மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ ٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ أَوِ ٱخْرُجُوا۟ مِن دِيَـٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ مِّنْهُمْ ۖ وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا۟ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيْرًا لَّهُمْ وَأَشَدَّ تَثْبِيتًا
இன்னும், “உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளுங்கள், அல்லது நீங்கள் உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நிச்சயமாக நாம் அவர்களின்மீது விதித்திருந்தால், அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) இதனைச் செய்திருக்கவே மாட்டார்கள். மேலும், அவர்கள் எதை உபதேசிக்கப்பட்டார்களோ, அதை அவர்கள் செய்திருப்பார்களேயானால், அது அவர்களுக்கு மிக்க நன்மையாகவும், (விசுவாசத்தில் அவர்களை) உறுதிபடுத்துவதில் மிக்க வலுவாகவும் இருந்திருக்கும்.
And if We had ordered them (saying), "Kill yourselves (i.e. the innocent ones kill the guilty ones) or leave your homes," very few of them would have done it; but if they had done what they were told, it would have been better for them, and would have strengthened their (Faith);
وَإِذًا لَّـَٔاتَيْنَـٰهُم مِّن لَّدُنَّآ أَجْرًا عَظِيمًا
மேலும், அது சமயம் அவர்களுக்கு, நம்மிடமிருந்து (மேற்கொண்டும்) மகத்தான ஒரு கூலியை நாம் கொடுத்திருப்போம்.
And indeed We should then have bestowed upon them a great reward from Ourselves.
وَلَهَدَيْنَـٰهُمْ صِرَٰطًا مُّسْتَقِيمًا
மேலும், அவர்களுக்கு நேரான வழியை நாம் காட்டி இருப்போம்.
And indeed We should have guided them to the Straight Way.
وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُو۟لَـٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّـٰلِحِينَ ۚ وَحَسُنَ أُو۟لَـٰٓئِكَ رَفِيقًا
மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ அவர்கள்-நபிமார்கள், சத்தியவான்கள், (அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த) ஷஹீதுகள், நல்லடியார்கள் ஆகியோர்களிலிருந்து எவர்கள் மீது அல்லாஹ் அருள் செய்திருக்கிறானோ அத்தகையோருடன் (சுவனத்தில்) இருப்பார்கள், தோழமைக்கு இவர்கள் அழகானவர்கள்.
And whoso obey Allâh and the Messenger (Muhammad صلى الله عليه وسلم), then they will be in the company of those on whom Allâh has bestowed His Grace, of the Prophets, the Siddiqûn (those followers of the Prophets who were first and foremost to believe in them, like Abu Bakr As-Siddîq (رضي الله عنه), the martyrs, and the righteous. And how excellent these companions are!
ذَٰلِكَ ٱلْفَضْلُ مِنَ ٱللَّهِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ عَلِيمًا
இப்பேரருள் அல்லாஹ்விடமிருந்துள்ளதாகும், இன்னும், (இவர்கள் செயலை) நன்கறிகிறவனாக இருக்க அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
Such is the Bounty from Allâh, and Allâh is Sufficient as All-Knower.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ خُذُوا۟ حِذْرَكُمْ فَٱنفِرُوا۟ ثُبَاتٍ أَوِ ٱنفِرُوا۟ جَمِيعًا
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (யுத்தத்திற்குச் சென்றால்) உங்கள் எச்சரிக்கையை (முதல் ஆயுதமாக) எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு, அணி அணியாகவோ செல்லுங்கள், அல்லது அனைவரும் (கூட்டாக) இணைந்தோ செல்லுங்கள்.
O you who believe! Take your precautions, and either go forth (on an expedition) in parties, or go forth all together.
وَإِنَّ مِنكُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَـٰبَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ ٱللَّهُ عَلَىَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًا
மேலும், (யுத்தத்திற்கு வராது) பின் தங்கியவர்களும் நிச்சயமாக உங்களில் (சிலர்) இருக்கின்றனர், (அவர்கள் முனாஃபிக்குகளே! ஏனெனில் யுத்தத்திற்குச் சென்ற) உங்களுக்கு யாதொரு கஷ்டமேற்பட்டாலோ, அ(வர்களில் ஒரு)வன் நான் அவர்களுடன் (அங்கு) பிரசன்னமாகி இல்லாதிருந்தபோது நிச்சயமாக அல்லாஹ் என்மீது அருள் புரிந்துவிட்டான்” என்று கூறுகின்றான்.
There is certainly among you he who would linger behind (from fighting in Allâh’s Cause). If a misfortune befalls you, he says, "Indeed Allâh has favoured me in that I was not present among them."
وَلَئِنْ أَصَـٰبَكُمْ فَضْلٌ مِّنَ ٱللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمْ تَكُنۢ بَيْنَكُمْ وَبَيْنَهُۥ مَوَدَّةٌ يَـٰلَيْتَنِى كُنتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا
இன்னும், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைத்தால் “நானும் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமே, அவ்வாறிருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே! என்று உங்களுக்கும் அவனுக்கும் இடையில் எத்தகைய நட்பும் இல்லாமலிருந்ததைப் போல் நிச்சயமாக அவன் கூறுகிறான்.
But if a bounty (victory and booty) comes to you from Allâh, he would surely say - as if there had never been ties of affection between you and him - "Oh! I wish I had been with them; then I would have achieved a great success (a good share of booty)."
۞ فَلْيُقَـٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يَشْرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا بِٱلْـَٔاخِرَةِ ۚ وَمَن يُقَـٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்யவும், இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்து (அதில்) அவர் கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவருக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.
Let those (believers) who sell the life of this world for the Hereafter fight in the Cause of Allâh, and whoso fights in the Cause of Allâh, and is killed or gets victory, We shall bestow on him a great reward.