وَإِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّ أَرِنِى كَيْفَ تُحْىِ ٱلْمَوْتَىٰ ۖ قَالَ أَوَلَمْ تُؤْمِن ۖ قَالَ بَلَىٰ وَلَـٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِى ۖ قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ ٱلطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ ٱجْعَلْ عَلَىٰ كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ٱدْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا ۚ وَٱعْلَمْ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
இன்னும், இப்றாஹீம், “என் இரட்சகனே! மரணித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய்? என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக” எனக் கூறிய போது அவன், “நீர் நம்பவில்லையா?” என்று கேட்டான், அ(தற்க)வர் “ஏன் இல்லை? (நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்) என்னுடைய இதயம் அமைதியடைவதற்காக” என அவர் கூறினார். (அதற்கு அல்லாஹ்) “பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து பின்னர் நீர் அவைகளைத் துண்டாக்கி அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விடுவீராக! பின்னர் நீர் அழைப்பீராக! அவை உம்மிடம் வேகமாய் வந்து சேரும். மேலும் நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன் என்பதை நீர் அறிந்து கொள்வீராக” எனக் கூறினான்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And (remember) when Ibrâhîm (Abraham) said, "My Lord! Show me how You give life to the dead." He (Allâh) said: "Do you not believe?" He [Ibrâhîm (Abraham)] said: "Yes (I believe), but to be stronger in Faith." He said: "Take four birds, then cause them to incline towards you (then slaughter them, cut them into pieces), and then put a portion of them on every hill, and call them, they will come to you in haste. And know that Allâh is All-Mighty, All-Wise."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali