أَوْ كَٱلَّذِى مَرَّ عَلَىٰ قَرْيَةٍ وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْىِۦ هَـٰذِهِ ٱللَّهُ بَعْدَ مَوْتِهَا ۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِا۟ئَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُۥ ۖ قَالَ كَمْ لَبِثْتَ ۖ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۖ قَالَ بَل لَّبِثْتَ مِا۟ئَةَ عَامٍ فَٱنظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ ۖ وَٱنظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ ءَايَةً لِّلنَّاسِ ۖ وَٱنظُرْ إِلَى ٱلْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعْلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
அல்லது ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் (நபியே! நீர் பார்க்கவில்லையா? அவர்) அதிலுள்ள முகடுகளின்மீது அவை வீழ்ந்து கிடக்கக் கண்டு, இதனை எவ்வாறு இது இறந்தபின் அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்று கூறினார். ஆகவே, அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரை மரணித்திருக்கச் செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரிடம்) “நீர் எவ்வளவு காலம் இருந்தீர் எனக் கேட்டான். அ(தற்க)வர் “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சில பாகம் இருந்தேன்” எனக் கூறினார். (அதற்கு அல்லாஹ்) “அன்று! நீர் நூறு வருடங்கள் (இந்நிலையில்) இருந்தீர்” என்று கூறினான். ஆகவே, உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும் நீர் நோக்குவீராக! அவை எவ்வித மாறுதலும் அடையவில்லை. இன்னும், உம்முடைய கழுதையின்பால் நோக்குவீராக! மனிதர்களுக்கு உம்மை ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்குவதற்காவும் (மரணிக்கச்செய்து உம்மை உயிர்கொடுத்து எழுப்பினோம்) இன்னும், (அக்கழுதையின் எலும்புகளின்பால் எவ்வாறு அவைகளைச் சேர்த்து பின்னர் அதன்மீது மாமிசத்தை அணிவிக்கின்றோம்” என்று நீர் நோக்குவீராக: பின்னர் அவருக்குத் தெளிவானபோது அவர் “நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் என்று நான் அறிகிறேன்” என்று கூறினார்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Or like the one who passed by a town while it had tumbled over its roofs. He said: "Oh! How will Allâh ever bring it to life after its death?" So Allâh caused him to die for a hundred years, then raised him up (again). He said: "How long did you remain (dead)?" He (the man) said: "(Perhaps) I remained (dead) a day or part of a day". He said: "Nay, you have remained (dead) for a hundred years, look at your food and your drink, they show no change; and look at your donkey! And thus We have made of you a sign for the people. Look at the bones, how We bring them together and clothe them with flesh". When this was clearly shown to him, he said, "I know (now) that Allâh is Able to do all things."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali