
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
إِنَّ مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ
“நிச்சயமாக யார் வெள்ளிக்கிழமை அன்று சூரத்துல் கஹ்ஃபை ஓதுகிறாரோ, அவருக்கு அந்த வெள்ளியிலிருந்து அடுத்த வெள்ளி வரை (ஒரு வாரம் முழுக்க) பிரகாசிக்கக்கூடிய ஓர் ஒளி (நூர்) உண்டாகும்.”
(ஹாகிம் 3412, பைஹகி 6078 – அல்பானி அவர்கள் இதை ஸஹீஹ் எனத் தரப்படுத்தியுள்ளார்கள் ஸஹீஹுல் ஜாமீ 6470).
இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் விளக்கம்:
ஆம், வெள்ளிக்கிழமை அன்று சூரத்துல் கஹ்ஃபை ஓதுவது (மார்க்கத்தில்) அறிவுறுத்தப்பட்ட/விரும்பத்தக்க ஒரு செயலாகும். அதில் மிகுந்த சிறப்பும் உள்ளது. அதை ஒருவர் முஸ்ஹபிலிருந்து (பார்த்து) ஓதினாலும் அல்லது மனப்பாடமாக ஓதினாலும் அதற்குரிய நன்மையில் எந்த மாற்றமும் இல்லை. மார்க்க அடிப்படையில் ஒரு ‘நாள்/பகல்’ என்பது அதிகாலை உதயமானது முதல் சூரியன் மறையும் வரை உள்ள நேரமாகும். எனவே, இதன் அடிப்படையில் ஒரு மனிதர் ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு (அன்றைய சூரியன் மறையும் முன்) இந்தச் சூராவை ஓதினாலும் அதற்குரிய நன்மையை அவர் அடைந்து கொள்வார்.”
ஃபதாவா நூர் அலா அத்-தர்ப் [296]இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் இந்த ஸூரா வெள்ளிக்கிழமை இரவு (அதாவது வியாழன் மஃக்ரிபிற்குப் பிறகு) ஓதுவது பற்றி கேட்கப்பட்டது
அதற்கு ஷய்க் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: இந்தச் ஸூராவை வெள்ளிக்கிழமை பகலில் ஓதுவதன் சிறப்பைப் பற்றித்தான் ஹதீஸில் வந்துள்ளது, வெள்ளிக்கிழமை இரவைப் பற்றி அல்ல.
எனவே, ஒரு மனிதர் சூரத்துல் கஹ்ஃபை வெள்ளிக்கிழமை பகல் பொழுதில் ஓதுவதே பொருத்தமானதாகும். (மேலும் இங்கு பகல் என்றால் ஃபஜர் நேரத்திலிருந்து தொடங்குவதைக் காட்டிலும் ஹதீஸில் உள்ள சிறப்பை அடைய) சூரிய உதயத்திற்குப் பிறகு ஓதுவதே கூடுதல் முன்னெச்சரிக்கையாகவும் உள்ளது.
(ஏனெனில் ஹதீஸில் பகல் என்று வந்துள்ளது, ஒருவர் சூரியன் உதயத்திற்கு முன் (எடுத்துக்காட்டாக) ஃபஜ்ர் தொழுகை முடிந்தவுடன் அதை ஓதி முடித்து, நான் பகலில் ஓதவில்லை என்ற ஐய்யத்தில் இல்லாமல் இருக்க இதுவே அவருக்கு பொருத்தமானதாகும்)
மேலும், ஜுமுஆ தொழுகைக்கு முன்னதாக ஓதுவதற்கும் அல்லது தொழுகைக்குப் பிறகு ஓதுவதற்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை (இரண்டு நேரங்களிலும் ஓதலாம்).
ஃபதாவா நூருன் அலா அத்-தர்ப்: [204]ஹதீஸீல் இடம்பெற்றுள்ள “நூர்” (ஒளி) என்பதற்கான விளக்கம்:
இமாம் ஸன்ஆனீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
- “(அந்த ஒளியானது)” அதை ஓதுபவரின் உள்ளத்திலோ அல்லது,
- அவனது பார்வையிலோ அல்லது,
- காரியங்களை கையாளும் அவனது ஞானத்திலோ அல்லது,
- அவனது அனைத்து நிலைகளிலும் அல்லாஹ் ஏற்படுத்துகின்ற ஓர் ஒளியாகும்.
- மேலும், அவனது நற்செயல்களோடு வானத்தை நோக்கி உயருகின்ற ஓர் ஒளியாகவோ அல்லது,
- வானவர்கள் (அவனிடமிருந்து) காண்கின்ற ஓர் ஒளியாகவோ அல்லது;
- சுவனத்தில் (மறுமையில்) மற்றவர்களை விடக் கூடுதலாக அவனுக்காகப் பிரகாசிக்கின்ற ஓர் ஒளியாகவோ அமையும்.
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் நேர்வழியில் பயணிக்கும் நாம், மார்க்கத்தைக் கற்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அதற்கேற்ப நமது அமல்களைச் செம்மைப்படுத்துவதிலும் மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும். ஸூரத்துல் கஹ்ஃபின் சிறப்பைப் பற்றி வெறும் மனதளவில் தெரிந்துவைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்தச் ஸூராவை ஆர்வத்தோடும், சிந்தனையோடும் ஓதி அதன் நற்பலன்களை அடைந்துகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்.
“என் ரப்பே! சூரத்துல் கஹ்ஃபை முறையாக ஓதி, அதன் மூலம் நீ வழங்கக்கூடிய அந்தப் ஒளியை (நூர்) இம்மையிலும் மறுமையிலும் பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் வழங்கியருள்வாயாக! கல்வியோடு கூடிய நற்செயல்களில் எங்களைச் சிறந்து விளங்கச் செய்வாயாக! ஆமீன்.
Comments
No comments yet.