9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 554

/ 604
Page 554

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

62. Al-Jumu'ahسورة الجمعة

62:9

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نُودِىَ لِلصَّلَوٰةِ مِن يَوْمِ ٱلْجُمُعَةِ فَٱسْعَوْا۟ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ وَذَرُوا۟ ٱلْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

விசுவாசங்கொண்டோரே! (வெள்ளிக்கிழமையாகிய) ஜூமுஆ தினத்தன்று தொழுகைக்காக (பாங்கு சொல்லி நீங்கள்) அழைக்கப்பட்டால், அப்போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் சென்றுவிடுங்கள், வர்த்தகத்தையும் விட்டுவிடுங்கள், நீங்கள் அறிவுடையோர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் (இதனை அறிந்துகொள்வீர்களாக!)

O you who believe (Muslims)! When the call is proclaimed for the Salât (prayer) on Friday (Jumu‘ah prayer), come to the remembrance of Allâh [Jumu‘ah religious talk (Khutbah) and Salât (prayer)] and leave off business (and every other thing). That is better for you if you did but know!

62:10

فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُوا۟ فِى ٱلْأَرْضِ وَٱبْتَغُوا۟ مِن فَضْلِ ٱللَّهِ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

பின்னர், (ஜூமுஆத்) தொழுகை நிறைவேற்றுப்பட்டுவிட்டால் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) பூமியில் பரவிச் சென்று, அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக்கொள்ளுங்கள், மேலும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.

Then when the (Jumu‘ah) Salât (prayer) is ended, you may disperse through the land, and seek the Bounty of Allâh (by working, etc.), and remember Allâh much: that you may be successful.

62:11

وَإِذَا رَأَوْا۟ تِجَـٰرَةً أَوْ لَهْوًا ٱنفَضُّوٓا۟ إِلَيْهَا وَتَرَكُوكَ قَآئِمًا ۚ قُلْ مَا عِندَ ٱللَّهِ خَيْرٌ مِّنَ ٱللَّهْوِ وَمِنَ ٱلتِّجَـٰرَةِ ۚ وَٱللَّهُ خَيْرُ ٱلرَّٰزِقِينَ

(நபியே!) ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கயையோ அவர்கள் பார்த்துவிட்டால், அதனளவில் சென்றுவிடுகின்றனர், (குத்பா ஓதும்) உம்மை நின்றவண்ணமாக விட்டும் விடுகின்றனர், (ஆகவே, நபியே! அவர்களிடம்,) நீர் கூறுவீராக: “அல்லாஹ்விடத்தில் உள்ளது வேடிக்கையையும், வர்த்தகத்தையும் விட மிகச் சிறந்ததாகும், அன்றியும் உணவளிப்பவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்.”

And when they see some merchandise or some amusement [beating of Tambur (drum) etc.] they disperse headlong to it, and leave you (Muhammad صلى الله عليه وسلم) standing [while delivering Jumu‘ah religious talk (Khutbah)]. Say: "That which Allâh has is better than any amusement or merchandise! And Allâh is the Best of providers."

63. Al-Munafiqunسورة المنافقون

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

63:1

إِذَا جَآءَكَ ٱلْمُنَـٰفِقُونَ قَالُوا۟ نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِ ۗ وَٱللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّ ٱلْمُنَـٰفِقِينَ لَكَـٰذِبُونَ

(நபியே! வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர் தான் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்பதாகக் கூறுகின்றனர், இன்னும், நிச்சயமாக நீர் அவனுடைய தூதர் தான் என்பதை அல்லாஹ் நன்கறிவான். இன்னும் நிச்சயமாக, இந்த முனாஃபிக்குகள் பொய்யர்களாவர் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.

When the hypocrites come to you (O Muhammad صلى الله عليه وسلم), they say: "We bear witness that you are indeed the Messenger of Allâh." Allâh knows that you are indeed His Messenger, and Allâh bears witness that the hypocrites are liars indeed.1

  1. See "Hypocrisy" in Appendix 2 at the end of the Book.

63:2

ٱتَّخَذُوٓا۟ أَيْمَـٰنَهُمْ جُنَّةً فَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِنَّهُمْ سَآءَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

“இவர்கள் தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களை ஒரு கேடயமாக எடுத்துக்கொண்டு அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (அதில் செல்வோரைத்) தடுக்கின்றனர், நிச்சயமாக அவர்கள்-அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டது.

They have made their oaths a screen (for their hypocrisy). Thus they hinder (men) from the Path of Allâh. Verily, evil is what they used to do.

63:3

ذَٰلِكَ بِأَنَّهُمْ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ

அது, நிச்சயமாக அவர்கள் விசுவாசங்கொண்டு, பின்னர் அவர்கள் (அதனை) நிராகரித்துவிட்டார்கள் என்பதினாலேயாகும், எனவே, அவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது, ஆகவே (ஈமானின் உண்மை நிலையை) அவர்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள்.

That is because they believed, and then disbelieved; therefore their hearts are sealed, so they understand not.

63:4

۞ وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا۟ تَسْمَعْ لِقَوْلِهِمْ ۖ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ۖ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ ۚ هُمُ ٱلْعَدُوُّ فَٱحْذَرْهُمْ ۚ قَـٰتَلَهُمُ ٱللَّهُ ۖ أَنَّىٰ يُؤْفَكُونَ

மேலும், (நபியே!) அவர்களை நீர் பார்த்தால், அவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை, ஆச்சரியத்திலாழ்த்தும், அவர்கள் பேசினால் அவர்களுடைய சொல்லையே நீர் கேட்டுக்கொண்டிருப்பீர், (உமக்குச் செவியேற்காத) அவர்கள் (சுவரின் மீது) சாய்த்துவைக்கப்பட்ட மரக்கட்டைகளைப் போல் இருக்கின்றனர், மேலும், (அவர்கள் செவியேற்கும்) ஒவ்வொரு சப்தத்தையும் தங்களுக்கு விரோதமானது என எண்ணிக் கொள்வார்கள், (நபியே!) அவர்கள் தாம் (உம்முடைய கடுமையான) பகைவர்கள், ஆகவே, அவர்களைப் பற்றி நீர் எச்சரிக்கையாக இருந்துகொள்வீராக! அல்லாஹ் அவர்களை அழித்துவிடுவானாக! (உண்மையை ஏற்பதிலிருந்து) அவர்கள் எங்கு திருப்பப்படுகின்றனர்?

And when you look at them, their bodies please you; and when they speak, you listen to their words. They are as blocks of wood propped up. They think that every cry is against them. They are the enemies, so beware of them. May Allâh curse them! How are they denying (or deviating from) the Right Path?