10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

Mushaf · Page 98

/ 604
Page 98

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

4. An-Nisaسورة النساء

4:122

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ سَنُدْخِلُهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّا ۚ وَمَنْ أَصْدَقُ مِنَ ٱللَّهِ قِيلًا

மேலும், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையோர் - அவர்களை நாம் (மறுமையில்) சுவனபதிகளில், பிரவேசிக்கச் செய்வோம், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அதில் நிரந்தரமாக என்றென்றும் (தங்கி) இருப்பவர்கள், அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே, மேலும், அல்லாஹ்வைவிட சொல்லால் மிக்க உண்மையானவர் யார்?

But those who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism) and do deeds of righteousness, We shall admit them to the Gardens under which rivers flow (i.e. in Paradise) to dwell therein forever. Allâh’s Promise is the Truth; and whose words can be truer than those of Allâh? (Of course, none).

4:123

لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَآ أَمَانِىِّ أَهْلِ ٱلْكِتَـٰبِ ۗ مَن يَعْمَلْ سُوٓءًا يُجْزَ بِهِۦ وَلَا يَجِدْ لَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا

(விசுவாசிகளே மறுமையில்) உங்கள் வீண் ஆசைப் படியோ வேதத்தையுடையோர் வீண் ஆசைப்படியோ (சுவனம் பிரவேசிப்பதென்பது) இல்லை, எவர் தீமை செய்கின்றாரோ அவர் அதற்குரிய தண்டனையைக் கொடுக்கப்படுவார், அவர் அல்லாஹ்வையன்றித் தனக்குப்பாதுகாவலனையோ அல்லது உதவி புரிவோரையோ (அங்கு)காணமாட்டார்.

It will not be in accordance with your desires (Muslims), nor those of the people of the Scripture (Jews and Christians), whosoever works evil, will have the recompense thereof, and he will not find any protector or helper besides Allâh.

4:124

وَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّـٰلِحَـٰتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُو۟لَـٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا

இன்னும், ஆணாயினும் அல்லது பெண்ணாயினும், எவர் உண்மையாகவே விசுவாசங்கொண்டவராக இருக்க நற்கருமங்களைச் செய்வாராயின் - அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பார்கள், அவர்கள் அற்ப அளவு அநீதியும் செய்யப்படமாட்டார்கள்.

And whoever does righteous good deeds, male or female, and is a (true) believer [in the Oneness of Allâh (Muslim)], such will enter Paradise and not the least injustice, even to the size of a speck on the back of a date-stone, will be done to them.

4:125

وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَٱتَّبَعَ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًا ۗ وَٱتَّخَذَ ٱللَّهُ إِبْرَٰهِيمَ خَلِيلًا

எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்துவிட்டு, அவர் நன்மை செய்தவராக இருக்க (அசத்தியத்திலிருந்து நீங்கி)சத்தியத்தைச் சார்ந்த இப்ராஹீமுடைய மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? மேலும் அல்லாஹ் இப்றாஹீமைத் (தன்னுடைய) உற்ற தோழராக எடுத்துக் கொண்டான்.

And who can be better in religion than one who submits his face (himself) to Allâh (i.e. follows Allâh’s religion of Islâmic Monotheism); and he is a Muhsin (a good-doer - See V.2:112). And follows the religion of Ibrâhîm1(Abraham) Hanîfa (Islâmic Monotheism - to worship none but Allâh Alone). And Allâh did take Ibrâhîm (Abraham) as a Khalîl (an intimate friend)!

  1. See the footnote of (V.2:135), the narration of Zaid bin ‘Amr bin Nufail.

4:126

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ مُّحِيطًا

வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் சூழ்(ந்தறிப)வனாக இருக்கின்றான்.

And to Allâh belongs all that is in the heavens and all that is in the earth. And Allâh is Ever Encompassing all things.

4:127

وَيَسْتَفْتُونَكَ فِى ٱلنِّسَآءِ ۖ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَىٰ عَلَيْكُمْ فِى ٱلْكِتَـٰبِ فِى يَتَـٰمَى ٱلنِّسَآءِ ٱلَّـٰتِى لَا تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلْوِلْدَٰنِ وَأَن تَقُومُوا۟ لِلْيَتَـٰمَىٰ بِٱلْقِسْطِ ۚ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمًا

(நபியே!) உம்மிடம் அவர்கள் பெண்கள் பற்றிய மார்க்கத்தீர்ப்பைக் கேட்கின்றார்கள், அவர்கள் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்புக் கூறுவான் என்று நீர் கூறுவீராக! மேலும், (இதற்கு முன்னர் பெண்களைப்பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுவது எந்தப் பெண்களுக்கு அவர்களை நீங்கள் திருமணம் முடிக்க ஆசித்தவர்களாக இருக்க அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்கமாட்டீர்களோ அத்தகைய அனாதைப் பெண்களைப் பற்றியதும், சிறார்களில் பலவீனமாக்கப்பட்டவர்கள் பற்றியதும், இன்னும் அனாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்துவது பற்றியதுமாகும், இன்னும், (அவர்களுக்கு) நீங்கள் நன்மையில் எதைச் செய்கின்றீர்களோ அதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

They ask your legal instruction concerning women, say: Allâh instructs you about them, and about what is recited unto you in the Book concerning the orphan girls whom you give not the prescribed portions (as regards Mahr and inheritance) and yet whom you desire to marry, and (concerning) the children who are weak and oppressed, and that you stand firm for justice to orphans. And whatever good you do, Allâh is Ever All-Aware of it.