
By
(அல்லாஹ் அவர்களை பாதுகாக்கட்டும்)
காலை நேரத் அத்காருகள் ஓதப்படவேண்டிய நேரம் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகிலிருந்து சூரியன் உதயம்வரை.
அதிகாலை (ஃபஜ்ர் ஸாதிக்) நேரம் நுழைந்து ஃபஜ்ர் பாங்கு சொல்லப்பட்ட நேரத்திலிருந்தே கூட இந்தத் திக்ருகளை ஓதுவதில் தவறில்லை.
இந்நேரத்தில் ஓதாமல் ஒருவர் மறந்துவிட்டாலோ அல்லது வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலோ, சூரியன் உதித்த பிறகு காலை 10 மணி அல்லது லுஹர் தொழுகைக்கு முந்தைய நேரம் வரை எப்போது வேண்டுமானாலும் ஓதிக் கொள்ளலாம். இதில் தவறேதுமில்லை.
சுருக்கம்: இந்தத் திக்ருகளை அவற்றுக்குரிய நேரங்களில் ஓதத் தவறியவர்கள், காலை திக்ருகளை லுஹர் வரைக்கும், மாலை திக்ருகளை இஷா வரைக்கும் (மறந்த நிலையில் இஷாவுக்குப் பிறகும்) ஓதிக் கொள்ள அனுமதி உள்ளது.
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர். ரப்பி அஸ்அலுக கைர மா ஃபீ ஹாதல் யவ்மி வ கைர மா பாதஹு, வ அவூது பிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதல் யவ்மி வ ஷர்ரி மா பாதஹு. ரப்பி அவூது பிக மினல் கஸலி வஸூஇல் கிபர். ரப்பி அவூது பிக மின் அதாபின் ஃபின் நாரி வ அதாபின் ஃபில் கப்ர் ஒரு முறை
பொருள்: நாம் விடியற் காலையை அடைந்தோம்; ஆட்சியும் அல்லாஹ்வுக்கே உரியதாக விடியற் காலையை அடைந்தது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை. அவனுக்கே ஆட்சியும் புகழும் உரியன. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் உடையவன். என் ரப்பே! இந்த இரவின் நன்மையையும், இதற்குப் பின்னுள்ள நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கிலிருந்தும், இதற்குப் பின்னுள்ள தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் ரப்பே! சோம்பலில் இருந்தும், முதுமையின் தீங்கில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் ரப்பே! நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் 1ஸஹீஹ் முஸ்லிம் (2723)
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ
அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா, வபிக அம்ஸைனா, வபிக நஹ்யா, வபிக நமூத்து, வஇலைகன் நுஷூர்.ஒரு முறை
பொருள்: யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாங்கள் வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே நாங்கள் மரணிக்கிறோம். மேலும், (மரணத்திற்குப் பின்) உயிர் கொடுத்து எழுப்பப்படுதல் உன்னிடமே உள்ளது.2ஸஹீஹ். இப்னு அபீ ஷைபா (29291), அஹ்மத் (8649), புகாரியின் அல்-அதபுல் முஃப்ரத் (1199), இப்னு மாஜா (3868), அபூ தாவூத் (5068), அத்-திர்மிதீ (3391), நஸயீ அல்-குப்ரா (9752), இப்னு ஹிப்பான் (6585), தப்ரானியின் அத்-துஆ (292), பைஹகீயின் அத்-தஃவாதுல் கபீர் (25)
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்த்த ரப்பீ, லா இலாஹ இல்லா அன்த்த, கலக்தனீ வஅன அப்துக, வஅன அலா அஹ்திக வ வஃதிக மஸ்ததஃத்து, அவூது பிக மின் ஷர்ரி மா ஸனஃத்து, அபூஉ லக பினிஃமதிக அலைய, வ அபூஉ லக பிதன்ம்பீ, ஃபக்ஃபிர் லீ ஃபஇன்னஹு லா யக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த ஒரு முறை
பொருள்: யா அல்லாஹ்! நீயே என் ரப்பு. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவை வேறு எவையுமில்லை. நீயே என்னைப் படைத்தாய், நான் உனது அடிமை. உனக்கு நான் அளித்த வாக்குறுதியிலும் உடன்படிக்கையிலும் என்னால் இயன்றவரை உறுதியாக இருக்கிறேன். நான் செய்த தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருட்கொடைகளை நான் ஒப்புக்கொள்கிறேன்; எனது பாவங்களையும் நான் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!ஏனெனில் உன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது.3ஸஹீஹுல் புகாரி (6306)
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி. நூறு முறை
பொருள்: அல்லாஹ் (அனைத்து குறைகளிலிருந்தும் அப்பாற்பட்ட) பரிசுத்தமானவன். புகழுக்குரியவனான அவனைப் புகழ்கிறோம்.4ஸஹீஹ் முஸ்லிம் (2692)
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர் நூறு முறை அல்லது பத்து முறை அல்லது ஒரு முறை
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை. அவனுக்கே ஆட்சியும் புகழும் உரியன. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் உடையவன்.5ஸஹீஹுல் புகாரி (3293), ஸஹீஹ் முஸ்லிம் (2691). இந்த வாசகம் (ஸஹீஹ் முஸ்லிமுடையது)
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியத ஃபித் துன்யா வல் ஆகிரத்தி, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல் ஆஃபியத ஃபீ தீனீ வ துன்யாய வ அஹ்லீ வ மாலீ, அல்லாஹும்மஸ்த்துர் அவ்ராத்தீ, வ ஆமின் ரவ்ஆத்தீ, அல்லாஹும்மஹ்ஃபத்னீ மின் பைனி யதைய்ய, வமின் கல்ஃபீ, வஅன் யமீனீ, வஅன் ஷிமாலீ, வமின் ஃபவ்கீ, வஅவூது பிஅதமதிக்க அன் உக்தால மின் தஹ்த்தீ ஒரு முறை
பொருள்: யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் உன்னிடம் நான் சுகவாழ்வை வேண்டுகிறேன். யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும், எனது உலக வாழ்விலும், எனது குடும்பத்திலும், எனது செல்வத்திலும் உன்னிடம் பாவமன்னிப்பையும், சுகவாழ்வையும் வேண்டுகிறேன்.யா அல்லாஹ்! எனது குறைகளை மறைப்பாயாக; எனது அச்சங்களைப் போக்கி அமைதி அளிப்பாயாக. யா அல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும், எனக்குப் பின்னாலிருந்தும், எனது வலப்பக்கத்திலிருந்தும், எனது இடப்பக்கத்திலிருந்தும், எனக்கு மேலிருந்தும் என்னை நீ பாதுகாப்பாயாக. எனக்குக் கீழிருந்து நான் வஞ்சகமாகக் கொல்லப்படுவதை விட்டும் உனது கண்ணியத்தைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகிறேன். 6ஸஹீஹ். இப்னு அபீ ஷைபா (29278), அஹ்மத் (4785), புகாரியின் அல்-அதபுல் முஃப்ரத் (698), இப்னு மாஜா (3871), அபூ தாவூத் (5074), நஸயீ (5529), இப்னு ஹிப்பான் (6587), தப்ரானி (13296), அல்-ஹாகிம் (1902), பைஹகீயின் அத்-தஃவாதுல் கபீர் (32).
اللَّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
அல்லாஹும்ம ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல் அர்தி, ஆலிமல் கைபி வஷ்ஷஹாதத்தி, ரப்ப குல்லி ஷைஇன் வமலீக்கஹு, அஷ்ஹது அன் லா இலாஹ இல்லா அன்த்த, அவூது பிக மின் ஷர்ரி நஃப்ஸீ, வ ஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்க்கிஹி ஒரு முறை
பொருள்: வானங்களையும் பூமியையும் படைத்த யா அல்லாஹ்! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! ஒவ்வொரு பொருளின் ரப்பே! அதன் அதிபதியே! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என நான் சாட்சி கூறுகிறேன். எனது ஆத்மாவின் தீங்கிலிருந்தும், ஷைத்தானின் தீங்கிலிருந்தும், அவனது இணைவைப்பு (தூண்டுதல்)களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.7ஸஹீஹ். தயாலிஸீ (9), இப்னு அபீ ஷைபா (26523), அஹ்மத் (51), தாரிமீ (2731), புகாரியின் அல்-அதபுல் முஃப்ரத் (1202), அபூ தாவூத் (5067), அத்-திர்மிதீ (3392), நஸயீயின் அல்-குப்ரா (7644), அபூ யஃலா (5), இப்னு ஹிப்பான் (1733), தப்ரானியின் அத்-துஆ (288), அல்-ஹாகிம் (1892), பைஹகீயின் அத்-தஃவாதுல் கபீர் (29)
أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ ﷺ، وَعَلَى مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا، وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
அஸ்பஹ்னா அலா ஃபித்ரத்தில் இஸ்லாமி, வஅலா கலிமத்தில் இக்லாஸ், வஅலா தீனி நபிய்யினா முஹம்மதின் ﷺ, வஅலா மில்லத்தி அபீனா இப்ராஹீம ஹனீஃபன் முஸ்லிமன், வமா கான மினல் முஷ்ரிகீன்.ஒரு முறை
பொருள்: இஸ்லாமிய இயல்பு மார்க்கத்திலும், தூய ஏகத்துவக் கொள்கையிலும், நமது நபி முஹம்மது ﷺ அவர்களின் மார்க்கத்திலும், நேரிய வழியில் நின்ற முஸ்லிமான நமது தந்தை இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வழிமுறையிலும் நாம் விடியற்காலையை அடைந்தோம். (மேலும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)) அவர்கள் இணைவைப்பாளர்களில் ஒருவராக இருந்ததில்லை.8ஸஹீஹ். இப்னு அபீ ஷைபா (26540), அஹ்மத் (15360), தாரிமீ (2731), நஸயீயின் அல்-குப்ரா (9743), தப்ரானியின் அத்-துஆ (294), பைஹகீயின் அத்-தஃவாதுல் கபீர் (26).
أَعُوذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
அவூது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக் ஒரு முறை
பொருள்: அல்லாஹ் படைத்தவற்றின் தீங்கிலிருந்து அவனுடைய முழுமையான சொற்களைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.9ஸஹீஹ் முஸ்லிம் (2709).
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
பிஸ்மில்லாஹில்லதீ லா யதுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்தி வலா ஃபிஸ் ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்.ஒரு முறை
பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு (துவங்குகிறேன்); அவனது திருப்பெயர் (உச்சரிக்கப்படும்) நிலையில் பூமியிலோ அல்லது வானத்திலோ எந்தப் பொருளும் எத்தகைய தீங்கும் செய்ய முடியாது. மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவன், நன்கறிபவன்.10ஸஹீஹ். தயாலிஸீ (79), இப்னு அபீ ஷைபா (29275), அஹ்மத் (446), புகாரியின் அல்-அதபுல் முஃப்ரத் (660), இப்னு மாஜா (3869), அபூ தாவூத் (5088), அத்-திர்மிதீ (3388), நஸயீயின் அல்-குப்ரா (9759), தஹாவியின் ஷரஹ் முஷ்கிலில் ஆஸார் (3074), இப்னு ஹிப்பான் (502), தப்ரானியின் அத்-துஆ (317), அல்-ஹாகிம் (1895), பைஹகீயின் அத்-தஃவாதுல் கபீர் (34).
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيم
ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ அலைஹி தவக்கல்த்து வஹுவ ரப்புல் அர்ஷில் அஸீம். ஏழு முறை
பொருள்: அல்லாஹ் எனக்கு போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனையே நான் சார்ந்திருக்கிறேன்; மேலும், அவனே மகத்தான அர்ஷின் ரப்பு ஆவான்.11மவ்கூஃப் நிலையில் ஸஹீஹ். இப்னுஸ் ஸுன்னியின் அமலுல் யவ்மி வல்லைலா (71). இது மர்ஃபூஃ ஆக ஸஹீஹ் இல்லை. இது அபூ தர்தா (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து மவ்கூஃப் ஆக அபூ தாவூதில் (5081) ஸஹீஹான ஸனதுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விஷயங்கள் சுயமாக (அபிப்பிராயத்தின் அடிப்படையில்) சொல்லப்படமாட்டாது.
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, அதத கல்கிஹி, வரிதா நஃப்ஸிஹி, வஸினத்த அர்ஷிஹி, வமிதாத கலிமாத்திஹி. மூன்று முறை
பொருள்: அல்லாஹ் (அனைத்து குறைகளிலிருந்தும் அப்பாற்பட்ட) பரிசுத்தமானவன். புகழுக்குரியவான அவனை புகழ்கிறோம்; (அப்புகழ்) அவனது படைப்புகளின் எண்ணிக்கையளவு, அவன் திருப்தி அடையும் அளவு, அவனது அர்ஷின் எடையளவு மற்றும் அவனது சொற்களின் அளவு ஆகியவைக்கு நிகராக (அவனைப் புகழ்கிறோம்).12ஸஹீஹ் முஸ்லிம் (2627)
أَصْبَحْتُ أُثْنِي عَلَيْكَ حَمْدًا، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
அஸ்பஹ்த்து உஸ்னீ அலைக்க ஹம்தன், வ அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ். மூன்று முறை
பொருள்: உன்னைப் புகழ்ந்து துதித்தவாறு நான் விடியற்காலையை அடைகிறேன்; மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல என்று நான் சாட்சி கூறுகிறேன்.13ஹஸன். நஸயீயின் அல்-குப்ரா (10331)
மாலை நேரத் அத்காருகள் ஓதப்படவேண்டிய நேரம் அஸர் தொழுகைக்குப் பிறகு ஓதுவதே சரியான முறையாகும்.
அஸர் பாங்கு சொல்லப்பட்ட நேரத்திலிருந்தே இதை ஓதத் தொடங்கலாம். அஸர் நேரத்தில் ஓத முடியாதவர்கள், மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகும் ஓதலாம். ஏனெனில் அதுவும் மாலை நேரத்திலேயே அடங்கும்.
மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா பாங்கு வரை ஓதுவது, அந்த நேரத்திற்குரிய வழிபாடாகவே (அதாஃ) கருதப்படும்; அது தவறியதை ஈடு செய்யும் ‘கதா’ ஆக கருதப்படாது. ஏனெனில் பல அறிஞர்கள் மாலைத் திக்ருகளின் நேரமே மஃக்ரிபிற்குப் பிறகுதான் ஆரம்பமாகிறது எனக் கருதுகின்றனர்.
(மாலை நேர திக்ருகளை) ஒருவர் முற்றிலும் மறந்துவிட்டால், இஷா தொழுகைக்குப் பிறகு கூட ஓதலாம், அதில் குற்றமில்லை.
சுருக்கம்: இந்தத் திக்ருகளை அவற்றுக்குரிய நேரங்களில் ஓதத் தவறியவர்கள், காலை திக்ருகளை லுஹர் வரைக்கும், மாலை திக்ருகளை இஷா வரைக்கும் (மறந்த நிலையில் இஷாவுக்குப் பிறகும்) ஓதிக் கொள்ள அனுமதி உள்ளது.
أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِِ
அம்ஸைனா வஅம்ஸல் முல்கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர். ரப்பி அஸ்அலுக கைர மா ஃபீ ஹாதிஹில் லைலதி வ கைர மா பாதஹா, வ அவூது பிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதிஹில் லைலதி வ ஷர்ரி மா பாதஹா. ரப்பி அவூது பிக மினல் கஸலி வஸூஇல் கிபர். ரப்பி அவூது பிக மின் அதாபின் ஃபின் நாரி வ அதாபின் ஃபில் கப்ர்
பொருள்: நாம் மாலை நேரத்தை அடைந்தோம்; ஆட்சியும் அல்லாஹ்வுக்கே உரியதாக மாலை நேரத்தை அடைந்தது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. அவன் தனித்தவன், அவனுக்கு இணையேதுமில்லை. அவனுக்கே ஆட்சியும் புகழும் உரியன. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் உடையவன். என் ரப்பே! இந்த இரவின் நன்மையையும், இதற்குப் பின்னுள்ள நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கிலிருந்தும், இதற்குப் பின்னுள்ள தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் ரப்பே! சோம்பலில் இருந்தும், முதுமையின் தீங்கில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் ரப்பே! நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.1ஸஹீஹ் முஸ்லிம் (2723)
اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ
அல்லாஹும்ம பிக அம்ஸைனா, வபிக அஸ்பஹ்னா, வபிக நஹ்யா, வபிக நமூத்து, வஇலைகல் மஸீர்.ஒரு முறை
பொருள்: யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாங்கள் உயிர் வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே நாங்கள் மரணிக்கிறோம். மேலும், உன்னிடமே (நாங்கள்) திரும்ப உள்ளோம்.2ஸஹீஹ். இப்னு அபீ ஷைபா (29291), அஹ்மத் (8649), புகாரியின் அல்-அதபுல் முஃப்ரத் (1199), இப்னு மாஜா (3868), அபூ தாவூத் (5068), அத்-திர்மிதீ (3391), நஸயீ அல்-குப்ரா (9752), இப்னு ஹிப்பான் (6585), தப்ரானியின் அத்-துஆ (292), பைஹகீயின் அத்-தஃவாதுல் கபீர் (25).
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்த்த ரப்பீ, லா இலாஹ இல்லா அன்த்த, கலக்தனீ வஅன அப்துக, வஅன அலா அஹ்திக வ வஃதிக மஸ்ததஃத்து, அவூது பிக மின் ஷர்ரி மா ஸனஃத்து, அபூஉ லக பினிஃமதிக அலைய, வ அபூஉ லக பிதன்ம்பீ, ஃபக்ஃபிர் லீ ஃபஇன்னஹு லா யக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.ஒரு முறை
பொருள்: யா அல்லாஹ்! நீயே என் ரப்பு. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவை வேறு எவையுமில்லை. நீயே என்னைப் படைத்தாய், நான் உனது அடிமை. உனக்கு நான் அளித்த வாக்குறுதியிலும் உடன்படிக்கையிலும் என்னால் இயன்றவரை உறுதியாக இருக்கிறேன். நான் செய்த தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருட்கொடைகளை நான் ஒப்புக்கொள்கிறேன்; எனது பாவங்களையும் நான் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில் உன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது.3ஸஹீஹுல் புகாரி (6306)
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி. நூறு முறை
பொருள்: அல்லாஹ் (அனைத்து குறைகளிலிருந்தும் அப்பாற்பட்ட) பரிசுத்தமானவன். புகழுக்குரியவனான அவனைப் புகழ்கிறோம்.4ஸஹீஹ் முஸ்லிம் (2692)
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர் நூறு முறை அல்லது பத்து முறை அல்லது ஒரு முறை
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை. அவனுக்கே ஆட்சியும் புகழும் உரியன. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் உடையவன்.5ஸஹீஹுல் புகாரி (3293), ஸஹீஹ் முஸ்லிம் (2691). இந்த வாசகம் (ஸஹீஹ் முஸ்லிமுடையது).
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியத ஃபித் துன்யா வல் ஆகிரத்தி, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல் ஆஃபியத ஃபீ தீனீ வ துன்யாய வ அஹ்லீ வ மாலீ, அல்லாஹும்மஸ்த்துர் அவ்ராத்தீ, வ ஆமின் ரவ்ஆத்தீ, அல்லாஹும்மஹ்ஃபத்னீ மின் பைனி யதைய்ய, வமின் கல்ஃபீ, வஅன் யமீனீ, வஅன் ஷிமாலீ, வமின் ஃபவ்கீ, வஅவூது பிஅதமதிக அன் உக்தால மின் தஹ்த்தீ.ஒரு முறை
பொருள்: யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் உன்னிடம் நான் சுகவாழ்வை வேண்டுகிறேன். யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும், எனது உலக வாழ்விலும், எனது குடும்பத்திலும், எனது செல்வத்திலும் உன்னிடம் பாவமன்னிப்பையும், சுகவாழ்வையும் வேண்டுகிறேன். யா அல்லாஹ்! எனது குறைகளை மறைப்பாயாக; எனது அச்சங்களைப் போக்கி அமைதி அளிப்பாயாக. யா அல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும், எனக்குப் பின்னாலிருந்தும், எனது வலப்பக்கத்திலிருந்தும், எனது இடப்பக்கத்திலிருந்தும், எனக்கு மேலிருந்தும் என்னை நீ பாதுகாப்பாயாக. எனக்குக் கீழிருந்து நான் வஞ்சகமாகக் கொல்லப்படுவதை விட்டும் உனது கண்ணியத்தைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.6ஸஹீஹ். இப்னு அபீ ஷைபா (29278), அஹ்மத் (4785), புகாரியின் அல்-அதபுல் முஃப்ரத் (698), இப்னு மாஜா (3871), அபூ தாவூத் (5074), நஸயீ (5529), இப்னு ஹிப்பான் (6587), தப்ரானி (13296), அல்-ஹாகிம் (1902), பைஹகீயின் அத்-தஃவாதுல் கபீர் (32).
اللَّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
அல்லாஹும்ம ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல் அர்தி, ஆலிமல் கைபி வஷ்ஷஹாதத்தி, ரப்ப குல்லி ஷைஇன் வமலீக்கஹு, அஷ்ஹது அன் லா இலாஹ இல்லா அன்த்த, அவூது பிக மின் ஷர்ரி நஃப்ஸீ, வ ஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்க்கிஹி.ஒரு முறை
பொருள்: வானங்களையும் பூமியையும் படைத்த யா அல்லாஹ்! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! ஒவ்வொரு பொருளின் ரப்பே! அதன் அதிபதியே! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என நான் சாட்சி கூறுகிறேன். எனது ஆத்மாவின் தீங்கிலிருந்தும், ஷைத்தானின் தீங்கிலிருந்தும், அவனது இணைவைப்பு (தூண்டுதல்)களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.7ஸஹீஹ். தயாலிஸீ (9), இப்னு அபீ ஷைபா (26523), அஹ்மத் (51), தாரிமீ (2731), புகாரியின் அல்-அதபுல் முஃப்ரத் (1202), அபூ தாவூத் (5067), அத்-திர்மிதீ (3392), நஸயீயின் அல்-குப்ரா (7644), அபூ யஃலா (5), இப்னு ஹிப்பான் (1733), தப்ரானியின் அத்-துஆ (288), அல்-ஹாகிம் (1892), பைஹகீயின் அத்-தஃவாதுல் கபீர் (29)
أَعُوذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
அவூது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்.ஒரு முறை
பொருள்: அல்லாஹ் படைத்தவற்றின் தீங்கிலிருந்து அவனுடைய முழுமையான சொற்களைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.8ஸஹீஹ் முஸ்லிம் (2709)
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
பிஸ்மில்லாஹில்லதீ லா யதுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்தி வலா ஃபிஸ் ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்.ஒரு முறை
பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு (துவங்குகிறேன்); அவனது திருப்பெயர் (உச்சரிக்கப்படும்) நிலையில் பூமியிலோ அல்லது வானத்திலோ எந்தப் பொருளும் எத்தகைய தீங்கும் செய்ய முடியாது. மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவன், நன்கறிபவன்.9ஸஹீஹ். தயாலிஸீ (79), இப்னு அபீ ஷைபா (29275), அஹ்மத் (446), புகாரியின் அல்-அதபுல் முஃப்ரத் (660), இப்னு மாஜா (3869), அபூ தாவூத் (5088), அத்-திர்மிதீ (3388), நஸயீயின் அல்-குப்ரா (9759), தஹாவியின் ஷரஹ் முஷ்கிலில் ஆஸார் (3074), இப்னு ஹிப்பான் (502), தப்ரானியின் அத்-துஆ (317), அல்-ஹாகிம் (1895), பைஹகீயின் அத்-தஃவாதுல் கபீர் (34).
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيم
ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ அலைஹி தவக்கல்த்து வஹுவ ரப்புல் அர்ஷில் அஸீம். ஏழு முறை
பொருள்: அல்லாஹ் எனக்கு போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனையே நான் சார்ந்திருக்கிறேன்; மேலும், அவனே மகத்தான அர்ஷின் ரப்பு ஆவான்.10மவ்கூஃப் நிலையில் ஸஹீஹ். இப்னுஸ் ஸுன்னியின் அமலுல் யவ்மி வல்லைலா (71). இது மர்ஃபூஃ ஆக ஸஹீஹ் இல்லை. இது அபூ தர்தா (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து மவ்கூஃப் ஆக அபூ தாவூதில் (5081) ஸஹீஹான ஸனதுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விஷயங்கள் சுயமாக (அபிப்பிராயத்தின் அடிப்படையில்) சொல்லப்படமாட்டாது.
أَمْسَيْتُ أُثْنِي عَلَيْكَ حَمْدًا، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
அம்ஸய்த்து உஸ்னீ அலைக்க ஹம்தன், வ அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ். மூன்று முறை
பொருள்: உன்னைப் புகழ்ந்து துதித்தவாறு நான் மாலைப் பொழுதை அடைகிறேன்; மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல என்று நான் சாட்சி கூறுகிறேன்.11ஹஸன். நஸயீயின் அல்-குப்ரா (10331)
Comments
No comments yet.