نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
நூன், எழுதுகோலின்மீதும், (அதன்மூலம்) அவர்கள் எழுதுகிறவற்றின் மீதும் சத்தியமாக,
Nûn. [These letters (Nun, etc.) are one of the miracles of the Qur’an, and none but Allah (Alone) knows their meanings]. By the pen and by what they (the angels) write (in the Records of men).
مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ
(நபியே)! உமதிரட்சகனின் அருளால் நீர் பைத்தியக்காரர் அல்லர்.
You (O Muhammad صلى الله عليه وسلم), by the Grace of your Lord, are not mad.
وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
மேலும், நிச்சயமாக உமக்கு முடிவுறாத கூலி இருக்கின்றது.
And Verily, for you (O Muhammad صلى الله عليه وسلم) will be an endless reward.
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
(நபியே!) நிச்சயமாக மகத்தான நற்குணத்தின் மீதும் நீர் இருக்கின்றீர்.
And Verily, you (O Muhammad صلى الله عليه وسلم) are on an exalted (standard of) character.
فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ
நீரும் பார்ப்பீர், அவர்களும் பார்ப்பார்கள்.
You will see, and they will see,
بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ
(இருசாராராகிய) உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை-
Which of you is afflicted with madness.
إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ
நிச்சயமாக உமதிரட்சகன், அவன் வழியைவிட்டுத் தவறியவர் யார் என்பதை அவனே மிக அறிந்தவன், (அதுபோலவே) நேர் வழி அடைந்தோரையும் அவனே மிக அறிந்தவன்.
Verily, your Lord is the Best Knower of him who has gone astray from His Path, and He is the Best Knower of those who are guided.
فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ
ஆகவே, (நபியே! உம்மைப்) பொய்யாக்கக் கூடியவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.
So (O Muhammad صلى الله عليه وسلم) obey you not the deniers [(of Islâmic Monotheism - those who belie the Verses of Allâh), the Oneness of Allâh, and the Messengership of Muhammad صلى الله عليه وسلم]1
See the footnote of (V.3:85).
وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
(அவர்களின் வணக்க வழிபாடுகளில் சலுகை அளித்து) நீர் தளர்த்தினால் (உமக்கு) அவர்களும் தளர்ந்து செல்வதை விரும்புகின்றனர்.
They wish that you should compromise (in religion out of courtesy) with them: so they (too) would compromise with you.
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ
இழிந்தவனாக, அதிகமாக சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.
And (O Muhammad صلى الله عليه وسلم) obey you not everyone Hallaf Mahîn (the one who swears much and is a liar or is worthless). [Tafsir At-Tabari]
هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍ
(அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித் திரிபவன், கோள் சொல்லிக்கொண்டு நடப்பவன்.
A slanderer, going about with calumnies,
مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ
நன்மையானவற்றை அதிகமாகத் தடுத்துக்கொண்டிருப்பவன், வரம்பு மீறியவன், பாவம் செய்பவன்.
Hinderer of the good, transgressor, sinful,
عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ
முரட்டுச் சுபாவமுடையவன், அதற்குப் பிறகு (தந்தை பெயர் தெரியா) இழி பிறப்புடையவன்.
Cruel, and moreover base-born (of illegitimate birth).
أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
(இத்தன்மையுடையவன்) செல்வமும், ஆண்மக்களும் உடையவனாக அவனிருக்கிறான் என்பதால், (அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்)
(He was so) because he had wealth and children.
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
நம் வசனங்கள் அவன் மீது ஓதிக்காண்பிக்கப்பட்டால், “(இது) முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவன் கூறுகின்றான்.
When Our Verses (of the Qur’ân) are recited to him, he says: "Tales of the men of old!"
سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ
அவனுடைய மூக்கின் மீது நாம் ஓர் அடையாளமிடுவோம்.
We shall brand him on the snout (nose)!
إِنَّا بَلَوْنَـٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَـٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ
நிச்சயமாக நாம் (யமன் நாட்டிலுள்ள “ஸன் ஆ”வை அடுத்துள்ள ஊர்வாசிகளில்) அத்தோட்டத்திற்குரியவர்களைச் சோதித்தவாறே (மக்கத்து காஃபிர்களான) அவர்களை நாம் சோதித்தோம், (அத்தோட்டத்திற்குரியவர்களான) அவர்கள் அதனை அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோமென்று சத்தியம் செய்த சமயத்தில்,
Verily, We have tried them as We tried the people of the garden, when they swore to pluck the fruits of the (garden) in the morning,
وَلَا يَسْتَثْنُونَ
(“இன்ஷா அல்லாஹ்”) அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை.
Without saying: Inshâ’ Allâh (If Allâh wills).
فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ
ஆகவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருக்க, உம் இரட்சகனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பான)து அதன் மீது சுற்றி (அழித்து) விட்டது.
Then there passed by on the (garden) a visitation (fire) from your Lord at night and burnt it while they were asleep.
فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ
அ(த்தோட்டமான)து, கறுத்த சாம்பல் போலாகிவிட்டது.
So the (garden) became black by the morning, like a pitch dark night (in complete ruins).
فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ
எனவே, (அதனை அறியாது) காலைப்பொழுதை அவர்கள் அடைந்த சமயம் ஒருவரையொருவர் அழைத்தனர்.
Then they called out one to another as soon as the morning broke.
أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَـٰرِمِينَ
“(உங்கள் விளைச்சலை) நீங்கள் அறுப்பவர்களாக இருந்தால், (அதனை அறுவடை செய்ய) உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்” (என்றும் கூறிக்கொண்டார்கள்)
Saying: "Go to your tilth in the morning, if you would pluck the fruits."
فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَـٰفَتُونَ
ஆகவே, அவர்கள் ஒருவரோடொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்.
So they departed, conversing in secret low tones (saying):
أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ
இன்றையத்தினம் (யாசகம் கேட்டு வரக்கூடிய) எந்த ஒரு ஏழையும் அ(த்தோட்டத்)தில் நிச்சயமாக நுழையக்கூடாது என (மெதுவாக பேசிக்கொண்டனர்)
"No Miskîn (poor man) shall enter upon you into it today."
وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍ قَـٰدِرِينَ
அதிகாலையில் (ஏழைகள் எதையும் பெறாதவாறு) தடுத்துவிடுவதன் மீது ஆற்றலுடையவர்களாக (தங்களை எண்ணிக்கொண்டு) சென்றார்கள்.
And they went in the morning with strong intention, thinking that they have power (to prevent the poor taking anything of the fruits therefrom).
فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ
(அங்கு சென்று, அழிந்துவிட்ட நிலையில்) அதனை அவர்கள் பார்த்தபோது (இது நம்முடையதல்ல,) நிச்சயமாக நாம் வழி தவறிவிட்டவர்கள்” என்று கூறினார்கள்.
But when they saw the (garden), they said: "Verily, we have gone astray."
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
(பின்னர், அதனைத் தங்களுடையதுதான் என அறிந்து,) இல்லை! நாம் தடுக்கப்பட்டு (பாக்கியமற்றவர்களாகி) விட்டவர்கள் (என்று கூறினார்கள்.)
(Then they said): "Nay! Indeed we are deprived of (the fruits)!"
قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ
அவர்களிலுள்ள மிகுந்த நடுநிலையாளர் ஒருவர் அவர்களிடம், “நீங்கள் (அல்லாஹ்வைத்) துதி செய்திருக்க வேண்டாமா, என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார்.
The best among them said: "Did I not tell you: why say you not: Inshâ’ Allâh (If Allâh wills)."
قَالُوا۟ سُبْحَـٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَـٰلِمِينَ
அ(தற்க)வர்கள் “எங்கள் இரட்சகன் மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நாங்கள் தாம் அநியாயக்காரர்களாகிவிட்டோம்” என்று கூறினர்.
They said: "Glory to Our Lord! Verily, we have been Zâlimûn (wrong-doers)."
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَـٰوَمُونَ
பின்னர், அவர்களில் சிலர் சிலரின் மீது நிந்தனை கூறியவர்களாக முன்னோக்கினர்.
Then they turned one against another, blaming.
قَالُوا۟ يَـٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَـٰغِينَ
“எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் வரம்பை மீறியவர்களாகிவிட்டோம்” என்று கூறினர்.
They said: "Woe to us! Verily, we were Tâghûn (transgressors and disobedient)
عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ
எங்கள் இரட்சகன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நிச்சயமாக நாங்கள் இரட்சகனின் பக்கமே (அவனது அருளை) ஆசிக்கிறவர்களாக இருக்கிறோம் (என்றும் கூறினார்கள்)
We hope that our Lord will give us in exchange a better (garden) than this. Truly, we turn to our Lord (wishing for good that He may forgive our sins and reward us in the Hereafter).
كَذَٰلِكَ ٱلْعَذَابُ ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
(நபியே!) இவ்வாறே வேதனை (அல்லாஹ் நாடியவர்களை வந்தடையும்) மேலும், அவர்கள் அறிந்தவர்களாக இருப்பார்களானால் திட்டமாக மறுமையின் வேதனை மிகப் பெரியதாகும்.
Such is the punishment (in this life), but truly, the punishment of the Hereafter is greater if they but knew.
إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّـٰتِ ٱلنَّعِيمِ
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்குத் தங்கள் இரட்சகனிடத்தில் அருட்கொடைகளுடைய சுவனங்களுண்டு.
Verily, for the Muttaqûn (the pious - See V.2:2) are Gardens of delight (Paradise) with their Lord.
أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ
முஸ்லிம்களை, குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
Shall We then treat the Muslims (believers of Islamic Monotheism, doers of righteous deeds) like the Mujrimûn (criminals, polytheists and disbelievers, etc.)?
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு நீங்கள் தீர்ப்பளிக்கின்றீர்கள்?
What is the matter with you? How judge you?
أَمْ لَكُمْ كِتَـٰبٌ فِيهِ تَدْرُسُونَ
அல்லது, உங்களிடம் (ஏதும் வேத) நூல் இருந்து அதில் (முஸ்லிம்கள் பாவிகளைப் போன்று ஆக்கப்படுவார்களென) நீங்கள் படிக்கின்றீர்களா?
Or have you a Book wherein you learn,
إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
நீங்கள் தேர்ந்தெடுப்பவை நிச்சயமாக உங்களுக்கு அதில் உள்ளன (என அவ்வேதத்தில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?)
That you shall therein have all that you choose?
أَمْ لَكُمْ أَيْمَـٰنٌ عَلَيْنَا بَـٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ
அல்லது நீங்கள் தீர்ப்புச் செய்பவை நிச்சயமாக உங்களுக்கு உண்டு என நம் மீது மறுமை நாள்வரை உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சத்திய(ப்பிரமாண)ங்கள் உண்டா? (அவ்வாறு எதுவும் நம்முடன் உங்களுக்கில்லை)
Or have you oaths from Us, reaching to the Day of Resurrection, that yours will be what you judge?
سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ
(நபியே!) “(அவ்வாறெல்லாம் கூறுகின்ற) அவர்களில் அதற்குப் பொறுப்பேற்பவர் யார்?” என்று அவர்களிடம் கேட்பீராக
Ask them, which of them will stand surety for that!