மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّـٰتِ عَدْنٍ ٱلَّتِى وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّـٰتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
“எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவனபதிகளில் அவர்களையும், அவர்களுடைய மூதாதையரிலும், அவர்கள் மனைவியரிலும், அவர்களுடைய சந்ததியினரிலும் (ஈமான் கொண்டு, நற்செயல்புரிந்து) யார் நல்லோராகி விட்டாரோ அவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீயே (யாவரையும்) மிகைத்தோன், (யாவையும் அறிந்த) தீர்க்கமான அறிவுடையோன்.”
"Our Lord! And make them enter the ‘Adn (Eden) Paradise (everlasting Gardens) which you have promised them - and to the righteous among their fathers, their wives, and their offspring! Verily, You are the All-Mighty, the All-Wise.
وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِ ۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُۥ ۚ وَذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
மேலும், “(சகல) தீமைகளிலிருந்தும் (அவற்றின் தண்டனையிலிருந்தும்), அவர்களைக் காப்பாயாக! அன்றைய தினம், எவரை நீ தீமைகளிலிருந்து காத்துக்கொள்கிறாயோ அவர்மீது திட்டமாக, நீ அருள் புரிந்துவிட்டாய், இன்னும், அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவார்கள்).
"And save them from (the punishment, for what they did of) the sins, and whomsoever You save from (the punishment for what he did of) the sins (i.e. pardon him) that Day, him verily, You have taken into mercy." And that is the supreme success.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُنَادَوْنَ لَمَقْتُ ٱللَّهِ أَكْبَرُ مِن مَّقْتِكُمْ أَنفُسَكُمْ إِذْ تُدْعَوْنَ إِلَى ٱلْإِيمَـٰنِ فَتَكْفُرُونَ
நிச்சயமாக நிராகரித்துவிட்டார்களே அவர்கள் - “உங்களையே நீங்கள் கோபித்துகொள்வதை விட அல்லாஹ்வின் கோபம் (உங்களின் மீது) மிகப்பெரியதாகும், (ஏனென்றால்,) நீங்கள் விசுவாசத்தின்பால் (உலகில்) அழைக்கப்பட்ட சமயத்தில் (அதனை) நிராகரித்துவிட்டீர்கள்” என்றும் (மறுமையில் மலக்குகளால்) - அழைக்கப்(பட்டு கூறப்)படுவார்கள்.
Those who disbelieve will be addressed (at the time of entering the Fire): "Allâh’s aversion was greater towards you (in the worldly life when you used to reject the Faith) than your aversion towards one another (now in the Fire of Hell, as you are now enemies to one another), when you were called to the Faith but you used to refuse."
قَالُوا۟ رَبَّنَآ أَمَتَّنَا ٱثْنَتَيْنِ وَأَحْيَيْتَنَا ٱثْنَتَيْنِ فَٱعْتَرَفْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَىٰ خُرُوجٍ مِّن سَبِيلٍ
அ(தற்க)வர்கள், “எங்கள் இரட்சகனே! இருமுறை நீ எங்களை மரணமடையச் செய்தாய், இன்னும், இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய், ஆகவே, எங்களுடைய பாவங்களை நாங்கள் ஒப்புக்கொண்டோம், எனவே, (இதிலிருந்து நாங்கள் தப்பித்து) வெளியேறுவதற்கு ஏதும் வழி உண்டா?” என்று அவர்கள் கேட்பார்கள்.
They will say: "Our Lord! You have made us to die twice (i.e. we were dead in the loins of our fathers and dead after our life in this world), and You have given us life twice (i.e. life when we were born and life when we are Resurrected)! Now we confess our sins, then is there any way to get out (of the Fire)?" (Tafsir Al-Qurtubi,)
ذَٰلِكُم بِأَنَّهُۥٓ إِذَا دُعِىَ ٱللَّهُ وَحْدَهُۥ كَفَرْتُمْ ۖ وَإِن يُشْرَكْ بِهِۦ تُؤْمِنُوا۟ ۚ فَٱلْحُكْمُ لِلَّهِ ٱلْعَلِىِّ ٱلْكَبِيرِ
இ(த்தண்டனையான)து- நிச்சயமாக அதன் காரணம்: அல்லாஹ், அவன் தனித்தவனாக அழைக்கப்பட்டால் நீங்கள் நிராகரித்தீர்கள், மேலும், அவனுக்கு (உங்கள் தெய்வங்கள்) இணையாக்கப்பட்டால் (அதை) விசுவாசித்தீர்கள், இப்பொழுது தீர்ப்பு (வழங்குவது) மிக்க உயர்வானவனாகிய மிகப் பெரியவனான அல்லாஹ்விற்கு (மட்டும்) உரியதாகும் (என்று கூறப்படும்).
(It will be said): "This is because, when Allâh Alone was invoked (in worship) you disbelieved (denied), but when partners were joined to Him, you believed! So the judgement is only with Allâh, the Most High, the Most Great!1"
Narrated ‘Abdullâh رضي الله عنه: "The Prophet صلى الله عليه وسلم said one statement and I said another. The Prophet صلى الله عليه وسلم said: "Whoever dies while still invoking anything other than Allâh as a rival to Allâh, will enter Hell (Fire)." And I said, ‘Whoever dies without invoking anything as a rival to Allâh, will enter Paradise.’" (Sahih Al-Bukhari, Vol. 6, Hadith No. 24).
هُوَ ٱلَّذِى يُرِيكُمْ ءَايَـٰتِهِۦ وَيُنَزِّلُ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ رِزْقًا ۚ وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ
அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அவன் காண்பிக்கிறான், மேலும், வானத்திலிருந்து உங்களுக்கு உணவை இறக்கிவைக்கிறான், (ஒவ்வொரு விஷயத்திலும் அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் பக்கம்) திரும்புபவர்களைத் தவிர, (வேறெவரும் இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறவுமாட்டார்கள்.
It is He Who shows you His Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) and sends down (rain with which grows) provision for you from the sky. And none remembers but those who turn (to Allâh in obedience and) in repentance (by begging His Pardon and by worshipping and obeying Him Alone and none else).
فَٱدْعُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ وَلَوْ كَرِهَ ٱلْكَـٰفِرُونَ
ஆகவே, நிராகரித்துக் கொண்டிருப்போர் வெறுத்தபோதிலும், நீங்கள் அல்லாஹ்வை- முற்றிலும் வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றவர்களாக்கி வைக்கிறவர்களாக (பிரார்த்தித்து) அழையுங்கள்.
So, call you (O Muhammad صلى الله عليه وسلم and the believers) upon (or invoke) Allâh making (your) worship pure for Him (Alone) (by worshipping none but Him and by doing religious deeds sincerely for Allâh’s sake only and not to show off and not to set up rivals with Him in worship), however much the disbelievers (in the Oneness of Allâh) may hate (it).
رَفِيعُ ٱلدَّرَجَـٰتِ ذُو ٱلْعَرْشِ يُلْقِى ٱلرُّوحَ مِنْ أَمْرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ لِيُنذِرَ يَوْمَ ٱلتَّلَاقِ
(அவன்) பதவிகளை உயர்த்துபவன், அர்ஷூடையவன், (தன்னைச்) சந்திக்கும் நாளை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில், தான் நாடியவர்களின் மீது தன் கட்டளையின்படி வஹீயை இறக்கிவைக்கின்றான்.
(He is Allâh) Owner of High Ranks and Degrees, the Owner of the Throne. He sends the revelation by His Command to any of His slaves He wills, that he (the person who receives revelation) may warn (men) of the Day of Mutual Meeting (i.e. the Day of Resurrection).
يَوْمَ هُم بَـٰرِزُونَ ۖ لَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِنْهُمْ شَىْءٌ ۚ لِّمَنِ ٱلْمُلْكُ ٱلْيَوْمَ ۖ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ
(மரணித்த) அவர்கள் (மண்ணறைகளிலிருந்து) வெளிப்பட்டவர்களாக வரும் நாளில், அவர்களிலிருந்து எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது, “ஆட்சி, இன்று யாருக்குரியது?” (என்று கேட்டுவிட்டு, அதற்கு விடையாக, “யாவரையும்) அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” (என்று அவன் கூறுவான்).
The Day when they will (all) come out, nothing of them will be hidden from Allâh. Whose is the kingdom this Day? (Allâh Himself will reply to His Question): It is Allâh’s the One, the Irresistible!