயமாக அநியாயம் செய்துகொண்டிருந்தோர்க்கு (மறுமையின் வேதனையாகிய) அதுமட்டுமின்றி (இம்மையில்) மற்றொரு வேதனையுமிருக்கின்றது, எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ளமாட்டார்கள்.
And verily, for those who do wrong, there is another punishment (i.e. the torment in this world and in their graves)1 before this; but most of them know not. (Tafsir At-Tabarî).
See the footnote (B) of (V.6:93).
وَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ۖ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ
மேலும், (நபியே!) உமதிரட்சகனின் தீர்ப்பை (எதிர்பார்த்துப்) பொருத்திருப்பீராக! நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர், (ஆகவே, அவர்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்து விட முடியாது.) மேலும் (நீர் நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமதிரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!
So wait patiently (O Muhammad صلى الله عليه وسلم) for the Decision of your Lord, for verily, you are under Our Eyes1; and glorify the Praises of your Lord when you get up from sleep.
See the footnote of (V.3:73).
وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَـٰرَ ٱلنُّجُومِ
இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக!
And in the nighttime also glorify His Praises - and at the setting of the stars.1
It is said that glorifying Allâh’s Praises here means: all the five compulsory and additional Nawâfil prayers.