8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Refutations

The Tawheed the Messengers Taught, and What Hasan al-Banna, Mawdudi and Sayyid Qutb Taughtஇறைத்தூதர்கள் போதித்த ஏகத்துவமும், ஹசன் அல்-பன்னாஹ், மவ்தூதீ, ஸய்யித் குத்ப் போன்றோர் போதித்த ஏகத்துவமும்

This article is in Tamil.

அஷ்ஷய்க் ரபீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஸய்யித் குத்ப், அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்வது என்றுள்ள (தவ்ஹீதுல் உலூஹிய்யா) என்பது படைப்பவனும் பரிபாலிப்பவனும் அல்லாஹ் மட்டுமே என்று நம்பிக்கை கொள்வதான (தவ்ஹீதுர் ருபூபியாவைத்) தவிர வேறொன்றுமில்லை, அதாவது இரண்டும் ஒன்றுதான் என்று நம்புகிறார்.

அல்லாஹ்வைப் படைப்பவனாகவும் பரிபாலிப்பவனாகவும் ஏற்பது (ருபூபிய்யா) என்பது, அவனது ஆட்சி அதிகாரத்தையும் சட்டத்தையும் நிலைநாட்டுவதுதான் என்று அவர் திடமாக நம்புகிறார்.

இதன் மூலம் அவர், (துஆ, பாதுகாப்பு தேடுதல், போன்ற) அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்வது என்ற தவ்ஹீதுல் உலூஹிய்யா / வணக்க வழிபாட்டின் ஏகத்துவத்தை நீக்கி விடுகிறார்.

அல்லாஹ்வைத் தவிர வேறு யாதும் (வணக்கவழிபாட்டிற்கு தகுதியானவை) அல்ல என்ற ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ வை விளங்கியதிலும், மேலும், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற அடிப்படைக்கும், அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கிறான் என்ற நம்பிக்கைக்கும் இடையில் அவர் எந்தவொரு வித்தியாசமும் காணாமல் இருப்பதே ஸய்யித் குத்ப் மார்க்க அறிஞர்களுக்கு முரண்படுகிறார் என்று சொல்வதற்கு போதாதா?

மேலும் வணக்க வழிபாடு அனைத்தையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டும் என்ற ஏகத்துவத்தை பரைசாற்றும் திருமறை வசனங்களின் மையக்கருத்தையும், இறைத்தூதர்களின் அழைப்பு வழிமுறையையும் மாற்றி விளக்கம் அளிக்கிறார்.

ஏகத்துவ கலிமாவான ‘லா இலாஹ இல்லல்லாஹ்’வையும் (அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவேண்டும் என்ற) இதன் அடிப்படையிலேயே அவர் விளக்குவதால், அதன் விளைவு என்னவென்றால் அனைத்து தூதர்களுக்கும் அவர்களது சமுதாயங்களுக்கும் இடையேயான போராட்டத்தின் மையப்புள்ளியாக இருந்த ‘வணக்க வழிபாட்டில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது என்ற தவ்ஹீதுல் உலூஹிய்யாவை’ முற்றாக நீக்கி விட்டார் .

❓ தவ்ஹீத் என்னும் இக்கொள்கைக்கு அவர் செய்த குற்றத்தைக் காட்டிலும் வேறு என்ன பெரிய குற்றம் இருக்க முடியும்?

❓ அல்-குர்ஆன் மீதும் இஸ்லாத்தின் மீதும் திணிக்கப்பட்ட திரிப்பில் இதைவிட மோசமான திரிப்பு வேறு எது இருக்க முடியும்?

❓ மார்க்கத்தின் மிக முக்கியமான அடிப்படை விவகாரத்தில் இதைவிடப் பெரிய அறியாமை வேறு எது இருக்க முடியும்?

மஜ்மூஉ அர்ரஸாஇல் (7/79)

அஷ்ஷய்க் ரபீஉ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது:

“படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ் என்று நம்புவதற்கும் (ருபூபிய்யா), அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் (உலூஹிய்யா) என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை ஸய்யித் குத்ப் அறியவில்லை என்பது இதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

மேலும், ‘அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்’ என்ற அந்த ஒரு புள்ளிதான், இறைத்தூதர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் இடையே ஏற்பட்ட அனைத்துப் போராட்டங்கள், பகைகள் மற்றும் விவாதங்களின் மையக்கருத்தாக இருந்தது என்பதையும் அவர் அறியவில்லை.

அதுமட்டுமல்லாமல், முந்தைய சமுதாய மக்கள் அனைவருமே ‘அல்லாஹ் தான் படைப்பவன், அவனே அனைத்தையும் பரிபாலிப்பவன்’ என்பதை நன்கு அறிந்திருந்தார்கள், அதை அவர்கள் ஒப்புக்கொள்ளவும் செய்தார்கள் என்ற உண்மையை அவர் அறியத் தவறிவிட்டார்.”

எல்லா சமுதாயங்களுக்கும் அனுப்பப்பட்ட அனைத்துத் தூதர்களுக்கும் அல்லாஹ் வழங்கிய அந்தப் பொதுவான செய்தியான:

وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ ﴿الأنبياء: 25﴾

‘(நபியே!) உமக்கு முன்னால் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதருக்கும்: நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னை மட்டுமே வணங்குங்கள் என்று வஹீ (இறைச்செய்தி) அறிவிக்காமல் நாம் அனுப்பவில்லை.’
(அல்-அன்பியா: 25)

என்ற உயர்ந்தவனாகிய அல்லாஹ்வின் இத்திரு வசனத்தை (ஸய்யித் குத்ப்) செவியேற்கவில்லையோ என்று தோன்றுகிறது

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா: என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை ஆகவே என்னை மட்டுமே வணங்குங்கள் என்று கூறுகிறான்.

எனவே, ‘அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்’ (தவ்ஹீதுல் இபாதா) என்ற அந்த அழைப்பு இதில் தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.

மேலும், அல்லாஹ் ‘என்னைத் தவிர படைப்பவன் பரிபாலிப்பவன் (ரப்பு) வேறு யாருமில்லை’ என்று சொல்லவில்லை. ஏனெனில், அந்தந்த சமுதாய மக்கள் அல்லாஹ்வைத் தங்களது படைப்பாளன் என்று ஏற்பதில் எந்தப் பெருமையும் அடிக்கவில்லை, அதில் அவர்கள் தர்க்கம் செய்யவும் இல்லை.

அல்லாஹ்வை படைப்பாளன் (ரப்பு) என்று அவர்கள் ஏற்றிருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ் கூறுகிறான்:

وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ ۚ ﴿لقمان: 25﴾

‘(நபியே!) வானங்களையும் பூமியையும் படைத்தது யார் என்று நீர் அவர்களிடத்தில் கேட்டால், ‘அல்லாஹ் தான்’ என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்.’
(லுக்மான்: 25)

அதுவே, “‘வணக்கங்களை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும்’ (உலூஹிய்யா) என்ற விஷயத்தைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ ﴿الصافات: 35﴾

நிச்சயமாக அவர்களிடம், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்லப்பட்டால், அவர்கள் பெருமையடித்தார்கள்.
(அஸ்-ஸாஃபாத்: 35)

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று அழைக்கப்பட்டால், அவர்கள் அதனை வெறுத்து ஒதுக்கி, பெருமை அடிப்பார்கள் என்பதை அல்லாஹ் இங்குத் தெளிவாக விளக்குகிறான். ஆனால், ‘அல்லாஹ் தான் படைப்பவன், அவனே உணவளித்து பரிபாலிப்பவன்‘ (ருபூபிய்யா) என்று அவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டபோது அவர்கள் அவ்வாறு கர்வமோ பெருமையோ காட்டவில்லை. ஏனென்றால், அந்த உண்மையை அவர்கள் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் அறிந்திருந்தார்கள். அதில் அவர்கள் தர்க்கம் செய்யவோ அல்லது பெருமை அடிக்கவோ இல்லை.

ஆதாரம்: மஜ்மூஉர் ரஸாயில் (6/53 – 55)

அல்-இமாம் ரபீ அவர்களின் இக்கூற்று குறித்து இராக் நாட்டு அறிஞரான அஷ்ஷய்க் அப்துல் பாஸித் அல்-மஷ்ஹதானீ (அல்லாஹ் அவரைப் பாதுகாப்பானாக) அவர்கள் பின்வருமாறு தன் கூற்றை இணைத்து கூறுகிறார்கள்:


“நான் கூறுகிறேன்: இதனால்தான், (நபிவழியைப் பின்பற்றும் நேர்வழி கூட்டமான) அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் மிக மகத்தான அடையாளங்களில் ஒன்று: அவர்கள் ‘தவ்ஹீதுல் உலூஹிய்யா’ (வணக்க வழிபாட்டில் ஏகத்துவம்) எனும் விஷயத்தில் காட்டும் அதீத அக்கறையாகும். அதனை அறிந்துகொள்வதிலும், அதன்படி செயல்படுவதிலும், அதன் பக்கம் மக்களை அழைப்பதற்கும் முதலிடம் கொடுக்கிறார்கள். மாறாக, மார்க்கத்திற்கு முரண்பட்டவர்கள் மற்றும் வழிதவறிய பித்அத்வாதிகளின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று: அவர்கள் தவ்ஹீத் பற்றிய அறியாமையில் இருப்பதும், அதனைப் புறக்கணிப்பதும் ஆகும்.”

If this article benefited you, please share it.