மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَٱلَّذِى نَزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَأَنشَرْنَا بِهِۦ بَلْدَةً مَّيْتًا ۚ كَذَٰلِكَ تُخْرَجُونَ
இன்னும் அவன் எத்தகையவனென்றால், அவன் வானத்திலிருந்து தண்ணீரை அளவோடு இறக்கி வைக்கிறான், (அல்லாஹ்வாகிய) நாமே, பின்னர் அதனைக்கொண்டு, இறந்துபோன ஊரை (பூமியை) உயிர்ப்பிக்கின்றோம், இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் உயிர் கொடுத்து) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
And Who sends down water (rain) from the sky in due measure, then We revive a dead land therewith, and even so you will be brought forth (from the graves).
وَٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْفُلْكِ وَٱلْأَنْعَـٰمِ مَا تَرْكَبُونَ
இன்னும் அவன் எத்தகையவனென்றால், அவன்தான் (படைப்பினங்களின்) வகைகளை-அவை ஒவ்வொன்றையும் (மனிதனுக்குப் பயனளிக்கும் வகையில்) படைத்தான், அன்றியும் கப்பல்களிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் நீங்கள் ஏறிச் செல்பவைகளை உங்களுக்காக உண்டாக்கினான்.
And Who has created all the pairs and has appointed for you ships and cattle on which you ride:
لِتَسْتَوُۥا۟ عَلَىٰ ظُهُورِهِۦ ثُمَّ تَذْكُرُوا۟ نِعْمَةَ رَبِّكُمْ إِذَا ٱسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا۟ سُبْحَـٰنَ ٱلَّذِى سَخَّرَ لَنَا هَـٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقْرِنِينَ
(ஏறிச்செல்பவைகளான) அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் சரியாக அமர்ந்து கொள்வதற்காக, அவற்றின் மீது நீங்கள் அமர்ந்து விட்டால், பின்னர் உங்கள் இரட்சகனின் அருளை நீங்கள் நினைவு கூர்ந்து,” எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்தவனாகிய அவன் மிக்க பரிசுத்தமானவன், (இதன் மீது பிரயாணிக்க அவன் வசப்படுத்தித் தந்திராவிட்டால்) இதற்கு சக்திபெற்றவர்களாக நாங்கள் இருக்கவில்லை” என்று நீங்கள் கூறுவதற்காகவும்-
In order that you may mount on their backs, and then may remember the Favour of your Lord when you mount thereon, and say: "Glory to Him Who has subjected this to us, and we could never have it (by our efforts).
وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ
இன்னும், “நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம்” (என்றும் நீங்கள் பிரார்த்தித்துக் கூறுவதற்காகவும் அவற்றை உங்களுக்குப் பிரயாணம் செய்ய வசதியாக ஆக்கியுள்ளான்).
And verily, to Our Lord we indeed are to return!"
وَجَعَلُوا۟ لَهُۥ مِنْ عِبَادِهِۦ جُزْءًا ۚ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَكَفُورٌ مُّبِينٌ
அவர்களோ, அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை (மலக்குகளை) அவனுக்கு(ப் பெண் சந்ததியினராக) ஆக்குகின்றார்கள், நிச்சயமாக மனிதன் பகிரங்கமாக நிராகரிப்பவன்.
Yet, they assign to some of His slaves a share with Him (by pretending that He has children, and considering them as equals or co-partners in worship with Him). Verily, man is indeed a manifest ingrate!
أَمِ ٱتَّخَذَ مِمَّا يَخْلُقُ بَنَاتٍ وَأَصْفَىٰكُم بِٱلْبَنِينَ
அல்லது (அல்லாஹ்) தான் படைத்ததிலிருந்து (தனக்கென) அவன் பெண் மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண்மக்களை தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
Or has He taken daughters out of what He has created, and He has selected for you sons?
وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَـٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُۥ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
அர்ரஹ்மானுக்கு அவர்கள் எதை உதாரணமாகக் கூறினார்களோ அதை(-பெண் மகவை)க் கொண்டு (அது பிறந்து விட்டதாக) அவர்களில் ஒருவனுக்கு நன்மாராயம் கூறப்பட்டால், (பெண் மக்களை விரும்பாத) அவன் (கவலையினால்) கடுங்கோபம் கொண்டவனாக இருக்கும் நிலையில் அவன் முகம் கறுத்துவிடுகிறது.
And if one of them is informed of the news of (the birth of a girl) that which he sets forth as a parable to the Most Gracious (Allâh), his face becomes dark, and he is filled with grief!
أَوَمَن يُنَشَّؤُا۟ فِى ٱلْحِلْيَةِ وَهُوَ فِى ٱلْخِصَامِ غَيْرُ مُبِينٍ
ஆபரணத்திலும் (சிங்காரிப்பிலும்) வளர்க்கப்பட்டு தன் (சொந்த) விவகாரத்தில் (கூட தனது நிலையை) தெளிவாக எடுத்துக்கூற சக்தியற்ற ஒன்றையா? (பெண்களையா? அவனுக்குச் சந்ததிகள் என்று ஆக்குகிறார்கள்).
(Like they then for Allâh) a creature who is brought up in adornments (wearing silk and gold ornaments, i.e. women), and who in dispute cannot make herself clear?
وَجَعَلُوا۟ ٱلْمَلَـٰٓئِكَةَ ٱلَّذِينَ هُمْ عِبَـٰدُ ٱلرَّحْمَـٰنِ إِنَـٰثًا ۚ أَشَهِدُوا۟ خَلْقَهُمْ ۚ سَتُكْتَبُ شَهَـٰدَتُهُمْ وَيُسْـَٔلُونَ
மேலும், மலக்குகளை-எவர்கள் அர்ரஹ்மானின் அடியார்களாக இருக்கிறார்களோ அத்தகையோரை-அவர்கள் பெண்களாக ஆக்கிவிட்டனர், (நாம்) அவர்களைப் படைக்கும் பொழுது இவர்கள் (உடனிருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்களில் சாட்சி (நம்மிடத்தில்) எழுதப்படும், (அதனை பற்றி விசாரித்து மறுமையில்) கேள்வியும் கேட்கப் படுவார்கள்.
And they make the angels who themselves are slaves of the Most Gracious (Allâh) females. Did they witness their creation? Their testimony will be recorded, and they will be questioned!
وَقَالُوا۟ لَوْ شَآءَ ٱلرَّحْمَـٰنُ مَا عَبَدْنَـٰهُم ۗ مَّا لَهُم بِذَٰلِكَ مِنْ عِلْمٍ ۖ إِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ
இன்னும் “அர்ரஹ்மான் நாடியிருந்தால், நாம் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம்” என்று அவர்கள் கூறுகின்றனர், அவர்களுக்கு இதைப் பற்றி எவ்வித அறிவுமில்லை, அவர்கள் (பொய்க்) கற்பனை செய்பவர்களே தவிர (வேறு) இல்லை.
And they said: "If it had been the Will of the Most Gracious (Allâh), we should not have worshipped them (false deities)." They have no knowledge whatsoever of that. They do nothing but lie!
أَمْ ءَاتَيْنَـٰهُمْ كِتَـٰبًا مِّن قَبْلِهِۦ فَهُم بِهِۦ مُسْتَمْسِكُونَ
அல்லது இதற்கு முன்னர் ஏதேனும் ஒரு வேதத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்து, அதனை அவர்கள் (இதற்கு ஆதராமாக) பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களா?
Or have We given them any Book before this (the Qur’ân) to which they are holding fast?
بَلْ قَالُوٓا۟ إِنَّا وَجَدْنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٍ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَـٰرِهِم مُّهْتَدُونَ
மாறாக, இவர்கள் “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு வழியில் (மார்க்கத்தில் இருக்கக்) கண்டோம், இன்னும் நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச் சுவடுகளின் மீது நேர் வழி பெறக்கூடியவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
Nay! They say: "We found our fathers following a certain way and religion, and we guide ourselves by their footsteps."