மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَكَذَٰلِكَ أَوْحَيْنَآ إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا ۚ مَا كُنتَ تَدْرِى مَا ٱلْكِتَـٰبُ وَلَا ٱلْإِيمَـٰنُ وَلَـٰكِن جَعَلْنَـٰهُ نُورًا نَّهْدِى بِهِۦ مَن نَّشَآءُ مِنْ عِبَادِنَا ۚ وَإِنَّكَ لَتَهْدِىٓ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
(நபியே!) இவ்வாறே உமக்கு நம்முடைய கட்டளையின் (குர் ஆனாகிய) உயிரானதை வஹீ மூலமாக அறிவிக்கின்றோம், (இதற்கு முன்னர்) நீர் வேதம் என்றால் என்ன, இன்னும் விசுவாசம் என்றால் என்ன என்பதை அறிந்தவராக இருக்கவில்லை, ஆயினும், (இவ்வேதத்தை உமக்கு வஹீ மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாடியவர்களுக்கு இதனைக்கொண்டு நாம் நேர் வழி செலுத்துகின்றோம், (நபியே!) நிச்சயமாக நீர், (மனிதர்களுக்கு) நேரான வழியின்பால் வழிகாட்டுவீர்.
And thus We have sent to you (O Muhammad صلى الله عليه و سلم) Ruh (a Revelation, and a Mercy) of Our Command. You knew not what is the Book, nor what is Faith? But We have made it (this Qur’ân) a light wherewith We guide whosoever of Our slaves We will. And verily, you (O Muhammad صلى الله عليه و سلم) are indeed guiding (mankind) to the Straight Path (i.e. Allâh’s Religion of Islâmic Monotheism).
صِرَٰطِ ٱللَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ أَلَآ إِلَى ٱللَّهِ تَصِيرُ ٱلْأُمُورُ
(திட்டமாக இது தான்) அல்லாஹ்வுடைய வழி, அவன் எத்தகையவனென்றால் வானங்களில் இருப்பவையும் பூமியில் இருப்பவையும் அவனுக்கே உரியன; சகல காரியங்களும் அல்லாஹ்வின் பக்கமே சேரும் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக!
The Path of Allâh to Whom belongs all that is in the heavens and all that is in the earth. Verily, all matters at the end go to Allâh (for decision).
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
حمٓ
وَٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ
தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக,
By the manifest Book (i.e. this Qur’ân that makes things clear).
إِنَّا جَعَلْنَـٰهُ قُرْءَٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
நிச்சயமாக நாம், இதனை நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபி மொழியிலான குர் ஆனாக ஆக்கியிருக்கிறோம்.
Verily, We have made it a Qur’ân in Arabic that you may be able to understand (its meanings and its admonitions).
وَإِنَّهُۥ فِىٓ أُمِّ ٱلْكِتَـٰبِ لَدَيْنَا لَعَلِىٌّ حَكِيمٌ
இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தாய் நூலில் (பாதுகாக்கப்பட்டு) இருக்கிறது, (இது வேதங்களில்) மிக்க உயர்வான, ஞானம் நிறைந்ததாகும்.
And verily, it (this Qur’ân) is in the Mother of the Book (i.e. Al-Lauh Al-Mahfûz), with Us, indeed exalted, full of wisdom.
أَفَنَضْرِبُ عَنكُمُ ٱلذِّكْرَ صَفْحًا أَن كُنتُمْ قَوْمًا مُّسْرِفِينَ
நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தவராகி விட்டீர்கள் என்பதற்காக, (வேதத்தின்) நினைவுருத்தலை உங்களை விட்டு முற்றாக நாம் தடுத்துவிடுவோமா?
Shall We then (warn you not and) take away the Reminder (this Qur’ân) from you, because you are a people Musrifûn.1
Musrifûn: Those who transgress the limits, as sinners, polytheists, pagans, idolaters and disbelievers in the Oneness of Allâh and in His Messenger Muhammad صلى الله عليه وسلم.
وَكَمْ أَرْسَلْنَا مِن نَّبِىٍّ فِى ٱلْأَوَّلِينَ
(உங்களுக்கு) முன்னிருந்த (சமூகத்த)வர்களிலும், நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பி இருக்கின்றோம்.
And how many a Prophet have We sent amongst the men of old.
وَمَا يَأْتِيهِم مِّن نَّبِىٍّ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
எந்த நபியும்-அவரை அவர்கள் பரிகசிக்கக்கூடியவர்களாக இருந்தே தவிர- அவர்களிடம் வருவதில்லை.
And never came there a Prophet to them but they used to mock at him.
فَأَهْلَكْنَآ أَشَدَّ مِنْهُم بَطْشًا وَمَضَىٰ مَثَلُ ٱلْأَوَّلِينَ
பின்னர் இவர்களைவிட மிக்க பலசாலி(களான அவர்)களை நாம் அழித்துவிட்டோம், (இதற்கு) முன்னிருந்தோரின் உதாரணம் (படிப்பினையாகச்) சென்றே உள்ளது.
Then We destroyed men stronger (in power) than these - and the example of the ancients has passed away (before them).
وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلْعَزِيزُ ٱلْعَلِيمُ
(நபியே!) அவர்களிடம், “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று நீர் கேட்டால், (யாவையும்) மிகைத்தவன், நன்கறிகிறவன் (ஆகிய அல்லாஹ்) தான் அவைகளை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள்.
And indeed if you ask them, "Who has created the heavens and the earth?" They will surely say: "The All-Mighty, the All-Knower created them."
ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ مَهْدًا وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ
அவன் எத்தகையவனென்றால், உங்களுக்கு பூமியை (உறுதியான) விரிப்பாக ஆக்கினான், நீங்கள் (பிரயாணத்தில்) வழிபெறுவதற்காக அதில் பல பாதைகளையும் உங்களுக்காக அவன் அமைத்தான்.
Who has made for you the earth like a bed, and has made for you roads therein, in order that you may find your way.