மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَمَا لَكُمْ لَا تُقَـٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلْوِلْدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخْرِجْنَا مِنْ هَـٰذِهِ ٱلْقَرْيَةِ ٱلظَّالِمِ أَهْلُهَا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا
இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரில் பலவீனமானவர்களின் (பாதுகாப்பு) விஷயத்திலும், நீங்கள் யுத்தம் செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ, எங்கள் இரட்சகனே! இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிவிடுவாயாக! அதை (அவ்வூரை)யுடையவர்கள், அநியாயக்காரர்களாக இருக்கின்றனர். நீ எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஆக்குவாயாக! நீ எங்களுக்கு உன் புறத்தால் ஓர் உதவியாளரையும் அளித்தருள்வாயாக” என்று (பிரார்த்தனை செய்து) கூறுகின்றனர்.
And what is wrong with you that you fight not in the Cause of Allâh, and for those weak, ill-treated and oppressed among men, women, and children, whose cry is: "Our Lord! Rescue us from this town whose people are oppressors; and raise for us from You one who will protect, and raise for us from You one who will help."
ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُقَـٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ وَٱلَّذِينَ كَفَرُوا۟ يُقَـٰتِلُونَ فِى سَبِيلِ ٱلطَّـٰغُوتِ فَقَـٰتِلُوٓا۟ أَوْلِيَآءَ ٱلشَّيْطَـٰنِ ۖ إِنَّ كَيْدَ ٱلشَّيْطَـٰنِ كَانَ ضَعِيفًا
(ஆகவே இது போன்ற சமயத்தில்) விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர்-அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வார்கள், இன்னும், நிராகரித்தார்களே அத்தகையோர்-அவர்கள் (இவர்களுக்கு எதிராக) தாகூத்துடைய (ஷைத்தானுடைய) பாதையில் யுத்தம் செய்வார்கள், ஆகவே, ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராக போர் செய்யுங்கள், நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமாதாக இருக்கிறது.
Those who believe, fight in the Cause of Allâh, and those who disbelieve, fight in the cause of Tâghût (Satan).1 So fight you against the friends of Shaitân (Satan). Ever feeble indeed is the plot of Shaitân (Satan).
See the footnote of (V.2:256).
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوٓا۟ أَيْدِيَكُمْ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ ٱلْقِتَالُ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ ٱلنَّاسَ كَخَشْيَةِ ٱللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوا۟ رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا ٱلْقِتَالَ لَوْلَآ أَخَّرْتَنَآ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ ۗ قُلْ مَتَـٰعُ ٱلدُّنْيَا قَلِيلٌ وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ لِّمَنِ ٱتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا
“உங்களுடைய கைகளைத் (தற்சமயம் யுத்தம் செய்யாது) தடுத்துக் கொள்ளுங்கள், தொழுகையையும் (உறுதியாக) நிறைவேற்றுங்கள், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ, அத்தகையோர்பால் (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (பின்னர்) யுத்தம் செய்வது அவர்கள்மீது விதிக்கப்பட்ட பொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ, அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் அதைவிட கடினமாக (எதிரிகளான) மனிதர்களுக்குப் பயந்தார்கள், மேலும், எங்கள் இரட்சகனே! ஏன் எங்கள் மீது யுத்தத்தை விதியாக்கினாய்?, இன்னும் சிறிது காலம் எங்களுக்காக இதனைப் பிற்படுத்தி இருக்க வேண்டாமா?” என்றும் கூறினார்கள், (இதற்கு, நபியே!) நீர் கூறுவீராக! இவ்வுலக சுகம் அற்பமானதே, (அல்லாஹ்வை) பயந்து நடப்பவருக்கு மறுமை(யின் வாழ்க்கை) தான் மிக்க மேலானது (உங்களுடைய நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஒரு நூல் அளவும் அநீதம் செய்யப்பட மாட்டீர்கள்.
Have you not seen those who were told to hold back their hands (from fighting) and perform As-Salât (Iqâmat-as-Salât), and give Zakât but when the fighting was ordained for them, behold! a section of them fear men as they fear Allâh or even more. They say: "Our Lord! Why have you ordained for us fighting? Would that You had granted us respite for a short period?" Say: "Short is the enjoyment of this world. The Hereafter is (far) better for him who fears Allâh, and you shall not be dealt with unjustly even equal to a scalish thread in the long slit of a date-stone.
أَيْنَمَا تَكُونُوا۟ يُدْرِككُّمُ ٱلْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِى بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا۟ هَـٰذِهِۦ مِنْ عِندِ ٱللَّهِ ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا۟ هَـٰذِهِۦ مِنْ عِندِكَ ۚ قُلْ كُلٌّ مِّنْ عِندِ ٱللَّهِ ۖ فَمَالِ هَـٰٓؤُلَآءِ ٱلْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًا
நீங்கள் எங்கிருந்தபோதிலும், மரணம் உங்களை அடைந்தே தீரும், மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்களில் நீங்கள் இருந்தபோதிலும் சரியே! மேலும், (நபியே! உம்முடைய கட்டளைப்படி யுத்தத்திற்குச் சென்ற அவர்களுக்கு யாதொரு நன்மையும் ஏற்பட்டால், இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது எனக் கூறுகின்றனர், (ஆனால்) அவர்களுக்கு யாதொரு தீங்கு ஏற்பட்டுவிட்டாலோ (நபியே! இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது) எனக் கூறுகின்றனர், (ஆகவே) நீர் கூறுவீராக, (இவை) ஒவ்வொன்றும் அல்லாஹ்விடமிருந்தே உள்ளது, இந்த சமூகத்தவர்க்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் விளங்கிக் கொள்ள நெருங்கமாட்டார்கள்.
"Wheresoever you may be, death will overtake you even if you are in fortresses built up strong and high!" And if some good reaches them, they say, "This is from Allâh," but if some evil befalls them, they say, "This is from you (O Muhammad صلى الله عليه وسلم)." Say: "All things are from Allâh," so what is wrong with these people that they fail to understand any word?
مَّآ أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ ٱللَّهِ ۖ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ ۚ وَأَرْسَلْنَـٰكَ لِلنَّاسِ رَسُولًا ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا
(அன்றி, இவ்வாறு கூறுகின்றவனுக்கு) “உமக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வினால் ஏற்பட்டது? என்றும் உமக்கு யாதொரு தீமை ஏற்பட்டால், (அது நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் (வந்தது)” என்றும் (கூறுவீராக!) இன்னும், (நபியே!) நாம் உம்மை ஒரு தூதராகவே மனிதர்களிடம் அனுப்பியிருக்கின்றோம், இன்னும் (இதற்கு) சாட்சியாளனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்.
Whatever of good reaches you, is from Allâh, but whatever of evil befalls you, is from yourself. And We have sent you (O Muhammad صلى الله عليه وسلم) as a Messenger to mankind, and Allâh is Sufficient as a Witness.1
See the footnote (A) of the (V.2:252).