8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

39. Az-Zumar

The Groups · அஸ்-ஜுமர்

Makki75 versesJuz 23

الزمر

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

39:1

تَنزِيلُ ٱلْكِتَـٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ

(யாவரையும்) மிகைத்தவனான, தீர்க்கமான அறிவுடையவனான அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கிவைக்கபட்டுள்ளதாகும்.

The revelation of this Book (the Qur’ân) is from Allâh, the All-Mighty, the All-Wise.

39:2

إِنَّآ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ فَٱعْبُدِ ٱللَّهَ مُخْلِصًا لَّهُ ٱلدِّينَ

(நபியே!) நிச்சயமாக நாமே உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை உமக்கு இறக்கிவைத்திருக்கின்றோம், ஆகவே, நீர் முற்றிலும் மார்க்கத்தை (வணக்கத்தை) அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவராக அல்லாஹ்வை வணங்குவீராக!

Verily We have sent down the Book to you (O Muhammad صلى الله عليه وسلم) in truth: So worship Allâh (Alone) by doing religious deeds sincerely for Allâh’s sake only.

39:3

أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلْخَالِصُ ۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلْفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِى مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ كَـٰذِبٌ كَفَّارٌ

தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே உரித்தானது என்பதை அறிந்துகொள்வீராக! இன்னும், அவனையன்றி (மற்றவர்களைப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களே அத்தகையவர்கள், “எங்களை அவர்கள் நெருக்கத்தால் அல்லாஹ்வுக்கு சமீபமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவேயன்றி அவர்களை நாங்கள் வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்), எதில் அவர்கள் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அது பற்றி, நிச்சயமாக அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எவன் (உண்மையை) மிக்க மறுக்கிறவனாக, பொய்யனாக இருக்கிறானோ அவனை நேர் வழியில் செலுத்தமாட்டான்.

Surely the religion (i.e. the worship and the obedience) is for Allâh only. And those who take Auliyâ’ (protectors, helpers, lords, gods) besides Him (say): "We worship them only that they may bring us near to Allâh." Verily Allâh will judge between them concerning that wherein they differ. Truly, Allâh guides not him who is a liar, and a disbeliever.

39:4

لَّوْ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدًا لَّٱصْطَفَىٰ مِمَّا يَخْلُقُ مَا يَشَآءُ ۚ سُبْحَـٰنَهُۥ ۖ هُوَ ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ

அல்லாஹ் (தனக்கொரு) பிள்ளையை எடுத்துகொள்ள வேண்டுமென்று நாடியிருந்தால், அவன் படைத்தவற்றிலிருந்து அவன் நாடியதைத் தேர்ந்தெடுத்துகொண்டிருப்பான், அவன் மிகப் பரிசுத்தமானவன், அவனே (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற (வல்லமை மிக்க)வனாகிய, தனித்தவனாகிய அல்லாஹ்.

Had Allâh willed to take a son (or offspring), He could have chosen whom He willed out of those whom He created. But glory be to Him! (He is above such things). He is Allâh, the One, the Irresistible1.

  1. See the footnote of (V.2:116).

39:5

خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۖ يُكَوِّرُ ٱلَّيْلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيْلِ ۖ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِى لِأَجَلٍ مُّسَمًّى ۗ أَلَا هُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفَّـٰرُ

அவன் வானங்களை மற்றும் பூமியை உண்மையைக் கொண்டு படைத்திருக்கின்றான், அவன் இரவைப் பகலின் மீது மூடிக்கொள்ளச் செய்கின்றான், இன்னும், பகலை இரவின் மீது மூடிக்கொள்ள செய்கின்றான், சூரியனையும், சந்திரனையும் (தன் ஆதிக்கத்தில்) அவன் வசப்படுத்தியும் வைத்திருக்கின்றான், (இவை) ஒவ்வொன்றும், (குறிப்பிடப்பட்ட எல்லைக்குள்) குறிப்பிடப்பட்ட தவணை வரை நடக்கின்றது, அறிந்து கொள்ளுங்கள், அவனே (யாவரையும்) மிகைத்தவன், மிகுதியாக மன்னிக்கிறவன்.

He has created the heavens and the earth with truth. He makes the night to go in the day and makes the day to go in the night. And He has subjected the sun and the moon. Each running (on a fixed course) for an appointed term. Verily, He is the All-Mighty, the Oft-Forgiving.

39:6

خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلْأَنْعَـٰمِ ثَمَـٰنِيَةَ أَزْوَٰجٍ ۚ يَخْلُقُكُمْ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ خَلْقًا مِّنۢ بَعْدِ خَلْقٍ فِى ظُلُمَـٰتٍ ثَلَـٰثٍ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ لَهُ ٱلْمُلْكُ ۖ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ

(ஆரம்பத்தில்) ஒரே ஆத்மாவிலிருந்து அவன் உங்களைப் படைத்தான், பின்னர், அதிலிருந்து அதனுடைய மனைவியை ஆக்கினான், இன்னும், கால்நடைகளில் எட்டு(வகை)ஜோடிகளை இறக்கி (அருளி)யிருக்கின்றான், உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒரு படைப்புக்குப்பின், மற்றொரு படைப்பாக மூன்று இருள்களில் (அவைகளுக்கிடையில்) உங்களைப் படைக்கின்றான், அவன்தான் உங்களுடைய இரட்சகனாகிய அல்லாஹ், ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. ஆகவே, (அவனுக்கு வணக்கம் செலுத்துவதைவிட்டும்) நீங்கள் எவ்வாறு (மற்றவற்றை வணங்கத்) திருப்பப்படுகிறீர்கள்?

He created you (all) from a single person (Adam); then made from him his wife [Hawwâ’ (Eve)]. And He has sent down for you of cattle eight pairs (of the sheep, two, male and female; of the goats, two, male and female; of the oxen, two, male and female; and of the camels, two, male and female). He creates you in the wombs of your mothers: creation after creation in three veils of darkness. Such is Allâh your Lord. His is the kingdom. Lâ ilâha illâ Huwa (none has the right to be worshipped but He). How then are you turned away?

39:7

إِن تَكْفُرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنكُمْ ۖ وَلَا يَرْضَىٰ لِعِبَادِهِ ٱلْكُفْرَ ۖ وَإِن تَشْكُرُوا۟ يَرْضَهُ لَكُمْ ۗ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

(அவனை) நீங்கள் நிராகரித்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ், உங்களைவிட்டும் தேவையற்றவன், இன்னும், தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை அவன் பொருந்திக்கொள்வதில்லை, மேலும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்தினால், உங்களுக்காக அதனை அவன் திருப்தியடைவான், (பாவத்தைச் சுமக்கின்ற) எந்த ஆத்மாவும் மற்ற ஆத்மாவின் (பாவச்) சுமையை சுமக்காது, பின்னர், உங்கள் மீளுமிடம் உங்கள் இரட்சகனின் பக்கமேயாகும், அப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான், நெஞ்சங்களிலுள்ளவற்றை நிச்சயமாக அவன் நன்கறிகிறவன்.

If you disbelieve, then verily, Allâh is not in need of you; He likes not disbelief for His slaves. And if you are grateful (by being believers), He is pleased therewith for you. No bearer of burdens shall bear the burden of another. Then to your Lord is your return, and He will inform you what you used to do. Verily, He is the All-Knower of that which is in (men’s) breasts.

39:8

۞ وَإِذَا مَسَّ ٱلْإِنسَـٰنَ ضُرٌّ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعْمَةً مِّنْهُ نَسِىَ مَا كَانَ يَدْعُوٓا۟ إِلَيْهِ مِن قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادًا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦ ۚ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا ۖ إِنَّكَ مِنْ أَصْحَـٰبِ ٱلنَّارِ

மேலும், மனிதனை ஏதேனும் ஒரு சங்கடம் தீண்டுமானால் அவன் தன் இரட்சகனை - அவன்பால் (தவ்பாச்செய்து) மீண்டவனாக- அழை(த்துப் பிரார்த்தி)க்கிறான், பின்னர் அவன் தன்னிடமிருந்து (மகத்தான) ஓர் அருட்கொடையை அவனுக்குக் கொடுத்தானாகில், இதற்கு முன்னர் அவன் எதற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தானோ அதனையே அவன் மறந்துவிடுகிறான், இன்னும், அல்லாஹ்வுக்கு இணைகளை அவன் ஆக்குகிறான், (மற்றவர்களை) அவனுடைய பாதையிலிருந்து வழி கெடுப்பதற்காக, (நபியே! அவனுக்கு,) “உன் நிராகரிப்பைக் கொண்டு சிறிது காலம் சுகம் அனுபவித்துக்கொள், (முடிவில்) நிச்சயமாக நீ, நரகவாசிகளில் உள்ளவனாவாய்” என்று நீர் கூறுவீராக!

And when some hurt touches man, he cries to his Lord (Allâh Alone), turning to Him in repentance. But when He bestows a favour upon him from Himself, he forgets that for which he cried for before, and he sets up rivals to Allâh, in order to mislead others from His Path. Say: "Take pleasure in your disbelief for a while: surely you are (one) of the dwellers of the Fire!"

39:9

أَمَّنْ هُوَ قَـٰنِتٌ ءَانَآءَ ٱلَّيْلِ سَاجِدًا وَقَآئِمًا يَحْذَرُ ٱلْـَٔاخِرَةَ وَيَرْجُوا۟ رَحْمَةَ رَبِّهِۦ ۗ قُلْ هَلْ يَسْتَوِى ٱلَّذِينَ يَعْلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ

(அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் சிறந்தவனா?) அல்லது, எவர், மறுமையைப் பயந்து தன் இரட்சகனின் அருளை ஆதரவுவைத்து, இரவு காலங்களில் சிரம் பணிந்தவராகவும், நின்றவராகவும் (அல்லாஹ்வை) வணங்கிகொண்டிருக்கின்றாரோ அவரா?” அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? (இதனைக்கொண்டு) நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே “என்று (நபியே!) நீர் கூறுவீராக!

Is one who is obedient to Allâh, prostrating himself or standing (in prayer) during the hours of the night, fearing the Hereafter and hoping for the Mercy of his Lord (like one who disbelieves)? Say: "Are those who know equal to those who know not?" It is only men of understanding who will remember (i.e. get a lesson from Allâh’s Signs and Verses).

39:10

قُلْ يَـٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ رَبَّكُمْ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا۟ فِى هَـٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةٌ ۗ وَأَرْضُ ٱللَّهِ وَٰسِعَةٌ ۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّـٰبِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ

“விசுவாசங்கொண்டோரான என்னுடைய (நல்) அடியார்களே! உங்கள் இரட்சகனை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், இவ்வுலகத்தில் நன்மை செய்தோருக்கு நன்மையுண்டு, இன்னும், அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது, பொறுமையாளர்கள், தங்களுடைய கூலியை நிறைவு செய்யப்படுதெல்லாம் கணக்கின்றியேதான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

Say (O Muhammad صلى الله عليه وسلم): "O My slaves who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism), be afraid of your Lord (Allâh) and keep your duty to Him. Good is (the reward) for those who do good in this world, and Allâh’s earth is spacious (so if you cannot worship Allâh at a place, then go to another)! Only those who are patient shall receive their reward in full, without reckoning.1"

  1. See the footnote of (V.16:126).

39:11

قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ مُخْلِصًا لَّهُ ٱلدِّينَ

“மார்க்கத்தை(-வணக்கத்தை) அவனுக்கே கலப்பற்றதாக, ஆக்கியவனாக அல்லாஹ்வையே நான் வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப் பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

Say (O Muhammad صلى الله عليه وسلم): "Verily I am commanded to worship Allâh (Alone) by obeying Him and doing religious deeds sincerely for His sake only.

39:12

وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ ٱلْمُسْلِمِينَ

இன்னும், (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து நடப்போரில் முதன்மையானவனாக நான் இருக்கவேண்டுமென்றும் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நபியே! நீர் கூறுவீராக!)

"And I am commanded (this) in order that I may be the first of those who submit themselves to Allâh (in Islâm) as Muslims."

39:13

قُلْ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

“என் இரட்சகனுக்கு நான் மாறு செய்தால், மிக மகத்தான நாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று(ம்) நீர் கூறுவீராக!

Say (O Muhammad صلى الله عليه وسلم): "Verily if I disobey my Lord, I am afraid of the torment of a great Day."

39:14

قُلِ ٱللَّهَ أَعْبُدُ مُخْلِصًا لَّهُۥ دِينِى

“முற்றிலும் என் மார்க்கத்தை (வணக்கத்தை) அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவனாக நான் அல்லாஹ்வையே வணங்குகிறேன்” என்று(ம்) நீர் கூறுவீராக!

Say (O Muhammad صلى الله عليه وسلم): "Allâh Alone I worship by doing religious deeds sincerely for His sake only (and not to show off, and not to set up rivals with Him in worship.)"

39:15

فَٱعْبُدُوا۟ مَا شِئْتُم مِّن دُونِهِۦ ۗ قُلْ إِنَّ ٱلْخَـٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ

எனவே, அவனையன்றி நீங்கள் நாடியவற்றை நீங்கள் வணங்கிக் கொள்ளுங்கள், (அதற்குரிய வேதனைப் பெறுவீர்கள்,) “நிச்சயமாக நஷ்டவாளிகள், கியாமத்து நாளில் தமக்கும், தம் குடும்பத்தினருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டார்களே அத்தகையவர்கள் தாம், அதுவே தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!

So worship what you like besides Him. Say (O Muhammad صلى الله عليه وسلم): "The losers are those who will lose themselves and their families on the Day of Resurrection. Verily, that will be a manifest loss!"

39:16

لَهُم مِّن فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحْتِهِمْ ظُلَلٌ ۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥ ۚ يَـٰعِبَادِ فَٱتَّقُونِ

(மறுமை நாளில்) அவர்களுக்கு, அவர்களின் மேலிருந்து நெருப்பிலான தட்டுகளும், அவர்களுக்குக் கீழிலிருந்து (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும், (நரகத்தின் நிலை பற்றிக்கூறப்பட்ட) அது, அதனைக் கொண்டு, அல்லாஹ் தன் அடியார்களை பயமுறுத்துகிறான், என் அடியார்களே! (பாவங்களைத் தவிர்ப்பதன்மூலம்) என்னை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.

They shall have coverings of Fire, above them and covering (of Fire) beneath them. With this Allâh does frighten His slaves: "O My slaves, therefore fear Me!"

39:17

وَٱلَّذِينَ ٱجْتَنَبُوا۟ ٱلطَّـٰغُوتَ أَن يَعْبُدُوهَا وَأَنَابُوٓا۟ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلْبُشْرَىٰ ۚ فَبَشِّرْ عِبَادِ

மேலும், ஷைத்தான்களை-அவர்களை வணங்குவதைத் தவிர்த்து-(விலகி முற்றிலும்) அல்லாஹ்வின் (வணக்கத்தின்)பால் திரும்பிவிட்டார்களே அத்தகையோர்-அவர்களுக்குத் தான் நன்மாராயம் உண்டு, ஆகவே, (நபியே!) என் அடியார்களுக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!

Those who avoid At-Tâghût 1 (false deities) by not worshipping them and turn to Allâh (in repentance), for them are glad tidings; so announce the good news to My slaves -

  1. See the footnote of (V.2:256).

39:18

ٱلَّذِينَ يَسْتَمِعُونَ ٱلْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُۥٓ ۚ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمْ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ

அவர்கள் எத்தகையோரென்றால், சொல்லை செவியுறுவார்கள், பின்னர் அதில் மிக அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் அவர்களை நேர் வழியில் செலுத்திவிட்டான், இன்னும் அவர்கள் தாம் அறிவுடையோர்.

Those who listen to the Word [good advice Lâ ilâha illallâh - (none has the right to be worshipped but Allâh) and Islâmic Monotheism] and follow the best thereof (i.e. worship Allâh Alone, repent to Him and avoid Tâghût) those are (the ones) whom Allâh has guided and those are men of understanding.1

  1. Like Zaid bin ‘Amr bin Nufail, Salmân Al-Fârisi and Abû Dharr Al-Ghifârî. [Tafsir Al- Qurtubi, also see the footnote of (V.2:135)].

39:19

أَفَمَنْ حَقَّ عَلَيْهِ كَلِمَةُ ٱلْعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِى ٱلنَّارِ

(நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகிவிட்டதோ அவனா? (இரட்சகனை பயந்தவனைப் போன்றவன்?) (நரக) நெருப்பில் (செல்ல) இருக்கும் அவனை நீர் காப்பாற்றிவிடுவீரா?

Is, then one against whom the Word of punishment is justified (equal to the one who avoids evil)? Will you (O Muhammad صلى الله عليه وسلم) rescue him who is in the Fire?

39:20

لَـٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّن فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ وَعْدَ ٱللَّهِ ۖ لَا يُخْلِفُ ٱللَّهُ ٱلْمِيعَادَ

எனினும், தங்கள் இரட்சகனுக்கு அஞ்சி நடக்கின்றார்களே அத்தகையோர்- அவர்களுக்கு (சுவனபதியில் அடுக்கடுக்காக) மாளிகைகள் உண்டு, அவைகளுக்கு மேலும் கட்டப்பட்ட மாளிகைகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதியாகும், அல்லாஹ் (தன்னுடைய) வாக்குறுதியில் மாறமாட்டான்.

But those who fear their Lord (Allâh) and keep their duty to Him, for them are built lofty rooms, one above another under which rivers flow (i.e. Paradise). (This is) the Promise of Allâh: and Allâh does not fail in (His) Promise.

39:21

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَسَلَكَهُۥ يَنَـٰبِيعَ فِى ٱلْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِۦ زَرْعًا مُّخْتَلِفًا أَلْوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصْفَرًّا ثُمَّ يَجْعَلُهُۥ حُطَـٰمًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ், வானத்திலிருந்து (மழை) நீரை இறக்கி அதனைப் பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான், பின்னர், அதனைக் கொண்டு பல வேளாண்மை(ப்பயிர்)களை- அதன் நிறங்கள் மாறுபட்டவையாக இருக்க அவன் வெளிப்படுத்துகின்றான், பின்னர் உளர்ந்து, அவை மஞ்சள் நிறமடைவதை நீர் காண்கின்றீர், பின்னர், அதனை(க்காய்ந்த) சருகுகளாக்கிவிடுகின்றான், நிச்சயமாக இதில், அறிவுடையோர்களுக்கு படிப்பினை இருக்கிறது.

See you not that Allâh sends down water (rain) from the sky, and causes it to penetrate the earth, (and then makes it to spring up) as water-springs, and afterward thereby produces crops of different colours, and afterward they wither and you see them turn yellow; then He makes them dry and broken pieces. Verily, in this is a Reminder for men of understanding.

39:22

أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدْرَهُۥ لِلْإِسْلَـٰمِ فَهُوَ عَلَىٰ نُورٍ مِّن رَّبِّهِۦ ۚ فَوَيْلٌ لِّلْقَـٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ ٱللَّهِ ۚ أُو۟لَـٰٓئِكَ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ

“அல்லாஹ் எவருடைய இதயத்தை இஸ்லாத்திற்காக (அதை ஏற்பதற்கு) விசாலமாக்கி வைத்திருக்கின்றானோ அவரா? (எவருடைய இதயம் அதை ஏற்பதிலிருந்து சுருங்கி இறுகிவிட்டதோ அவரைப் போன்று ஆவார்?) அவர் (அதன் காரணமாக) தன் இரட்சகனிடமிருந்துள்ள பிராகசத்தின் மீது இருக்கிறார், ஆகவே, அல்லாஹ்வை நினைவு கூருவதைவிட்டும் (விலகி) எவர்களின் இதயங்கள் (இறுகி) கடினமாகிவிட்டனவோ அவர்களுக்குக் கேடுதான், அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்(தான்) இருக்கின்றனர்.

Is he whose breast Allâh has opened to Islâm, so that he is in light from His Lord (as he who is a non-Muslim)? So woe to those whose hearts are hardened against remembrance of Allâh! They are in plain error!

39:23

ٱللَّهُ نَزَّلَ أَحْسَنَ ٱلْحَدِيثِ كِتَـٰبًا مُّتَشَـٰبِهًا مَّثَانِىَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهْدِى بِهِۦ مَن يَشَآءُ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

அல்லாஹ் மிக்க அழகான செய்தியை வேதமாக (குர் ஆனாக) இறக்கி இருக்கின்றான், (இதிலுள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல்) ஒன்றை மற்றொன்று ஒத்ததாக திரும்பத் திரும்பக் கூறப்படுவதாக உள்ளன, தங்கள் இரட்சகனுக்குப் பயப்படுகிறார்களே அத்தகையோரின் தோள்(களின் உரோமங்)கள் (அதனை கேட்ட மாத்திரத்தில்) சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களுடைய தோள்களும், இதயங்களும் அல்லாஹ்வை நினைவு கூர்வதின்பால் இளகுகின்றன. அதுவே அல்லாஹ்வுடைய நேர் வழியாகும், தான் நாடியவர்களை அவன் இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான், எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அவரை நேர் வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனும் இல்லை.

Allâh has sent down the Best Statement, a Book (this Qur’ân), its parts resembling each other (in goodness and truth) (and) oft-repeated. The skins of those who fear their Lord shiver from it (when they recite it or hear it). Then their skin and their heart soften to the remembrance of Allâh. That is the guidance of Allâh. He Guides therewith whom He wills; and whomever Allâh sends astray, for him there is no guide.

39:24

أَفَمَن يَتَّقِى بِوَجْهِهِۦ سُوٓءَ ٱلْعَذَابِ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۚ وَقِيلَ لِلظَّـٰلِمِينَ ذُوقُوا۟ مَا كُنتُمْ تَكْسِبُونَ

எவர், மறுமை நாளில் தீய வேதனையைத் தம் முகத்தைக் கொண்டேனும் (தன்னைவிட்டு) தடுத்துக்கொள்ள முற்படுகிறாரோ அவரா? (சுவன வாசிக்குச் சமமாவார்?) இன்னும் அநியாயக்காரர்களிடம், “நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றை (அதன் தீய பலனை)ச் சுவைத்துப் பாருங்கள்” என்று கூறப்படும்.

Is he then, who will confront with his face the awful torment on the Day of Resurrection (as he who enters peacefully in Paradise)? And it will be said to the Zâlimûn (polytheists and wrong-doers): "Taste what you used to earn!"

39:25

كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தோர் (நம் தூதர்களைப்) பொய்யாக்கினார்கள், ஆகவே, அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் வேதனை அவர்களை வந்தடைந்தது.

Those before them belied, and so the torment came on them from directions they perceived not.

39:26

فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلْخِزْىَ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

பின்னர், இவ்வுலக வாழ்க்கயில் இழிவைச் சுவைக்குமாறு அவர்களை அல்லாஹ் செய்தான் அவர்கள், அறிந்துகொண்டிருப்பார்களாயின் மறுமையிலுள்ள வேதனை(யோ) மிகப் பெரிது (என்பதை அறிந்து கொள்வார்கள்).

So Allâh made them to taste the disgrace in the present life, but greater is the torment of the Hereafter if they only knew!

39:27

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِى هَـٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

நிச்சயமாக, மனிதர்களுக்கு இந்தக் குர் ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் (அதைக்கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக நாம் (எடுத்துக்) கூறியிருக்கிறோம்.

And indeed We have put forth for men, in this Qur’ân every kind of similitude in order that they may remember.

39:28

قُرْءَانًا عَرَبِيًّا غَيْرَ ذِى عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُونَ

(அல்லாஹ்வுக்கு) அவர்கள் பயந்துகொள்வதற்காக, எத்தகைய கோணலும் அற்ற அரபி மொழியிலான குர் ஆனாக இருக்கும் நிலையில் (அதனை இறக்கி வைத்தோம்).

An Arabic Qur’ân, without any crookedness (therein) in order that they may avoid all evil which Allâh has ordered them to avoid, fear Him and keep their duty to Him.

39:29

ضَرَبَ ٱللَّهُ مَثَلًا رَّجُلًا فِيهِ شُرَكَآءُ مُتَشَـٰكِسُونَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ

கருத்து வேற்றுமையுள்ள (தீய குணங்களைக் கொண்ட) பல கூட்டுக்காரர்களை கொண்ட ஒரு மனிதனையும், (எந்த கூட்டுக்காரர்களும் இல்லாது கலப்பற்றவாறு) ஒரே மனிதனுக்குச் சொந்தமான வேறு ஒரு மனிதனையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான், உதாரணத்தால் அவ்விருவரும் சமமாவார்களா? (சமமானவர்கள் அல்லர்!) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும், எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.

Allâh puts forth a similitude: a (slave) man belonging to many partners (like those who worship others along with Allâh) disputing with one another, and a (slave) man belonging entirely to one master (like those who worship Allâh Alone). Are those two equal in comparison? All the praises and thanks be to Allâh! But most of them know not.

39:30

إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَّيِّتُونَ

(நபியே!) நிச்சயமாக நீர் இறந்துவிடுகிறவரே, நிச்சயமாக அவர்களும் இறந்துவிடுகிறவர்கள்தாம்.

Verily you (O Muhammad صلى الله عليه وسلم) will die, and verily they (too) will die.

39:31

ثُمَّ إِنَّكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ عِندَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ

பின்னர், நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உங்கள் இரட்சகனிடத்தில் தர்க்கித்துக் கொள்வீர்கள்.

Then, on the Day of Resurrection, you will be disputing before your Lord.

39:32

۞ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ وَكَذَّبَ بِٱلصِّدْقِ إِذْ جَآءَهُۥٓ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًى لِّلْكَـٰفِرِينَ

ஆகவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து, இன்னும் உண்மையை(யாகிய வேதத்தை)-அது தன்னிடம் வந்தபோது பொய்யாக்கியவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?

Then, who does more wrong than one who utters a lie against Allâh,1 and denies the truth [this Qur’ân, the Prophet (Muhammad صلى الله عليه وسلم) and the Islâmic Monotheism] when it comes to him! Is there not in Hell an abode for the disbelievers?

  1. See the footnote of (V.6:101).

39:33

وَٱلَّذِى جَآءَ بِٱلصِّدْقِ وَصَدَّقَ بِهِۦٓ ۙ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ

மேலும், உண்மையைக் கொண்டு வந்தவ(ராகிய நமது தூத)ரும், அதனை உண்மையென்றே (ஒப்புக்கொண்டு) ஏற்பவர்களும் (ஆகிய அத்தகையவர்கள் தாம் பயபக்தியாளர்கள்.

And he (Muhammad صلى الله عليه وسلم) who has brought the truth (this Qur’ân and Islâmic Monotheism) and (those who) believed therein (i.e. the true believers of Islâmic Monotheism), those are Al-Muttaqûn (the pious - See V.2:2).

39:34

لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمْ ۚ ذَٰلِكَ جَزَآءُ ٱلْمُحْسِنِينَ

அவர்களுக்கு தங்களின் இரட்சகனிடத்தில் அவர்கள் நாடியவை உண்டு. அது நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய (தகுதியான) கூலியாகும்.

They shall have all that they will desire with their Lord. That is the reward of Muhsinûn (good-doers - see the footnote of V.9:120).

39:35

لِيُكَفِّرَ ٱللَّهُ عَنْهُمْ أَسْوَأَ ٱلَّذِى عَمِلُوا۟ وَيَجْزِيَهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ

ஏனெனில், அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயதை அல்லாஹ் அவர்களை விட்டும் நீக்கி (மன்னித்து) விட்டு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு மிக அழகானவற்றையும் (நற்) கூலியாக அவர்களுக்குக் கொடுப்பான்.

So that Allâh may expiate from them the evil of what they did and give them the reward, according to the best of what they used to do.1

  1. See the footnote of (V.9:121).

39:36

أَلَيْسَ ٱللَّهُ بِكَافٍ عَبْدَهُۥ ۖ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

தன் அடியாருக்கு அல்லாஹ் (ஒருவனே சகலவற்றிற்கும்) போதுமானவனாக இல்லையா? இன்னும், (நபியே!) அவர்கள் அவனல்லாத (அவர்களின் தெய்வங்களான)வற்றைக் கொண்டு உம்மை பயமுறுத்துகின்றனர், இன்னும், எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ அவரை, நேர் வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.

Is not Allâh Sufficient for His slave? Yet they try to frighten you with those (whom they worship) besides Him! And whom Allâh sends astray, for him there will be no guide.

39:37

وَمَن يَهْدِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّضِلٍّ ۗ أَلَيْسَ ٱللَّهُ بِعَزِيزٍ ذِى ٱنتِقَامٍ

எவரை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துகின்றானோ அவரை, வழிகெடுத்துவிடக் கூடியவன் எவனுமில்லை, அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தண்டித்தலை உடையவனாக இல்லையா?

And whomsoever Allâh guides, for him there will be no misleader. Is not Allâh All-Mighty, Possessor of Retribution?

39:38

وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ ٱللَّهُ ۚ قُلْ أَفَرَءَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنْ أَرَادَنِىَ ٱللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَـٰشِفَـٰتُ ضُرِّهِۦٓ أَوْ أَرَادَنِى بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَـٰتُ رَحْمَتِهِۦ ۚ قُلْ حَسْبِىَ ٱللَّهُ ۖ عَلَيْهِ يَتَوَكَّلُ ٱلْمُتَوَكِّلُونَ

மேலும், “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று (நபியே!)) நீர் அவர்களைக் கேட்பீராயின், “அல்லாஹ்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள், (பின்னும் நபியே! அவர்களிடம்) “அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால், அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக்கூடியவையா? அல்லது எனக்கு ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால், அவனுடைய அருளை அவை தடுத்துவிடக்கூடியவையா?” என்று நீர் கேட்பீராக!” அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன்மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்” என்று கூறுவீராக!

And verily, if you ask them: "Who created the heavens and the earth?" Surely they will say: "Allâh (has created them)." Say: "Tell me then, the things that you invoke besides Allâh - if Allâh intended some harm for me, could they remove His harm? Or if He (Allâh) intended some mercy for me, could they withhold His Mercy?" Say: "Sufficient for me is Allâh; in Him those who trust (i.e. believers) must put their trust.1"

  1. See the footnote of (V.12:67).

39:39

قُلْ يَـٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَـٰمِلٌ ۖ فَسَوْفَ تَعْلَمُونَ

“என்னுடைய சமூகத்தாரே! உங்களுடைய வழி முறையின் மீதே நீங்கள் (செய்யக்கூடியதை) நீங்கள் செய்துகொண்டிருங்கள். (என்னுடைய வழியின் மீது) நிச்சயமாக நான்) செய்து வருபவன், ஆகவே, (எவருடைய செயல் சரியானது என்பதை அடுத்து) நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

Say: (O Muhammad صلى الله عليه وسلم) "O My people! Work according to your way, I am working (according to my way). Then you will come to know

39:40

مَن يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيمٌ

“தன்னை இழிவுபடுத்தும் வேதனை யாருக்கு வரும்? என்பதையும், இன்னும் நிலையான வேதனை யார் மீது இறங்கும் என்பதையும் (நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.)”

"To whom comes a disgracing torment, and on whom descends an everlasting torment."

Next part: Verses 41–75 →

The Noble Qur'an — Az-Zumar