மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
۞ مَّثَلُ ٱلْجَنَّةِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۖ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ أُكُلُهَا دَآئِمٌ وَظِلُّهَا ۚ تِلْكَ عُقْبَى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ ۖ وَّعُقْبَى ٱلْكَـٰفِرِينَ ٱلنَّارُ
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையாகிறது, நீரருவிகள் அதன் கீழ் ஓடிக்கொண்டிருக்கும், (கனி வகைகளால்) அதன் உணவும் நிலையானதாகும், அதன் நிழலும் (அவ்வாறே நிலையானதாகும்) இது பயபக்தியுடையோரின் முடிவாகும், இன்னும் நிராகரிப்போரின் முடிவு நரகமாகும்
The description of the Paradise which the Muttaqûn (the pious - See V.2:2) have been promised: Underneath it rivers flow, its provision is eternal and so is its shade; this is the end (final destination) of the Muttaqûn (the pious - See V.2:2), and the end (final destination) of the disbelievers is Fire. (See Verse 47:15)
وَٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَفْرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ ۖ وَمِنَ ٱلْأَحْزَابِ مَن يُنكِرُ بَعْضَهُۥ ۚ قُلْ إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ وَلَآ أُشْرِكَ بِهِۦٓ ۚ إِلَيْهِ أَدْعُوا۟ وَإِلَيْهِ مَـَٔابِ
நாம் எவர்களுக்கு வேதம் கொடுத்திருந்தோமோ அத்தகையவர்கள் உம்பால் இறக்கப்பட்டதைப்பற்றி மகிழ்ச்சியடைவார்கள், (அதில்) சிலவற்றை மறுப்பவர்களும் அக்கூட்டத்தார்களில் இருக்கிறார்கள், ஆகவே நீர், நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம் அல்லாஹ்வையே நான் வணங்க வேண்டு,ம், அவனுக்கு யாதொன்றையும் நான் இணையாக்கக் கூடாது” என்றுதான், அவன் பக்கமே (உங்களை) நான் அழைக்கின்றேன், இன்னும் அவன் பக்கமே (என்) மீட்சியும் இருக்கின்றது” என்று அவர்களுக்குக்) கூறுவீராக!
Those to whom We have given the Book (such as ‘Abdullâh bin Salâm and other Jews who embraced Islâm), rejoice at what has been revealed unto you (i.e. the Qur’ân),1 but there are among the Confederates (from the Jews and pagans) those who reject a part thereof. Say (O Muhammad صلى الله عليه و سلم): "I am commanded only to worship Allâh (Alone) and not to join partners with Him. To Him (Alone) I call and to Him is my return."
See the footnote of (V.5:66).
وَكَذَٰلِكَ أَنزَلْنَـٰهُ حُكْمًا عَرَبِيًّا ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا وَاقٍ
இன்னும், இவ்வாறே அரபி மொழியில் சட்டதிட்டங்களைக் கொண்டதாக (குர் ஆனாகிய) இதனை நாம் இறக்கி வைத்திருக்கிறோம், ஆகவே, உமக்கு (குர் ஆனின்) ஞானம் வந்து விட்டதற்குப் பின்னரும், நீர் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவி செய்பவரும் காப்பவரும் (எவரும்) இல்லை.
And thus have We sent it (the Qur’ân) down to be a judgement of authority in Arabic. Were you (O Muhammad صلى الله عليه و سلم) to follow their (vain) desires after the knowledge which has come to you, then you will not have any Walî (protector) or Wâq (defender) against Allâh.
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَٰجًا وَذُرِّيَّةً ۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۗ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் தூதர்களை அனுப்பியிருக்கிறோம், அவர்களுக்கு மனைவியரையும் சந்ததியினரையும் நாம் ஆக்கியிருந்தோம், அன்றியும், அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தத் தூதருக்கும் எத்தகைய அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கில்லை, ஒவ்வொரு தவணைக்கும் (பதிவு) ஏடு உள்ளது.
And indeed We sent Messengers before you (O Muhammad صلى الله عليه و سلم) and made for them wives and offspring. And it was not for a Messenger to bring a sign except by Allâh’s Leave. (For) every matter there is a Decree (from Allâh). [Tafsir Al-Tabari]
يَمْحُوا۟ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ۖ وَعِندَهُۥٓ أُمُّ ٱلْكِتَـٰبِ
(அப்பதிவேட்டில்) அல்லாஹ் அவன் நாடியதை அழித்துவிடுவான், (அவன் நாடியதை) நிலைப்படுத்தியும் விடுவான், இன்னும், (அனைத்திற்கும்) மூலப்பதிவேடு அவனிடத்தில் உள்ளது.
Allâh blots out what He wills and confirms (what He wills). And with Him is the Mother of the Book (Al-Lauh Al-Mahfûz)
وَإِن مَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَـٰغُ وَعَلَيْنَا ٱلْحِسَابُ
(நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்த (வேதனைகளில்) சிவவற்றை (நீர் உயிரோடிருக்கும்போதே உம்முடைய கண்ணால் நீர் காணும்படி) நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது (அது வருமுன்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (நீர் கவலைப்படாதீர்!,) உம்முடைய கடமையெல்லாம் தூதை எத்தி வைப்பதுதான், இன்னும், (அவர்களுடைய) கணக்கு நம் மீதாகும்.
Whether We show you (O Muhammad صلى الله عليه و سلم) part of what We have promised them or cause you to die, your duty is only to convey (the Message) and on Us is the reckoning.
أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا ۚ وَٱللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِۦ ۚ وَهُوَ سَرِيعُ ٱلْحِسَابِ
பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? மேலும் அல்லாஹ் தீர்ப்பளிப்பான், அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக் கூடியவர் எவருமில்லை, இன்னும், அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்.
See they not that We gradually reduce the land (of the disbelievers, by giving it to the believers, in war victories) from its outlying borders. And Allâh judges, there is none to put back His Judgement and He is Swift at reckoning.
وَقَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَلِلَّهِ ٱلْمَكْرُ جَمِيعًا ۖ يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ ۗ وَسَيَعْلَمُ ٱلْكُفَّـٰرُ لِمَنْ عُقْبَى ٱلدَّارِ
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், திட்டமாகச் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர், ஆகவே, சூழ்ச்சிகள் (அதனுடைய தண்டனைகள்) யாவும் அல்லாஹ்விடமே (அவன் கைவசமே) உள்ளன, (ஏனென்றால்) ஒவ்வோர் ஆத்மாவும் சம்பாதிக்கின்றவற்றை அவன் (திட்டமாக) நன்கறிவான், ஆகவே, இறுதி வீடு யாருக்கு (நல்லதாக இருக்கும்) என்பதை நிராகரிப்போர் அறிந்து கொள்வார்கள்.
And verily, those before them did devise plots, but all planning is Allâh’s. He knows what every person earns, and the disbelievers will know who gets the good end (final destination).