மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَآ أَنفَقُوا۟ مِنْ أَمْوَٰلِهِمْ ۚ فَٱلصَّـٰلِحَـٰتُ قَـٰنِتَـٰتٌ حَـٰفِظَـٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ ٱللَّهُ ۚ وَٱلَّـٰتِى تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهْجُرُوهُنَّ فِى ٱلْمَضَاجِعِ وَٱضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا۟ عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا
ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்களாவர், ஏனெனில், அவர்களில் சிலரைக்காண (மற்ற) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலுமாகும், ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள், (என்போர் அல்லாஹ்வுக்குப் பயந்து தங்கள் கணவனுக்கு) பணிந்து நடப்பவர்கள் (கற்பு மற்றும் தங்கள் கணவனது உடைமைகள் ஆகிய) மறைவானதை அல்லாஹ் பாதுகாக்கின்ற காரணத்தால் பேணிக்காத்துக் கொள்பவர்கள், இன்னும், (அப்பெண்களாகிய) அவர்களில் (தம் கணவனுக்கு) எவர்களின் மாறுபாட்டை அஞ்சுகிறீர்களோ, அப்போது அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள், (அவர்கள் திருந்தாவிடில்) படுக்கைகளிலும் அவர்களை வெறுத்து (ஒதுக்கி) விடுங்கள், (அதிலும் அவர்கள் சீர்திருந்தாவிடில்) அவர்களை (காயமேற்படாது) அடியுங்கள், அதனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்பட்டுவிட்டால், அவர்கள் மீது (இதர குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்வானவனாக, மிகப் பெரியவனாக இருக்கின்றான்.
Men are the protectors and maintainers of women, because Allâh has made one of them to excel the other, and because they spend (to support them) from their means. Therefore the righteous women are devoutly obedient (to Allâh and to their husbands), and guard in the husband’s absence what Allâh orders them to guard (e.g. their chastity, their husband’s property). As to those women on whose part you see ill-conduct, admonish them (first), (next), refuse to share their beds, (and last) beat them (lightly, if it is useful); but if they return to obedience, seek not against them means (of annoyance). Surely, Allâh is Ever Most High, Most Great.
وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَٱبْعَثُوا۟ حَكَمًا مِّنْ أَهْلِهِۦ وَحَكَمًا مِّنْ أَهْلِهَآ إِن يُرِيدَآ إِصْلَـٰحًا يُوَفِّقِ ٱللَّهُ بَيْنَهُمَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا
இன்னும், (கணவன் மனைவியாகிய) இருவருக்கும், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால் அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும், அவள் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும் நீங்கள் (ஏற்படுத்தி) அனுப்புங்கள், அவ்விருவரும் (இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டுபண்ண நாடினால், அல்லாஹ் இவ்விருவரையும் ஒற்றுமையாக்கி விடுவான், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் தெரிந்தவனாக, நன்கு உணர்கிறவனாக, இருக்கின்றான்.
If you fear a breach between them twain (the man and his wife), appoint (two) arbitrators, one from his family and the other from her’s; if they both wish for peace, Allâh will cause their reconciliation. Indeed Allâh is Ever All-Knower, Well-Acquainted with all things.
۞ وَٱعْبُدُوا۟ ٱللَّهَ وَلَا تُشْرِكُوا۟ بِهِۦ شَيْـًٔا ۖ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًا وَبِذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَٱلْجَارِ ذِى ٱلْقُرْبَىٰ وَٱلْجَارِ ٱلْجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلْجَنۢبِ وَٱبْنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَـٰنُكُمْ ۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள், பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள், (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டினருக்கும், அந்நியரான அண்டை வீட்டினருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொணடவர்களுக்கும் (அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.) கர்வங்கொண்டவனாக, பெருமையாளனாக இருப்போரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
Worship Allâh and join none with Him (in worship); and do good to parents, kinsfolk, orphans, Al-Masâkîn (the poor), the neighbour who is near of kin, the neighbour who is a stranger, the companion by your side, the wayfarer (you meet), and those (slaves) whom your right hands possess. Verily, Allâh does not like such as are proud and boastful.
ٱلَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبُخْلِ وَيَكْتُمُونَ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَأَعْتَدْنَا لِلْكَـٰفِرِينَ عَذَابًا مُّهِينًا
அத்தகைய (பெருமை குடி கொண்ட)வர்கள் உலோபித்தனம் செய்வார்கள், (மற்ற) மனிதர்களை உலோபித்தனம் செய்யும்படியும் தூண்டுவார்கள், அல்லாஹ் தன் பேரருளிலிருந்து தங்களுக்குக் கொடுத்ததை (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்தும் கொள்வார்கள், இன்னும் (நன்றி செய்யாத) நிராகரிப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
Those who are miserly and enjoin miserliness on other men and hide what Allâh has bestowed upon them of His Bounties. And We have prepared for the disbelievers a disgraceful torment.1
Narrated Abu Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Everyday two angels come down from heaven and one of them says, ‘O Allâh! Compensate every person who spends in Your Cause,’ and the other (angel) says, ‘O Allâh! Destroy every miser.’" (Sahih Al-Bukhâri, Vol.2, Hadîth No.522).