மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَتَرَى ٱلْمَلَـٰٓئِكَةَ حَآفِّينَ مِنْ حَوْلِ ٱلْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ ۖ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْحَقِّ وَقِيلَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
மேலும், “அர்ஷை” சுற்றிச் சூழ்ந்தவர்களாக மலக்குகளை (நபியே! அந்நாளில்) நீர் காண்பீர், அவர்கள் தங்கள் இரட்சகனின் புகழைக் கொண்டு துதித்துக் கொண்டிருப்பார்கள், (சிலரை சுவனத்திற்கும், பலரை நரகத்திற்கும் செல்லுமாறு கட்டளையிட்டு) அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். “அகிலத்தார்க்கெல்லாம் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரியவை” என்று கூறப்படும்.
And you will see the angels surrounding the Throne (of Allâh) from all round, glorifying the praises of their Lord (Allâh). And they (all the creatures) will be judged with truth. And it will be said, "All the praises and thanks be to Allâh, the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists)."
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
حمٓ
تَنزِيلُ ٱلْكِتَـٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ
(இது யாவரையும்-) மிகைத்தவனாகிய, (அனைத்தையும்) நன்கறிந்தவனாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கிவைக்கப்பட்ட வேதமாகும்.
The revelation of the Book (this Qur’ân) is from Allâh, the All-Mighty, the All-Knower.
غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوْبِ شَدِيدِ ٱلْعِقَابِ ذِى ٱلطَّوْلِ ۖ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ إِلَيْهِ ٱلْمَصِيرُ
(அவன்) பாவத்தை மன்னிப்பவன், (குற்றவாளிகளுடைய) தவ்பாவை (பாவ மீட்சியை) ஏற்பவன், (குற்றம் புரிந்தோரைத்) தண்டிப்பதில் கடுமையானவன், (நல்லோர் மீது) அருட்கொடைகள் உடையவன் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவனிடமே திரும்ப வேண்டியதிருக்கின்றது.
The Forgiver of sin, the Acceptor of repentance, the Severe in punishment, the Bestower (of favours). Lâ ilâha illâ Huwa (none has the right to be worshipped but He), to Him is the final return.
مَا يُجَـٰدِلُ فِىٓ ءَايَـٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِى ٱلْبِلَـٰدِ
(நபியே!) நிராகரிப்போரைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வுடைய வசனங்களில் தர்க்கிக்கமாட்டார்கள், ஆகவே, அவர்கள், நகரங்களில் (சுதந்திரமாக) சுற்றித்திரிவது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம்.
None disputes in the Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) of Allâh but those who disbelieve. So let not their ability of going about here and there through the land (for their purposes) deceive you [O Muhammad صلى الله عليه وسلم, for their ultimate end will be the Fire of Hell]!
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَٱلْأَحْزَابُ مِنۢ بَعْدِهِمْ ۖ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍۭ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ ۖ وَجَـٰدَلُوا۟ بِٱلْبَـٰطِلِ لِيُدْحِضُوا۟ بِهِ ٱلْحَقَّ فَأَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ عِقَابِ
இவர்களுக்கு முன் நூஹ்வுடைய சமூகத்தாரும், அவர்களுக்குப் பின் (வந்த) பல கூட்டத்தினர்களும் (நம்மால் அனுப்பப்பட்டோரைப்) பொய்யாக்கினார்கள், மேலும், (அவர்களில்) ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்களிடம் வந்த தூதர்களை(க் கொலை செய்ய அல்லது சிறை)ப் பிடிக்க நாட்டங்கொண்டார்கள், அன்றியும், அவர்கள் அசத்தியத்தைக் கொண்டு-அதன் மூலம் சத்தியத்தை அழித்து விடுவதற்காக (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நான் பிடித்துக் கொண்டேன், ஆகவே, என்னுடைய தண்டனை எப்படி இருந்தது?
The people of Nûh (Noah) and the Confederates after them denied (their Messengers) before these; and every (disbelieving) nation plotted against their Messenger to seize him, and disputed by means of falsehood to refute therewith the truth. So I seized them (with punishment), and how (terrible) was My punishment!
وَكَذَٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّهُمْ أَصْحَـٰبُ ٱلنَّارِ
இவ்வாறே, நிராகரித்தோர் மீது-நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்ற உமதிரட்சகனின் வாக்கும் கடமையாகி (நிறைவேறி) விட்டது.
Thus has the Word of your Lord been justified against those who disbelieved, that they will be the dwellers of the Fire.1
See the footnote of (V.3:85).
ٱلَّذِينَ يَحْمِلُونَ ٱلْعَرْشَ وَمَنْ حَوْلَهُۥ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِۦ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَٱغْفِرْ لِلَّذِينَ تَابُوا۟ وَٱتَّبَعُوا۟ سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ ٱلْجَحِيمِ
“அர்ஷை” சுமந்து கொண்டிருப்பவர்களும், அதனைச் சுற்றி இருப்பவர்களும் தங்களிரட்சகனின் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்கிறார்கள், இன்னும், அவனை விசுவாசிக்கிறார்கள், மேலும், விசுவாசங்கொண்டோருக்காக (அவர்களின் குற்றங்களை) மன்னிக்குமாறு (அல்லாஹ்விடம்) கோருகிறார்கள், “எங்கள் இரட்சகனே! நீ (உன்னுடைய) கருணையாலும் அறிவாலும் ஒவ்வொரு பொருளையும் விசாலமாக அறிந்திருக்கின்றாய், ஆகவே, தவ்பா செய்து உன்னுடைய (நேர்) வழியைப் பின்பற்றியோருக்கும், நீ (பாவத்தை) பொறுத்தருள்வாயாக, அவர்களை நரக வேதனையிலிருந்து நீ காத்தருள்வாயாக!
Those (angels) who bear the Throne (of Allâh) and those around it glorify the praises of their Lord, and believe in Him, and ask forgiveness for those who believe (in the Oneness of Allâh) (saying): "Our Lord! You comprehend all things in mercy and knowledge, so forgive those who repent and follow Your Way, and save them from the torment of the blazing Fire!