10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

Mushaf · Page 524

/ 604
Page 524

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

52. At-Turسورة الطور

52:15

أَفَسِحْرٌ هَـٰذَآ أَمْ أَنتُمْ لَا تُبْصِرُونَ

“எனவே இது (வெறும்) சூனியம்தானா? அல்லது (இதனை) நீங்கள் (உங்கள் கண்ணால்) காணமுடியாதவர்களாகி விட்டீர்களா?”

Is this magic, or do you not see?

52:16

ٱصْلَوْهَا فَٱصْبِرُوٓا۟ أَوْ لَا تَصْبِرُوا۟ سَوَآءٌ عَلَيْكُمْ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ

“இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள், (இதன் வேதனையைச் சகித்துப்) பொறுமையாயிருங்கள், அல்லது பொறுமையாய் இல்லாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்கப் படமாட்டீர்கள்). நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குத்தான்” (என்று கூறப்படும்).

Taste you therein its heat and whether you are patient of it or impatient of it, it is all the same. You are only being requited for what you used to do.

52:17

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَنَعِيمٍ

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், (அல்லாஹ்வின்) அருட்கொடையிலும் (திளைத்து) இருப்பார்கள்.

Verily, the Muttaqûn (the pious. See V.2:2) will be in Gardens (Paradise), and Delight.

52:18

فَـٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ وَوَقَىٰهُمْ رَبُّهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ

தங்கள் இரட்சகன் தங்களுக்கு அளித்திருப்பவைகளை அனுபவித்தவர்களாக இருப்பர், மேலும், அவர்களின் இரட்சகன் அவர்களை நரக வேதனையிலிருந்து காத்துக் கொண்டான்.

Enjoying in that which their Lord has bestowed on them, and (the fact that) their Lord saved them from the torment of the blazing Fire.

52:19

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

(அவர்களிடம் உலகில் நன்மைகளிலிருந்து) “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள் இன்னும் பருகுங்கள்” (என்றும் கூறப்படும்).

"Eat and drink with happiness because of what you used to do."

52:20

مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍ مَّصْفُوفَةٍ ۖ وَزَوَّجْنَـٰهُم بِحُورٍ عِينٍ

அணியணியாகப் போடப்பட்ட கட்டில்களி(ல் உள்ள மஞ்சங்களி)ன் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள், நாம் அவர்களுக்கு (ஹூருல் ஈன் என்னும்) கண்ணழகி(களாகிய கன்னிகை)களை மணமுடித்து வைப்போம்.

They will recline (with ease) on thrones arranged in ranks. And We shall marry them to Hûr: (female, fair ones) with wide lovely eyes.1

  1. Hûr. Very fair females created by Allah as such, not from the offspring of Adam عليه السلام with intense black irises of their eyes and intense white scleras. See the footnote of (V.44:54)

52:21

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَـٰنٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ أَلَتْنَـٰهُم مِّنْ عَمَلِهِم مِّن شَىْءٍ ۚ كُلُّ ٱمْرِئٍۭ بِمَا كَسَبَ رَهِينٌ

இன்னும் விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர், அவர்களுடைய சந்ததிகளும் விசுவாசத்தின் மூலம் அவர்களை பின்பற்றினார்கள், (அத்தகைய அந்தச் சந்ததியினரின் படித்தரங்கள் குறைவாக இருப்பினும் அவர்களின் பெற்றோர்கள் இருக்கும் உயர் பதவிக்கு) அவர்களுடன் (சுவனபதியில்) அவர்களின் சந்ததியினரை சேர்த்து விடுவோம், (இதனால்) அவர்களுடைய (பெற்றோர்களின் நன்மையான) செயல்களில் எதனையும் அவர்களுக்கு நாம் குறைத்து விடமாட்டோம், ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்ததைக் கொண்டு பிணையாக்கபட்டிருக்கின்றான்.

And those who believe and whose offspring follow them in Faith: to them shall We join their offspring, and We shall not decrease the reward of their deeds in anything. Every person is a pledge for that which he has earned.

52:22

وَأَمْدَدْنَـٰهُم بِفَـٰكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ

(பல வகையான) பழத்தையும், அவர்கள் விரும்பக்கூடியதிலிருந்து (பலவகையான) இறைச்சியையும் கொண்டு அவர்களும் நாம் (ஏராளமாகக் கொடுத்து) அதிகப்படுத்துவோம்.

And We shall provide them with fruit and meat such as they desire.

52:23

يَتَنَـٰزَعُونَ فِيهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ

அ(ச்சுவனத்)தில் ஒருவருக்கொருவர் (மதுக்) கோப்பையை பரிமாறிக் கொள்வர், (அதில்) வீணானது இருக்காது, (அதை அருந்துவதால்) குற்றமிழைப்பதோ ஏற்படுவதில்லை.

There they shall pass from hand to hand a (wine) cup, free from any Laghw (dirty, false, evil vain talk between them), and free from sin1 (because it will be lawful for them to drink).

  1. See Footnote b, c and d of (V.2:219).

52:24

۞ وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُونٌ

மேலும், அவர்களுக்குரிய (பணிபுரியும்) சிறுவர்கள் அவர்களைச் சுற்றிகொண்டே இருப்பார்கள், அவர்கள் (சிப்பிகளில்) மறைத்து வைக்கப்பட்ட (கைபடாத) முத்துக்களைப் போல் (பிரகாசமான தோற்றமளிப்பவர்களாக) இருப்பர்.

And there will go round boy-servants of theirs, to serve them as if they were preserved pearls.

52:25

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ

மேலும், அவர்கள் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்பவர்களாக அவர்களில் சிலர் (மற்ற) சிலரின் பால் முன்னோக்கியிருப்பார்கள்.

And some of them draw near to others, questioning.

52:26

قَالُوٓا۟ إِنَّا كُنَّا قَبْلُ فِىٓ أَهْلِنَا مُشْفِقِينَ

“நாங்கள் முன்பு, எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய நிலை என்னவாகுமோ என்று) நிச்சயமாக பயந்தவர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள்.

Saying: "Aforetime, we were afraid (of the punishment of Allâh) in the midst of our families.

52:27

فَمَنَّ ٱللَّهُ عَلَيْنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ

“ஆயினும், அல்லாஹ் எங்கள் மீது பேருபகாரம் செய்து நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்துவிட்டான்.

"So Allâh has been gracious to us, and has saved us from the torment of the Fire.

52:28

إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْبَرُّ ٱلرَّحِيمُ

நிச்சயமாக (இதற்கு) முன்னர் (வேதனையிலிருந்து எங்களைக் காக்குமாறு) நாங்கள் அவனை (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக, அவனே மிகக் கூடுதலாக உபகாரம் செய்பவன், மிகக்கிருபையுடையவன்” (என்றும் கூறுவார்கள்).

"Verily, We used to invoke Him (Alone and none else) before. Verily, He is Al-Barr (the Most Subtle, Kind, Courteous, and Generous), the Most Merciful."1

  1. See the footnote of (V.2:165).

52:29

فَذَكِّرْ فَمَآ أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ

ஆகவே, (நபியே! அல்லாஹ்வின் தூதை எத்திவைத்து, அவன் இறக்கிவைத்த குர் ஆனின் மூலம்) அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக! உமது இரட்சகனின் அருளால் நீர் குறிகாரரல்லர், பைத்திக்காரருமல்லர்.

Therefore, remind (mankind of Islâmic Monotheism, O Muhammad صلى الله عليه وسلم). By the Grace of Allâh, you are neither a soothsayer, nor a madman.

52:30

أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهِۦ رَيْبَ ٱلْمَنُونِ

அல்லது-(உம்மைப்பற்றி, ”அவர்) ஒரு கவிஞர் தாம், அவருக்கு (இறப்பெனும்) காலச்சூழலை நாம் எதிர்பார்த்திருப்போம்” என்று அவர்கள் கூறுகின்றனரா?

Or do they say: "(Muhammad صلى الله عليه وسلم) is a poet! We await for him some calamity by time!"

52:31

قُلْ تَرَبَّصُوا۟ فَإِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ

(ஆகவே, அவர்களிடம் “அதனை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், (என்ன நடக்கிறதென்பதை நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களிலுள்ளவன்” என்று கூறுவீராக!

Say (O Muhammad صلى الله عليه وسلم to them): "Wait! I am with you among the waiters!"