10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

39. Az-Zumar

The Groups · அஸ்-ஜுமர்

Makki75 versesJuz 24

الزمر

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

39:41

إِنَّآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَـٰبَ لِلنَّاسِ بِٱلْحَقِّ ۖ فَمَنِ ٱهْتَدَىٰ فَلِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۖ وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ

(நபியே!) நிச்சயமாக நாம், மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டுள்ள (இவ்)வேதத்தை உம் மீது இறக்கினோம், ஆகவே, எவர் நேர்வழி பெற்று விடுகின்றாரோ அது அவருக்கே (நன்மை) ஆகும், எவர் (அதிலிருந்து) வழிகெட்டுவிடுகின்றரோ அவர் வழிகெடுவதெல்லாம் அவரின் மீதே (கேடாக) ஆகும், (நபியே!) நீர் அவர்களுக்காகப் பொறுப்பேற்றுக்கொள்பவரும் அல்லர்.

Verily, We have sent down to you (O Muhammad صلى الله عليه وسلم) the Book (this Qur’ân) for mankind in truth. So whosoever accepts the guidance, it is only for his ownself, and whosoever goes astray, he goes astray only for his (own) loss. And you (O Muhammad صلى الله عليه وسلم) are not a Wakîl (trustee or disposer of affairs, or guardian) over them.1

  1. See the footnote of (V.3:85).

39:42

ٱللَّهُ يَتَوَفَّى ٱلْأَنفُسَ حِينَ مَوْتِهَا وَٱلَّتِى لَمْ تَمُتْ فِى مَنَامِهَا ۖ فَيُمْسِكُ ٱلَّتِى قَضَىٰ عَلَيْهَا ٱلْمَوْتَ وَيُرْسِلُ ٱلْأُخْرَىٰٓ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

உயிர்களை- அவை இறக்கும் பொழுதும், தம் நித்திரையிலும் இறப்பெய்யாதவற்றையும்- அல்லாஹ்வே கைப்பற்றுகிறான், பின்னர், எதன் மீது மரணத்தை அவன் விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடமே) அவன் நிறுத்திக்கொள்கின்றான், மேலும், மற்றவற்றை குறிப்பிட்ட காலம் வரை (வாழ்வதற்காக) அவன் அனுப்பிவிடுகின்றான், சிந்தித்துப் பார்க்கக்கூடிய சமூத்தார்க்கு, நிச்சயமாக இதில் படிப்பினைகள் இருக்கின்றன.

It is Allâh Who takes away the souls at the time of their death, and those that die not during their sleep. He keeps those (souls) for which He has ordained death and sends the rest for a term appointed. Verily, in this are signs for a people who think deeply.

39:43

أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ شُفَعَآءَ ۚ قُلْ أَوَلَوْ كَانُوا۟ لَا يَمْلِكُونَ شَيْـًٔا وَلَا يَعْقِلُونَ

இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்கு)ப் பரிந்துரையாளர்களாக எடுத்துக் கொண்டார்களா? “அவர்கள் (காரியத்தில்) எதையும் சொந்தமாக்கிக் கொள்ளாதவர்களாகவும், (எதையும்) விளங்காதவர்களாகவும் இருந்தாலுமா?” என்று (நபியே! அவர்களை) நீர் கேட்பீராக!

Have they taken (others) as intercessors besides Allâh? Say: "Even if they have power over nothing whatever and have no intelligence?"

39:44

قُل لِّلَّهِ ٱلشَّفَـٰعَةُ جَمِيعًا ۖ لَّهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ

(பின்னும் நபியே!) நீர் கூறுவீராக; ”பரிந்துரைகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.” (ஆகவே, அவனுடைய அனுமதியும், அவன் பொருத்தமுமின்றி அவனிடத்தில் ஒருவரும் பரிந்துரை செய்ய முடியாது) வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி (முழுவதும்) அவனுக்கே உரியது, பின்னர் (மறுமையில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.

Say: "To Allâh belongs all intercession. His is the Sovereignty of the heavens and the earth. Then to Him you shall be brought back."

39:45

وَإِذَا ذُكِرَ ٱللَّهُ وَحْدَهُ ٱشْمَأَزَّتْ قُلُوبُ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ ۖ وَإِذَا ذُكِرَ ٱلَّذِينَ مِن دُونِهِۦٓ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ

மேலும், (இவர்களின் கூட்டுக்காரர்களன்றி) அல்லாஹ்(வைமட்டும்)- அவன் தனித்தவனாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையே அத்தகையோரின் இதயங்கள் (கோபத்தால்) சுருங்கிவிடுகின்றன, இன்னும், அவனையன்றி மற்றோர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால் அது சமயம் அவர்கள் மகிழ்வடைகின்றனர்.

And when Allâh Alone is mentioned, the hearts of those who believe not in the Hereafter are filled with disgust (from the Oneness of Allâh توحيد الله) and when those (whom they obey or worship) besides Him [like all false deities other than Allâh, - it may be a Messenger, an angel, a pious man, a jinni, or any other creature even idols, graves of religious people, saints, priests, monks and others.] are mentioned, behold, they rejoice!1

  1. See the footnote of (V.2:165).

39:46

قُلِ ٱللَّهُمَّ فَاطِرَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ عَـٰلِمَ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ أَنتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِى مَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ

“அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! உன் அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் எதில் வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ, அதில் நீயே தீர்ப்பு வழங்குவாய்” (என்று நபியே!) நீர் கூறிவீராக!

Say (O Muhammad صلى الله عليه وسلم): "O Allâh! Creator of the heavens and the earth! All-Knower of the Ghaib (Unseen) and the seen! You will judge between your slaves about that wherein they used to differ."

39:47

وَلَوْ أَنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ مَا فِى ٱلْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُۥ مَعَهُۥ لَٱفْتَدَوْا۟ بِهِۦ مِن سُوٓءِ ٱلْعَذَابِ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۚ وَبَدَا لَهُم مِّنَ ٱللَّهِ مَا لَمْ يَكُونُوا۟ يَحْتَسِبُونَ

மேலும், அநியாயம் செய்துவிட்டார்களே அத்தகையோருக்கு பூமியிலுள்ள அனைத்துமிருந்து, அத்துடன் அது போன்றதும் (சொந்தமாக) இருந்திருந்தால், கொடிய வேதனையிலிருந்து (விடிவுதேடி தப்பித்துக் கொள்வதற்கு) மறுமை நாளில் அதை ஈடாகக் கொடுத்துவிடுவார்கள், அன்றியும், (அப்பொழுது) அவர்கள் எண்ணிப்பார்த்திராததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும்.

And those who did wrong (the polytheists and disbelievers in the Oneness of Allâh), if they had all that is in earth and therewith as much again, they verily, would offer it to ransom themselves therewith on the Day of Resurrection from the evil torment; and there will become apparent to them from Allâh what they had not been reckoning.1

  1. See the footnote of (V.3:91).

39:48

وَبَدَا لَهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

மேலும், அவர்கள் சம்பாதித்தவற்றின் தீயவைகளும் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும், அன்றியும் அவர்கள் எதனைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.

And the evils of that which they earned will become apparent to them, and that which they used to mock at will encircle them.

39:49

فَإِذَا مَسَّ ٱلْإِنسَـٰنَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَـٰهُ نِعْمَةً مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلْمٍۭ ۚ بَلْ هِىَ فِتْنَةٌ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

ஆகவே, மனிதனை ஏதேனும் துன்பம் தொட்டுவிடுமானால் (அதனை நீக்கிவிடுமாறு பிரார்த்தித்து) அவன் நம்மை அழைக்கின்றான், (அதனை நீக்கிய பின் நம்மிடமிருந்து) அவனுக்கு யாதோர் அருட்கொடையை நாம் கொடுத்தால், “இதை நான் கொடுக்கப்பட்டதெல்லாம் (என்) அறிவினால் தான்” என்று அவன் கூறுகிறான், அவ்வாறல்ல! அது (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும், எனினும், அவர்களில் பெரும்பாலனோர் (இதனை) அறியமாட்டார்கள்.

When harm touches man, he calls to Us (for help); then when We have (rescued him from that harm and) changed it into a favour from Us, he says: "Only because of knowledge (that I possess) I obtained it." Nay, it is only a trial, but most of them know not!

39:50

قَدْ قَالَهَا ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ

இவர்களுக்கு முன்னிருந்தார்களே அத்தகையோரும் இதனைத் திட்டமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள், பின்னர், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தார்களே, அது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.

Verily, those before them said it, yet (all) that they had earned availed them not.

39:51

فَأَصَابَهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ ۚ وَٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْ هَـٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ وَمَا هُم بِمُعْجِزِينَ

ஆகவே, அவர்கள் சம்பாதித்த தீயவைகள் அவர்களைப்பீடித்தன, மேலும், இவர்களில் அநியாயம் செய்தார்களே அத்தகையோர்-அவர்கள் சம்பாதித்ததன் தீயவைகள் அவர்களை வந்தடையும், அவர்கள் (அல்லாஹ்வை எதிலும்) இயலாமல் ஆக்ககூடியவர்களும் அல்லர்.

So, the evil results of that which they earned overtook them. And those who did wrong of these [people to whom you (Muhammad صلى الله عليه وسلم) have been sent] will also be overtaken by the evil results (torment) for that which they earned; and they will never be able to escape.1

  1. See the footnote of (V.5:90).

39:52

أَوَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு உணவை (சம்பத்துகளை) விரிவாக்குகின்றான், (தான் நாடியவர்களுக்கு) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? விசுவாசங்கொண்ட சமூத்தார்க்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

Do they not know that Allâh enlarges the provision for whom He wills, and straitens it (for whom He wills). Verily, in this are signs for the folk who believe!

39:53

۞ قُلْ يَـٰعِبَادِىَ ٱلَّذِينَ أَسْرَفُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ

“தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையற்றோராக நீங்கள் ஆகிவிடவேண்டாம், நிச்சயமாக அல்லாஹ்-(உங்களுடைய) பாவங்கள் யாவையும்-(நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்,) அவன் மன்னித்துவிடுவான், (ஏனென்றால்) நிச்சயமாக அவன் தான் மிக்க மன்னிகிறவன், மிகக்கிருபையுடையவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

Say: "O ‘Ibâdî (My slaves) who have transgressed against themselves (by committing evil deeds and sins)! Despair not of the Mercy of Allâh: verily, Allâh forgives all sins. Truly He is Oft-Forgiving, Most Merciful.1

  1. A) See the footnote of (V.9:121).

    B) See the footnote of (V.22:27).

    C) See the footnote of (V.25:70).

39:54

وَأَنِيبُوٓا۟ إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا۟ لَهُۥ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ

இன்னும் (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக உங்கள் இரட்சகன்பால் (தவ்பாச்செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள், அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்ப்படிந்தும் விடுங்கள், (வேதனை வந்துவிட்டால்,) பின்னர் (எவராலும்) நீங்கள் உதவி செய்யப்படமாட்டீர்கள்.

"And turn in repentance and in obedience with true Faith (Islâmic Monotheism) to your Lord and submit to Him (in Islâm) before the torment comes upon you, (and) then you will not be helped.

39:55

وَٱتَّبِعُوٓا۟ أَحْسَنَ مَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ بَغْتَةً وَأَنتُمْ لَا تَشْعُرُونَ

(மனிதர்களே!) நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்களிரட்சகனிடமிருந்து உங்களின் பக்கம் இறக்கிவைக்கப்பட்ட மிக்க அழகானவற்றையும் பின்பற்றுங்கள்:

"And follow the best of that which is sent down to you from your Lord (i.e. this Qur’ân, do what it orders you to do and keep away from what it forbids), before the torment comes on you suddenly while you perceive not!"

39:56

أَن تَقُولَ نَفْسٌ يَـٰحَسْرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِى جَنۢبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّـٰخِرِينَ

“அல்லாஹ்விற்கு நான் செலுத்தவேண்டியவற்றில் குறை செய்துவிட்டதன் மீது என்னுடைய கைசேதமே! இன்னும் நான் (உலகில்) பரிகாசம் செய்கிறவர்களில் இருந்தேனே” என்று எந்த ஒரு ஆத்மாவும் கூறாமலிருப்பதற்காகவும்.

Lest a person should say: "Alas, my grief that I was undutiful to Allâh (i.e. I have not done what Allâh has ordered me to do), and I was indeed among those who mocked [at the truth! i.e. Lâ ilâha illallâh (none has the right to be worshipped but Allâh), the Qur’ân, and Muhammad صلى الله عليه وسلم and at the faithful believers]

39:57

أَوْ تَقُولَ لَوْ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِى لَكُنتُ مِنَ ٱلْمُتَّقِينَ

அல்லது “அல்லாஹ் எனக்கு நேர் வழிகாட்டியிருந்தால் நான் பயபக்தியுடையவர்களில் (ஒருவனாக) ஆகி இருப்பேன்!” என்று கூறாமலிப்பதற்காகவும்-

Or (lest) he should say: "If only Allâh had guided me, I should indeed have been among the Muttaqûn (the pious - See V.2:2)."

39:58

أَوْ تَقُولَ حِينَ تَرَى ٱلْعَذَابَ لَوْ أَنَّ لِى كَرَّةً فَأَكُونَ مِنَ ٱلْمُحْسِنِينَ

அல்லது வேதனையை அது காணும் சமயத்தில், “நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பிச் செல்லுதல் இருக்குமானால், நான் நன்மை செய்வோரில் உள்ளவனாகி விடுவேன்” என்று கூறாமலிருப்பதற்காகவும்-

Or (lest) he should say when he sees the torment: "If only I had another chance (to return to the world), then I should indeed be among the Muhsinûn (good-doers - See V.2:112)."

39:59

بَلَىٰ قَدْ جَآءَتْكَ ءَايَـٰتِى فَكَذَّبْتَ بِهَا وَٱسْتَكْبَرْتَ وَكُنتَ مِنَ ٱلْكَـٰفِرِينَ

ஏன் இல்லை, “திட்டமாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன, பின்னர் நீ அவற்றைப் பொய்யாக்கினாய்; கர்வமும் கொண்டாய், (அதனை) நிராகரிப்பவர்களில் உள்ளவனாகவும் இருந்தாய்” (என்று அல்லாஹ் கூறுவான்).

Yes! Verily, there came to you My Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) and you denied them, and were proud1 and were among the disbelievers.

  1. See the footnote of

39:60

وَيَوْمَ ٱلْقِيَـٰمَةِ تَرَى ٱلَّذِينَ كَذَبُوا۟ عَلَى ٱللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ

இன்னும், (நபியே!) அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே அத்தகையோரை-அவர்களுடைய முகங்கள் மறுமை நாளில் கறுப்பாக்கப்பட்டவையாக (இருப்பதை) நீர் காண்பீர், கர்வங்கொண்டிருந்தவர்களுக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?

And on the Day of Resurrection you will see those who lied against Allâh (i.e. attributed to Him sons, partners) - their faces will be black. Is there not in Hell an abode for the arrogant?

39:61

وَيُنَجِّى ٱللَّهُ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ ٱلسُّوٓءُ وَلَا هُمْ يَحْزَنُونَ

இன்னும், (அல்லாஹ்வை) பயந்து (பாவம் செய்வதிலிருந்து விலகிக்) கொண்டார்களே அத்தகையோரை- அவர்களின் வெற்றியைக் கொண்டு அல்லாஹ் ஈடேற்றுவான், தீமை அவர்களைத் தொடாது, அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள்.

And Allâh will deliver those who are the Muttaqûn (the pious - See V.2:2) to their places of success (Paradise). Evil shall touch them not, nor shall they grieve.

39:62

ٱللَّهُ خَـٰلِقُ كُلِّ شَىْءٍ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ وَكِيلٌ

அல்லாஹ்(வே) ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன், அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் பொறுப்பாளனுமாவான்.

Allâh is the Creator of all things, and He is the Wakîl (Trustee, Disposer of affairs, Guardian) over all things.

39:63

لَّهُۥ مَقَالِيدُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ

வானங்கள் மற்றும் பூமியின் (களஞ்சியங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன, இன்னும் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்-அவர்கள் தாம் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாவர்.

To Him belong the keys of the heavens and the earth. And those who disbelieve in the Ayât (proofs, evidence, verses, signs, revelations, etc.) of Allâh, such are they who will be the losers.

39:64

قُلْ أَفَغَيْرَ ٱللَّهِ تَأْمُرُوٓنِّىٓ أَعْبُدُ أَيُّهَا ٱلْجَـٰهِلُونَ

(நபியே!) நீர் கூறுவீராக:” அறிவீனர்களே! அல்லாஹ் அல்லாததை நான் வணங்கவேண்டுமென்று நிச்சயமாக என்னை நீங்கள் ஏவுகின்றீர்களா?”

Say (O Muhammad صلى الله عليه وسلم to the polytheists): "Do you order me to worship other than Allâh? O you fools!"

39:65

وَلَقَدْ أُوحِىَ إِلَيْكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلْخَـٰسِرِينَ

(நபியே!) “நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்துவிடும், நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர்” என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது.

And indeed it has been revealed to you (O Muhammad صلى الله عليه وسلم), as it was to those (Allâh’s Messengers) before you: "If you join others in worship with Allâh, (then) surely (all) your deeds will be in vain, and you will certainly be among the losers."1

  1. A) See the footnote of (V.2:165).

    B) See the footnote of (V.4:135).

39:66

بَلِ ٱللَّهَ فَٱعْبُدْ وَكُن مِّنَ ٱلشَّـٰكِرِينَ

ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துவோரில் நீர் ஆகிவிடுவீராக!

Nay! But worship Allâh (Alone and none else), and be among the grateful.

39:67

وَمَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦ وَٱلْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُۥ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَٱلسَّمَـٰوَٰتُ مَطْوِيَّـٰتٌۢ بِيَمِينِهِۦ ۚ سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ

மேலும், (நபியே!) அல்லாஹ்வை-அவனுடைய கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் மதிப்பளிக்கவில்லை, இன்னும், பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனுடைய (ஒரு கைப்) பிடியிலும், வானங்கள் (அனைத்தும்) அவனுடைய வலக்கையிலும் சுருட்டபட்டவையாயிருக்கும், அவன் தூயவன், இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.

They made not a just estimate of Allâh such as is due to Him. And on the Day of Resurrection the whole of the earth will be grasped by His Hand1 and the heavens will be rolled up in His Right Hand.Glorified be He, and High be He above all that they associate as partners with Him!

  1. See the footnote of (V.35:41).

39:68

وَنُفِخَ فِى ٱلصُّورِ فَصَعِقَ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُ ۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ

மேலும், ஸுர்(குழல்) ஊதப்படும், பின்னர் வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும்- அல்லாஹ் நாடியவர்களைத் தவிர- மூர்ச்சித்துச் சித்தமிழந்து விழுந்து) விடுவார்கள், பிறகு அதில் மறுமுறை ஊதப்படும், அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்) பார்ப்பவர்களாக (யாவரும் உயிர் பெற்று) எழுந்து நிற்பார்கள்.

And the Trumpet will be blown, and all who are in the heavens and all who are on the earth will swoon away, except him whom Allâh wills. Then it will be blown a second time, and behold they will be standing, looking on (waiting).1

  1. . a) Narrated Abû Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "I will be the first to raise my head after the second blowing of the Trumpet and will see Mûsâ (Moses) holding or clinging to the Throne; and I will not know whether he had been in… Show more

    .

    a) Narrated Abû Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "I will be the first to raise my head after the second blowing of the Trumpet and will see Mûsâ (Moses) holding or clinging to the Throne; and I will not know whether he had been in that state all the time or after the blowing of the Trumpet." (Sahih Al Bukhari, Vol. 6, Hadîth No.337).

    b) Narrated Abû Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Between the two blowings of the Trumpet there will be forty." The people said, "O Abû Hurairah! Forty days?" I refused to reply. They said, "Forty years?" I refused to reply. They said, "Forty Months?" I refused to reply and added: Everything of a human body will waste away, perish or decay except the last coccyx bone (of the tail) and from that bone Allâh will reconstruct the whole body. (Sahih Al-Bukhari, Vol. 6, Hadîth No.338).

39:69

وَأَشْرَقَتِ ٱلْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ ٱلْكِتَـٰبُ وَجِا۟ىٓءَ بِٱلنَّبِيِّـۧنَ وَٱلشُّهَدَآءِ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ

பூமி, தன் இரட்சகனின் “ஒளி”யைக் கொண்டு பிரகாசித்தும்விடும், குறிப்பேடு வைக்கப்பட்டும்விடும், நபிமார்களும், (அவர்களுடைய மற்ற) சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள், அவர்களுக்கிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.

And the earth will shine with the light of its Lord (Allâh, when He will come to judge among men): and the Book will be placed (open); and the Prophets and the witnesses will be brought forward; and it will be judged between them with truth, and they will not be wronged.

39:70

وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ أَعْلَمُ بِمَا يَفْعَلُونَ

ஒவ்வோர் ஆத்மாவும் - அது செய்த(தற்குரிய கூலியான)தை (பூரணமாக அதற்கு) நிறைவு செய்யப்படும், (அல்லாஹ்வாகிய) அவனோ, அவர்கள் செய்தவற்றை மிக்க அறிந்தவன்.

And each person will be paid in full of what he did; and He is Best Aware of what they do.

39:71

وَسِيقَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ جَهَنَّمَ زُمَرًا ۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا فُتِحَتْ أَبْوَٰبُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَآ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ ءَايَـٰتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَـٰذَا ۚ قَالُوا۟ بَلَىٰ وَلَـٰكِنْ حَقَّتْ كَلِمَةُ ٱلْعَذَابِ عَلَى ٱلْكَـٰفِرِينَ

மேலும், (அந்நாளில்) நிராகரித்துக்கொண்டிருந்தார்களே அத்தகையோர் கூட்டங்கூட்டமாக நரகத்தின் பால் இழுத்துக்கொண்டு வரப்படுவார்கள், இறுதியாக அங்கு அவர்கள் வந்தடைந்தால் அதன் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும், அதன் காவலாளர்கள் அவர்களிடம், “உங்களிலிருந்து (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) தூதர்கள், உங்கள் இரட்சகனுடைய வசனங்களை அவர்கள் உங்களுக்கு ஓதிக்காண்பிப்பவர்களாகவும், இந்த உங்களுடைய நாளின் சந்திப்பைப்பற்றி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்றும் கேட்பார்கள். அ(தற்க)வர்கள், “ஆம் (வந்தார்கள்). எனினும், நிராகரிப்போரின் மீது வேதனை பற்றிய வாக்கு உறுதியாகி விட்டது” என்றே கூறுவார்கள்.

And those who disbelieved will be driven to Hell in groups till, when they reach it, the gates thereof will be opened (suddenly like a prison at the arrival of the prisoners). And its keepers will say, "Did not the Messengers come to you from yourselves, reciting to you the Verses of your Lord, and warning you of the Meeting of this Day of yours?" They will say: "Yes, but the Word of torment has been justified against the disbelievers!"1

  1. See the footnote of (V.3:85).

39:72

قِيلَ ٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَـٰلِدِينَ فِيهَا ۖ فَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ

(ஆகவே) “நரகவாயில்களில்-அவற்றில் நிரந்தரமானவர்களாகத் தங்கியிருக்கும் நிலையில் நீங்கள் நுழைந்து விடுங்கள்” என்று கூறப்படும், ஆகவே, பெருமையடித்துக்கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.

It will be said (to them): "Enter you the gates of Hell, to abide therein. And (indeed) what an evil abode of the arrogant!"

39:73

وَسِيقَ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ إِلَى ٱلْجَنَّةِ زُمَرًا ۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا وَفُتِحَتْ أَبْوَٰبُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَـٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَٱدْخُلُوهَا خَـٰلِدِينَ

தங்கள் இரட்சகனுக்குப் பயந்து (நடந்து) கொண்டிருந்தார்களே அத்தகையோர், (அந் நாளில்) கூட்டங் கூட்டமாகச் சுவர்க்கத்தின் பால் அழைத்துக்கொண்டு)ம் வரப்படுவார்கள். இறுதியாக அதன் வாயில்கள் (அவர்கள் வரும் முன்பே) திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு அவர்கள் வந்தடைந்து விட்டால் (மகிழ்ச்சியடைவார்கள்), மேலும், அதன் காவலாளர்கள் அவர்களிடம் “உங்களுக்கு சாந்தி உண்டாவதாக! நீங்கள் நல்லவர்களாகி விட்டீர்கள் ஆகவே, நீங்கள் இதில் நிரந்தரமானவர்களாகத் தங்கியிருக்கும் நிலையில் நுழைந்து விடுங்கள்” என்று கூறுவார்கள்.

And those who kept their duty to their Lord (Al-Muttaqûn1) will be led to Paradise in groups, till, when they reach it, and its gates will be opened (before their arrival for their reception) and its keepers will say: Salâmun ‘Alaikum (peace be upon you)! You have done well, so enter here to abide therein."

  1. "Al-Muttaqûn" See (V.2:2).

39:74

وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى صَدَقَنَا وَعْدَهُۥ وَأَوْرَثَنَا ٱلْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ ٱلْجَنَّةِ حَيْثُ نَشَآءُ ۖ فَنِعْمَ أَجْرُ ٱلْعَـٰمِلِينَ

அ(தற்க)வர்கள், “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான், சுவனபதியில் நாங்கள் நாடிய இடத்தில் நாங்கள் குடியிருக்க (அதன்) பூமியை எங்களுக்கு அனந்தரமாக்கியும் கொடுத்தான்” என்றும் கூறுவார்கள், எனவே நன்மைசெய்தோர்களின் கூலி, (இவ்வாறு) மிக நல்லதாகவே இருக்கிறது.

And they will say: "All the praises and thanks be to Allâh Who has fulfilled His Promise to us and has made us inherit (this) land. We can dwell in Paradise where we will; how excellent a reward for the (pious, good) workers!"

39:75

وَتَرَى ٱلْمَلَـٰٓئِكَةَ حَآفِّينَ مِنْ حَوْلِ ٱلْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ ۖ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْحَقِّ وَقِيلَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

மேலும், “அர்ஷை” சுற்றிச் சூழ்ந்தவர்களாக மலக்குகளை (நபியே! அந்நாளில்) நீர் காண்பீர், அவர்கள் தங்கள் இரட்சகனின் புகழைக் கொண்டு துதித்துக் கொண்டிருப்பார்கள், (சிலரை சுவனத்திற்கும், பலரை நரகத்திற்கும் செல்லுமாறு கட்டளையிட்டு) அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். “அகிலத்தார்க்கெல்லாம் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரியவை” என்று கூறப்படும்.

And you will see the angels surrounding the Throne (of Allâh) from all round, glorifying the praises of their Lord (Allâh). And they (all the creatures) will be judged with truth. And it will be said, "All the praises and thanks be to Allâh, the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists)."

The Noble Qur'an — Az-Zumar