8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 82

/ 604
Page 82

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

4. An-Nisaسورة النساء

4:24

۞ وَٱلْمُحْصَنَـٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَـٰنُكُمْ ۖ كِتَـٰبَ ٱللَّهِ عَلَيْكُمْ ۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا۟ بِأَمْوَٰلِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَـٰفِحِينَ ۚ فَمَا ٱسْتَمْتَعْتُم بِهِۦ مِنْهُنَّ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَٰضَيْتُم بِهِۦ مِنۢ بَعْدِ ٱلْفَرِيضَةِ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

பெண்களில் கணவனுள்ளவர்களும் (திருமணம் செய்து கொள்ளப்படுவதற்கு விலக்கப்பட்டுள்ளனர், நிராகரிப்போருடன் நிகழ்ந்த யுத்தத்தில் பிடிக்கப்பட்டு) உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்) பெண்களைத் தவிர, (இவ்வாறு) உங்கள் மீது அல்லாஹ்வின் கட்டளையாக (இது விதியாக்கப்பட்டுள்ளது.) இவர்களைத் தவிர மற்ற பெண்களைத் திருமணம் செய்பவர்களாக விபச்சாரம் செய்யாதவர்களாக (திருமண அன்பளிப்பாக) உங்கள் செல்வங்களைக்கொண்டு (மஹரைக்குறிப்பிட்டு சட்டரீதியாக திருமணத்தின் மூலம்) தேடிக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டும் உள்ளது, ஆகவே, (இவ்வாறு மணமுடித்த பெண்களாகிய) அவர்களிடமிருந்து எதை நீங்கள் சுகமனுபவித்தீர்களோ, (அதற்காக) அவர்களுக்குக் குறிப்பிட்ட மஹரைக் கட்டாயக் கடமையாக அவர்களுக்கு (க்குறைவின்றி) நீஙகள் கொடுத்து விடுங்கள், மேலும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர், (அதனைக் குறைக்கவோ, கூட்டவோ) நீங்கள் ஒருவருக்கொருவர் பொருந்திக்கொள்வதில் உங்கள் மீது யாதொரு குற்றமுமில்லை, நிச்சயமாக (உங்கள் செயலை) அல்லாஹ் மிக்க அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.

Also (forbidden are) women already married, except those (slaves) whom your right hands possess. Thus has Allâh ordained for you. All others are lawful, provided you seek (them in marriage) with Mahr (bridal-money given by the husband to his wife at the time of marriage) from your property, desiring chastity, not committing illegal sexual intercourse, so with those of whom you have enjoyed sexual relations, give them their Mahr as prescribed; but if after a Mahr is prescribed, you agree mutually (to give more), there is no sin on you. Surely, Allâh is Ever All-Knowing, All-Wise.

4:25

وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ ٱلْمُحْصَنَـٰتِ ٱلْمُؤْمِنَـٰتِ فَمِن مَّا مَلَكَتْ أَيْمَـٰنُكُم مِّن فَتَيَـٰتِكُمُ ٱلْمُؤْمِنَـٰتِ ۚ وَٱللَّهُ أَعْلَمُ بِإِيمَـٰنِكُم ۚ بَعْضُكُم مِّنۢ بَعْضٍ ۚ فَٱنكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَءَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِٱلْمَعْرُوفِ مُحْصَنَـٰتٍ غَيْرَ مُسَـٰفِحَـٰتٍ وَلَا مُتَّخِذَٰتِ أَخْدَانٍ ۚ فَإِذَآ أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَـٰحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى ٱلْمُحْصَنَـٰتِ مِنَ ٱلْعَذَابِ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ ٱلْعَنَتَ مِنكُمْ ۚ وَأَن تَصْبِرُوا۟ خَيْرٌ لَّكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

மேலும், உங்களில் எவர் சுதந்திரமுள்ள விசுவாசியான பெண்களைத் திருமணம் செய்து கொள்ள (பொருளாதார) வசதியால் சக்தி பெறவில்லையோ, அவர், விசுவாசமுள்ள உங்களுடைய அடிமைப் பெண்களில், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டதிலிருந்து (திருமணம் செய்து கொள்ளலாம்). இன்னும் அல்லாஹ் உங்களுடைய விசுவாசத்தை நன்கு அறிந்து இருக்கின்றான், உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்களாவர், ஆகவே (அப்பெண்கள், பத்தினித்தனமான) பரிசுத்தமானவர்களாக விபச்சாரம் செய்யாதவர்களாக, மேலும் கள்ள நட்புக் கொள்ளாதவர்களாக இருக்கும் நிலையில் - அவர்களுடைய எஜமானனின் அனுமதி பெற்று மணம் முடித்துக் கொள்ளுங்கள், அவர்களுக்குரிய மஹரையும் அறியப்பட்ட (நியாயமான) முறையில் அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள், ஆகவே, (இவ்வாறு) திருமணம் செய்யப்பட்டால் (அதற்குப்)பின் (அடிமைப்பெண்களான) அவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் (அடிமையல்லாத) திருமணமான உரிமைப் பெண்களுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அவர்கள்மீது உண்டு, (அடிமைப் பெண்ணை திருமணம் செய்யும்) இது உங்களில் எவர், (மனைவியின்றி இருந்து) விபச்சாரத்தை பயந்தாரோ அவருக்குத்தான், இன்னும், நீங்கள் பொறுத்திருப்பது உங்களுக்கு நன்று, மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

And whoever of you have not the means wherewith to wed free, believing women, they may wed believing girls from among those (slaves) whom your right hands possess, and Allâh has full knowledge about your Faith; you are one from another. Wed them with the permission of their own folk (guardians, Auliyâ’ or masters) and give them their Mahr according to what is reasonable; they (the above said captive and slave-girls) should be chaste, not committing illegal sex, nor taking boy-friends. And after they have been taken in wedlock, if they commit illegal sexual intercourse, their punishment is half that for free (unmarried) women.1 This is for him among you who is afraid of being harmed in his religion or in his body; but it is better for you that you practise self-restraint, and Allâh is Oft-Forgiving, Most Merciful.

  1. Female or male slaves (married or unmarried); if they commit illegal sexual intercourse, their punishment is fifty (50) lashes (half of that which is for free unmarried women); neither stoning to death nor exile.

4:26

يُرِيدُ ٱللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

அல்லாஹ், (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி உங்களது தவ்பாக்களை (பாவமன்னிப்பை) அங்கீகரித்து விடவும் நாடுகிறான், மேலும், அல்லாஹ் நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்

Allâh wishes to make clear (what is lawful and what is unlawful) to you, and to show you the ways of those before you, and accept your repentance, and Allâh is All-Knower, All-Wise.